கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிதா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு சிங்கப்பூர் காயல் நல மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்தறிக்கை பின்வருமாறு:-
அன்பான காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில், நமதூர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி ஆபிதா ஷேக் அவர்களுக்கும், நமதூரின் 18 வார்டுகள் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர்களுக்கும் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
நேர்மையான - வெளிப்பாடையான - செயல்திறன் மிக்க நல்லதொரு நிர்வாகத்தை நீங்கள் தந்து, அதன் மூலம் இந்நகரமும், அதிலுள்ள அனைத்து தரப்பு மக்களும் முழுப்பயன் பெற்றிட வல்லவன் அல்லாஹ்விடம் இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
செயலர்,
காயல் நல மன்றம்,
சிங்கப்பூர். |