Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:15:27 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7441
#KOTW7441
Increase Font Size Decrease Font Size
வியாழன், அக்டோபர் 27, 2011
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்களுக்கு ‘மெகா‘ சார்பில் இன்றிரவு பாராட்டு விழா! சீதக்காதி திடலில் நடைபெறுகிறது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4474 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 10)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிதா மற்றும் 18 வார்டுகளின் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு, நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில் இன்றிரவு பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து ‘மெகா‘ ஆலோசகர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அண்மையில் நடைபெற்ற நமதூர் நகராட்சித் தேர்தலில் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோரை வாழ்த்தி, வரவேற்று, வெளிப்படையான - நேர்மையான - செயல்திறன் மிக்க நகர்மன்றத்தை அவர்கள் நிர்வகித்திட ஆலோசனை கூறும் வகையில், நமது நகர்மன்றத் தேர்தல் வழிகாடடு அமைப்பு (மெகா) சார்பில், இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 27.10.2011 வியாழக்கிழமை (நாளை) இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.

இவ்விழாவில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை உற்சாகப்படுத்த வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி.

என்றும் நகர்மன்ற நடவடிக்கைகளில் அக்கறையுடன்,
மெகா குழுமம் சார்பாக,
கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத்,
ஆலோசகர்,
நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (மெகா),
காயல்பட்டினம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
கவிமகன் காதர்,
செய்தித் தொடர்பாளர்,
நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (மெகா),
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மெகாவே... நாங்கள் அல்லவா உங்களுக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும்..!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [27 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12287

மெகாவே... நாங்கள் அல்லவா உங்களுக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும்..! நகரமன்ற தேர்தலை பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாத மக்களை விழிப்புணர்வு செய்த உங்களுக்கு தான் பாராட்டு விழா...

மெகாவே... நீங்கள் ஊரில் ஆற்றிய தேர்தல் விழிப்புணர்வு பணி பல பேர்களை பயனடைய செய்து இருப்பதில் சந்தேகமில்லை..! நகர் மன்றம் என்றால் என்ன.. ? அதன் நடப்புகள் செயல் பாடுகள் என்ன...? ஒரு நகர்மன்றம் எப்படி செயல் பட வேண்டும்...? நகர் மன்றத்தால் மக்களுக்கு அதன் பயன் என்ன..? ஒரு நகரமன்ற தலைவர் எப்படி இருக்க வேண்டும்..? இப்படி விபரம் தெரியாத என்னை போன்ற பாமர மக்களுக்கு மெகாவின் விழிப்புணர்வு சென்று அடைந்ததை நினைக்கும் போது பாராட்டாமல் இருக்க முடியவில்லை... அனைவர்களும் பாராட்ட பட வேண்டிய விசியம்..

மெகாவே... தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு சேவைகள்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [27 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12289

என்னங்க.. MEGA வின் குறிக்கோள் நிறைவேறி விட்டதே. பாராட்டுக்கள்.

இன்றுடன் MEGA விற்கு மூடு விழாவா.!!

தங்களின் தீவிர பீல்ட் வொர்க்கை பார்த்து மிகவும் மகிழ்ந்தோம். தொடரட்டும் தங்களின் சேவைகள் வேறு பரிணாமங்களில்.

தங்களின் நிலுவையில் உள்ள வழக்கின் நிலைமை என்ன?. சாதக/பாதக தீர்ப்புக்கு தங்களின் நிலைப்பாடு என்ன?.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. உங்களின் சேவை (விழிப்புணர்வு பிரச்சாரம்) அது இனி வரும் காலத்திலும் நமது ஊருக்கு கண்டிப்பாக தேவை..
posted by ஆமினா நசுமியா மற்றும் முகம்மது காசிம்.. (காயல்பட்டினம்) [27 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12295

நமது நகர்மன்றதிக்கு நல்ல தலைவர் அமைவதற்க்கு மெகாவின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மிகவும் பாராட்டகூடியது..!

உங்களின் சேவை (விழிப்புணர்வு பிரச்சாரம்) அது இனி வரும் காலத்திலும் நமது ஊருக்கு கண்டிப்பாக தேவை..

உங்களின் விழிப்புணர்வு சேவைக்கு வாழ்த்துக்கள்..

அன்புடன்
ஆமினா நசுமியா
மற்றும்
முகம்மது காசிம்
மொகுதூம் தெரு - காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by AbdulKader (Abu Dhabi) [27 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12305

அஸ்ஸலாமு அழைக்கும்...

சகோதரி ஆபிதா அவர்களின் பேச்சை (News ID # 7440) படித்த போது எனக்கு ஊரில் உள்ளவர்கள் (குறிப்பாக பெண்கள்) சொன்னது “உண்மை” என்று தெளிவாகிறது. அருமை சகோதரியின் வெற்றிக்கு MEGA என்ற ஒரு அமைப்பெல்லாம் காரணம் இல்லை என்று நீரூபிக்கப்பட்டுவிட்டது. ஆகையால் இதுபோல ஒரு விழா கொண்டாடவேண்டிய அவசியம் இல்லை என்று நான் கருதுகின்றேன்!!

சகோதரி ஆபிதா அவர்களின் வெற்றிக்கு முதல் முக்கிய காரணம்... இவர்களின் பெற்றோர்.... சுன்னத்வல் ஜமாஅத்தின் அகீதாவின் அடிப்படியில் இவர்களுக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுத்து வளர்த்தது!!. ஓட்டு கேட்க சென்ற வீட்டிலெல்லாம் "தேர்தலில் போட்டியிடுகிறேன்... “துஆ” செய்யுங்கள்" என்று கண்ணியம் கலந்த புன்னகையுடன் ஓட்டு கேட்டதுதான். இதற்க்கு ஆதாரம்.... சகோதரி ஆபிதவுக்கு எல்லா முஸ்லிம் பகுதிகளிலும் ஏறத்தாள சமமான ஓட்டு பதிவாகி இருப்பது. (ஒருவேலை சகோதரி ஆபிதா அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியை நாடியதினால்தானோ என்னவோ... இவர்கள் அன்று முஸ்லிம் ஐக்கிய பேரவையின் பெரியோர்களின் விருபத்திர்கிணங்க முச்சரிக்கையில் கையெழுத்து இட மறுத்தது?! அல்லாஹ் எல்லோரின் உள்ளங்களை நன்கு அறிவான்)

இரண்டாவதாக.... புதுப்பள்ளி ஜமாஅத்தின் தலைமையில் இருந்து பிரிந்து சென்று "நம் கைப்பிள்ளை நம் கையை விட்டு போய்விடக்கூடாது" என்று கருதி அவர்களின் கையில் தம் வெற்றிப்பிள்ளையை எடுத்ததினால்!!! அவர்களின் அவசர அறிக்கையின் நோக்கத்தை புரிந்துகொண்டவர்களில் நானும் ஒருவர்!!!

மூன்றாவதாக...... வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பின் MEGAவின் சஹாக்கள் பகிரங்கமாக சகோதரி அபிதாவுக்காக தேர்தல் காலத்திலும் இன்னும் தேர்தல் முடிவு வரை முழுமூச்சாக வெற்றிபெற வைக்கும் "செயலில்” இறங்கியது / நின்று உழைத்தது!!

இதற்க்கு இடையே இன்னும் பல உதவிகள் வந்தன...

கடைசியாக.... kayalpatnam.com தம்பி SK ஸாலிஹ் அவர்கள் ஒரு தலைபட்சமாக சகோதரி ஆபிதா அவர்களின் வெற்றிக்கு முன்னும், வெற்றி அடைந்த பின்பும், இன்றுவரையிலும்.... இந்த வலைதளத்தில் செய்திகளை வெளியிட்டதனால். (குற்றம் சுமத்தவில்லை... உண்மையைத்தான் எழுதுகிறேன்!)

அல்லாஹ் நாடியபடி எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

MEGA அறிமுகம் செய்து ஆதரித்த சகோதரி ஆபிதா அவர்களின் வெற்றிக்கு பின்னர்..... வெற்றிவழா கொண்டாடுவதெல்லாம் சரி..... அனால்...MEGA குழுமம் அவர்கள் இந்த ஊருக்கு செய்த "பெரும் தவறை" நினைத்து "தலைக்கு வந்தது... தலைகட்டை எடுத்துவிட்டு சென்றுவிட்டது" என்று பெருமூச்சு விட்டுக்கொள்ளட்டும். இது போன்ற தவறை இனி தவறியும் செய்யாமல் அல்லாஹ் அவர்களை பேணி பாதுகாப்பானாக... ஆமீன்!!

