கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நகர்மன்றத் தலைமைக்கு 6 பேரும், 18 வார்டுகளின் உறுப்பினர்கள் பொறுப்பிற்கு 86 பேரும் போட்டியிட்டனர். 21.10.2011 அன்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவராக, காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சார்ந்த ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி இயக்குனர் ஆபிதா நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வார்டு 01 உறுப்பினராக ஏ.லுக்மான்,
வார்டு 02 உறுப்பினராக வி.எச்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா (போட்டியின்றி தேர்வு),
வார்டு 03 உறுப்பினராக பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,
வார்டு 04 உறுப்பினராக முத்து ஹாஜரா,
வார்டு 05 உறுப்பினராக ஜஹாங்கீர்,
வார்டு 06 உறுப்பினராக ஏ.கே.முஹம்மத் முகைதீன்,
வார்டு 07 உறுப்பினராக அந்தோணி,
வார்டு 08 உறுப்பினராக பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய்,
வார்டு 09 உறுப்பினராக ஹைரிய்யா,
வார்டு 10 உறுப்பினராக பத்ருல் ஹக்,
வார்டு 11 உறுப்பினராக எஸ்.எம்.முகைதீன்,
வார்டு 12 உறுப்பினராக ரெங்கநாதன் என்ற சுகு,
வார்டு 13 உறுப்பினராக எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
வார்டு 14 உறுப்பினராக பாக்கியஷீலா,
வார்டு 15 உறுப்பினராக ஜமால்,
வார்டு 16 உறுப்பினராக தைக்கா சாமு,
வார்டு 17 உறுப்பினராக அபூபக்கர் அஜ்வாத்,
வார்டு 18 உறுப்பினராக இ.எம்.சாமி
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களின் பதவியேற்பு விழா இன்று காலை 11.00 மணிக்கு காயல்பட்டினம் நகர்மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
நகர்மன்றத் தேர்தல் துணை அலுவலர் செல்வமணி விழா நிகழ்ச்சிகள் துவங்குவதாக அறிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, நகர்மன்றத் தேர்தல் துணை அலுவலர் சக்தி குமார் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், இவ்விழாவிற்குத் தலைமை வகித்த காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் தலைமை அலுவலரும், நகர்மன்ற ஆணையருமான கண்ணையா, துவக்கமாக நகர்மன்றத் தலைவர் ஆபிதாவுக்கும், பின்னர் நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் சால்வை அளித்தும் / அணிவித்தும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
............................. என்ற நான், சட்ட முறைப்படி நிறுவப்பெற்றுள்ள இந்திய அரசியல் அமைப்பின் மீது முழுமையான நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ளவிருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உளமார உறுதி கூறுகிறேன்...
இவ்வாறு பதவிப்பிரமான வாசகம் அமைந்திருந்தது.
01ஆம் வார்டு உறுப்பினர் லுக்மான் பதவியேற்ற காட்சி...
02ஆம் வார்டு உறுப்பினர் முஹம்மத் செய்யித் ஃபாத்திமா பதவியேற்ற காட்சி...
03ஆம் வார்டு உறுப்பினர் சாரா உம்மாள் பதவியேற்ற காட்சி...
04ஆம் வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா பதவியேற்ற காட்சி...
05ஆம் வார்டு உறுப்பினர் ஜஹாங்கீர் பதவியேற்ற காட்சி...
06ஆம் வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் பதவியேற்ற காட்சி...
07ஆம் வார்டு உறுப்பினர் அந்தோணி பதவியேற்ற காட்சி...
08ஆம் வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் பதவியேற்ற காட்சி...
09ஆம் வார்டு உறுப்பினர் ஹைரிய்யா பதவியேற்ற காட்சி...
10ஆம் வார்டு உறுப்பினர் பத்ருல் ஹக் பதவியேற்ற காட்சி...
11ஆம் வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் பதவியேற்ற காட்சி...
12ஆம் வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு பதவியேற்ற காட்சி...
13ஆம் வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் பதவியேற்ற காட்சி...
14ஆம் வார்டு உறுப்பினர் பாக்யஷீலா பதவியேற்ற காட்சி...
15ஆம் வார்டு உறுப்பினர் ஜமால் பதவியேற்ற காட்சி...
16ஆம் வார்டு உறுப்பினர் தைக்கா சாமு பதவியேற்ற காட்சி...
17ஆம் வார்டு உறுப்பினர் அபூபக்கர் அஜ்வாத் பதவியேற்ற காட்சி...
18ஆம் வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி பதவியேற்ற காட்சி...
பதவிப்பிரமானத்தின்போது, “கடவுள் அறிய” என்ற வாசகத்தை நகர்மன்ற ஆணையர் முன்மொழிந்தபோது, பெரும்பாலான முஸ்லிம் உறுப்பினர்கள் “அல்லாஹ் அறிய” என்றும், “எல்லாம்வல்ல அல்லாஹ் அறிய” என்றும், “இறைவன் அறிய” என்றும் கூறினர்.
அதுபோல, பதவிப்பிரமான வாசகங்களை உச்சரிக்கும் முன் “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...” என்ற பொருள் கொண்ட “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று கூறி, குழுமியிருந்தோருக்கு “உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக!” என்ற பொருள் கொண்ட “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற முகமனையும் கூறி பதவிப்பிரமான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்று முடிந்ததும், குழுமியிருந்தோர் உரத்த குரலில் “இறைவன் மிகப் பெரியவன்” என்ற பொருள் கொண்ட “அல்லாஹு அக்பர்” என்ற முழக்கத்தை உரத்த குரலில் கூறினர்.
தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் பதவியேற்புவிழா நிறைவுற்றது.
விழாவில், ஊண்டி செய்யித் முஹம்மத் ஆலிம், ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ, மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி வி.பி.எம்.இக்பால், ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா நிர்வாகக் குழுவினருள் ஒருவரான ஹாஜி இப்றாஹீம், ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, புதுப்பள்ளி துணைத்தலைவர் ஹாஜி செய்யித் முஹம்மத் புகாரீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், கே.எம்.டி.மருத்துவமனை செயலர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் மற்றும் நகர ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், அங்கத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
முன்தினம் இரவில் பெய்யத் துவங்கிய மழை, பதவியேற்பு நாளன்று காலை 09.30 மணி வரை நீடித்ததால், விழாவை நகர்மன்ற அலுவலக வளாகத்திற்குள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பின்னர் மழை ஓய்ந்துவிட்ட காரணத்தால், மேடையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பெய்த மழை காரணமாக குளிர்ச்சியுடன் கூடிய - மிகவும் இதமான வானிலை நகரில் நிலவியதால், விழாவிற்கு வந்தவர்கள் இறுதி வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டதைக் காண முடிந்தது.
களத்தொகுப்பில் உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய்.
படங்கள்:
செய்யித் இப்றாஹீம்.
செய்தி திருத்தப்பட்டது. (26.10.2011 - 13:20hrs) |