Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:07:08 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7428
#KOTW7428
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 23, 2011
காயல்பட்டணம் அரசு பொது நூலக வாசகர் வட்ட ஆலோசனைக் கூட்டம்.
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 3584 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டணம் அரசு பொது நூலகத்தின் வாசகர் வட்ட ஆலோசனைக் கூட்டம் 23-10-2011 ஞாயிற்றுக்கிழமை நூலக ஆர்வலர் ஜனாப் S. சாகுல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நூலகர் அ. முஜீபு கிராஅத் ஓதி ஆலோசனைக் கூட்டத்தை துவக்கி வைத்தார். வாசகர் வட்ட துணைத் தலைவரும், சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான ஜனாப். மு. அப்துல் ரசாக் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகர்மன்ற 13வது வார்டு உறுப்பினர் ஜனாப். M.S.M. சம்சுத்தீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் நூலகப் புரவலரும், எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியருமான ஜனாப். S.F. முகம்மது முகைதீன் சுலைமான் அவர்கள், நூலகப் புரவலர் திரு.A. கருப்பசாமி, நூலக ஆர்வலர்கள் ஜனாப். N.S. அஜ்வாத், ஜனாப். M.A. மாஹின், திரு. V.M. பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பின்னர் நவம்பர் மாதம் 44வது தேசிய நூலக வார விழாவினை சிறப்பாக நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி, நூலக விழிப்புணர்வு வாசகப் போட்டிகள் நடத்துதல், நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நகர்மன்றத் தலைவி மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தல், நமது நூலகத்தில் ரூ 1000 செலுத்தி தங்களை புரவலர்களாக இணைத்துக் கொண்ட L.K. மேனிலைப்பள்ளி செயற்குழு உறுப்பினர் ஜனாப். L.T. இபுராகீம் அவர்கள், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக உயர்நிலை அலுவலர் ஜனாப். K.M.S. செய்யது இஸ்மாயில் (கொமந்தார்) அவர்கள் மற்றும் D.C.W. இளநிலை பொறியாளர் திரு. G. பிரகாஷ் ஆகியோர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தல் போன்ற தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இறுதியில் அரசு நூலகர் அ. முஜீபு அவர்கள் நன்றியுரையுடன் வாசகர் வட்ட ஆலோசனைக் கூட்டம் இனிதே நிறைவுற்றது









தகவல் : அப்துல் ரசாக்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல்பட்டணம் அரசு பொது நூ...
posted by S.A.Muhammad Ali (Dubai) [23 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12008

அரசு நூலகர் அ. முஜீபு அவர்கள் அருமையாக நூலகத்தை வைத்து இருக்கிறார்.

நிறைய புத்தகங்கள் மூட்டை கட்டி பரண் மேல் இருக்கிறதே. இத்தனை பொக்கிஷங்கள் இருந்தும் நிஜத்தை தொலைத்து விட்டு நிழற்படத்தை போற்றும் மக்களுக்கு இந்த நூலகத்தின் அருமையை உணர வைக்க உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

என்ன தான் கம்ப்யூட்டர், மொபைல் வந்தாலும் புத்தகத்தை கையில் ஏந்தி படிக்கும் சுகமே தனி தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டணம் அரசு பொது நூ...
posted by fathimaahmed (kayalpatnam) [23 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12010

சம்சுதீன் kaka இபவே சேர்மன் தோரணை வந்துவிட்டது போல


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல்பட்டணம் அரசு பொது நூ...
posted by K.D.N.MOHAMED LEBBAI (Jeddah) [23 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12017

அஸ்ஸலாமு அலைக்கும்

காயல்பட்டணம் அரசு பொது நூலக வாசகர் வட்ட ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய ஹாஜி M .S .M ,சம்சுதீன் காக்கா அவர்களை VICE CHAIRMAN ஆக SELECT பண்ணலாமே >>>>>>>>>>>>>>>>>>> செயல் வீரர் >>>>>>>>.

இவர் பேச்சை வெளியிட்டிருக்கலாமே

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காயல்பட்டணம் அரசு பொது நூ...
posted by Mahin (Kayalpatnam) [23 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12030

Good work by Friend Mujeeb..

He is taking numerous steps to make optimum utilization of the available resources... though he is a librarian his acts are beyond his duty, he is not just doing his duty for the sake of Job.

Beyond that, as a kayalite he is taking several steps to make use of the library to the maximum extent. Hats off for his guidance for young students and other contenders for several competitive exams.

I never saw such a dedicate librarian...

He is taking steps for the extension of our library premises for full utilization.

Thanks for Bro M.S.M. Samsudeen ( 13th Ward MC ) for his presence, listening the problems, interactions and promise to take action on various issues, even before he sworn as MC.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Keep it up!!
posted by Salai.Mohamed Mohideen (USA) [24 October 2011]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 12043

I'm very glad to read this news & would like to pass my thanks to the team whoever involved esp. our librarian and my friend Mujeeb. Good luck with all your good initatives & try to expand this to a larger group by creating an awareness across the people on importance of reading.

I would request our beloved school/madarasa teachers and parents to encourage their kids to go to public/any library. instead of chit chatting in the Tea stall, our respected elders can spend some time in library like this.

I completely agree with below point made by one brother. Even though we've so many electronic gadgets like Kindle, Ipad, tablet etc to read, I would say nothing can compensate the paper print

என்ன தான் கம்ப்யூட்டர், மொபைல் வந்தாலும் புத்தகத்தை கையில் ஏந்தி படிக்கும் சுகமே தனி தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. காயல்பட்டணம் அரசு பொது நூலகத்தை மிக சுத்தமாகவும் புத்தக அணிவகுப்பை வரிசை படுத்தி வரும் வாசகர்களுக்கு சிரமம் இல்லாமல்...சேவை
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [24 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12120

காயல்பட்டணம் அரசு பொது நூலகத்தில் எனது சகோதரரும் என் பள்ளி பருவ கால நண்பனின் அன்பு தம்பி நூலகர் முஜீபு அவர்கள் காயல்பட்டணம் அரசு பொது நூலகத்தை மிக சுத்தமாகவும் புத்தக அணிவகுப்பை வரிசை படுத்தி வரும் வாசகர்களுக்கு சிரமம் இல்லாமல் அமைத்து குறைந்த ஊதியத்தில் அதிக நிறைந்த சேவைகளை செய்து காயல் வாசகர்களின் பாராட்டுக்களோடு எனது வாழ்த்துக்களையும் தம்பி நூலகர் முஜீபு அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்...

இவரின் சேவைக்கு அல்லாஹ் நல்ல ஆரோக்கியத்தோடு மேலும் பல மாற்றங்களை பல சேவைகளை இந்த நூலகத்திற்க்கு செய்திட வாழ்த்துகிறேன்...துவா செய்கிறேன்.. ஆமின்..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் - வாசக பிரியன்(வி.சி.கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நல்வாழ்த்துக்கள்
posted by W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (சென்னை) [25 October 2011]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 12140

காயல்பட்டணம் அரசு பொது நூலகத்தின் நீண்ட கால உறுப்பினர் மற்றும் வாசகன் என்ற முறையில் எனது வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன். மேலும் நூலகத்தை மிகத் திறம்பட நிர்வகித்து வரும் நூலகர் அருமை தம்பி முஜீபு மௌலானாவிற்கும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். இவரின் மகத்தான சேவை தொய்வின்றி தொடர ரப்புல் ஆலமீன் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

நம் நகர மக்கள் குறிப்பாக கல்வி பயில்வோர், இளைஞர்கள், அறிவுத் தாகம் உடையவர்கள் இந்நூலகத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. நூலைப் படைத்தவன் ஒரு நாள் இறப்பான். ஆனால், நூல்கள் “சாகா” வரம் பெற்றவை...!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [27 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12304

நூலைப் படைத்தவன் ஒரு நாள் இறப்பான். ஆனால், நூல்கள் “சாகா” வரம் பெற்றவை.

புத்தகங்கள் மகத்தான சக்தி படைத்தவை. புதிய சிந்தனைகள் உருவாகவும், நொடிக்கு நொடி புதிய கருத்துக்கள் தோன்றவும் புத்தகங்கள் தான் ஆதாரம்..

ஒரு மனிதருடைய அறிவு வளர்ச்சியில் நூலகங்கள் பெரிதும் துணை புரிகின்றன. நல்ல நூல்களை நாம் வாசிக்கும் போது நற்பண்புகளும், நற்குணங்களும் நம்மிடம் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

‘நவில்தொரும் நுல்நயம் போலும்’ நல்ல நூலின் நற்பொருள் கற்க மேலும் இன்பம் தருவது என்கிறார், வள்ளுவர். எனவே நம் சமுதாயத்தில் நிலவிவரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் நல்ல தரமான நூலக சேவை மூலம் நிவர்த்தி செய்யலாம்.

புத்தகங்களால் தங்களது வாழ்க்கையை மாற்றி கொண்டவர்கள், உயர்த்தி கொண்டவர் பல லட்சக்கணக்கானோர் உண்டு. எனவே நம் இளம் தலைமுறையினர் இளமையிலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதானது வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும்; வளம் பெறச்செய்யும் என்பது உண்மை.

“அறிவு அற்றம் காக்கும் கருவி செருவார்க்கு உள்ளழிக்க லாகா அரண்” என்பதை உணர்ந்து நூலகர்கள் தம் அறிவையும் நிர்வாகத் திறமையையும் பெருக்கி கற்றோர் மெச்ச தம் கல்வித் தொண்டை தொடர்ந்து கடமையாற்ற வேண்டும்.

கல்லாமை இல்லாமை ஆக்குவோம். வீட்டிற்கொரு நூலகம் அமைப்போம். வாசிப்போம்; வளம் பெறுவோம்.

நட்புடன்
தொல் திருமா வழி தமிழன்
முத்து இஸ்மாயில்.
(தொண்டன் - விடுதலை சிறுத்தைகள் கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் நகரில் கனமழை!  (23/10/2011) [Views - 4731; Comments - 13]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved