காயல்பட்டினத்தில் மின் அழுத்தக் குறைபாட்டைப் போக்கும் விதமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தால் துணை மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக 1 ஏக்கர் அளவிலான நிலம், காயல்பட்டினம் துளிர் பள்ளியருகில் சுமார் 25 லட்சம் ரூபாய் செலவில் நகர தனவந்தர்களின் அனுசரணையுடன் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் வாங்கப்பட்டு, பின்னர் மின்வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
22.10.2011 அன்று (நேற்று) மாலை 05.45 மணிக்கு அவ்விடத்தில் நடைபெற்ற சிறிய நிகழ்ச்சியில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் அந்நிலத்தை, காயல்பட்டினம் மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் இலவசமாக கையளித்தார்.
இந்நிகழ்ச்சியில், நகர பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
2. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted byAbdulKader (Abu Dhabi)[23 October 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11952
அஸ்ஸலாமு அழைக்கும்....
மாஷாஅல்லாஹ்.... காயல் மக்களுக்கு ஒரு நிறைவான அர்பணிப்பு.
யார் துஆ செய்கிறார்களோ.. இல்லையோ... என்னை போன்றவர்கள் உள்ளத்தில் ஊரின் பெரியோர்களாகிய நீங்கள் யாவரும், என்டென்றும் மிக்க மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நிலைத்து வாழ்வீர்கள்.
அல்லாஹ் உங்கள் யாவருக்கும் அதிகமான ஆரோக்கியத்தையும், நீண்ட நோயற்ற ஆயுளையும், உங்களின் மக்களில் பரக்கத்தையும் தந்தருல்வனாக.
இதுபோன்ற நற்காரியங்கள் யாவற்றையும் படம் போட்டுப்பார்க்க விரும்பும் நம்மில் சிலருக்கு.... ஐக்கிய பேரவையின் சார்பாக ஒரு வலைதளம் உண்டாக்கி அதில் இதுபோன்ற நற்காரியங்களை படமிட்டு காட்டுங்கள்.
யார் உங்களையோ அல்லது உங்களின் செயலையோ கலங்கப்படுத்தினாலும், குறைகூறினாலும்... நீங்கள் அல்லாஹ்வின் அருளை நாடி உங்களின் பணியை சிறப்புற நிறைவேற்றுங்கள். தூற்றுவோர் தூற்றட்டும்... போற்றுவோர் போற்றட்டும்.... உங்கள் பணி தொடரட்டும்..... எதற்கும் கவலை வேண்டாம்..
மேலும் நீங்கள் யாவரும் நீதியுடனும், தன்னபிக்கையுடனும், என்னை போன்றவர்களின் ஆதரவுகளுடனும், பாராபடச்சமின்றி ஊரின் ஒற்றுமைக்காகவும், நலனுக்காகவும் பாடுபட வேண்டுமாய் தாங்கள் யாவரையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
4. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted bySHOLUKKU.AJ (kayalpatnam)[23 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 11955
அஸ்ஸலாமு அலைக்கும்.
என் கண்ணியத்துக்கும் மரியாதைக்கும் உரித்தான ஐக்கிய பேரவையின் பொருப்பாளர்களே, இது போன்ற சேவைகள் இன்னும் தொடர வேண்டும் . கண்ணியத்துக்குரிய உவைஸ் ஹாஜியார் அவர்கள் தாசில்தார் இடமும், கலெக்டர் இடமும் 169 வீடுகள் விசியத்தில் பேசிய வீர உரை என்னைபோல் உள்ளவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
ரப்புல் ஆலமீன் உங்கள் ஹயாதையும் நீடிக்க என்றும் துவா செய்கிறேன் , செய்வேன் இன்ஷா அல்லாஹ்
6. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted bypeena abdul rasheed (Riyadh)[23 October 2011] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11960
துணை மின் நிலையம் அமைய நிலம் கொடுத்த & ஐகிய ஜமாஅத் அனைவர்ஹளுகும் ஜஜக்கல்லாஹ் ஹைரன். ப்ளீஸ் ஜாமத்தில் என்கர்ச்கும் இடம் கொடுங்கள் மின் நிலையம் அமைய இடம் கொடுத்ததுபோல் ஜாமத்தில் இடம் கொடுங்கள். ஊர் நலம் பொறும் நீங்களும் மகிழ்சி அடைவீர்ஹல்.
8. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted bysholukku.aj (kayalpatnam)[23 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 11964
அஸ்ஸலாமுஅலைக்கும்
மரியாதைக்குரிய ஐக்கிய பேரவையின் நிர்வாகிகளே
தங்களின் சேவைகளில் இது ஒரு சாதாரணம் என்பதை நான் நன்கு அறிவேன்.
ஐக்கிய பேரவையின் ஒரு சில சேவைகள்
1 மதுரையில் உள்ள முத்து சாவடிகளை சீரமைத்து நல்ல வருமானத்தை உண்டாக்கியது
2 திருநேல்வெலியில் புதிய முத்துச்சாவடியை உருவாக்கியது
3 169 தொகுப்பு வீடுகளை நம் ஊர் மக்களுக்கு வழங்கச சொல்லி தடை வாங்கியது
4 கட்புடையார் வட்டம் {சிங்கித்துரை} யில் திருட்டுத்தனமாக குடியேறிய அந்நிய ஊராரின் குடும்ப அட்டைகளை பறிமுதல் செய்தது, இவர்களுக்கு மின்சாரம் கொடுக்காமல் தடைசெய்தது
5 கோஸ்மரை அருகில் நம் சமுதாய மக்கள் குடியேற சுமார் 25 ஏக்கர் நிலத்தை வாங்கி வைத்தது
6 நம் மக்களின் மின்தட்டுப்பாடை சீர்செய்யும் நோக்கில் SUB STATION உருவாக்க சுமார் 25 லட்சம் ரூபாயில் வசூல் செய்து இன்று வாங்கிய நிலத்தை மின் வாரியத்திடம் ஒப்படைத்தது
7 இவற்றுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இரண்டாவது பைப் லைன் திட்டத்தை அணைத்து அரசியல் கட்சியையும் விஞ்சும் அளவிற்கு பல முறை மதுரை சென்று முயற்சி செய்தது .இன்னும் இதற்காக முயற்சி செய்வது
10. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted bySalai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia)[23 October 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11967
Thanks to the magnanimous peoples those who donated land to electricity department.Such a good services are done by Ikiya Peravai. Appreciate their valuable service to continue.
11. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted byVilack SMA (Kangxi)[23 October 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 11968
அஸ்ஸலாமு அழைக்கும் .
பேரவையின் இதுபோன்ற உதவிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள் .
ஊரின் ஒற்றுமையே உயிர் மூச்சாக கொண்டிருக்கும் , எனது கண்ணியத்திற்குரிய உவைஸ் அப்பா மற்றும் பேரவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அல்லாஹ் நீண்ட ஆயுளை தந்தருள்வானாக . ஆமீன் .
12. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted bypeena abdul rasheed (Riyadh)[23 October 2011] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11972
துணை மின் நிலையம் அமைய இடம் கொடுத்த நல்ல உள்ளகளுக்கும் & ஐக்கிய ஜமாதர்ஹளுகும் ஜஜகல்லாஹ் ஹைரன்.எல்லாவற்றையும் மறந்து அல்லாஹ்& ஊருக்கஹ ஊர் தலைவருக்கு வாழ்த்து கூறுங்கள்.
ஊரு ஒன்றுபட்டாள் ஊரில் உள்ளவர்ஹளுக்கு கொண்டாட்டம்.
13. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted byK S MUHAMED SHUAIB (kayalpatinam)[23 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 11980
ஐக்கியப பேரவையின் இந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது. பெரியவர்களின் பனி இவ்வூருக்கு என்றும் தேவை.
abuijaz@gmail.comabuijaz@gmail.com
சமூகப்பொறுப்புள்ள அந்த பெரியவர்கள் நீடித்த ஆயுள் உள்ளவர்களாகவும் நிறைவான தங்களது சேவையை தொடர என்ற்ண்டும் வல்ல நாயன் அருள்புரிவானாக....ஆமீன்
14. Good job... posted byahamed mustafa (Dxb)[23 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11981
Good job the AJ. They deserve our praise & prayers in good deeds like this. These are very much appreciated. The AJ can continue to strive on Welfare projects like this, with the help of the present Chair person.
17. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted byrahmath (chennai)[23 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12000
அஸ்ஸலாமு அலைக்கும். ஐக்கிய பேரவையின் சேவைகளை பார்க்கும்போது மனசுக்கு சந்தோசமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஐக்கிய பேரவை அப்பாமார்கள், பேத்தி ஆபிதாவை வாழ்த்த மனசு வராமல் இவ்வளவு வைராக்கியமாக இருப்பதை பார்க்கும்போது மனசு ரொம்ப வேதனை அடைகிறது.
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா வெற்றி பெற்று பதவி ஏற்பு விழாவில் எதிர் கட்சி தலைவர்கள் முன் வரிசையில் அமர்ந்து மம்தா அவர்களை வாழ்த்தியது உங்களுக்கு தெரிந்திருக்க கூடும். மாற்றுமத சகோதரர்களுக்கு இருக்கும் பெரிய மனசு, ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றக்கூடிய நம் சகோதரர்களுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது?
தயவுசெய்து வெற்றிபெற்ற நம் புது தலைவியை வாழ்த்துங்கள். உங்கள் மேல் உள்ள மதிப்பு மக்கள் மத்தியில் கூடும். உங்களை புகழ்ந்து பாராட்டி செய்தியும் புகைப்படங்களும் நமது காயல்பட்னம்.காம் வலைத்தளத்திலும் வரும்.
Moderator: Comment edited!
பேரவையின் இப் பெரும் முயற்சி வரவேற்கத் தக்கதே! பாராட்டுக்கள்! -ஹிஜாஸ் மைந்தன்.
ஒரு நண்பரின் கருத்துப் பதிவில் உள்ள வாசகங்கள் கீழே,
”உன்மீது நம்மோடு வாழும் புறநகர் மாற்று மத சகோதரர்கள் கொண்டுள்ள கோபத்தை நம்மவர்கள் உணர மறுத்திருப்பது துரதிருஷ்டமே!”
தொடரட்டும் உன் சேவை.
பிரதிபலனை எதிர்பாராத உன் சேவை நம் நகருக்கு தேவை .
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A)
நண்பரின் இக்கருத்துப் படி பார்த்தால் ரூத்தம்மாள் தானே வந்திருக்கணும்? தயவு செய்து புற நகர் மக்களைச் சாடாதீர்கள்!அவர்களில் நம் சமுதாயத்தின் நல்லோர்க்கு தோள் கொடுத்து சகோதர பாசத்துடன் பழகி வரும் எத்தனையோ நல்லவர்களும், நியாயவாதிகளும் நிறைய பேர் இருக்கின்றார்கள்!
இது போன்ற கருத்துக்களை எழுதி அவர்களின் மனம் புண் படும்படி நாம் நடந்து கொள்ளக்கூடாது! நம்மைத் தழுவி வாழும் அவர்களும் நம்மவரே!
21. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted byMuthu Magdoom (Kayalpatnam)[23 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 12014
ஐக்கிய பேரவையின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. உங்களின் சேவையை மேலும் விரிவு படுத்துக. தளர்ந்து விட வேண்டாம்.
வெளி நாடுகளில் உள்ள நமது சகோதரர்களையும் (MEGA போன்ற சமூக அக்கறையுள்ள மற்றும் ஈடுபாடுள்ள) பேரவையின் நிரந்தர அங்கத்தினர்களாக சேர்த்துக் கொண்டால் மேலும் சிறப்பு.
22. In a haste posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[23 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 12018
They are busy activating the new Transformer and handing over the land to EB that they do not have time to congratulate Winner(s).
It seems to me that they are also in a hurry to do all these things before the new municipal inauguration ceremony which will be held on 25th of this month.
23. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted byS.A.Muhammad Ali (Dubai)[23 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12021
ஐக்கிய பேரவையின் செயல்களில் பாராட்டப்பட வேண்டிய சேவைகளில் இதுவும் ஒன்று.
உவைஸ் ஹாஜியார் போன்ற நல்ல மனிதர்கள் பலர் உள்ள இந்த அமைப்பில் சுயநலவாதிகள் சிலர் இருப்பதால்தான் சில நேரங்களில் தவறுகள் நிகழ்கிறது. ஒரு அமைப்பு என்று வரும் போது இதெல்லாம் இருக்க தான் செய்யும்.
சகோதரி ஆபிதா அவர்களே, வயதில் சிறிய நீங்களே அவர்களிடம் சென்று உங்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அழைத்தால் மிக நன்றாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
நம் மண்ணுக்கு மரியாதை செய்து
பட்ட புண்ணுக்கு மருந்தாய் இருந்து
உலகம் போற்றிட சேருவோமே ஒன்றாய்.
24. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted byCNash (Makkah)[23 October 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12034
மனதார பாராட்டுகிறோம்... நீங்கள் அளித்த சேவைக்கும், பொருளாதார உதவிக்கும் அல்லாஹ் உங்கள் எண்ணத்தின் படி நற்கூலி வழங்குவன், மறுமையில் உங்களை உயர்ந்த இடத்தில் வைத்து அல்லாஹ் உங்களை அலங்கரிப்பான் ... யாரோ ஒருவர் அன்றைய மேடை முழக்கத்துக்காக மேடையில் வைத்து அழகு பாப்போம் என்று சொன்னது போல் சொல்லாமல் உங்களுக்கு அல்லாஹ்விடத்தில் கூலி கிடைக்க பிராத்திக்கிறோம்.
உன் மீது நம்மோடு வாழும் புறநகர் மாற்று மத சகோதரர்கள் கொண்டுள்ள கோபத்தை நம்மவர்கள் உணர மறுத்திருப்பது துரதிருஷ்டமே! என்று ஒரு கருத்து இங்கே பதிய பட்ருப்பதால் சொல்கிறேன் ...
..மாற்று மதகாரர் கோபத்தை விட 11 ,000 கும் மேற்பட்ட நம்மவர்கள் கோபம் ஒட்டுசீட்டில் மூலம் பதியபட்டுள்ளது அதை நீங்களும் சம்பந்தபட்டவர்களும் உணர மறுத்திருப்பதும் துரதிஷ்டமே!!!
ஆகா மொத்தம் ஒட்டு மொத்த மக்களில் நம்பிக்கை இழந்து இருப்பதால் நிர்வாக மாற்றம் என்பது காலத்தில் கட்டாயம் இதையும் சேர்ந்தே உணருங்கள்!! மக்கள் உணர்த்த வேண்டிய இடத்தில் இருந்து உணர்த்தி விட்டார்கள்!!
குறை என்ன என்பதை சுயபரிசோதனை செய்யுங்கள்... நியமான ஆதங்கங்களுக்கு மதிப்பளித்து குறைகளை களையும் மாற்று வழிகளையும் உங்களை செயல்பாடுகளை மாற்றும் வழிகளையும் கண்டறியுங்கள்... தவறும்பட்சத்தில் இந்த பேரவை வெறும் பெயர் அளவிற்கு உள்ள அவையாகத்தான் இருக்கும் பெருமைக்குரிய அவையாக மாற்ற வழிகளை கண்டறியுங்கள். இல்லையென்றால் இனி வரும் காலங்களில் உங்கள் பேரவையின் பெயர் பலகையும், லெட்டர் பேடும் தான் மிஞ்சும்... உங்களை சுற்றி இருக்கும் சில சுயநலகூட்டங்கள் பருவகால பறவை போல் வேறு ஏரிகளை நோக்கி பறப்பதற்கு சிறகுகளை விரித்து விட்டன.
இன்னும் பகமை பாராட்டாமல் இங்கே எல்லோரும் வைக்கும் கோரிக்கைகளுக்காவது மதிப்பளித்து வெற்றி பெற்ற மன்ற தலைவிக்கு வாழ்த்து தெரிவியுங்கள்!!! நீங்களும் அனைவராலும் வாழ்த்தப்படுவீர்கள்!!
25. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted byNoohu Amanullah (Makkah)[23 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12038
ஐக்கிய பேரவையின் இந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது.. மகிழ்ச்சி அடைகிறோம்.. நான் என்னுடைய கமெண்ட்ஸ் ல முன்னால் சொன்னது போல் இப்போதும் சொல்கிறேன் இந்த பெரியவர்கள் எங்கள் உயிர் துடிப்பு. கண்ணியம் மிக்கவர்கள்.. அவர்கள் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையும் மரியாதையும் இன்றும் சற்றளவு கூட குறையாது .. குறையக்கூடாது..
இந்த பெரியவர்கள் எங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் இப்படி பல திட்டடங்கள் உங்களிடம் பயில ஆசைகள் இருக்கிறது இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில்,அதை நீங்கள் முன்னின்று எங்களுக்கு செயல் வடிவம் தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்..
சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் ..தவறாக இருந்தால் திருத்துங்கள்..
26. Re பல்லாண்டு வாழ்க ... posted byOMER ANAS (DOHA QATAR.)[23 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12041
அஸ்ஸலாமு அழைக்கும்!!!
பெரியோர்களே உங்கள் பணி பல்லாண்டு வாழ்க!!! நீங்கள் செய்து விட்டு செல்லும் பணி பல்லாயிரம் ஆண்டு வாழ்க!!! வாழ்த்துகிறோம்!!!
வாழ்த்தவில்லை பேரவை என்பதை விட வாழ்த்து பெற நாம் போகவில்லை என்பதுதான் சரி!!! பெரியோர் வாழ்த்த வேண்டும் என்றால் நாம் அவரிடம், அல்லது அவர்களிடம் தான் செல்ல வேண்டும்!!! இது மரியாதை!!! அவர்கள் வாழ்த்த வர வேண்டும் என்றால் இது அவ மரியாதை.!!!
ஒரு உண்மைக்கு சரியில்லை என்றாலும், சரி என்று வைத்து பார்க்கும் போது ஊரில் உள்ள ஒரு ஜமாத்தாவது, வாழ்த்தி இருக்க வேண்டாமா? இதில் எங்கள் வெளி நாடு வாழ் காயளர்கள் மட்டும் விதி விலக்கு! நாங்கள் வேற்றுமையில் ஒற்றுமை கண்டவர்கள்! ஒன்று மட்டும் நிச்சயம்,, புற நகரத்தான் ஏமாந்தாலும் ஏமாற்ற பட்டாலும், இல்லை உன்னை ஏமாற்றினாலும், அவன் இடத்திற்கும் சேர்த்தே நன்மை செய்ய நினைக்கும் பேரவையே, உனக்கு தூசிதான் மற்றவர்கள்! ஆறடி உயரத்திற்கும், எட்டு அடி குழிக்கும், நிரந்தரமான மண்ணுக்கும் மைந்தன்!!!
V M S அனஸ் மைந்தன்.(இப்னு அனஸ்)
உமர் அனஸ்.&அபு அனஸ்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross