பல நாட்களாக காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த 23.10.2011 அன்று அதிகாலையில் கனமழை பெய்தது. அதனையடுத்து நகர வானிலை குளிர்ச்சிமயமானது.
இந்நிலையில், நேற்று (24.10.2011) இரவு 09.00 மணிக்கு சாரலில் துவங்கி, நேரம் செல்லச் செல்ல கனமழையானது.
நள்ளிரவிலும் விட்டு விட்டுப் பெய்த மழை, 25.10.2011 அன்று காலை 09.30 மணி வரை நீடித்தது. சிறிது நேர ஓய்வுக்குப் பின் மீண்டும் அன்றிரவு 09.00 மணிக்கு மழை பெய்யத் துவங்கியது. நள்ளிரவு முழுக்க பெய்த மழை 26.10.2011 (நேற்று) காலை 09.30 மணிவாக்கில் நின்றது.
மீண்டும் நேற்று மாலையில் இடைவெளி விட்டு விட்டு மழை பெய்தது. இரவு கனமழையாக உருவெடுத்து, நள்ளிரவு முழுக்க மழைபெய்து, இன்று காலை 07.45 மணிக்கு நின்றது.
மழை பெய்யத் துவங்கிய 23.10.2011 தேதி முதல் நான்கு நாட்களாக சூரியனைக் காணவில்லை.
பெய்த மழை காரணமாக நகரின் தாழ்வான் பகுதிகளில் குளமாகவும், இதர பகுதிகளில் தேக்கமாகவும் மழை நீர் தேங்கியுள்ளது.
காட்டு தைக்கா தெரு தருவை பகுதியில் குடிசைகள் நீரில் முற்றிலுமாக மூழ்கியுள்ளன. 26.10.2011 அன்று காலையில் (நேற்று) பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள் பின்வருமாறு:-
இப்படி மொட்டையா காணவில்லைன்னு போட்டா எப்படி? தெளிவா சொல்லனும்ல. நானும் பதறி அடிச்சு தொறந்து பார்த்த சூரியனை காணவில்லையாமே!!! அங்கே அங்கே ஆறு மாசம் சூரியனை பார்க்காம இருக்கிராய்கிய, பெருசா சொல்லவந்துடாப்லே. பரவாயில்லை நமக்கும் மதுரை தமிழ் வருதுல்லா..
2. இந்த மகிழ்ச்சிக்கு அல்லாஹ் ஒருவனே காரணம்... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[27 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12281
புகை படத்தை பார்க்க பரிதாமாக தான் உள்ளது இவர்களின் கஷ்டத்தையும் சிரமத்தையும் இறைவன் சரி செய்வானாக.. ஆமீன்..
பல மாதமாக நமது ஊரில் வெப்பத்தின் தாக்கம் மிக கொடுமையாகவும் அதனால் பூமி சூடனதால் அம்மம் போன்ற பல நோய்கள் பரவலாக ஊரில் நடமாடியது....!
வயதில் மூத்த பெரியவர்கள் வீதியில் செல்லும் போது மயக்கம் ஏற்பட்டு ஆட்டோவில் ஏற்றி இல்லம் அனுப்பும் சம்பவம்களும் நடந்தன...!
நிலத்தடி நீர் இல்லாமல் தண்ணீருக்கு மிக தட்டுபாடான சூழ்நிலை உருவாக கூடிய காலத்தை நோக்கி நமது ஊரின் நிலைமை சென்று கொண்டு இருந்தன...!
அல்லாஹுவின் பெரும் கிருபையால் தற்போது மூன்று நாட்களாக இதமான சாரலுடன் மழை பெய்து வருவதால் பூமி குளிச்சி ஏற்பட்டு நிலத்தடி நீர் மேல பெருகிவருவது என்னை போன்று பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..
இந்த மகிழ்ச்சிக்கு அல்லாஹ் ஒருவனே காரணம்...
ஊரில் தண்ணீர் தட்டுபாடு இல்லாமல் அணைத்து மக்களும் மகிழ்ச்சியாக ஊரில் வாழ நாம் அனைவர்களும் இறைவனிடம் துவா செய்வோமாக... ஆமின்...
6. Re:காணவில்லை! (?!)... posted byசாளை S. I. ஜியாவுதீன் (அல்கோபார் )[27 October 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12286
ஆரம்புச்சுட்டாங்கய்யா....
