தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் பெறப்பட்ட ஜகாத் நிதியிலிருந்து, நகரிலுள்ள எளியோருக்கு உதவிப்பணம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி 09.10.2011 அன்று மாலை 05.30 மணிக்கு காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையிலுள்ள அதன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.
சாளை முஹம்மத் அப்துல் காதிர் என்ற சாளப்பா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினம் நகரிலுள்ள 10 பயனாளிகளுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் சிறுதொழிலுக்காக ரூ.44,500 ஜகாத் நிதியுதவி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அபிமானிகள் கலந்துகொண்டனர்.
படங்கள்:
Y.M.முஹம்மத் தம்பி,
ஏ.கே.எம்.ஜுவல்லர்ஸ்,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை,
காயல்பட்டினம். |