உண்மை கசக்கத்தான் செய்யும்!!! என்னுடைய கருத்தை ஒரு குற்றப்பத்திரிக்கையாக எடுக்காமல்.. நானும் உங்களின் ஒருவன் என்ற எண்ணத்துடன் என்னுடைய்ய கருத்தை சகித்துக்கொள்ளவும்!!

என்னுடைய்ய இந்த கருத்தை குறுக்காமல் / முடக்காமல் வெளியிட்டால்... நான் இந்த வலையதலத்தவர்களுக்கு நன்றி கூறுவேன்!!

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by P.S.ABDUL KADER (jeddah) [27 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12319

நான் இந்த விழாவை நேரில் காணும் விதம் தலைவர் மட்டும் எல்லா வார்டு மெம்பெர் பேச்சை வீடியோ படம் மூலம் kayal tv இல் நாளை பதிவு செய்ய எற்பாடு செய்யும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இகழ்வது ஏற்கேள்
posted by Salai Shek Saleem (Dubai) [27 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12327

சகோதரர் அப்துல் காதர் ஏதோ thanakkutthaan எழுத வரும் என்று நினைத்து பினாத்தி இருக்கிறார் தன்னுடைய பதிவில்.

முதலில் இது ஒன்றும் மெகா நடத்தும் வெற்றி விழா அல்ல. நடைபெற்று முடிந்த நகராட்சி மன்ற தேர்தலில் மக்களின் மாபெரும் அங்கீகாரத்துடன் வெற்றி பெற்ற மன்ற தலைவருக்கு நடத்தும் பாராட்டு விழா. இது mega ஏன் நடத்தவேண்டும் என்றால், இந்த தேர்தலில் மக்களின் விழிப்புணர்ச்சி MEGA மக்கள் மன்றத்தில் முன் வைத்த தனது செயல்பாடுகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகத்தான் கருதுகிறது.

நீங்கள் உங்கள் கருத்துபதிவில் சகோதரி ஆபிதா அவர்களின் வெற்றிக்கு mega காரணம் இல்லை என்கிறீர்கள், பின்னர் மெகா வின் உழைப்பு இருந்தது என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடுகள்? இதற்க்கு காரணம் என்ன தெரியுமா? உங்களால் இந்த ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியை ஜீரணம் பண்ண முடியாததுதான். முடிய வில்லை என்றால் 'சிலரை'ப் போல் வாய் மூடி மொவுனம் காக்க வேண்டியதுதானே ?

உங்களது பழைய பதிவுகளிலிருந்தே நீங்கள் ******யின் அர்ச்சகர்தான் என்று எல்லோருக்கும் தெளிவான ஒரு செய்தி. அதை கருத்து பதிவின் மூலம் மறைக்கும் ஒரு நாடகம் தான் உங்களின் இந்த பதிவு.

mega சகோதரி ஆபிதா அவர்களின் வெற்றிக்கு உழைத்தது என்று எதை ஆதாரமாக வைத்து சொல்கிறீர்கள் ? நிரூபிக்க முடியுமா? வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கு இரண்டு வேட்பாளர்களுமே அழைக்கப்பட்டிருந்தார்கள் - ஒருவர் வராவிட்டால் மற்றவரை வைத்து மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்வது எந்த விதத்தில் அநியாயம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

mega செய்தது தவறா ? அல்லது மிகப்பெரிய ஜனநாயக படுகொலையில் இருந்து நமதூரை காப்பாற்றியது எங்கள் தவறா?

சகோதரி ஆபிதா அவர்களின் வெற்றிக்கு எதுவாகட்டும் காரணங்களாய் இருந்து விட்டு போகட்டுமே. நீங்கள் நுனிப்புல் மேய்ந்திருக்க வேண்டாமே?

ஐக்கிய பேரவை வேண்டாம் என்று யாரும் ஒருபோதும் சொன்னதும் இல்லை சொல்லப்போவதும் இல்லை. ஆனால் ஐக்கிய பேரவை அயோக்கியர்களின் கூடாரமாகி விடக்கூடாது என்பதுதான் எங்களின் கோரிக்கை. இதற்க்கு இந்த தேர்தலே பெரிய சாட்சி. உடனே, நீங்கள் பெரியவர்களை மதிக்கவில்லை என்று தயவு செய்து திரும்ப திரும்ப எழுதாதீர்கள். அதற்கும் பதில்கள் வந்து குவிந்து விட்டது.

ஓன்று நல்லது செய்ய நினையுங்கள் - முடிய வில்லையா நல்லது செய்வோரை பார்த்துக்கொண்டு இருங்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மெகாவை விமர்சிப்பவர்கள் எங்கள் மேல் அன்பு கொண்டவர்களே!!
posted by K.V.A.T. HABEEB MUHAMMADH (kayalpatnam) [27 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 12331

அன்பு நண்பர் பாதுல் அஸ்ஹப் என்ற அப்துல் காதர் அவர்களே உங்கள் விமர்சனம் போல நிறைய விமர்சனங்களை எங்கள் மெகாவுக்கு அனுப்பும் போது தான் உண்மையான புது தெம்பு பிறந்து இன்னும் நிறைய நல்ல பல அதிர்ச்சி வைத்தியங்கள் உங்களை போன்றவர்களுக்கு இறையருளால் எங்களால் வழங்க முடியும் இதில் கோவ படுறதுக்கு என்ன இருக்கு ?! அதனால் நம்ம ஊருக்கு இன்னும் பல நல்ல சேவைகள் அதிரடியாக கிடைக்கும் ! விமர்சனம் பண்ணுபவர்கள் தான் எண்களின் உண்மையான தோழர்கள் !!

நாங்கள் இப்போ செய்து கொண்டிருக்கிற ... பெரியவர்களின் பெருமதிப்பையும் பெற இருக்கிற செய்திகள் உங்கள் கண்களை சீக்கிரம் சந்திக்கும் ! அவசர படாதீர்கள் தோழர் பாதுல் என்ற அப்துல் காதர் அவர்களே ....

மெகா என்றும் மக்கள் மனதில் மகா உன்னத இடத்தில் இருக்கு என்று உங்கள் கரங்கள் இதே தளத்தில் தாளம் கொட்டும் காலம் தொலைவில் ஒன்றும் இல்லை நண்பரே ....

போற்றுவோர் போற்றட்டும்... தூற்றுவோர் தூற்றட்டும் ... உளத்தூய்மை இருப்பின் எம் பணி என்றும் சிறக்கட்டும்..... வல்ல இறைவா உன் துணை எமக்கு என்றும் இருக்கும் வரை ! ஆமீன் !!

அன்புடன் ...என்றும் நகர் பணியில் அற்பணிக்கும் உள்ளம்,
K.V.A.T. ஹபீப் முஹம்மத்
முத்து மஹால்
குறுக்குத்தெரு
காயல்பட்டினம்
00919629358377

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by Mohiadeen (Phoenix) [27 October 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 12333

சகோதரர் அப்துல் காதர் அவர்கள்ளுக்கு,

தங்களின் வார்த்தை "Managerial Skills" நன்கு அறிதவன் நான்.

மெகாவின் கஊட்டம் ஐக்கிய பேரவைக்கு எதிராக அமையும் என்பது தங்களின் பயம். அதன் வெளிப்பாடு தான் இது.

தேர்தல் பிறகு தங்களின் ஆதங்கம் வலைதளத்தை மூட சொல்லுவது மெகாவின் வளர்ச்சி கெடுப்பது இதுதான்.

ஏன்? ஐக்கிய பேரவை செயல்பாடுகளை மக்களுக்கு வேளிபடுதியவர்கள். ஜனநாயகத்தை காயல் மக்களுக்கு கொண்டு வந்த்தவர்கள். ஆஹா ஏன்ன ஒரு உழைப்பு தங்களின் ஐக்கிய பேரவை சொந்தங்கள் மீது.

ஊரு ஓற்றுமைதான் முக்கியம். இப்படி பிரிக்காதீர்கள்.

ஐக்கிய பேரவை வேண்டாம் என்று யாரும் ஒருபோதும் சொன்னதும் இல்லை சொல்லப்போவதும் இல்லை. ஆனால் ஐக்கிய பேரவை அயோக்கியர்களின் கூடாரமாகி விடக்கூடாது என்பதுதான் எங்களின் கோரிக்கை. இதற்க்கு இந்த தேர்தலே பெரிய சாட்சி. உடனே, நீங்கள் பெரியவர்களை மதிக்கவில்லை என்று தயவு செய்து திரும்ப திரும்ப எழுதாதீர்கள். அதற்கும் பதில்கள் வந்து குவிந்து விட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. அரை குறை தகவல்களை அறிந்து அரைகுறையாக எழுதுவது நாகரீகம் அல்ல..! அப்துல் காதர் அவர்களே.. வெற்றி விழா அல்ல... பாராட்டு விழா..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [27 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12334

சகோதரர் அப்துல் காதர் என்னதான் சொல்ல வருகிறார்னு புரியலை... ஆபிதவின் வெற்றியால் நிலைகுலைந்து போய் இருக்கிறார் போலும்...

அவரின் கருத்து பதிவில்

(1) சகோதரியின் வெற்றிக்கு MEGA என்ற ஒரு அமைப்பெல்லாம் காரணம் இல்லை என்று நீரூபிக்கப்பட்டுவிட்டது...

(2) MEGAவின் சஹாக்கள் பகிரங்கமாக சகோதரி அபிதாவுக்காக தேர்தல் காலத்திலும் இன்னும் தேர்தல் முடிவு வரை முழுமூச்சாக வெற்றிபெற வைக்கும் "செயலில்” இறங்கியது / நின்று உழைத்தது!! இப்படி இரண்டையும் பதிவு செய்கிறார்..

ஏன் தடுமாறுகிறீர்கள் அப்துல் காதர் அவர்களே..! தாங்களின் கருத்து பிறர்க்கு புரிகிற மாதிரி எழுதுங்கள்... (3) வது படியுங்கள்.. தம்பி SK ஸாலிஹ் அவர்கள் ஒரு தலைபட்சமாக சகோதரி ஆபிதா அவர்களின் வெற்றிக்கு முன்னும், வெற்றி அடைந்த பின்பும், இன்றுவரையிலும்.... இந்த வலைதளத்தில் செய்திகளை வெளியிட்டதனால்..

(4) வது MEGA அறிமுகம் செய்து ஆதரித்த சகோதரி ஆபிதா அவர்களின் வெற்றிக்கு பின்னர்..... வெற்றிவழா கொண்டாடுவதெல்லாம் சரி..னும் அப்துல் காதர் எழுதுகிறார்.. அப்துல் காதர் அவர்களே மெகாவின் சகாக்களின் ஒருவர் தம்பி SK ஸாலிஹ் அவர்களும் அடங்குவார் ஆகவே ஆபிதவின் வெற்றி மெகாவில் இல்லை என்பதனை நீங்கள் மறுக்க கூடாது...

அப்துல் காதர் அவர்களே.. மிக மிக முக்கியம் தயவு செய்து நீங்கள் சரியாக செய்தியை படியுங்கள்... மெகா வெற்றி விழா என்று தலைப்பும் உள்ளே செய்தியும் இல்லை.. சரியாக படியுங்கள்... பாராட்டு விழா என்று தான் தலைப்பும் செய்தியும் இருக்கிறது...

தயவு செய்து தானும் குழம்பி அடுத்தவரையும் குழப்பாதீர்..! அப்துல் காதர் அவர்கள் என்னமோ பெரும் தவறை மெகா செய்தது போல் சொல்கிறார்.. மெகா ஊருக்கு என்ன தவறு செய்து விட்டது என்கிறார் ?

ஊரில் தேர்தல் விழிப்புணர்வு இல்லாத மக்களை விழிப்புணர்வு செய்து நம் நகருக்கு நல்ல நகரமன்ற தலைவியை பதவியில் அமர்த்த பெரும் பாடுபட்டு இருக்கிறது... தாங்கள் வெளி நாட்டில் இருந்து கொண்டு அரை குறை தகவல்களை அறிந்து அரைகுறையாக எழுதுவது நாகரீகம் அல்ல..!

தாழ்மையான வேண்டுகோள்:- மெகாவின் ஒருகினைப்பாளர் ஜனாப் சாலை சலீம் பாய் அவர்கள் இது போன்ற குழப்பவாதிகளின் கருத்துக்களுக்கு பதில் கருத்து பதிவு செய்யாமல் இருப்பது நல்லது..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (வி.சி.கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [27 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12335

அன்பு சாளை சலீம் காக்கா அவர்களே, ஏதற்க்கு டென்ஷன் ஆகி பதில் எல்லாம் கொடுத்துக்கொண்டு... டைம் வேஸ்ட் பண்ணிக்கொண்டு.

சகோதரர் அப்துல்காதர் (பாதுல்அஷ்ஹப்) என்றுமே நிதானமாக எழுதுபவர் அல்ல. அவரின் நிலையை, நிலை நிறுத்த எந்த கொம்பையும் பிடிப்பவர்.

ஐக்கிய பேரவை எந்த தவறு செய்தாலும் சரி என்பார், பின்பு சுன்னது வல் ஜமாஅத் என்பார், அங்கு துஆ கேட்டார்கள், இங்கு துஆ கேட்டார்கள் அதான் வெற்றி என்பார், MEGA ஆபிதா அவர்களை மற்றும் ஆதரித்து என்பார், MEGA வெறும் சும்மா என்பார், நான் நேரில் கண்ட கள்ள ஓட்டு செய்தியை கற்பனை என்பார் (தினகரனிலும், தினமலரிலும் வந்து நாறியது), உனக்கு அங்கு என்ன தேவை இல்லாத வேலை என்பார், பெண் ஆடை போட்டுக்கொண்டா சென்றாய் என்பார்... இப்படி ஒரு நார்மல் இல்லாத வாதம் தான் அவரின் வாதம்.

சரி, நாம் பதில் கொடுக்கலாம் என்று ஆளை விசாரித்தால்.. இங்கு தம்மாமில் இருந்து சென்ற, நன்கு அறிமுகம் ஆன சகோதரர்தான். அவரா இவர்.. சா..சச்..சா... இவரை பற்றிதான் அனைவர்களுக்கும் தெரியுமே.. இவருக்கா பதில் எழுதனும் என்று விட்டு விட்டேன்.

அதான்.. லூசிலே விடுங்க காக்கா... நமக்கு பல வேலைகள் இருக்கின்றது. அம்மி கொத்துபவர்கள் கொத்திக்கொண்டே இருக்கட்டும்.. தேங்காய் நன்றாக அரைபட்டால் சரிதான் அவர்களுக்கு.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by AbdulKader (Abu Dhabi) [27 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12337

அஸ்ஸலாமு அழைக்கும்...

சலீம் காக்கா.... என்னுடைய்ய கருத்தில் முரண்பாடு இல்லை! (என்னுடைய்ய கருத்தில் உள்நோக்கத்தை நீங்கள் புரிந்து பதிலும் எழுதியுள்ளீர்கள்) மேலும் நான் ******யின் அர்ச்சகர்தான் என்று "எல்லோருக்கும்" தெளிவான ஒரு செய்தி என்று நீங்கள் கூறியதை, "என்னை போன்றவர்களுக்கு" என்று திருத்திக்கொண்டால் நலம்.

என்னுடைய முந்தய கருத்து பதிவுகள் எல்லாம், ஒற்றுமையை குறித்துதானே அல்லாது... நான் பேரவைக்கு வக்காலத்து வாங்கவில்லை!! அப்படி நான் பேரவைக்கு வக்காலத்து வாங்கியதாக உங்களை போன்றவர்கள் கருதினால்..... நான் பெரும் தவறு ஒன்றும் செய்யவில்லை!??

ஜனநாயகம் என்ற பேரில் இன்னும் நம் ஊரில் என்னென்ன நடக்கப்போகிறதோ!!! அல்லாஹ்விற்கு வெளிச்சம். நீங்கள் எந்த காரியத்தை நல்லது என்று செய்கின்றீர்களோ, அதை போல் நானும் சில காரியத்தை சரி / நல்லது என்று செய்கிறேன்!! ஜனநாயகவாதியான நீங்கள் அதை ஏன் ஒரு குறையாக எடுத்து கூறுகின்றீர்கள்?!!

மேலே நான் உங்களுக்கு பதில் தந்தேனே அல்லாது... உங்களோடு நான் வாதடவில்லை!

எல்லாவற்றிக்கும் மேலாக......உண்மை கசக்கத்தான் செய்யும்!!! திரும்பவும் எழுதுகிறேன்..... என்னுடைய கருத்தை தயவு செய்து ஒரு குற்றப்பத்திரிக்கையாக எடுக்காமல்.. நானும் உங்களின் ஒருவன் என்ற எண்ணத்துடன் என்னுடைய்ய கருத்தை சகித்துக்கொள்ளவும்!!

என்னைவிட வயதில் மூத்தவர்கள் நீங்கள்! நான் உங்களின் மனதை புண் படுத்தவேண்டும் என்று இந்த கருத்தை பதியவில்லை! தவறு நடக்கும் போது சுற்றிக்காட்டுவது சகோதரத்துவம்!! இதை புரிந்தால் சரி!!

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by drnoordeen (muscat) [27 October 2011]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 12338

மச்சான் சலீம்

உன் பதில் சூப்பர் ஆனால் கடைசி வார்த்தை பராசக்தி வசனம் போல் உள்ளது உன் சேவையை தொடர என் வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. நன்றி நண்பர்களே!
posted by kavimagan (kayalpatnam) [27 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 12339

அன்பு சொந்தங்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!

நீண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். பல்வேறு சோதனைகளுக்கு இடையில், நமது “மெகா” வைக் கொண்டு வல்ல அல்லாஹ் மிகப்பெரும் ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறான் என்று நல்லவர்களும் நடுநிலையாளர்களும் பாராட்டுகளை வழங்கிக் கொண்டிருக்கின்ற நல்ல சமயத்தில், நடுநிலை தவறி விமர்சனம் செய்பவர்களை பொருட்படுத்தாமல் விடுவதே நல்லது.

சலீம் காக்கா, கரீம் சார், நவாஸ்பாய், KVAT.ஹபீப் மச்சான், உங்கள் உழைப்புக்கும், உறுதிக்கும், நீதி தவறாத நெஞ்சுரத்திற்கும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிறைய விஷயங்களோடு மீண்டும் இறையருளால் வருவேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. வேண்டாம் இது
posted by Habeeb Rahman (Dubai) [27 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12347

எல்லாம் ஒழுங்காகத்தான் போய்கொண்டு இருந்தது! இந்த election வந்தது! இரு மாதங்களுக்கு முன்பே தொடங்கிய வாக்கு வாதங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது! இனி வீரியம் கூடி விடுமோ என்று பயமாக இருக்கின்றது.

நான் நல்ல பக்குவபட்டவர்கள் என்று நினைத்த சில நண்பர்கள்கூட இங்கு உணர்ச்சிவச பட்டு வார்த்தைகலை அள்ளி கொட்டுவதை பார்க்கின்றேன். நக்கலும் கிண்டலும் வார்த்தைகளில் சேரும்பொழுது அதில் ஒருவேளை நியாயம் இருந்தாலும் அது மற்றவர்களுக்கு கோபத்தைத்தான் ஏற்படுத்தும். இது மனித இயல்பு. இது தீர்வை தராது. மென்மேலும் வீண் விவாதங்களைத்தான் ஏற்படுத்தும்.

ஒவ்வருவரும் தன் பக்கம் வாதங்களைதான் நியாயப்படுத்த முனைவார்கள். வார்த்தைகளை வலைதொடிப்பர்கள். தனி மனித விமரிசனங்களால் தரம் தாழ்ந்து போவர்கள்.

போதும்! கிட்டத்தட்ட அறை நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த இதை போன்ற ஒரு தேர்தலின் மூலம்தான் ஊர் இரண்டு பட்டது . அதன் பாதிப்பு இன்னமும் அடங்கவில்லை. (LKT -MKT) வாப்பமார்களை கேட்டால் தெரியும். அதை போன்ற இன்னொரு பிரிவை ஊர் தங்காது.

இதோ இத்துடன் இந்த தேர்தல் தொடர்பான எல்லா வாதங்களையும் நிறுத்துவோம். தேர்தல் முடிந்து விட்டது. இனி அவர்கள் பணியை ஒழுங்காக செய்ய விடுங்கள். ஒவவொரு நிமிடத்திலும் அவர்கள் இதை செய்தார்கள் அதை செய்தார்கள் என்று அவர்களையே FOLLOW பண்ண தேவை இல்லை.

என்னை கேட்டால் இந்த கமெண்ட்ஸ் பகுதியை நிறுத்திவிட்டால் மிக நன்றாக் இருக்கும். செய்திகளை செய்திகளாக மட்டும் பார்த்த வரை ஒரு பிரச்சினையும் வரவில்லை. அதில் அவரவர்கள் சொந்த கருத்துகளை சேர்க்க ஆரம்பித்தபோதுதான் இவ்வளவும். இது அரட்டை அரங்கமாக மாறியதுடன் நிற்காமல் இதோ இப்பொழுது போர்களமாக மாற தொடங்கியுள்ளது. இது ஆரோக்கிய மானதல்ல. அட்மின் அவர்களே இந்த கருத்து பகுதி தேவைதானா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by CNash (Makkah) [27 October 2011]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12350

பெருமழை என்ற பேரவை ஓய்ந்து விட்டாலும் தூறல் போன்ற இந்த அப்துல்காதர் காக்கா போன்றோரில் கருத்து விடாது போல!!! வெறும் கருத்தாக மட்டும் இருந்தால் ஏற்று கொண்டோ அல்லது எதிர்கருத்து தெரிவித்தோ இருக்கலாம்... இந்த கருத்து வெறும் விஷமம், துவேசம் ஒட்டு மொத்தத்தில் தோல்வியை ஜீரணிக்க முடியாத வெறி.

இன்று MEGA மீதும், காயல்.காம், மீதும்!!!!....உங்கள் கருத்திலும் கோபத்திலும் இருந்தே புரியாதர்களுக்கு கூட புரிந்து இருக்கும் ...MEGA வின் பங்கு என்ன என்பதை..... ஆனால் மெகா ஒன்றும் அதற்க்கு உரிமை கொண்டாடவும் இல்லை... COPYRIGHT கேட்கவும் இல்லை..

தேர்தலுக்கு முன், பெரியோர்களை மதிக்கவில்லை ஊர் ஒற்றுமை இப்படியே கீறல் விழுந்த ரெகார்ட் மாறி உளறி முடித்த கையொடு.... மத்திய காயல், மாநில காயல் என்று பிரிவினையை தொடங்கி வைத்தார்... இப்போது தோல்வியை விழுங்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல்.. இன்று எல்லோரும் கொள்கை பேதம் மறந்து ஒற்றுமையான நகர்மன்றம் அமைக்கும் முயற்சியில் ஒன்று கூடி இருக்கும் போது அகீதா.. சுன்னத் வல் ஜாமாத், என்று கொள்கை பிரிவினைவாததை துவக்கி வைத்து இருக்கிறார்.

இந்த காயல் ஒற்றுமைக்கு ROYALTY எடுத்தவர்!!! இங்கு யாரும் யார் கொள்கைக்கும் எதிரி அல்ல, உங்கள் முயற்சி இப்படி தான் வீணாக போகும்!! அகீதா படி துவா கேட்க சொன்னாராம் ஆபிதா!! நாங்கள் துவா கேட்க சொல்வதை முஸ்லிம் என்ற ஒரே அகீதாவில் வைத்து தான் பார்க்கிறோம் ...வீண் முயற்சி வேணாம்... பிரிவு உண்டாக்க!!

நீங்கள் கேட்க வேண்டிய இடம் இங்கே இல்லே... பெரியவர்கள் பெரியவர்கள் என்று போற்றுநீர்களே அவர்களிடம் கேளுங்கள்... துவா செய்யுங்கள் என்று வீடு தேடி வந்து கேட்டவரை..... Bதுவா செய்வேன் என்றும் வீட்டை விட்டு விரட்டி விட்டவர்களிடம் போய் உங்கள் அகீதா பற்றி விளக்கி சொல்லுங்கள்!!

உங்கள் கருத்துபடி அகீதாவை பற்றிபிடித்து பெரியோர்களில் பலத்த துவாவோடு நின்ற உங்கள் பேரவை வேட்பாளருக்கு தானே வெற்றி வந்திருக்க வேண்டும்.. அல்லாஹ் நாடியருக்கு ஆட்சியை கொடுக்கிறான் என்ற நம்பிக்கையில் உறுதியாக நின்று.. வெற்றியும் தோல்வியும் ஒன்றாக பார்க்கும் ஆகீதவையும் சேர்த்து கற்றுக்கொள்ளுங்கள்!! இன்று இப்படி பேசும் நீங்கள் உங்கள் பழைய கருத்தையும் சேர்த்து பாருங்கள்... அன்று சகோதரி ஆபிதா மீது எந்த அகீதாவை வைத்து இப்படி எல்லாம் பேசினீர்கள், கொஞ்சம் திரும்பி பாருங்கள்!!

இப்படி ஊரின் ஒற்றுமையை எதிர்த்து, பெரியோர்களை மதிக்காமல், தான்தோன்றித்தனமாக செயல்பட்ட சகோதரி அபிதா அவர்கள்.... எப்படி மக்களுக்காக, மக்கள் சொல்கேட்டு, மக்களுக்காக செயல்படுவார்? Comment Reference Number: 9420

அபிதா ராத்தா தேர்தலில் வென்றால் அவமானம் ஐக்கிய முஸ்லிம் பேரவைக்கு இல்லை, அனால் நம் ஊர் மக்களுக்குத்தான் என்பதை நினைத்து சற்று சிந்தனை கொள்ளுங்கள். Comment Reference Number: 9404 (இப்போ என்ன அவமானம் ஓர் மக்களுக்கு வந்தது)

முச்சரிக்கை பற்றி புது விளக்கம் அல்லாஹ்வுடைய நாட்டம் என்றெல்லாம் வியாக்கியானம் கொடுக்கும் நீங்கள் ...கொஞ்சம் உங்கள் பழைய கருத்தையும் சேர்த்து பாருங்க!!