அதான் மக்கள் சூரியனை துவைத்து, மஞ்சள் துண்டு போட்டு மூடி வைத்து பல மாதங்கள் ஆகிவிட்டனவே. இலை தான் துளிர் விட்டுக்கொண்டு இருக்கின்றது.
ஆமாங்க.. தரவை குளத்தை தான் பிளாட் போட்டு விட்டாச்சே.. அப்புறம் தண்ணீர் கட்டுது, வீடு மூழ்கி விட்டது என்று புலம்பி என்ன பயன். இயற்கையுடன் விளையாடினால் இப்படிதான் நடக்கும். மழை நீர் எங்கு தான் செல்லும்..
இதில்,,, தலைவி ஆபிதா அவர்களே உங்கள் முதல் கட்ட வேலையை ஆரம்பியுங்கள், செல்வந்தர்களே நேசக்கரம் நீட்டி சதகா எனும் தருமம் செயுங்கள், பாதிக்கப் பட்ட சஹோதர சஹோதரிகளே சபூர் எனும் பொறுமையை கடைபிடியுங்கள் என்ற செய்தியை மிக சூசகமாக எடுத்து வைத்துள்ளீர்கள்.
Also , அல்லாஹ்விடம் நம் குழந்தைச் செல்வங்கள் " allahummaskinal gaitha warrahmatha ..... என்ற துஆவை கேட்டிருப்பார்கள் போல !!!
11. நல்ல கிளப்புறாங்க ......பீதியை.......... posted bymusthak ahamed (mumbai)[27 October 2011] IP: 49.*.*.* India | Comment Reference Number: 12300
நானும் இப்ப உள்ள சூழ்நிலையை நினைத்து வேறு என்னவெல்லாமோ கற்பனை செய்து விட்டேன்.
நல்ல கிளப்புறாங்க ......பீதியை..........
கொஞ்ச நாளைக்கு முன்பு காயல்பட்டனம் கடற்கரையில் கலங்கரை விளக்கம் கட்டுன ஆட்கள் தானே ..............
கலக்குங்க.......... கலக்குங்க................
அப்படியே நிஜமான காணவில்லை செய்தியையும் தந்தால் நன்றாக இருக்கும். 2006 இல் ஹீரோ 2011 இல் ஜீரோ.......... கதையையும் செய்தியாக தந்தால் 2011 ஹீரோக்களுக்கு பாடமாய் இருக்கும்.
15. Re:காணவில்லை! (?!)... posted byNoohu Amanullah (Makkah)[27 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12310
ஆமா எல்லோரும் குசும்பு பண்றீங்க கருத்துக்கள் கொடுத்து காயல்பட்டணம். காம் குசும்பு தனம் இதில் தெரிகிறது..
நம் ஊருக்கு இந்த மழை பிரயோஜனமான மழையாக அல்லாஹ் ஆக்கி அருள்பாலிப்பானாக!ஆமீன்
தாருத்திபியான் ஸாலிஹ் காக்காவின் குசும்பும் ஆரம்பம் ஆகி விட்டது..உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சிது ஒரு வகையா..
உண்மையை பளிச் பளிச் என்று எடுத்து சொன்ன காயல்பட்டணம்.காம் வலைதளத்திற்கு மிக்க நன்றி..
19. Re:காணவில்லை! (?!)... posted byDR D MOHAMED KIZHAR (chennai)[27 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12314
நவாஸ் அஸ்ஸலாமு அலைக்கும்... ஒன்னும் பயபடாதே ..ஒத்துரும் காணபோவல்லை.. ..நீ சிங்கப்பூர் ல காணபோவாமே பத்திரமா இரு..கொஞ்ச நாளா உண்ட எழுத்து சேட்டை அதிகம் ..அந்த சேட்டை தான் காண போயிருக்கு .. அந்த எழுத்து சேட்டை காண போறது தான் நல்லது...சும்மா தப்பா எடுத்துகுராதே ...ஒரு கலாய்ப்பு தான்.
20. துரித நடவடிக்கை posted byDR D MOHAMED KIZHAR (chennai)[27 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12317
அஸ்ஸலாமு அலைக்கும்.. சூரியன் காண போனதெல்லாம் இருக்கட்டும்.. நகரில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதை நகரமன்ற தலைவர் சென்று பார்த்ததாக அறிந்தேன்..நல்ல தொடக்கம்.....
இச்சமயம், முக்கிய நடவடிக்கை, இது பருவ மழையின் தொடக்கம் என்பதால், இப்போதே கொசு உருவாவது, இனவிருத்தி பண்ணுவதை தடுத்தால், கொசு இல்லாத காயல்.. அதன் தாக்கமான மலேரியா , சிக்குன்குன்யா மற்றும் டெங்கு இல்லாத ஆரோக்கியமான காயலை உருவாக்கலாம..
மூன்று ஆண்டுக்கு முன் ஊரில் சிக்குன்குன்யா பரவி , ஒற்றை புரட்டி போட்டதையும், அதன் விளைவாக இன்னும் பலபேர், முட்டு வழியால் அவதி படுவதையும் மறக்க முடியாது..இது தொலை நோக்கு கொண்ட நோய் தடுப்பு முறை.. ஆவன செய்வாரா நல்ல தலைவர் ...
22. Re:காணவில்லை! (?!)... posted bySalai Sheikh Saleem (Dubai)[27 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12324
நானும் என்னவோ ஏதோன்னுதான் நானும் பதபதைசுட்டேங்க!
ஆனால் சூரியனைக்கானோமாம் ! இந்த இரண்டு மூணு நாளைக்கே இப்படி பினாத்துகிறீர்களே ! பொறுங்கள் இன்னும் ஐந்து வருடங்களுக்கு
உதயசூரியனின் பார்வையிலே
இந்த தமிழகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே
ஆனால் ஒரு உண்மையை நாம் சொல்ல மறந்து விட்டோமே
நம்மிடம்:
ஒற்றுமையை காணவில்லை
சகோதரத்துவத்தை காணவில்லை
கலாச்சாரத்தை தொலைத்து விட்டு சீரழிவின் சிகரத்தை எட்டி பிடிக்க போட்டா போட்டி.
பெரியோர்களிடம்
சமத்துவத்தை காணவில்லை
சகிப்புத்தன்மையை காணவில்லை
சமுதாய பொறுப்பை காணவில்லை
மறை காட்டிய நல்லொழுக்கங்களை காணவில்லை
மக்களை நல்வழிப்படுத்தும் ஒரு முன்மாதிரியைக் காணவில்லை
இளைன்ஜர்களிடம் நம்பிக்கையை காணவில்லை
மாணாக்கர்களிடம் ஒரு உத்வேகத்தை காணவில்லை
பெற்றோர்களிடம் பொறுப்புகளை காணவில்லை
ஆலிம்களிடம் உண்மைகளை காணவில்லை
அவர்களிடம் அது காணவில்லை
இவர்களிடம் இதைக்கானவில்லை என்று
ஏன் முகத்தையே நான் இழந்து
என்னையே நான் தேடிக்கொண்டிருக்கிறேன்
என்னிடம் எல்லாம் காணமல் போய்விட்டது என்ற அவநம்பிக்கை என்று என்னுள் காணமல் போகிறதோ
24. Re:காணவில்லை! (?!)... posted byRiyaz Mohamed S H (Hongkong)[27 October 2011] IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 12326
அல்லாஹ் மிகப்பெரியவன்
இது காணவில்லை ஒன்றும் இல்லை, சில பெரியவங்களோட துஆவும், அவங்களோட வெளில சொல்ல முடியாத கஷ்டத்த இறைவன் நமக்கு இப்படி காட்டி இருக்கான்.
மேலும் பெரியவங்களோட துஆ அவங்களோட மதிப்பும் என்றென்றும் குறையாமல் இருந்து நமது காயலும் மிக சிறப்போடும் செழிப்போடும் இருக்க நாமும் துஆ செய்து பெரியவங்களோட ஒத்துழைத்து இருப்போமாக.
இந்த மழை என்னோடு படித்த நண்பர் Dr D . Mohamed Kizar Irsath சொன்னது போல நம் மக்கள் கவனத்தோடு செயல்பட்டு நமது ஊருக்கும் நம் மக்களுக்கும் பயன் உள்ளதாக வல்ல நாயன் ஆக்கி அருள் புரிவானாக. ஆமீன்.
25. கண்டுபிடித்த சந்தோசம் ... posted bymusthak ahamed (mumbai)[27 October 2011] IP: 49.*.*.* India | Comment Reference Number: 12341
எவ்வளவு கேலிகள்........ எவ்வளவு கிண்டல்கள்......... எவ்வளவு உற்சாகங்கள்................
கொஞ்ச நாட்களாக இருந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்றிய சீதோஷ்ண நிலை.
சந்தோசமாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.....................
கக
டாக்டர் கிசாரை எங்கள் பழைய கிசாராய் பார்த்தது _கலாய்ப்பு - சந்தோசம். -இன்னும் நிறைய குசும்புகள், சேட்டைகள், கலாய்ப்புகள், நிறைய டாக்டரிடம் இருக்கிறது.... அவர் கொஞ்சம் முயற்சித்தால் மருந்து இல்லாமலே பல நோய்களை குணப்படுத்திவிடுவார். டாக்டர் பழைய கடி ஜோக்கெல்லாம் ஞாபகம் இருக்கா.......... மருந்துகளுக்கு இடையில் மறந்து விட்டீர்களா.
கக
எஸ்.கே . ஷாலிஹு, கடைசி வரைக்கும் அந்த பேகில் என்ன இருக்கிறது என்று சொல்ல மாட்டீர்கள் அப்படிதானே. வேறு யாராவது அல்லது காயல்பட்னம்.காமாவது கண்டுபிடித்து வெளியிட்டால் புண்ணியமாய் போகும்.
கக
இன்னும் பல்வேறு சந்தோசமான சூழ்நிலைகளை வல்ல அல்லாஹ் நம்மிடையே நித்தியமாய் உருவாக்கிதரட்டும்.
28. Re:விசயத்திற்கு வருவோம் posted byOMER ANAS (DOHA QATAR.)[27 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12353
அஸ்ஸலாமு அழைக்கும்!!! உற்ச்சாகத்தில், எனது மகனார், உமர் ரிழ்வான் அவர்களும் கருத்தை பதிவு செய்திட ஆரம்பித்து விட்டார். ஆனாலும், சிந்திக்க பதிந்து உள்ளார்!!! பாராட்டுக்கள்!
அது போல் மருத்துவர் கிஸார் அவர்களும் தனது பதிவில் மூட்டு வலி குனியாவை சொல்லி இருக்கின்றார்! உண்மைதான். இதற்க்கு நம் ஊரின் சுகாதாரம் ஒரு கேள்விக் குறி??? ஒரு காலத்தில் இதை விட அதிக மழை பொழிந்தும், ஏன் தெருவிலேயே மீன் பிடித்தும் வால் தவக்களை பிடித்தும் இருக்கிறோம். ஆனாலும் இந்த கொடிய நோய் நம்மை தாக்கியதில்லை. காரணம் பஞ்சாயத்தில் இருந்து தினமும் மருந்து தெளிக்கப் படும்.
ஆனால் அது இப்ப பதிவேட்டில் எழுதி சுரண்டப் பட்டதே தவிர செயல் பட வில்லை. இனி அது நடக்கக் கூடாது. எனக்கு ஒரு ஆலோசனை உள்ளது. அதாவது சவுதியில் AL HOTY என்ற கம்பெனியில் PEST CONDROL உள்ளது இதில் நம் பிள்ளைகள் வேலை செய்கிறார்கள். அவர்கள் மூலம் இது சம்பந்தமான EQUP களை குறைந்த விலைக்கு வாங்கி, வேலை அற்றோரை வைத்து புகை மூட்டம் மற்றும் சொட்டு மருந்து மூலம் நாம் இயற்கையின் அழிவில் இருந்து நம் மக்களை காப்பாற்றலாம்! இதற்கு ஆகும் சலவை எல்லா மன்றங்களும் பங்கு போடலாம்!!! என் கருது சரிஎன்றால் செயல் வடிவம் தாருங்கள்!!!
மழையும் வெயிலும் மனித வாழ்வுக்கு ஆதாரங்கள். மழை பெய்தும் கெடுக்கும். பெய்யாமலும் கெடுக்கும் ஏழைகளின் வாழ்வில் மழை தரும் துன்பங்கள் சில. அது நம் வருத்தத்திற்கு உரியதே. என்றாலும் மழை தரும் இன்பம் எல்லோருக்கும் பொதுவானது. எனவே இங்கு காணாமல் போனது சூரியன் மட்டுமல்ல. மழை இன்மையால் மக்களின் மனங்களில் இருந்த கசப்பு புழுக்கம் வெக்கை இவை போன்ற எல்லாமும்தான். வாழ்க.. மழை. வெல்க அது தரும் சந்துஷ்டி ..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross