| |
செய்தி எண் (ID #) 7431 | | | திங்கள், அக்டோபர் 24, 2011 | புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்களுக்கு ஹாங்காங் பேரவை வாழ்த்து! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4096 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய | |
கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிதா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ள வாழ்த்தறிக்கை பின்வருமாறு:-
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறோம்.
நடைபெற்று முடிந்த நமதூர் நகராட்சி தேர்தலில், நகர மக்களின் பெருவாரியான ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ள நகர்மன்றத் தலைவி சகோதரி ஆபிதா அவர்களுக்கும், 18 வார்டுகளைச் சார்ந்த உறுப்பினர்களுக்கும் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறோம்.
தங்கள் பதவிக்காலத்தை நன்முறையில் பயன்படுத்தி, நம் நகரை வளர்ச்சிப் பாதையில் செவ்வனே கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், மக்கள் சேவையையே முக்கிய குறிக்கோளாய்க் கொண்டு செயலாற்றுமாறும் எமது அமைப்பின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
செய்யித் அஹ்மத்,
துணைத்தலைவர்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை,
ஹாங்காங்.
செய்தி திருத்தப்பட்டது. (25.10.2011 - 15:15hrs) |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|