நிச்சயமாக ஊர் ஒற்றுமை மற்றும் ஊர் நலத்தில் அக்கறை இல்லாத சிலர் உங்களுக்கு நல்ல யோசனைகளை தர மறுத்துவிட்டார்கள். முதலில் நீங்கள் செய்த தவறு... யாரோ சொல்வது கேட்டு... உங்களுடைய்ய விண்ணப்பத்தை நிராகரித்து விடுவார்கள் என்ற பயம். அல்லாஹ்வின் பெயரில் தன்னம்பிக்கை எனக்கு உண்டு என்று சொல்லும் நீங்கள்.... அல்லாஹ்வின் பெயரில் தவக்கல் வைத்து முச்ச்ரிக்கையில் கையெழுத்து போட்டு இருக்கவேண்டும்!

சொல்லுவார் சொன்னால் கேட்பாருக்கு புத்தி எங்கே போனது? பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லுவார்கள்

முச்சரிக்கையில் சகோதரி ஆபிதவை, எல்லா ஜமாதாரின் அங்கீகாரத்துடன் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத், கையெழுத்து போடச்சொன்னது எந்த வகையில் தவறு? உண்மையில் உங்களுக்கு மார்க்க பற்று இருந்தால் போட்டியிலிருந்து விலகுவதுதான் உங்களுடைய்ய அந்தஸ்தை மேலும் உயர்த்தும். மேலும்... தாங்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் ஊர் ஒன்று படும். ஊரை பிறித்த பாவம் என் அன்பு சகோதரியே உங்களுக்கு வேண்டாம் Comment Reference Number: 9599

இதெல்லாம் சுய நினைவோடு சொன்ன வார்த்தைகள் தானா!!!

காயல்.காம் மீது இப்போது உங்களை போல சிலருக்கும் கோபம் பொத்து கொண்டு வருகிறது!! ஏன்!! சிலருடைய முகத்திரை... ஆணவம் பணம் அதிகாரம் இதெல்லாம் கிழிக்கப்பட்ட கோபமா?

பெரியவர்களை(!!) சந்திக்கின்ற போட்டவை கூட போட கூடாதாம், ஒற்றுமைக்கு பங்கம் வந்துவிடுமாம்.. அதை விட்டு விட்டு அந்த பெரியோருக்கு எடுத்து சொல்லகூடிய தைரியமும், துணிவும் நடுநிலையாளர்கள் என்று சொல்லி கொண்டு கருத்து சொல்லும் இந்த பெரியவர்களுக்கும் இல்லையா!! அதை விட்டு விட்டு.... ஏன் மீடியா மீது உங்கள் கோபத்தை திருப்பி இருகிறீர்கள்? சொல்ல வேண்டிய இடத்தில போய் சொல்லுங்கள்!! இப்போது தெரிகிறதா யார் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று!!

நாங்கள் வெற்றி பெற்றோம் என்று வெறி கொள்ளவில்லை.. மெகாவும், காயல்.காம், கொள்கை இதெல்லாம் காரணம் என்று பிதற்றி கொண்டு அலையவில்லை.. மாறாக மக்கள் அளித்த தீர்ப்பு உண்மை இருந்ததால் மக்கள் ஆதரித்தார்கள்.. இதற்கெல்லாம் மேல் அல்லாஹ்வுடைய நாட்டம் இருந்தது என்று சொல்லி விட்டு அல்லாஹ்விற்கு நன்றி கூறி... இனி நடக்க இருக்கும் நல்லவைகளை பார்க்கிறோம்.... அதையே நீங்களும் செய்யுங்கள்... நீங்கள் சார்ந்து இருக்கும் அந்த அவை பெரியோர்க்கும் புத்தி சொல்லி... உங்கள் அகீதா படி துவா செய்ய சொல்லுங்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by M Sajith (DUBAI) [27 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12352

மெகா அன்பர்கள் சகோதரர் அப்துல்காதர் (பாதுல்அஷ்ஹப்) அவர்களின் நல்ல எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்..

வெற்றிக்குப்பின் விழா எடுத்து கடுப்பேத்துவதுக்கு பதிலாக, சகோதரர் குறிப்பிட்ட தலைக்கு வந்தது தலைகட்டோடு போன அந்த "பெரும் தவறை", சகோதர சமுதாய வேட்பாளரை நிறுத்தியது யார் என்பதை கண்டு அறிவிக்கலாம்.

ஒரு RTI பெட்டிஷன் போட்டு, வேட்பாளரின் முகவராக வாக்கு சாவடிகளிலும், ஒட்டு எண்ணும் இடத்திலும் நியமிக்கப்பட்டவர்களின் பெயர் விபரம் வெளியிட்டால்.. இந்த "பெரும் தவறை" செய்யத்துணிந்த கருப்பு ஆடுகளை அடையாளம் காட்டுவது எதிர் வரும் காலங்களில் காயலின் கண்ணியம் காக்க உதவும்

ஒற்றுமையை என்ன விலைகொடுத்தாவது வாங்கியே ஆகவேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை உள்ள இவரும் (Comment # 10540) இதை கட்டாயம் வரவேற்பார்.. ஒற்றுமைக்காக குரல் கொடுத்த ஊரின் கண்ணியம் பேனத்துடித்த அனைவரும் வரவேற்பர்

மெகா செய்யுமா?
----------------------------------------------
மழையால் கூட்டம் ஒத்திவைத்தாகிவிட்டது - இடையில் கிடைக்கும் நேரத்தை வீணாக்கிவிடாமல் இதை அவசியம் செய்ய வேண்டும்..!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by HAJI,N.S.SEYED MOHD BUHARY,B.COM., (ALJUBAIL,SAUDI ARABIA.) [28 October 2011]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12370

Our Hearty Congratulation to Chairman ,Mr.M.S.M.Shamsudeen and rest all elected members of Kayal Muncipality.

Haji.N.S.Seyed Mohamed Buhary,B.com.,
Hajjah.Kulavi.Zakkiya Buhary,And
S.M.B.Mohamed Fathima ,B.com.,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. மாப்ளே Cna நச்சுன்னு சொன்னே .
posted by Dustagir (Dubai) [28 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12371

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாப்ளே சீனா சும்மா நச்சுன்னு சொன்ன, நறுக்குன்னு சொன்ன (கொட்டுன). கொட்டுன கொட்டுல வீங்கி இருக்கணும்.

என்ன சொன்னாலும் உரைகுன்னு நினைகிறியா?

தேர்தல் நேரத்துலையே எப்படிலாம் கரணம் அடிச்சாங்க? மக்களை எப்படிலாம் ஒற்றுமைய்னு சொல்லிக்கிட்டு கூறுபோட பாத்தாங்க? இங்கு அல்லாஹ்வின் சூழ்ச்சி வென்றது. அத ஒத்துக்க மனசு இல்ல.

எங்கேந்து வாப்பா அகீதா வந்தது? கொள்கை வந்தது? அப்படி ஒரு பிரிவு நினைத்து இருந்தால் இன்னுமொரு வேட்பாளர் வந்து இருப்பார். ஊர் சின்னபின்னமாகி இருக்கும். எனக்கும் பேசவரும்னு எதையாவது உளற கூடாது. சகோதரி ஆபிதாவின் வெற்றியில் எல்லோருடைய பங்களிப்பும் இருந்தது. ஆனால் யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. மேகவிற்கு தனி இடம் உண்டு. அவங்க கூட வெற்றிவிழா எடுக்கவில்லை புதிதாக தேர்ந்தேடுக்கபட்டோருக்கு (நல்லா கவனிங்க - இந்த கொள்கை, அந்த கொள்கை, இவர் மத்திய காயல், அவர் மாநில காயல், இவர் நம்மை சார்ந்தவர், அவர் நம்மை சாராதவர் - இப்படி எந்த பாகுபாடும் இல்லாமல்) பாராட்டுவிழா தான் நடத்துறாங்க. இது பரவலா உலகெங்கும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வுதான். சொல்லப்போனால் இந்த MEGA என்ற புது முயற்சி எடுத்ததுக்கு மெகாவுக்கு நாம்தான் நன்றி சொல்லணும். நன்றிங்கோ.

இப்போது உள்ள மக்களின் மனநிலை - ஊர் முன்னேற்றம். அதனால் தான் ஒற்றுமையோடு ஒரு திறமையான, ஆற்றல்மிக்க நகரமன்ற தலைவரை தேர்ந்தெடுத்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும் மன்ற உறுப்பினர்களும் ஊருக்கு நன்மை செய்வார்கள் என எதிர்பார்ப்போம், நம்பிக்கை வைப்போம், வளமான, ஒற்றுமையான, நம் எதிர்கால காயலுக்கு வல்லோன் அல்லாஹ்விடம் துஆ செய்வோம். அதைவிட்டுட்டு மீண்டும் மக்களை பிரித்தாள சூழ்ச்சி செய்யாதிங்க.

இங்கு யாரும் ஐக்கிய பேரவை தேவை இல்லைன்னு சொல்லல. பேரவையின் ஒருதலைபட்ச செயல்பாட்டில்தான் மாற்றம் வேணும்னு கேட்கிறோம்.

சலீம் காக்கா ENERGY வேஸ்ட் பண்ணிடாதீங்க. இன்ஷா அல்லாஹ், எதிர்காலத்துல நிறைய சேவைகள் செய்ய வேண்டி இருக்கு. இதுபோல இடர்களையும் சந்திக்க வேண்டி இருக்கும்.

கைல கீபோர்ட் கிடைச்சிட்டா எதை வேணும்னாலும் டைப் பண்ணலாமா?

தஸ்தகீர் - KTM தெரு. Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by fathimaahmed (kayl) [28 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12372

மொத்தத்தில் மெகா அமைபளர்கார் குழப்பத்தில் இருக்கிரர்ஹல் உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்து கொள்கேரீர்கள். எதற்கு இந்த குழப்பம் இதுவரை மக்களை குழப்பியது போதும் நிருதலமே உங்கள் வாதங்களை.

வயது முதிர்ந்த ஐக்கிய பேரவைக்கு மரியாதைகொடுத்து நல்லவர்கள் யார் என்பதை அல்லா அறிவான். பாமிலி சண்டையஹா ஆகிவிடும் போல நீங்கள் எல்லாருமே அறிவளிஹல்தான். குழப்பவளிகளாக இருக்க வேண்டாமே நடப்பவைகளை கவனிக்கலாமே

நமதூர் CULTURE க்கு தகுந்தவாறு முடிவுக்கு வருவோம். நமக்கு பாராட்டு விழா முக்கியம் இல்லை ஊர் ஒற்றுமை தான் வேண்டும். உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக வாதங்களை பெரிதாக்க வேண்டாமே FUNCTION செலவுகளை குறைத்து ஊர்னலனுக்கு செலவு செய்யலாமே

நம்மூர் ஒற்றுமை சீர்கேட்டுபோஹும் அபாயம் வந்துவிட்டது போல்தெரிகிறது முசெரிக்கை வேண்டாம் எச்சரிக்கை தேவை சலாம் ஊர்நலன் விரும்பி SAFA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும் !!!
posted by Nilofar (kayal) [28 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12373

அப்துல் காதர் காக்கா அவர்களே ,இன்னும் ஏன் வீண் விவாதம் ,வீண் குழப்பம் .போதும் அல்லாஹ் நாட்டப்படி அனைத்தும் நல்லவைகளாக நடந்துவிட்டது ..அல்ஹம்துலில்லாஹ் !

தலைவர் ஆபிதா அவர்களும் அவங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்ய ஆரம்பித்து விட்டார்கள் .அவங்களோட பணி மொத்த காயலுக்கும் இருக்கும் .

தலைவர் பணி தனிநபர் வெறுப்பு ,விருப்பு ,கொள்கை ,கோட்பாடு, மதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டது .இது அனைவருக்கும் தெரிந்ததுதான் .அதையும் தாண்டி தலைவர் அவர்களின் தனிப்பட்ட அவங்க செயல்பாடுகள் ,குடும்ப சூழ்நிலைகளை அலசி ஆராய யார்க்கும் உரிமை கிடையாது என்பது எல்லோர்க்கும் தெரியும்.

தனிப்பட்ட இணையதளத்தையோ, தனிப்பட்ட அமைப்பையோ குறை கூருவது சரியல்ல .அனைவரும் சொல்லனினைப்பதை Cna அவர்கள் சொல்லிவிட்டார்கள். அதில் உண்மையும் ,தெளிவும் ,ஆதாரத்தோடும் இருப்பது அனைவருக்கும் தெரியும் .

sajith அவர்களும் அழகாக சொல்லி இருக்கிறார்கள் .தேவை இல்லாத'' விஷமமான '' கருத்துக்களை வெளி இடாமல் ''விஷயமான''(நன்மையான ) கருத்துக்களை வெளிஇட்டால் நம் காயல் பகைமை இல்லாத காயலாக மாறும் .

இன்று'' பகைமை'' இல்லாத காயல்
நாளை '' பசுமை ''காயலாக மாறும்

நாம் நினைத்தால் மாற்ற முடியும் இன்ஷா அல்லாஹ் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by Mukthar (Hong Kong) [28 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 12378

அஸ்ஸலாமு அலைக்கும்...

என்னப்பா இது comment அதற்கு counter கமெண்ட்...

எப்ப பாரு குறை, குறை, குறை... நிறை இருக்கும்போது ஒரு சில பேரை comment ஏரியாவில் காணோம், ஒரு சிலர் அங்கும் எப்படியாவது குறை கண்டுவிடமாடோமான்னு ஏக்கம்...

சில பேர் முந்தைய செய்திகளையும், அதன் கருத்துக்களையும் cut & copy செய்து விளக்கம் அதில் இன்னும் ஒருத்தர் இவர் இப்படிதானே? அனைத்தும் நாகரீகம் அற்றதே... ஆனால் இதே வலைத்தளத்தில் சில சகோதரர்களால் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு இதுநாள் வரை பதில் இல்லை... ( தங்களுக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயமா???) admin அவர்கள் scissoring பன்ன மாட்டாங்கன்னு நினைக்குறேன்... ஏன் என்றால் சில சகோதரர்களும் செய்திக்கு தொடர்பு இல்லாததை பதிந்துள்ளார்கள்....

சரி விஷயத்துக்கு வருவோம்...

சகோதரர்கள் K .V .A .T ஹபீப் முஹம்மது மற்றும் கவிமகன் காதர் அவர்களே சீக்ரம் நல்ல விஷயத்தோடு வாருங்கள், விளக்குங்கள்...

Comment Reference Number: 12331 (நாங்கள் இப்போ செய்து கொண்டிருக்கிற ... பெரியவர்களின் பெருமதிப்பையும் பெற இருக்கிற செய்திகள் உங்கள் கண்களை சீக்கிரம் சந்திக்கும் !)

முன்னரே செய்ய வேண்டியது பரவாயில்லை இப்போதாவது செய்தீர்களே...

கவி மகன் காக்கா அவர்களே நீங்க நல்ல விஷயத்தோட வருவீங்க but குழப்புறதுக்கு நிறையபேர்கள் ரவுண்டு அடிச்சுட்டு இருக்காங்க...

இன்ஷா அல்லாஹ் நடந்தது என்ன மிக விரைவில்!!! வெளிவரும் என்ற எதிர்பார்போடு செய்வீர்களா K .V .A .T ஹபீப் முஹம்மது மற்றும் கவிமகன் காதர் காக்கமார்களே???

தவறு எங்கு நடந்தாலும் தவறே... மாற்று கருத்துக்கு இடமே இல்லை...

ஏன் வார்த்தையில் குறை இருக்கும் தெரியபடுத்துவீர்...

வல்ல இறைவன் நம் அனைவரையும் கருத்து வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு இருக்க அருள் புரிவானாக!!! ஆமீன்,

வஸ்ஸலாம்.....

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by mahmood syed (KSA) [28 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12379

நண்பர் அப்துல் காதர் கருத்தில் எந்த தவறும் இல்லை. சரியா தான் சொன்னார். மெகா கேஸ் ஒன்று போட்டுள்ளதே, அது எதுக்கு, நோக்கம் என்ன, பெண்கள் தலைமை பதவிக்கு வரக்கூடாது என்ற நல்ல நோக்கம் என்று எம்மை போன்றோர் நினைத்தோம். மெகா கேஸ் இன் முடிவை எப்படி எதிர்பார்கிறது?

பின்பு அவர்கள் நடவடிக்கை பெண்கள் தலைமைக்கு வந்தால் பரவ இல்லை என்ற நிலைமையில் சென்றது. ஏன் இந்த இரட்டை நிலை? பெண்ணை வைத்து தெரு தெருவா சுத்துவது நம் மார்கத்தில் உள்ளதா? உண்மை பேசினால் கோவம் பொத்து கொண்டு வரும். ஒரே போட்டோ இதுவெல்லாம் பப்ளிசிட்டி தான்.

ஐக்கிய பேரவை தான் சென்ற பல தேர்தலில் சாதித்தது. இந்த முறை கூட எல்லா அரசியல் கட்சிகளையும் போட்டி இடாமல் செய்ததது தான் இந்த நிலைமை. உங்க " மெகா"வால் செய்ய முடிய்மா ? ஆறு பேரு போட்டிபோட்டால் இரண்டு நபருக்கு ஒட்டு போடுங்கள் என்று ஒரு தலைபட்சம். அதிலும் ஒருவருக்கு மறைமுக ஆதரவு. இல்லை என்று சொல்ல முடியுமா? இதுவே ஆண் வெற்றி பெற்று இருந்தால், இப்படி ஆர்பாட்டம் இருக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by N.A. Thymiah -9444202562 (Chennai) [28 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12380

அன்புள்ள அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்) அவர்களே ,

அஸ்ஸலாமு அலைக்கும் ....

உங்கள் கருத்தில் நடு நிலை இல்லை . குறுகிய மனப்பான்மையுடன் சிந்திக்கிறீர்கள் . இப்போது இந்த ஜமாத், அந்த ஜமாத், அகீதா, துவா என்றெல்லாம் சொல்லி மக்களை திசை திருப்ப பார்க்கிறீர்கள்.

தேர்தலில் நிற்பவரின் பொறுப்பிற்கான தகுதியை மட்டும் பார்க்காமல் மார்க்கத்தின் கொள்கையை உள்ளே புகுத்துவது ஏற்கத்தக்கதல்ல . குறுகிய மனப்பான்மையில் சிந்திக்காமல் பரந்த மனப்பான்மையில் சிந்தியுங்கள் .

கருணாநிதியும் , ஜெயலலிதாவும் , அனிதா வும் எந்த ஜமாத்தை சார்ந்தவர்கள்?

இந்த கொள்கை , அந்த கொள்கை என்று பார்த்து ஓட்டு போடாமல் , நல்லவர் , ஊழலற்றவர், இறையச்சமுடையவர் என்று பார்த்து ஓட்டு போடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by AbdulKader (Abu Dhabi) [28 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12385

அஸ்ஸலாமு அழைக்கும்...

ஹபீப் காக்கா.... என்னுடைய்ய கருத்துக்கு மதிப்பளித்து தங்களுடைய்ய நிதானமான / மரியாதையான பதில் கருத்திற்கு நன்றி! இன்ஷாஅல்லாஹ் நான் நீங்கள் சொன்ன (மக்களுக்கு நிம்மதியை/ஒற்றுமையை தரக்கூடிய) நன்நாளை எதிர்நோக்கியவனாக காத்துக்கொண்டு இருப்பேன்.

தமிழன் சார்..... தமிழை படிப்பதில் உங்களுக்கு என்ன குழப்பம்? ஆமா... ஆமா..... உங்களுடைய்ய பதில் கருத்தை பார்த்தாலே புரியுது… நீங்க எவ்வளவு (குழப்பி… இல்லை.... இல்லை....) குழம்பி இருக்கீங்கன்னு!!

அன்பர் ஜியா அவர்களே.....அல்லாஹ்வின் குர்ஆணை பற்றி வர்ணிக்கும் உங்கள் கைகள்.... (முன் பின் அறியாத) என்னை பற்றி ******மாக எழுத எப்படி முனைந்தது?!! நான் ஆச்சரியப்படவில்லை.... காரணம் பொய்யர்களின் கைவண்ணம் என்றுமே கற்பனையை கலந்த சாயலில்தான் இருக்கும். (நீங்கள் என் உடன்பிறவா சகோதரர், பொய்யர்களுள் ஒருவராக ஆகிவிடவேண்டாம் என்று எண்ணி தங்களுடைய்ய கருத்தின் தரத்தை உயர்த்த உங்களின் தவறை நான் முன்பு உங்களுக்கு சுற்றிக்கட்டியது பிடிக்கவில்லை போலும்!?? துரதிஷ்டம்.... நான் உங்களுடைய்ய கருத்துக்களில் மாற்றத்தை எதிர்பார்த்து உங்களுக்கு என் உபதேசத்தை சொன்னது!) யார் மெச்சுவதர்க்காகவும் / இகழ்வதர்க்காகவும் நான் இங்கு கருத்து பதிவு செய்யவில்லை. ஒன்று புரிந்து கொள்ளுங்கள்.... அல்லாஹ் நாடியவர்களை உயர்த்துகிறான், மேலும் அவனே தான் நாடியவர்களை கேவலப்படுத்துகிறான்!

தம்பி CNash .... In future, please do not QUOTE any of my comments in mere CONTEXT. Those comments you have reffered were delt on different occasions based on the ‘news’ and ‘counter comments’.

இத்தனை சிரமப்பட்டு ஒரு பதிலை தொகுத்துளீர்கள்..... நான் உங்களுக்கு வேறு என்ன பதில் சொல்ல??? . புனித மக்கா நான் வந்தால்.... உங்களை அங்கு சந்தித்து (உங்கள் அகீதா படி துவா செய்து) விட்டு திரும்ப செல்ல ஆவல்!

இனி நான் யாருடைய்ய கருத்திற்கும், இந்த செய்தியில் பதில் எழுத போவது இல்லை!

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [28 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12390

Pls Ref: comment # 22

மெகா கேஸ் ஒன்று போட்டுள்ளதே, அது எதுக்கு, நோக்கம் என்ன, பெண்கள் தலைமை பதவிக்கு வரக்கூடாது என்ற நல்ல நோக்கம் என்று எம்மை போன்றோர் நினைத்தோம். மெகா கேஸ் இன் முடிவை எப்படி எதிர்பார்கிறது? (Copy & Paste)

சகோதரரே! நீரும், உம்மை போன்றவர்களும் தவறாக விளங்கி இருக்கிறீர்கள். Please "reed between the lines".

MEGA போட்ட வழக்கு பெண்கள் தலைமை பதவிக்கு வரக்கூடாது என்பதற்காக அல்ல. மாறாக ஆண்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய ஒரு தொகுதியை பெண்களுக்கென்று அறிவித்த அரசாங்க ஆணைக்கு எதிராகத்தான்,

பொதுவாக கேஸ் போட்டவர்கள் கேஸின் முடிவு எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்பார்களோ , அப்படி இருக்க வேண்டும் என்றுதான் மெகாவும் எதிர்பார்கிறது.

"பெண்ணை வைத்து தெரு தெருவா சுத்துவது நம் மார்கத்தில் உள்ளதா? உண்மை பேசினால் கோவம் பொத்து கொண்டு வரும். ஒரே போட்டோ இதுவெல்லாம் பப்ளிசிட்டி தான்". (Copy & Paste)

10, 15 வருடங்களுக்கு முன்னால் ஐக்கிய பேரவை வேட்பாளர்களாக நமது ஊர் தலைவி பதவிக்கு போட்டியிட்ட, மூத்த சகோதரிகளான நாச்சியார் மற்றும் வஹீதா ஆகியோர் தெரு தெருவாக (உமது பாஷையில்) சுத்தியபோது எங்கே சென்றது உமது மார்க்க பக்தி?

இஸ்லாம் வரையறுத்த ஆடைகளை அணிந்து பெண்கள் தமது உரிமைக்காக போராடுவதை, ஓட்டு கேட்பதை இஸ்லாம் தடை செய்துள்ளதா?

Tunisia வில் Ben Ali யை எதிர்த்தும், Libya வில் Gaddafi யை எதிர்த்தும், Egypt யில் Mubarak ஐ எதிர்த்தும் நாடு ரோட்டில் இரவு பகலாக போராடிய மக்களில் இஸ்லாமிய உடை அணிந்த சகோதரிகள் முஸ்லிம்கள் இல்லையா?.

Sirya வில் Assad ஐ எதிர்த்தும், Yemen னில் Saleh ஐ எதிர்த்தும் இன்னும் நாடு ரோட்டில் நின்று கொண்டு போராடிக்கொண்டிருக்கின்ற சகோதரர்களுடன் இணைந்து செயல்படுகின்ற சகோதரிகள் முஸ்லிம்கள் இல்லையா? அல்லது அவர்கள் பின்பற்றுகின்ற மார்க்கம்தான் இஸ்லாம் இல்லையா ? இவர்கள் பின்பற்றுகிற மார்க்கத்தில் இவைகள் அனுமதிக்கப்பட்டிருகிறது, நமதூரில் நீங்கள் பின்பற்றுகிற மார்க்கத்தில் ஒட்டு கேட்பது அனுமதிக்கப்படவில்லை போலும்.

ஓ.... சவுதி தொலைகாட்சிகளில் மேல் சொல்லப்பட்ட நிகழ்வுகளை காட்ட மாட்டார்கள் போலும்.

இன்ஷா-அல்லாஹ், ஒருவேளை, எதிர்காலத்தில் நீர் வசிக்கும் KSA யில் உள்ள பெண்கள், மேலே கூறப்பட்ட நாடுகளில் உள்ள தமது அரபு சகோதரிகள் போல இவர்களும் நாடு ரோட்டிற்கு வந்து மன்னர் ஆட்சி ஒழிய போராடினால், இவர்களை முஸ்லிம்கள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டீர்போலும்.

Tunisia வில் கடந்த வாரம் முதல் முறையாக ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் பல முஸ்லிம் சகோதரிகள் போட்டியிட்டார்கள். இவர்களெல்லாம் வீட்டில் உட்கார்ந்துகொண்டு ஓட்டு கேடகவில்ல. வீடு வீடா, வீதி வீதியாகக் சென்று ஓட்டு கேட்டார்கள். இவர்கள் முஸ்லிம்களில்லையா? அல்லது இவர்கள் வேறு விதமான் மார்க்கத்தை பின்பற்றுகிறார்களா?

"ஐக்கிய பேரவை தான் சென்ற பல தேர்தலில் சாதித்தது. இந்த முறை கூட எல்லா அரசியல் கட்சிகளையும் போட்டி இடாமல் செய்தததுதான் இந்த நிலைமை. உங்க " மெகா"வால் செய்ய முடிய்மா ? ஆறு பேரு போட்டிபோட்டால் இரண்டு நபருக்கு ஒட்டு போடுங்கள் என்று ஒரு தலைபட்சம். அதிலும் ஒருவருக்கு மறைமுக ஆதரவு. இல்லை என்று சொல்ல முடியுமா? இதுவே ஆண் வெற்றி பெற்று இருந்தால், இப்படி ஆர்பாட்டம் இருக்காது" (Copy & Paste).

ஐக்கிய பேரவை கடந்த தேர்தலில் எதை சாதித்தார்கள் என்று சொல்லமுடியுமா? ஓ.... போட்டி இல்லாமல் தலைவரை தேர்ந்தெடுத்ததை சொல்ல வருகிறீரா?. அப்போது மக்களிடம் இப்போதுள்ளது போல விழிப்புணர்ச்சி இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லவா!

நண்பரே, இந்த முறை அரசியல் கட்சிகள் போட்டியிட்டிருந்தால் துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடியிருப்பார்கள். அந்த அளவுக்கு மக்கள் விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டார்கள். அது அரசியல் கட்ச்சிகளுக்கு நன்றாகத் தெரியும். மற்ற இயக்கங்கள் அரசியல் கட்சிகளுக்கு இதை சொல்வதற்கு முன்னால் " MEGA" துண்டு பிரசுரமூலம் மக்களுக்கு அறிவித்துவிட்டது.

கடந்த ஊராட்சி, நகராட்சி தேர்தல்களில் எந்த தேர்தலில் நமதூரில் அரசியல் கட்சிகள் போட்டியிட்டு வெற்றிபெற்றது?. கூற முடியுமா? அன்பரே!

அரசியல் கட்சிகள் போட்டியிடக் கூடாது என்று சொல்லிவிட்டு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களை தேவையின்றி தனது மேடையில் ஏற்றி தனது தரத்தை MEGA என்றுமே தாழ்த்திக் கொள்ளாது.

பொது வேட்பாளரை ஆலோசனை செய்து தேர்ந்தெடுக்கப்படும் என்ற பெயரில் தனக்கு வேண்டப்பட்ட வேட்பாளருக்கு சார்பாக ஓட்டு வேட்டை ஆடிவிட்டு, உள்-தேர்தல் (அரசியல்வாதிகளை வைத்து) நடத்தி நாடகம் அரங்கேற்றிய வித்தை MEGA வுக்குத் தெரியாது.

ஆண்கள் போட்டியிட்டிருந்தால் MEGA மேலும் வீரியம் கொண்டு செயல்பட்டிருக்கும்.

சகோ.,Mahmood Syed (KSA) அவர்களே அடுத்தவருக்கு (Abdulkader- Abu Dhabi) வக்காலாத்து வாங்கும்பொழுது அவர் எழுதி உள்ளத்தில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறது என்பதை அலசி ஆராய்ந்து எழுதவும். சவுதியில் (வெளி நாடுகளில் இருந்து ) கொண்டு தங்களுக்கு கிடைக்கும் செய்திகள் யாவும் சரியானது என்று தப்பு கணக்கு போடாதீர்கள். ஊரிலுள்ளவர்களுக்கே பல நேரங்களில் வதந்திகள் எது உண்மை எது என்று தெரியாமல் கப்பல் கட்டுகிற கயிறுகளை முழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். பலபேர்களிடம் கேட்டு உண்மையை அறியவேண்டியதுள்ளது.

(MEGA வின் உள்ளூர் உறுப்பினர்களில் ஒருவன் என்ற முறையில் இவற்றை நான் எழுதவில்ல)

------------------- END ----------------------

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. நம்மை நாம் பரிசோதித்து கொள்ள வேண்டும்.
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [29 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12403

மெகா அமைப்பினரே நீங்கள் நகர்மன்றத் தலைவருக்கு பாராட்டு எடுப்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் .முதலில் நாங்கள் தான் உங்களுக்கு பாராட்டு எடுக்க வேண்டும் . எந்த வித சுயநல நோக்குமில்லாமல் ஊரின் பொதுநலன் ஒன்றையே கருத்தில் கொண்டு செயல்பட்ட உங்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையை மட்டும் கூறி நிறுத்தி கொள்ள என் மனம் விரும்பவில்லை.

இங்கு நுனிப்புல் மட்டுமே மேய்ந்து கருத்து எழுதும் சிலரை போல் நானும் மெகாவின் மீது என்னுடைய விமர்சனத்தை கூறினேன் இரு வேட்பாளரில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் என்று சொல்லிய பொழுது . ஆனால் அதன் பிறகு உண்மை நிலையை கேட்டறிந்த பொழுது தான் என்னுடைய தவற்றை உணர்ந்தேன் அதற்காக வருந்தி என்னுடைய கருத்தில் மண்ணிப்பும் கேட்டேன் . தவறை உணர்பவன் தானே மனிதன் .

இங்கு உங்களை கூறும் அந்த நபர் என்னையும் ஒரு இடத்தில தனிப்பட்ட முறையில் குழப்பவாதி என்று கூறினார் . அதை நான் பெரிதாக்க வேண்டாம் என்று கருதி மின்னஞ்சல் மூலம் மிகவும் கண்ணியமான முறையில் பதில் கூறி விடைபெற்றேன். பிறகு அவரை பற்றி மற்றவர்களிடம் விசாரித்து தெரிந்து கொண்டேன் . அதன் பிறகு அவருடைய கருத்துகளை நான் பெரிதாக்க எடுத்து கொள்வதில்லை .

ஆனால் இவருடைய விமர்சனங்கள் வேறு கோணத்தில் செல்வதால் நாம் இப்படியே விட்டுவிடுவது சரியில்லை " "கடைசியாக.... kayalpatnam.com தம்பி SK ஸாலிஹ் அவர்கள் ஒரு தலைபட்சமாக சகோதரி ஆபிதா அவர்களின் வெற்றிக்கு முன்னும், வெற்றி அடைந்த பின்பும், இன்றுவரையிலும்.... இந்த வலைதளத்தில் செய்திகளை வெளியிட்டதனால். (குற்றம் சுமத்தவில்லை... உண்மையைத்தான் எழுதுகிறேன்!) "(cut&paste)

நானறிந்த வரை, தேர்தல் நடக்கும்போது இரு தரப்பு செய்திகளையும் விருப்பு வெறுப்பின்றி வெளியிட்டார் அவர். தேர்தல் நிறைவுற்ற பின்னர், யார் நகர்மன்றத் தலைவரோ, அவர் செய்யும் பணிகளைத்தான் செய்தியாக வெளியிட முடியும். அந்த இடத்தில் ஆபிதா லாத்தா இல்லாமல் மிஸ்ரியா லாத்தா வெற்றி பெற்றிருந்தாலும் அப்போதும் இதைத்தான் எஸ்.கே.ஸாலிஹ் காக்கா செய்ய வேண்டும். அந்த அடிப்படையில்தான் செய்தியை வெளியிடுகிறார்.

பேச்சுக்கு பேச்சு ஒற்றுமை என்றார் கூறுகின்றீர்களே தவிர நீங்கள் எழுதும் எழுத்துகளில் ஒற்றுமையை பிரிக்கும் சொல் பிரயோகங்கள் மட்டும் தான் தலைவிரித்து ஆடுகின்றது .

ஆகவே நாம் அடுத்தவரை குறை கூறும் முன் நம்மை நாம் பரிசோதித்து கொள்ள வேண்டும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அக்.27 மழைக்காட்சிகள்!  (29/10/2011) [Views - 3691; Comments - 6]
காணவில்லை! (?!)  (27/10/2011) [Views - 4833; Comments - 30]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved