கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிதா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு பெங்களூரு காயல் நல மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்தறிக்கை பின்வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில், நமதூர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி ஆபிதா ஷேக் அவர்களுக்கும், 18 வார்டுகள் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கும் எமது பெங்களூரு காயல் நல மன்றம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவரும், நமது காயல் நகர முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இறையருளால் நமதூரின் அனைத்து சமய மக்களுக்கும் பாரபட்சமற்று செயல்பட்டு, நமது நகராட்சியை ஒரு முன்மாதிரி நகராட்சியாக நிர்வகித்திட எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
எல்லாம்வல்ல இறைவன் நமது நாட்டதேட்டங்களை நிறைவேற்றி வைப்பானாக, ஆமீன்.
இவண்,
தலைவர், துணைத்தலைவர், செயலர்
மற்றும்
அனைத்து உறுப்பினர்கள்,
காயல் நல மன்றம்,
பெங்களூரு, கர்நாடக மாநிலம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்,
துணைச்செயலர்,
காயல் நல மன்றம்,
பெங்களூரு, கர்நாடக மாநிலம். |