கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிதா மற்றும் நகரின் 18 வார்டுகளைச் சார்ந்த நகர்மன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நடந்து முடிந்த நகராட்சித் தேர்தலில் மக்களின் பெரும்பான்மையான ஆதரவில் வெற்றி பெற்று, நமதூர் நகராட்சி மன்றத்தின் தலைவியாக பொறுப்பேற்க இருக்கும் சகோதரி ஆபிதா அவர்களை எம் காயல் நல மன்றம் மனமார வாழ்த்துகிறது.
மேலும் 18 வார்டுகளிலும் வெற்றி பெற்ற உறுப்பினர்களையும், வெற்றிக்கு முனைந்த அனைவர்களையும் வாழ்த்துவதிலும் எம் மன்றம் மகிழ்ச்சி அடைகிறது.
புதிதாக நகர் நலப்பணியில் ஈடுபட இருக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்களே...
வரும் 5 ஆண்டுகளில் நமதூருக்கு அவசியமான அணைத்து நலப்பணிகளையும், தேவைகளையும், செவ்வனே நிறைவேற்றி, சுகாதாரமான, தூய்மையான காயல்பட்டனத்தை உருவாக்குவீர்கள் என்று நம்புகிறோம்.
பல நற்காரியங்கள் நமதூருக்கு செய்கின்ற அதே வேலையில், சமூகத் தீமைகளான லஞ்சம், ஊழல், வட்டி போன்ற அனைத்து கொடுமைகளிலிருந்தும் நமதூரைக் காப்பாற்ற எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள் என்றும் நம்புகிறோம்.
மேலும், நல்ல, பொதுநல சிந்தனையுள்ள, திறமையான ஒருவரை, துணைதலைவராக தேர்வு செய்ய எதிர்பார்கிறோம்.
நீங்கள் ஆற்ற இருக்கும் அனைத்து நற்காரியங்களுக்கும், எங்கள் மன்றத்தின் ஆதரவும், ஒத்துழைப்பும் இருக்கும் என்பதை தெரிவித்து மகிழ்கிறோம்.
வஸ்ஸலாம்,
இவ்வாறு அமீரக காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
யஹ்யா முஹ்யித்தீன்
செயலர்,
காயல் நல மன்றம்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |