கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட்ட காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சார்ந்த ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி இயக்குனர் ஆபிதா நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன், நகரின் 18 வார்டுகளுக்கான உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் பதவியேற்பு விழா இன்று காலை 11.00 மணிக்கு காயல்பட்டினம் நகர்மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொள்ள வருமாறு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், நகர்மன்ற முன்னாள் தலைவரும, காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப், மவ்லவீ டபிள்யு.எம்.எம்.செய்யித் முஹம்மத் என்ற ஊண்டி ஆலிம், ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா உள்ளிட்ட நகரப் பிரமுகர்களை, நகர்மன்றத் தலைவர் ஆபிதா நேற்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். காட்சிகள் பின்வருமாறு:-
ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் அவர்களை சந்திக்கிறார் ஆபிதா...
ஊண்டி ஆலிம் அவர்களுக்கு அழைப்பு விடுத்தபோது...
ஹாஜி எம்.எம்.உவைஸ் அவர்களுக்கு அழைப்பு விடுத்தபோது...
ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் அவர்களுக்கு அழைப்பு விடுத்தபோது அவர்களது இல்லத்தாருடன்...
ஹாஜி எஸ்.எம்.கபீர் அவர்களுக்கு அழைப்பு விடுத்தபோது...
ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ அவர்களுக்கு அழைப்பு விடுத்தபோது...
நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா, நடப்பு நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட்ட மிஸ்ரிய்யா ஆகியோருக்கும் ஆபிதா அழைப்பு விடுத்தார். அ.வஹீதாவுக்கு அவர் அழைப்பு விடுத்தபோது...
கேட்டுக்கொள்ளப்பட்டதற்கிணங்க ஒரு படம் நீக்கப்பட்டு, செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.(27.10.2011 - 08:50hrs)
1. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byKAMILA KIZHAR (chennai)[25 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12152
அஸ்ஸலாமு அலைக்கும்.. ஒற்றுமைக்கு இது தான் நல்ல துவக்கம்... போட்டியிடயிட்ட இரு துருவமே சேர்ந்து போட்டோ போட்டாச்சி.. இனி அனைவரும் இனைந்து ஒற்றுமையாக செயல்படுவோம்..46149420
2. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byநட்புடன் - தமிழ்நாடு ஹசன்... (Jeddah)[25 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12154
மாஷா அல்லாஹ். தொடக்கமே நல்லவிதமா இருகே. நம் ஊர் பெரியவர்களை தொடக்க விழாவிற்கு அழைத்து நம் ஊருக்கு மேலும் மேலும் பெருமை சேர்த்து விட்டீர்கள்.
சகோதரி ஆபிதா அவர்களே இனிதான் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். வல்ல அல்லாஹ் நாம் செய்கின்ற அனைத்தையும் பார்த்துகொண்டு இருக்கிறான் என்ற பயம் உங்கள் மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் நல்ல நல்ல காரியங்களை செய்ய ஏதுவாக இருக்கும்.
நம் ஊரு மக்கள் உங்களை நம்பி இந்த பதவியியை உங்களுக்கு தந்து இருக்கின்றார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு துணை நிற்பானாக ஆமீன்.
இன்னார் செய்தாலே பொறுத்தல்.அவைநாட நன்னயம் செய்து விடல்.(பொருள் :ஊரு மக்கள் என்னதான் உனக்கு தீமைகள் செய்தாலும்.அதை நல்லவிதமாக எடுத்து கொள்.
5. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byZainul Abdeen (Dubai)[25 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12157
மாஷா அல்லாஹ் !
உங்கள் சேவை தொடர அல்லாஹ் போதுமானவன்.
நல்லதோர் தொடக்கம்.
-------------------------
பதவி பிரமான நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் நீங்கள் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
6. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byIbrahim Faisal (Riyadh)[25 October 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12158
மாஷா அல்லாஹ்!
நல்லதொரு துவக்கம்! உங்கள் வெற்றி பயணம் பசுமை காயலை நோக்கி செல்கிறது என்பதற்கு இதுவே ஒரு அடையலாம்.
தலைவி ஆபிதா லாத்தா, உங்களுக்கு அல்லாஹ் நேர் வழியை காட்டுவான். அதற்கு பின்னால் மட்டுமே நீங்கள் செல்வதற்கு நாங்களும் இறைவனிடம் இறைஞ்சுகிறோம். நீங்களும் எங்களுக்கு துஆ செய்யுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இப்ராகிம் பைசல்
ரியாத்
சவுதி அரேபியா.
இன்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் அவர்களின் அடக்கம் ரியாத் நகரில் நடை பெறுகிறது. இளவரசர் சுல்தான் அவர்களின் மறு உலக வாழ்க்கை வெற்றிகரமானதாக அமைய நான் வல்ல நாயன் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன். நீங்களும் துஆ செய்யுங்கள்.
இளவரசர் சுல்தான் அவர்கள் மிகவும் நல்ல மனிதராக, அதிகம் உதவி செய்பவராக, தன் நாடு மக்களிடமும், அயல் நாட்டு மக்களிடமும் மிகவும் கருணை உள்ளவராக இருந்து இருக்கிறார்.
அவரின் பிழைகளை வல்ல நாயன் அல்லாஹ் மன்னித்து மேலான சுவனபதியை வழங்குவானாக! அமீன்.
7. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byCholukku (chennai)[25 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 12159
ஆரம்பமே அமர்க்களம் தான் மாஷா அல்லாஹ ஆல் தி பெஸ்ட் சிஸ்டர் எதை பத்தியும் கவலை weandaam
Moderator: சகோ. சொளுக்கு அவர்களே, இனி வருங்காலங்களில் தங்களது கருத்துக்களை வெளியிடும் பொருடடு, தங்கள் முழுப் பெயரை இணைத்து வெளியிடவும். ஒத்துழைப்புக்கு நன்றி.
8. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byM.N Refai (Dar Es Salaam)[25 October 2011] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 12160
அஸ்ஸலாமு அழைக்கும்
இந்த செய்தி மூலம் நாம் அறிந்த விஷயம் நகராட்சி தலைவி ஆபிதா அவர்கள் தேர்தல் முன் நடந்த கசப்பான விசயங்களை மறந்து ஊர் ஒருமைக்காக பாடு பட இனிதே ஆரம்பம் செய்து இருக்கிறார்கள்.
இது அவர்களின் பெருந்தன்மை.
இதுவரை ஐக்கிய பேரவையின் வாழ்த்து செய்தி வராமல் இருப்பது வருந்தம் அளிக்கிறது.
குறை கூறுகிறேன் என்று யாரும் தப்பாக நினைக்க வேணாம் இது காயல் மக்களின் எதிர் பார்ப்பு.............
மறப்போம் மன்னிப்போம் என்பதை ஊரு பெரியவர்கள் மற்றும் ஐக்கிய பேரவையும் நினைத்து வாழ்த்து செய்தி தருமாறு காயலின் இளைய தலைமுறை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறது.
சகோதரி ஆபிதா அவர்களுக்கு எனது வாழ்துக்கள் உங்களின் நல்ல எண்ணங்கள் வெற்றி அடைய அல்லாஹ்விடம் துவா கேட்கிறோம்.
10. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byCNash (Makkah )[25 October 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12165
உயர்ந்த பண்பாட்டை வெளிக்காட்டி தன்னை எதிர்த்து நின்ற வேட்பாளர் முதல் தன்னை விரட்டிய அந்த பெரியவர்கள் வீடு வரை தேடிபோய் அழைத்திற்க்கிறார்.. அவர்களும் அதை மதித்து பெரியவர்களுக்குரிய பண்போடு வந்து வாழ்த்துவார்கள் என்று நல்ல எண்ணத்துடன் எதிர்பார்ப்போம்.!!!
11. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byM.S.K.SULTHAN (Deira, dubai)[25 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12166
நம் சகோதரி ஆபிதா அவர்களின் பதவியேற்ப்பு விழாவுக்காக நமது ஊரில்
வானம் வாழ்த்து மழை பொழிகின்றது
மேகம் ஊர்கோலம் போகின்றது
மின்னல் கண் சிமிட்டி வரவேற்கின்றது
இடி ஒலியுடன் மக்களை அழைக்கின்றது
13. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byNafeela (Kayalpatnam)[25 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12169
சகோதரி ஆபிதா உங்களுக்கு ஒரு சல்யூட்
உன்னை வாழ்த்தாதவர்களுக்கு கூட நீங்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளீர்கள் இது உங்களின் தனி தன்மையை காட்டுகிறது சரி அது இருக்கட்டும் பதவி ஏற்பு நடந்தாகி விட்டது உங்கள் பணி ஆரம்பித்து விட்டது.
ஊர் முன்னேற்றதிற்கு அதிகம் பாடு பட வேண்டி உள்ளது உங்களை நம்பி ஊட்டு போட்ட மக்களுக்கு உழைப்பது உங்கள் கடமை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அம்சங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப் பட வேண்டும் நிறைவேறும் பட்சத்தில் காயல்பட்டணம் அனைத்து ஊர்களுக்கும் முன் மாதிரி பட்டணமாக திகழும் என்பதில் சந்தேகத்திற்கு இடம் இல்லை
14. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byS.A.Muhammad Ali (Dubai)[25 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12171
காய்ந்து போய் கிடந்த மண்ணை குளிரூட்டிய மழை போல்
இச்செய்தி எம் மனதை குளிரூட்டுகிறது.
அல்ஹம்துலில்லாஹ்.
மக்கள் மனங்களை கவர இஸ்லாம் கூறிய அழகிய வழிமுறை இது.
ஓற்றுமை ( ஐக்கியம்) நம்மிலிருந்து பிறருக்கும்
தொடர வேண்டிய தொடர் ஓட்டம்
இதில்.. வெற்றி யென்பது உறுதி !
சுயநலமும், நான்தான் என்கிற அகம்பாவமும் எப்போது வேரோடு அறுத்து எறியப்படுமோ அன்றுதான்
வேற்றுமையும் ஒற்றுமையைத் தேடிவரும்.
V.V.Good.
Byv
S.A. முஹம்மது அலி (Velli ) KTM Street
My earlier comment:
சகோதரி ஆபிதா அவர்களே, வயதில் சிறிய நீங்களே அவர்களிடம் சென்று உங்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அழைத்தால் மிக நன்றாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
15. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byMohideen(Durai) (Abu Dhabi)[25 October 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12172
17. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byfathima (kayalpatnam)[25 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 12174
அஸ்ஸலாமு அழைக்கும்
மாஷா அல்லாஹ்... இதைதான் ஒற்றுமை என்று சொல்லவேண்டும். இப்போது தெரியும் ஒற்றுமை யாரிடம் இருக்கிறது என்று... வாழ்த்துக்கள் ஆபிதா ஷைக்... இனி உங்களுக்கு பணி துடங்க ஆரம்பமாகிவிட்டது. வல்ல அல்லாஹ் உன்ன்களுக்கு துணை இருப்பான்...
நீங்கள் நாமினேசன் பண்ணும் பொது அல்லாஹ்வின் அருமலை இறங்கியது. நீங்கள் வெற்றி பெற்ற சமயமும் அல்லாஹ்வின் ரஹ்மத் (மழை) இறங்கியது. பதவி ஏற்கும் போதும் அல்லாஹ்வின் அருள்கொடை இறங்கியது... இறைவன் நாட்ட படி உங்களுக்கு இந்த அற்புத பதவி கிடைத்து விட்டது ஒரு சிறு தவறு நடந்தாலும் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லி ஆகணும்... அதுக்கு அல்லாஹ் உனக்கு வலி வைக்க மாட்டான். என்றும் உன் துணையாக அவன் இருப்பான் இன்ஷா அல்லாஹ்...
பெருமானார் காலத்துக்கு அடுத்து பதவி யாருக்கு குடுக்கவேண்டும் என்று இருக்கும் பொது தலைமை பதவிக்கு வரவே மக்கள் யோசித்து இருக்கிறார்கள்.. தலைமை பதவிக்கு வந்தால் நம்மை அறியாமலே ஒரு சிறு தவறு நடந்து விட்டால் இறைவனிடம் பதில் சொல்லி ஆகவேண்டுமே என்று அஞ்சி யாரும் முன் வரவில்லை...
ஆனால் இன்று பின்தங்க யோசிக்கிறார்கள்... நான் நீ என்று போட்டி. போட்டி இடுவது மக்களுக்கு சேவை செய்யவா இல்லை நமக்கு save செய்யவா என்று ஆகிவிடுகிறது.... ஆனால் இன்று ஆட்சியை பிரட்ட போகிறார்கள் நம் ஆபிதா அவர்கள்.. மக்களுக்காக மக்களின் நலனுக்காக என்று மட்டும் போராட கிளம்பிவிட்டார்கள்..
யா அல்லாஹ் அவர்களின் போராட்டத்திற்கு நீ துணை நில் நீ இவள் அருகில் நின்றால் எதையும் தாங்கும் பலன் வந்துவிடும் இன்ஷா அல்லாஹ்.... என்றும் உங்களுக்கு துணையாக நாங்களும் இருப்போம்.
முத்து இஸ்மாயில் காக்கா கொஞ்சம் ஒரு திருத்தம்
இன்னார் செய்தாரே ஒருத்தர் அவர் நாண நன்மையே செய்து விடல்...
உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள். எல்லா தரப்பு மக்களிடமும் ஆலோசனை பெற்று அதில் உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செயல்படுத்துங்கள். குறிப்பாக உங்களை சுற்றி உள்ளவர்களிடம் எப்போதும் கொஞ்சம் உஷாராகவே இருந்து கொள்ளுங்கள். அவர்களால் உங்கள் பெயர் கெட்டு விடக்கூடாது.
21. முதற்படி... posted byShaik Dawood (Hong Kong)[25 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12178
மாஷா அல்லாஹு தஆலா...
பாரகல்லாஹு லக... ஆபிதா லாத்தா.
நல்ல துவக்கம். பார்ப்பதற்கே மிக்க சந்தோஷமாக இருக்கின்றது. வல்ல அல்லாஹ் தங்களுக்கு ஆரோக்கியமான வாழ்வுடன் கூடிய நீண்ட ஆயுளை தந்து அதிகமாக நற்கருமங்களும், ஆக்கப்பூர்வமான சேவைகள் பலவும் செய்ய தவ்ஃபீக் செய்து எல்லா செயல்களும் அங்கீகரிக்கப் படுவதற்கு அடிப்படையான இக்லாஸ் என்னும் மனத்தூய்மையுடன் செய்ய அருள்புரிவானாக... ஆமீன்
ஊரிலுள்ள பெரியவர்கள் அனைவரும் தங்களுக்கு தங்களின் காரியங்கள் யாவற்றிலும் உறுதுணையாக இருப்பானார்களாக
22. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byA.M.Syed Ahmed (Riyadh)[25 October 2011] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12182
HATS OFF GRAND DAUGHTER ABITHA
This is what I expect from you and requested through my previous comments too....... You did it....... you are pleased & This is your first victory.....
Now the balls in the GRAND FATHER's Court & I still confident they will advice & guide you in the right direction & stand behind you in all the sensitive issues.......All the best...
Happy to see Kalami kaka, the pleased personality who was respected by all the people of (Different schools of thought)
This is called Unity in diversity....
உலகிலேயே, அனைவரிடமும் கருத்து வேறுபாடு இல்லாத ஒரு விஷயம் மரணம் ஒன்றுதான். எனவே நம்மிடம் உள்ள சிறிய கருத்து வேறுபாடுகளை மறப்போம் , மன்னிப்போம்..நல்லதையே நினைப்போம்....
காயலுக்கு பை பாஸ் ரோடு தந்தார் கருணாநிதி......
காயலுக்கு இரு வழி சாலை தந்தார் சகோதரி ஆபிதா என்று இந்த ஊர் சரித்திரம் உன்னை சொல்ல வேண்டும்...
Very important note on TWO-WAY TRAFFIC:
My suggestion in this issue (Negociate with the concerned PEOPLE or think the alternative way (which is Old market ROAD) & connect to Tayyim palli...
23. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted bymackie noohuthambi (kayalpatnam)[25 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12183
1967 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வரலாறு காணாத வகையில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் தோல்வியை தழுவி இருக்கிறார். இந்த சந்தர்பத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்கிறார். அப்போது அவர் காமராஜர், பக்தவத்சலம் ஆகியோரை சந்தித்து நல்லாசி பெற்று செல்கிறார். அப்படியொரு ஜனநாயக பண்பை அதற்கு பின்னர் காண முடிந்ததில்லை.
ஆனால் தமிழகத்தின் ஒரு சாதாரண கிராமத்தில் இப்படியொரு நிகழ்வு சகோதரி ஆபிதா மூலம் நடைபெற்றிருப்பதை புகைப்படங்கள் மூலம் நிரூபித்துள்ள நண்பர் ஸாலிஹ் அவர்களுக்கு நன்றி. யாரும் எதிர்பாராத வெற்றி யாரும் எதிர்பாராத தோல்வி.
ஜனநாயகத்திலே ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள், அல்லாஹ்வின் ஏற்பாட்டில் அசைக்க முடியாத உறுதி கொண்டவர்கள், இந்த வெற்றி தோல்விகளை மிக ஆழமாக யோசித்து கவலைப்பட மாட்டார்கள்.
அல்லா யாருக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுக்க நினைக்கிறானோ அவன் சொல்வதெல்லாம் " ஆகி விடு" என்பதுதான். உடனே ஆகிவிடும்.
ஊர் முன்னேற்றத்தில் நம்பிக்கை கொண்டு உழைத்த பெரியவர்கள் நல்லவர்கள் இந்த தோல்வியை பெரிதுபடுத்த தேவை இல்லை. நீங்களும் சேர்ந்துதான் நமதூர் முன்னேற்றத்துக்கு பாடு படவேண்டும்.
கண்மணி கலங்க உள்ளம் நடுங்க கை விரல் நம் கண்ணில் படுவதுண்டு. அப்போது நம் கையை வெட்டியா வீசி விடுவோம். அதே போல்தான் இந்த நிகழ்வையும் நீங்கள் எடுத்துக்கொண்டு, மீண்டும் தெளிவான நீரோட்டம்போல் உங்கள் சிந்தனைகளையும் நல்ல ஆலோசனைகளையும் வழங்க முன் வாருங்கள். சரித்திரம் பின்னோக்கி செல்வதில்லை, சரித்திரத்தை திருத்தி எழுதவும் முடியாது. HISTORY CANNOT BE RE-WRITTEN, BUT IT CAN BE MODIFIED IN A POSITIVE WAY.
வாருங்கள், நகரமன்ற தலைவரின் முயற்சிகளுக்கு தோள் கொடுங்கள். உங்கள் வீடு தேடி வந்த திருமகளுக்கு வாழ்த்து கூறுங்கள். இன்றே அந்த பதவியேற்பு விழா மேடையில் இது நடந்திருக்க வேண்டும், என்ன செய்வது இதயத்தை கல்லாக்கி கொள்ள முடியாதுதான். மனித உணர்வுகள் இப்படி சங்கடப்படுவது இயற்கைதான்.
இப்போதும் வெற்றி பெற்றிருப்பது வேறு யாருமில்லை, நமது இளைய சகோதரிதான். உங்கள் பேத்திதான். வாழ்த்துங்கள், அவள் வளரட்டும், இந்த ஊருக்கு எல்லா நலத்திட்டங்களையும் கொண்டு வந்து குவிக்கட்டும். அதில் உங்கள் பெயர்களும் நிச்சயமாக கல் வெட்டுக்களில் எழுதப்படும். நன்றி.
24. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted bymohd ikram (saudi arabia)[25 October 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12184
இதுதான் நமக்குள் வேண்டும். எல்லோரும் ஓன்று இணைந்து, தேர்தல் சமயத்தில் நடந்த கசப்பான நிகழுவுகளை மறந்து, இனி வரும் நாட்களில் எல்லோரும் ஓன்று சேர்ந்து நமது ஊரினை நல்ல வளமான, நலமான காயலாக உருவாக்குவோம்.
25. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byVSM THAMBY (Hongkong)[25 October 2011] IP: 218.*.*.* China | Comment Reference Number: 12185
அஸ்ஸலாமு அழைக்கும் .
நகர் மன்ற தலைவி சகோதரி ஆபிதாவுக்கு வாழ்த்துக்கள் . நகரின் பெரியவர்களை நேரில் பார்த்து , ஆசீர்வாதம் வாங்கிய நடைமுறை , பாராட்டுதலுக்கு உறியது. தங்களுடைய சேவை நம் ஊர் எல்லா பகுதி மக்களுக்கும் பாரபட்சம் இல்லாத முறையில் சென்று அடைய வேண்டுமாய் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன் .
VSM Thamby என்ற ஹாங்காங் அப்பா
( M . L . மூசா ஹாஜி அவர்கள் தம்பி )
26. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byMeera Sahib (kayalpatnam)[25 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12186
மாஷா அல்லாஹ்! இந்த சிறு வயதில் என்ன அரசியல் பக்குவம் ! இனி நம்மை அசைக்க யாராலும் முடியாது . நமது ஊரின் வளர்ச்சி இதோ நம் கண் முன்னே தெரிகிறது . நாம் அனைவரும் ஒற்றுமையாக ஊருக்காக பாடுபடுவோம்.
அன்பு தலைவி அவர்களே இந்த நல்ல தருணத்தில் தங்களிடம் ஓர் வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன் . எங்கள் குறைகளை தங்களிடம் தெரிவிக்க ஒரு எளிமையான வழிமுறையை அறிவியுங்கள் . எப்பொழுதும் மக்களுக்கு நெருக்கமாக இருங்கள் .
தங்களை சந்தித்து மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் கேட்பதை சந்தோசமாக ஏற்று தங்களால் முடிந்த அளவு நிவர்த்தி செய்யுங்கள் . இதில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் செயல்படுங்கள். இறைவன் உங்களுக்கு துணை நிற்பான் .
27. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted bypeena abdul rasheed (Riyadh)[25 October 2011] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12187
ஆரம்பம் அமர்க்களம் உன் நன்னடத்தை, உன் ஒட்ற்றுமை, தைரியம், முயற்சி இதற்கு அல்லாஹ் உனக்கு தந்த வெற்றி. இன்று நீ பதவி ஏற்பு விழாவில் நாங்கள் கலக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருந்தாலும் உன் ஊர் சேவை பல மடங்கு பெர்கி ஊர் நல்ல வளர்ச்சி அடைந்தால் அது போதும்.
வாழ்க உன் சேவை வளர்க ஊர் வளர்ச்சி
ஐக்கியம இருப்போம் ஜமய்போம்.
30. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted bySHOLUKKU.AJ (KAYALPATNAM)[25 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12190
வாராயோ!!! தோழி!!! வாராயோ!!!
அஸ்ஸலாமுஅலைக்கும்!
இருதுர்வங்கள் இணையும் இந்த மழை மேக குளிச்சியை விட அதிக குளிரை இந்த செய்தியைதான் நான் எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன். வெவ்வேறு திசையில் பிரிந்த இரண்டு தலைமைக்கு தகுதியான திறமைசாலிகள் ஒரு சேர பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி .நன்றி .நன்றி
அன்பின் சகோதரி ஆபிதா அவர்களே
காயல்மானகரின் கண்னியததுக்குரிய பெரியோர்களை தாங்கள் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர்கள் உங்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. வருத்தம் என்றாலும் வசந்தகாலம் விரைவில் வரும் . அது உங்கள் கையில் தான் உள்ளது .இன்ஷா அல்லாஹ்!
இலையுதிர் காலம் மாறி வசந்த காலம் விரைவில் வரும்...
வஸ்ஸலாம்
31. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted bySYED OMER KALAMI (colombo)[25 October 2011] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12191
NOW PRESIDENT HAS DONE HER GESTURE WENT AND MET ALL ELDERS GAVE INVITATION, FOR THAT, PROOF YOU HAVE PHOTOS.DID THAT ELDERS WENT TO FOR SWEARING CEREMONY?.ANSWER NO..
ANOTHER MOST IMPORTANT NEWS HER OWN JAMAATH ELDERS DID ACCEPT INVITATION DIRECTLY. (NO PHOTOS PROOF) .AND ALSO WENT TO PICNIC TO AVOID GOING TO SWEARING CEREMONY. THIS SHOWS THEY CAN'T STILL DIGEST. YOU LIKE R DISLIKE ABITHA GOING TO BE OUR PRESIDENT FROM TODAY.(25TH OCT 2011).FOR ANOTHER FIVE YEARS.
SO APPEAL TO ALL ELDERS ACCEPT TRUTH AND GIVE ALL YOUR VALUABLE ADVISE AND SUPPORT FOR WELFARE OF KAYAL.
SINCE YOU ALL ELDERS YOU KNOW MORE MORE THAN US. THIS NOT MY ADVICE, JUST A SHARING. YOU ALL ARE BRILLIANT THAN US.
EXCEPTING GOOD TO HAPPEN.ALLAH WILL BLESS AND SHOW ALL OF US IN RIGHT PATH.
32. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byabuzakia (kayalpatnam)[25 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12192
தேடினேன் தேடினேன் கண் பார்த்து தேடினேன் .
காணவில்லை.
i,அல்லாஹ்வின் அருளால் வெற்றிக்கு முனைதிட்ட அந்த வெற்றி வீரர்களை காணவில்லை . . யார் யாரோ அவர் கூடே உள்ளனர். ஆனால் முதன் முதலாக தைரியமாக பலத்த எதிர்ப்பையும் மீறி பிரசாரத்தில் இறங்கிய வாலிபர்களை காணவில்லை. வெற்றிக்காக உண்மை விசுவாசி முன்னே நிற்பான் . வெற்றிக்குப்பின்னால் அவன் வெகு தூரம் பின்னே நிற்பான் . வெற்றிக்கு முன்னால் சுயநலவாதி வெகு பின்னே நிற்பான் . வெற்றி கிடைத்ததும் அவன் கைகோர்த்து நிற்பான்.
sister aabidha வெற்றிக்கு உதவியவர்கள் ஒதுங்கீவிட்டர்கள். நீங்கள் அவர்களை விட்டு விடாதீர்கள்
l. யாரோ உங்களிடம் ஒட்டிகொல்வார்களே அவர்களிடம் be carefull. Nabi (sal...) அவர்களின் புனித ஆட்சியையும் கலிபாக்களின் சீர்மிகு ஆட்சியையும் பற்றி அல்லாஹ்வுக்காக ஒருமுறை படித்துப்பாருங்களேன்..
நண்பர்களை கஷ்டத்தில் காணலாம். பாவியான எதிரிகளை சந்தோஷத்தில் உங்களுடன் காணலாம்.
அபூ ஜெக்கியா .
Moderator: சகோ. அபூ ஜெக்கியா அவர்களே, தங்களது கருத்துக்களை வருங்காலங்களில் வெளியிடும் பொருட்டு, தங்கள் இயற்பெயரை சேர்த்து வெளியிடவும். ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.
34. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byrahmath (chennai)[25 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12195
சகோதரி ஆபிதா, பெருந்தன்மையோடு நம் ஊர் பெரியவர்களை நேரில் போய் சந்தித்து ,தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஐக்கிய பேரவையின் மரியாதைக்குரிய தலைவர் அவர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
இன்னும் பெரியவர்களுக்கு பெருந்தன்மையான மனசு வராததற்கு என்ன காரணமோ? வயசாகிவிட்டால் சிறுபிள்ளை மாதிரி என்பார்கள். அல்லாஹ் நம் யாவருக்கும் நல்ல ஹிதாயத்தை அளிப்பானாக.
35. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byM.N Refai (Dar Es Salaam)[25 October 2011] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 12197
அஸ்ஸலாமு அழைக்கும்
சிறியவரான நம் நகராட்சி தலைவி பெரும் தன்மையுடன் நடக்க நம் ஊரு பெரியவர்கள் ஏனோ ******* இருகிறார்களோ ? அல்லாஹ்கே வெளிச்சம்.
புதிய தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது பழைய தலைவரின் கடமை, அதுதான் ஜனநாயக முறை ...
இதை கூடவா அவங்களுக்கு சொல்லி கொடுக்கணும் ?
நேரில் சென்று அழைப்பு விடுத்தும் ஏனோ நம் அனேக பெரியவர்கள் இன்று நடந்த பதவி ஏற்ப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை...
நான் பிடித்த முயலுக்கு மூணு கால்தான் என்று இல்லாமல் பெரியவர்கள் பெரும் தன்மையோடு நடந்தால் நன்றாக இருக்கும்.
37. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byahmed meera thamby (makkah)[25 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12199
அஸ்சலாமு அழைக்கும்
ஆபிதா அவர்ஹளுக்கு வாழ்த்துக்கள்
அவர்ஹல் பனி சிறக்கட்டும்
((தங்கை பாத்திமா!!! அவர்ஹலே!!
நட்புடன்--தமிழ்நாடு ஹசன் தான் திருகுறளை தப்பா எழுதி இருக்கார் என்று ஒரு சிலர் சொல்ஹிரார்ஹல் ஆனால் நீங்கள்
இஸ்மாயில் காக்கா என்று சொல்ஹிரீர்ஹல்
தமிழன் வேறு தமிழ்நாடு வேறு
(பாத்திமா என் குடும்பத்தை சேர்தவரா?) கேட்பது தப்பு என்றால் மன்னிக்கஉம்
வஸ்ஸலாம்
நட்புடன்--தமிழன் இஸ்மாயிலின் காக்கா
அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்
38. ஐக்கிய குறைவுகள் ஏற்பட இது வழிவகுக்கும் posted byN.S.E. மஹ்மூது (KAYALPATNAM)[25 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12202
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சகோதரர்களே !
" பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு ஐக்கியப் பேரவை தலைவர் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் அழைப்பு! " என்ற இந்த செய்தியை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது.
அதுவும் பதவி ஏற்பு விழா நடைபெற்று முடிந்த பிறகு இந்த செய்தி மக்களுக்கு போய் சேர்வதால் நம்மில் மேலும் ஐக்கிய குறைவுகள் ஏற்பட இது வழிவகுக்கும் என்பதை உணர வேண்டுகிறேன்.
இது போன்ற அவசியமற்ற செய்திகளை தவிர்த்து உண்மையான ஊடகப்பணியை நிலை நாட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்.
-------------------------------------------------
நமது நகராட்சித் தலைவராக பதவி ஏற்றிருக்கும் சகோதரி ஆபிதா நல்ல குணமுடையவர் , சிறந்த பண்பாளர் , பெரியவர்களிடம் அன்பும், மரியாதையும் உடையவர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அதேபோல் அந்த பெரியவர்களும் சகோதரி ஆபிதாவை வெறுக்கவில்லை - கோபமாக இருந்திருக்கலாம். வெறுப்புக்கும் கோபத்துக்கும் வித்தியாசம் உண்டு - வெறுப்பு நீங்க நீண்ட நாளாகும் ஆனால் கோபம் விரைவில் விலகும்.
பெரியவர்களின் ' துஆ 'வை என்றும் விரும்புபவரே சகோதரி ஆபிதா. தேர்தலுக்கு நிற்பதற்கு முன்பிருந்து இன்று பதவி ஏற்றது வரை மட்டுமல்ல - பதவி காலம் முழுக்கவும் அதன் பின்னும் பெரியவர்களை மதிப்பவரே சகோதரி ஆபிதா.
ஏதோ சில இடர்கள் அவருக்கும் நமது பெரியவர்களுக்கும் இடையில் ஏற்பட்டு தற்காலிகமாக சிறு இடைவெளி உண்டாகி இருக்கிறதே தவிர இது நிரந்தரமான இடைவெளி அல்ல. அல்லாஹ்! அருளால் இது விரைவில் நீங்கும்.
--------------------------------------------------
மக்களே!
தேர்தல் முடிந்து நல்லதொரு நம்பிக்கையுடன் நகராட்சி தலைவரும் , உறுப்பினர்களும் பதவி ஏற்றிருக்கிறார்கள் அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவி, ஒத்தாசைகளை கொடுத்து அவர்கள் நல்லாட்சி செய்திட நாம் உதவ வேண்டும்.
நம்மிலே எத்தனை கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், வந்தாலும் அவைகளை விட்டொழிய வேண்டுமேயல்லாது பெரிது படுத்தி தயவு செய்து பிரிவினையை உண்டாக்க வேண்டாம்.
இன்றைய சூழலில் நம்மிடையே பிரிவினையையும் , பிளவுகளையும் உண்டாக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் அனைவருக்கும் ஒற்றுமையை நிலைத்திருக்க செய்து சந்தோசமான வாழ்வை தருவானாக ஆமீன். வஸ்ஸலாம்.
39. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byகுளம் ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதி அரேபியா)[25 October 2011] IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12205
இறையருள் நிறைக
அஸ்ஸலாமு அலைக்கும்
சாந்தமுள்ள பொருறுப்புமுள்ள ஐக்கியப்பேரவை பெரியவர்களுக்கும், ஊர்தலைவி அவர்களுக்கும் நமது நன்றிகளை எத்திவைப்போம் ஜஃஜாக்கல்லாஹ், நேரம் நல்கித்தந்த ஈரைவனுக்கே எல்லாப்புகழும் அல்ஹம்துலில்லாஹ்,
மழை பொழிந்து கொண்டிருக்கிறது மனமும் நெகிழ்ந்துகொண்டிருக்கிறது நீரடிக்கும் நீரில் ஒலி இருக்கும் அனால் நீரடித்து நீர் விலகுவதில்லை அதற்கு நமதூர் தலைமை நல்லதோர் எடுத்துக்காட்டு இது நமக்குக் கிடைத்த இறைவனும், அவந்து தூதர் நமது கண்மணி நாயகமும் சொல்லும் மகத்தான வெற்றி அல்ஹம்துலில்லாஹ்
ஊரில் நல்ல வெளிச்சம் நிலவுகிறது ஊர்மக்கள் முகத்திலும் வெற்றிப்பிரகாசம் தெரிகிறது, நாடியது நடந்துவிட்டது அறியாமை நம்மிடமில்லை என்பது தெளிவாகிவிட்டது நல்லதோர் தொலநோக்கு எண்ணம் நன்றாக நம்மனக்கண்கள் முன்தெரிகிறது அல்ஹம்துலில்லாஹ்
நான்வாழ்த்தெழ்தத் துவங்கிவிட்டேன் நிறைவுசெய்யத் தெரியவில்லை மனம் அப்படி ஒரு குதூகளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது அல்லாஹு அகபர், மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், ஜஃஜாக்கல்லாஹ் ஹைரன் மீண்டும் நல்ல நிகழ்வுகளில் இணைந்துகொள்வோம்.
அன்புடன் சகோதரன் இறையடிமை
ஷேக் அப்துல் காதிர்.வஸ்ஸலாம்
40. ماشـــــــاء الله posted bySyed Muhammed Sahib Sys. (Dubai, U.A.E.)[25 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12207
அருமையான போட்டோக்களுடன் கூடிய மகிழ்ச்சியான செய்தி, நகர்மன்ற தலைவர் சகோதரி அவர்கள் எல்லா பெரியவர்களையும் நேரில் போய் சந்தித்து விழாவிற்கு அழைப்பு விடுத்ததோடு நின்று விடாமல் தன்னோடு போட்டியிட்ட சக சகோதரியையும் சந்தித்து அழைத்திருப்பது பெருமிதத்துக்குரியது.
நம் இஸ்லாம் போற்றும் வழியில் ஒரு ஆரோக்கியமான ராஜபாட்டையோடு சகோதரி அவர்கள் தனது பயணத்தை துவக்கியுள்ளார் என்றால் அது மிகையில்லை என நம்புகிறேன்.
'தனது சகோதரரின் முகத்தை புன்முறுவலோடு பார்ப்பதும் (صدقـة)தர்மம்' என்ற 'நபி மொழி' க்கு ஏற்ப இரு வேட்பாளர்களும் வெற்றி தோல்வி என்ற வேற்றுமை களைந்து புண் முறுவல் பூத்த வண்ணம் மன மகிழ்ச்சியுடன் தோன்றுவது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
அதே சமயம் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்ட நாங்களே இணைந்து நிற்கும் போது, தாங்களும் (கசப்பான நிகழ்வுகளை மறந்து, கருத்துப் பதிவு எனும் ஆயுதப் போரை நிறுத்தி விட்டு ஆரோக்கியப் பாதையில்) ஒன்றாக ஓரணியில் நின்று கண்ணியமான காயலை உருவாக்கலாம் வாருங்கள் என்ற ஒரு அருமையான MESSAGE ஐ அந்தப் படம் தருவதாகவே எனக்குத் தோன்றுகிறது
உங்களுக்கு ?
--------------------------------------
ஊழலற்ற, லஞ்ச லாவண்யம் போன்ற தீய கருமங்கள் ஏதும் இல்லா சுத்தமான, பசுமையான, எல்லோரும் விரும்பும் காயல் பதியின் கண்ணியம் காக்கும் மன்றமாக நமது நகர் மன்றம் அமைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சற்று சிரமப்பட்டு உழைக்க வேண்டும் அதற்கு நமது ஒத்துழைப்புகளை நாம் நல்க வேண்டும்.
அத்தியாவசிய குடிநீர், மின்சாரம் தடையின்றி நமதூருக்கு கிடைக்கச்செய்யவும், இன்னும் நல்ல பல நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நகர் மன்றங்களில் நம் மன்றம் முதன்மை மன்றமாகத் திகழவும் புதிய தலைமுறை பாடுபட வேண்டும்.
அதற்கு அந்த வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக, ஆமீன் يا رب العالميـن.
41. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byNoohu Amanullah (Makkah)[26 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12213
ஆபிதா லாத்தாவின் பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள்.. உங்களின் சேவைகள் தொடர வல்லோனிடம் இறைஞ்சுகிறோம்..
அட்மின் அவர்களே கத்திரி போட்டு விடாதீர்கள் இந்த கருத்துக்கு ப்ளீஸ். என்னுடைய தவறை சுட்டி காண்பிக்கும் கருத்து
இந்த உள்ளாட்சி தேர்தல் செய்தி எப்போது முடியும்.. இந்த கமெண்ட்ஸ் படுத்துற பாடு இருக்குதே சொல்லி மீளாது.. ஒரு வழி ஆக்கிட்டுதான் போவேன்ன்னு சொல்லுது..
நான் கேட்ட கேள்விக்கு உடனே பதில் வருது மொபைல்க்கு..7 ம் வார்டின் தவறான செய்திகள் சொன்னதற்க்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ..
நான் அறிந்த செய்திகள் தவறாக இருந்து இருக்கிறது.. அதை சுட்டிக்காட்டிய அன்பர்களுக்கு நன்றி.. இவ்வளவு பிரச்சனை இருந்து இருக்கிறதா என்பதை இப்போது அறிந்து கொண்டேன்.. ஆகவே மன்னியுங்கள்..
யாருடைய மனதாவது புண்பட்டு இருந்தால் அல்லாஹ்வுக்காக பொறுத்துக்கொள்ளுங்கள்.. நம்முடைய ஆள் அந்த வார்டுல ஜெய்க்க இல்லையே ன்னு ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு தானே அல்லாது தனிப்பட்டவருக்கு எழுதிய கருத்தாக நினைக்க வேண்டாம்.. இதையும் பிரிண்ட் எடுத்து காமிக்க முடிஞ்சா காமிங்க.. எரிகின்ற தீயில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள் ப்ளீஸ்..
இனிமேல் நூஹு அமானுல்லாஹ் வின் கருத்துக்களில் இந்த மாதிரி வாசகங்கள் இடம் பெறாது..irritating words வராது.
இதை தான் ஒரு தேசிய தலைவர் சொன்னாரோ வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று..
குசும்பு:
ஆல விடுங்கப்பா.. இனி தேர்தல் நியூஸ் முடிஞ்சி வரலாம் ன்னு முடிவு பண்ணி இருக்றேன்.. செம சந்தோஷம் சில பேருக்கு சிரிப்பு தான்..
42. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byOMER ANAS (DOHA QATAR)[26 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12217
அஸ்ஸலாமு அழைக்கும். அடியேன் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து பெரியோர்களையும், உனது போட்டி வேட்பாளரையும் சந்தித்து வந்தது அறிந்து பெருமை படுகிறேன்!!!
பெரியோர் உன்னை வாழ்த்த வரவில்லை என்றாலும், துஆ செய்வார்கள் மனதில்!!!. NSE மஹ்மூது காகா, நீங்கள் எண்ணுவது போல் தான் நகராட்சி நடக்கும்! நடக்கா நகராட்ச்சி, நடை பெற உறுப்பினர்கள் மற்றும் இன்றி, மக்களும் விட மாட்டார்கள். துஆ செய்யுங்கள்! உங்களை போன்றே நானும் குழப்ப வாதிகளை நினைக்கின்றேன்! ஆனாலும், அல்லாஹ்வின் மீது ஆணையாக நல்லாட்சி நடக்க துஆ செய்வோம்!!!
நான் சென்ற கமெண்ட்ஸ் ஒன்றில் கூறி இருதேன் , பரியவர்களை அழைத்து இருக்கலாம் என்று சொல்லி இருதேன்,
அன்பு சகோதரி அழகான முரை இல் அழைப்பு விடுத்தது இருந்து இருகிறார்கள் , ஆனால் யான்தான் இந்த பெரியவர்கள் இப்படி பிடிவாத மகா இருகிறார்களோ அல்லாஹுக்கு தான் வெளிச்சம்,
எங்களது அன்பு பெரியவர்களே நீகள் தான் எங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் , அந்த அறிவுரையில் தவறு இருப்பின் நாங்கள் யடுத்து காட்ட கூடாத, அப்படி காட்டியது தவறா ,
உங்களை வைத்து கருப்பு நிற ஆடுகள் ஊரை பங்கு போடா நினைத் ததை சொல்லியது தாவர,
அதில் இருந்து ஊரை மீட்க ஆபித என்ற சகோதரியை தேர்து எடுத்தது தவறா ,
இவ்வளவு பொறுமையாக இருக்கும் ஒரு பெண்மணியை நாம் வாழ்த்துவதில் தவறு இல்லை,
நம்மலுடைய ஊருக்கு பொருத்தமான தலைவி என்று சொல்லுவதில் எல்லோரும் சந்தோஷ படுகிறார்கள்
பேரவைஇல் உள்ள பெரியவர்களே,
தவறு செய்தவர்களை மன்னித்து விட்டு ஊரோடு ஒத்துழையுங்கள் , இன்னொரு பேரவை ஊருவகாமல் தடுத்து விடுங்கள் ,
இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ,
நாங்கள் வயதில் சிறியவர்கள், உங்கள் பிள்ளைகள் எங்களை மன்னிக்க உங்களுக்கு மனது வரவில்லைய ,
உங்களில் ஒளிந்து இருக்கும் கருப்பு நிற ஆடுகளை அகற்றி விடுங்கள் ,
ஊரை கூறு போடா நினைக்கும் அரசியல் ஆடுகளை நண்பாதீர்கள் ,
44. நல்ல பண்பாடு posted byMauroof (Dubai)[26 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12225
பதவியேற்பு விழாவிற்கு ஐக்கியப்பேரவை நிர்வாகிகள் மற்றும் பெரியோர்களை நகர்மன்றத்தலைவி சகோதரி ஆபிதா நேரில் சென்று அழைப்பு விடுத்தது இன்றைய தமிழக அரசியலில் காண முடியாத/மறக்கப்பட்ட ஒன்று.
நல்ல பண்பாடு, நல்ல நாகரீகம். இந்த நிகழ்வு நகர்மன்றத் தேர்தலில் ஏற்பட்ட மனக்காயங்களுக்கு ஓர் அரு மருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. பிளவுபட்ட இருதயங்களை ஒன்றிணைக்க அல்லாஹ் போதுமானவன்.
45. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byAhamed (Dubai)[26 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12226
Assalamu Alaikum.It shows the good beginning of our new era.We brush aside all our differences and give our support to the newly elected team to achieve our common goal of Kayal's growth.Also we work hard to set an example for other elected bodies in India
46. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[26 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12229
தனக்கு எதிராக நின்றவர்களையும் தனதுபதவி ஏற்ப்பு விழாவுக்கு அழைத்திருக்கும் ஆபிதா அவர்களின் பண்பு மெச்சத்தக்கது.
உள்ளபடியே இது ஒரு உயர்ந்த குணம். தமிழக அரசியல் களத்தில் இந்த உயர்பண்பாடு காணப்படவில்லை எனினும் வடஇந்தியாவில் இது சர்வசாதாரணம். அங்கு சோனியாவும் அத்வானியும் ஒரேமேடையில் தோன்றுவதை அடிக்கடி நாளிதழ்களில் காணலாம். நிதீஷ்குமாரும் லாலுவும் கட்டிப்பிடித்து போஸ் கொடுப்பார்கள். முலயாம்சிங்கும் மாயாவதியும் கைகுலுக்கிக்கொள்வார்கள்.
அத்தகைய உயரியபன்பாடு ஏனோ நம் தமிழகத்தில் செழித்து வளரவில்லை. அதன் நீட்சிதான் பேரவையினரின் இந்த புறக்கணிப்பு. முதலமைச்சர் பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தை காமராசர் தனது மந்திரிசபையில் சேர்த்துக்கொண்டு தனக்கு அடுத்த ஸ்தானத்தை அளித்தார்.
பெரவைனர் பதவி ஏற்பு விழாவுக்கு வந்திருந்தால் அவர்களின் கண்ணியம் இன்னும் உயர்ந்திருக்கும். நல்ல வாய்ப்பை அவர்கள் தவறவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.
47. Re:எதிரியை நேசி posted byMohamed Ali and Amanullah (Kuwait)[26 October 2011] IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 12232
அல்ஹம்துலில்லாஹ்
சஹோதரி ஆபிதா செய்திருக்கும் விசயம் மெய்சிலிர்க்க வைத்து விட்டது.
விழாவிற்கு அனைவர்களையும் அழைத்து அவருடைய பெருந்தன்மையை காட்டிவிட்டார்.
அனைவர்களையும் நேசிக்கும் விஷயம்
திரு குரானின் இறைவாக்கு
நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி
வள்ளுவனின் வாக்கு
முன்னோர்களின் கூற்று
இதன் படி நடந்து கொணடார், அவர்களுக்கு நன்றி
மற்றவர்கள் என்ன செய்ய போகிறார்கள் ?
v
இறைவனின் அருளால் யாவரும் ஒன்று கூட வேண்டும்
சேர்ந்து செயல்பட வேண்டும்.
48. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byhasbullah mackie (dubai)[26 October 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12263
ஐக்கியபெரவையால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் மிஸ்ரியா அவர்களின் திறந்த உள்ளம் வெளிப்படுகிறது எந்த ஒரு மனக்கசப்பில்ல்லாத தன்மை... அவரும் நம்ம சகோதரி தானே என்று நினைத்து வரவேற்பது....
இதைபோன்று அதில் உள்ள தலைவர்களும் நடந்து கொண்டதால் ஒன்றும் குறைந்து போக போவதில்லை.... இரண்டு பேருமே ஊருக்கு நன்மை செய்யத் தான் வந்திருப்பார்கள்...
ஆனால் மிஸ்ரியா அவர்கள் பதவி ஏற்பு நிகழ்வில் கலந்து கொண்டார்களா என்பது தெரியவில்லை....
இருந்தாலும் எந்த ஒரு வெறுப்பும் இல்லாமல் அவர்களிடம் அழைப்பு அட்டை கொடுத்த பெருந்தன்மை மிகவும் வரவேற்க வேண்டிய விஷயம்....
நபிகளின் குணமும் அதே தான்
நம்முடைய எதிர்வாதிகளுக்கும் உதவி செய்வது
முன்னாள் நகரமன்ற தலைவர்கள், ஊர் பெரியவர்கள் எல்லோரும் சிறிது காலம் சென்ற பிறகு உங்களை வாழ்த்துவார்கள் .ஆதரிப்பார்கள் என்பது தான் நிதர்சன உண்மை.....
இறைவனை உண்மையாக அஞ்சக்கூடியவர்கள்....
அவர்கள் உங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள்.....
நீங்கள் செய்யும் முயற்சிக்கு வெற்றி கிடைக்க எனது வாழ்த்துக்கள் மற்றும் துஆக்கள்....
ஹஜ்ஜு பெருநாள் முடிந்து ஒரு நல்ல ஒற்றுமையை எதிர் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் ......
49. மக்களின் வெற்றி தீர்ப்புக்கு பிறகு தனது தவறை உணர்ந்து தார்மீக உணர்வுடன் அழைப்பு. posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[26 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12267
அஸ்ஸலாமு அழைக்கும்.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நான் பதியும் இந்த கருத்து விவததிர்க்ககவோ அல்லது பழையதை நினைவூட்டவோ இல்லை. மாறாக பேரவையின் மௌனத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் ஆவலுடனும் தற்போதுள்ள தலைவி மற்றும் பேரவையின் தவறான காரணங்களும் சுட்டிக்காட்டி மீண்டும் நல்ல ஒரு நீதமான நேர்மையான மக்களுக்காக ஒரு புதிய துடிப்பான சுழற்சிமுறை கொண்ட அணைத்து ஜமாத்து மற்றும் பேரவையின் பொது குழு, ஆலோசனை குழு, மற்றும் செயற் குழு என்று மிகவும் வெளிப்படையான ஜாமாத் மற்றும் அமைப்பை உருவாக்கும் முயற்சி.
மேலும் தலைவி ஆபிதா ஷேக் அவர்களும் தன்னுடய தவறை புரிந்து அதன் காரணமாகத்தான் பேரவையின் பிடிவாதம் என்பதை புரிந்தும் தற்போதுள்ள அழைப்பு போன்று செயலிலும் பொறுமையுடனும் பாகுபாடு இல்லாத சேவை தரனும் என்ற அவா ஒருப்பக்கம்.
உண்மையில் இதுவரை நமது காயலுக்கு என்று அணைத்து ஐக்கியமான அமைப்பு என்றால் அது காயல் இஸ்லாமிய ஐக்கிய பேரவை மட்டும்தான் என்றால் அது மிகையாகாது. இனியும் மக்களின் எதிர்பார்ப்பும் அதுவே. தேர்தலின் வெற்றி தோல்வி என்பது நகர்மன்றதிர்க்கான தனிப்பட்ட ஆதரவே தவிர மற்ற எந்த பொதுவான காரியத்திற்காக அல்ல.
ஆகவே தற்போதுள்ள பேரவை கலைத்து மேலே குறிப்பிட்டது போல் புதிய நிர்வாகிகள் கொண்ட பேரவைதான் அணைத்து மக்களும் எதிர்பார்த்தவர்களாக இருக்கிறார்களே தவிர வேற புதிய அமைப்பை அல்ல எதுவரை என்றால் தற்போதுள்ள பேரவையின் நடவடிக்கைகள் மக்களின் எதிர்பார்ப்புக்கு அறவே செவிசாய்க்காத வரை.
தற்போதுள்ள தலைவி செய்த தவறு என்ன என்றால் பேரவை யாரையும் கட்டாய படுத்தி தலைமை பொறுப்புக்கு விண்ணபிக்க சொல்வில்லை, மேலும் அவரவர் விருப்பத்தின் அடிபடையில்தான் விருப்ப மனு கேட்டு ஒருவருக்கு மேல் போட்டி இடும்போது அவர்களில் தோல்வி உற்றவர் தார்மீக மனதுடன் தற்போது எவ்வாறு மக்களுக்காக பேரவை தலைவரை மதிகிரார்களோ அது போன்று வெற்றி பெரும் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தான் நியாயமான கோரிக்கை, ஒற்றுமையின் தூண் கூட.
ஆனால் அந்நாள் அதை நிராகரித்தேன் என்ற தலைவியின் அறிக்கை மற்றும் செயல் துரதிஸ்ட்டவசமானது. அதற்க்கு பிறகுதான் பேரவை நீதமான முறையில் ஜமாதுகளை ஆலோசிகாதது, வெளிபடையாக எதையும் செய்யாதது, மக்களின் கேள்விகளுக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் இன்று வரை மௌனம் சாதிப்பது எல்லாம்.
ஆகவே அன்பார்ந்த பேரவை பெரியோர்களே! தாங்கள் உண்மையில் மக்களுக்காக பொது தொண்டு மற்றும் ஒற்றுமையுடன் ஒரே ஐக்கிய அமைப்பு என்ற ஒட்டுமொத்த
அமைப்பு உருவாக்க, தனது தவறை திருத்தி பெருபான்மையான மக்களின் ஆதரவு கிடைத்து பெரியோர்களின் பேராதரவுடன் மக்கள் மன்றமாகிய நம் காயல் நகர் மன்றத்தை சிறப்பாக செயல்படுத்திட இருவர்களும் மக்களுக்காக தங்களின் ஈகோ, வறட்டு தன்மை, கருப்படுகளின் நயவஜகமான அறிஉறைகள் மற்றும் அணைத்து தவறுகளையும் மறந்து ஒத்துழைப்பு கொடுத்து புதிய காயலை உருவாக்குங்கள்.
மக்கள் தற்போது மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் தலைவியோ அல்லது யாரும் ஏமாற்றமுடியாது என்பதும் புரிந்து கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.
இவன்,
முகியதீன் அப்துல் காதிர்,
ஐக்கிய அரபு அமீரக பாராளுமன்றம்,
அபுதாபி.
52. பொருப்புள்ள நல்ல பிள்ளை...நீ..!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.)[27 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12318
சகோதரி! இப்பெரியோர்களை தாங்களே நேரில் சென்று அழைத்தது தங்களின் பக்குவத்தயும், பண்பையும், உணர்த்துகின்றது! உங்களின் இச்செயலால், அப்பெரியோர்களுக்கும், பொதுமக்களாகிய எங்களுக்கும், உங்கள் மீதுள்ள நம்பிக்கை இன்னும் ஒரு படி மேலே உயர்ந்திருக்கின்றது.
“இன்னா செய்தாரெ ஒருத்தல் அவர் நாண
நன்நயம் செது விடல்,”
-குறள் கூறும் பொருள் உணர்ந்து பொருப்போடு நடந்து கொண்ட நல்ல பிள்ளை நீ.
உன் பணி இனிதே சிறக்க வாழ்த்திக்கொண்டே இருப்போம். நீ எங்கள்(மக்கள்) மனதில் வாழும் வரை...!!!
53. ஆரோக்கியமானது அல்ல.... posted byN.S.E. மஹ்மூது (KAYALPATNAM)[27 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12342
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சகோதரர்களே!
நம்மில் பலரும் பெரியவர்களை மதிக்கிறோம் , மரியாதை செலுத்துகிறோம் அதை வரவேற்கிறேன்.
ஆனால் நம்மில் சிலர் கண்மூடித்தனமாக பெரியவர்களை குறை கூறுவதையே தொழிலாக கொண்டிருக்கின்றனர் அது ஏனோ ? தெரியவில்லை.
பெரியவர்கள் பதவி ஏற்புக்கு வந்தார்களா ? சகோதரி மிசிரியா வந்தார்களா ? இப்படி பல கேள்விகள் நம்மிடையே உருவாகிறது!.
முதலில் ஐக்கியப் பேரவைக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதா ? சகோதரி மிசிரியாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதா ? என்பதை நாம் அறியாதிருக்கும்போது எப்படி அவர்கள் பதவி ஏற்புக்கு வந்ததையும், வராததையும் பற்றி கருத்து கூற முடியும்.
எதையுமே இருபக்கமும் பார்க்க வேண்டும் ஒரு புறம் மட்டும் பார்த்து தீர்மானிக்க வேண்டாம்.
மேலும் செய்தியாளர்கள் அவசியமற்ற செய்திகளைப் போடுவதும் - வாசகர்கள் அவசியமற்ற கருத்துக்களை பதிவதும் ஆரோக்கியமானது அல்ல.
55. Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted bykatheeja (kayalpatnam)[28 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 12383
assalamu அழைக்கும்
சகோதரர் மஹ்மூத் காக்கா அவர்களே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதை தானே உங்களுக்கு போடோ பிடித்து காண்பிக்க பட்டு அதுக்கு கீழே தானே நீங்கள் கமெண்ட்ஸ் கொடுக்கிறீர்கள். பின்பு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதா என்று கேள்வி கேட்குரீர்கள் நீங்கள் கேட்ட கேள்வி புரியவில்லை....
பெரியவர்களை மதிக்கவில்லை என்றும் கண்மூடித்தனமாக குறை கூறுவதாகவும் ஒரு புதிய மாயயை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்படும் சில பிரித்தாள நினைக்கும் கூட்டத்தில் நீங்களும் சேர்ந்திருப்பது துரதிஷ்டம்தான்..
பேரவையின் செயல்பாடுகளை விமர்சித்தபோது ஊர் ஒற்றுமைக்கு கேடு விளைப்பதாக ஒரு தவறான கதை அரங்கேற்றப்பட்டு அது வெறும் கதை, மக்கள் மடையர்கள் இல்லை என்பதை முடிவு தெளிவாக்கியது.
இதையும் ஜீரனிக்க முடியாமல், புறநகர் வாக்குகளால் வெற்றி என திரும்ப திரும்ப எழுதி - மத்திய காயல் இல்லாத மத்த வார்டுகள் எல்லாம் புறநகர்தான் என்பதை சில ஒற்றுமைத்திலகங்கள் வலியுருத்தியதை நீஙகளும் கண்டு கொள்ளவில்லை..
இப்போது அதையும் தான்டி அகீதா அடிப்படையில் வாதங்கள் வருவதையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இல்லாத ஒரு மாயயை உருவாக்கும் முயற்சியும், வலைதளம் எதை பிரசுரிக்க வேண்டும் என்பதில் நிர்பந்திப்பது என்ன நடுநிலையோ..
பேரவையின் செயல்பாடுகள் விமரசனங்கள் செய்யப்பட்டதே தவிர எவரின் தனிநபர் செயல்பாடுகள் இல்லை.
அதுவும் தவறே இல்லை என்றும், குழப்பவாதிகள் என்றும் மொட்டை கடிதங்களாலும், நோட்டீஸ்களாலும் சீன்டி இல்லாதை பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லியதான் நிர்பந்தத்தால்.
அதே சூழலை மீண்டும் ஏற்படுத்தி குறை சொல்லவும் காரணம் இருக்கத்தான் செய்கிறது என காரணம் கண்டுபிடித்து எழுத தூண்டுவது போல உள்ளது உங்கள் முயற்சி.
தேர்தல் களத்திலும், துளிர் அரங்கில் நடந்த கூட்டத்திலும் அதன்பின் நடந்த பதவியேற்பு விழாவிலும் காணக்கிடைத்த பெரியவர்கள் பெரியவர்கள் இல்லையா - பேரவையில் அஙகம் வகித்தால்தான் பெரியவர்களா?
தேவையில்லாமல் காயல்பட்ணம்.காம் எதை செய்யவேண்டும் இல்லையென்றால்... என மூன்றாம் தர ஏக வசனங்களில் மிரட்டல் விடும் நபர்களை கண்டிக்க எங்கே போனது உங்கள் நடுநிலை.
இதிலும், அகீதாவை கொண்டு பிரிவினைக்கு பல முயற்சிகள் - அப்போதும் ஒற்றுமைக்காக குரல் கொடுப்பதாக சொன்னவர்கள் மவுனிகள் ஆனார்கள்.
(சிலதை அட்மின் கத்தரித்துவிட்டார் அவரிடம் நேரில் கேளுங்கள் அதன் பிரதிகளை தருவார்)
மொத்ததில், பேரவையை கண்மூடி ஈமான் கொன்டால்தான் நடுநிலை மற்றவர்கள் எல்லாம் குழப்பவாதிகள் - சந்தர்ப்பம் பாத்து காத்திருக்கும் கூட்டம் என்ற வர்ணனை.. இது போன்ற வெரும் வாதங்கள் புதிதா நமதூரில்.?
ஊரில் நடப்பதை உள்ளது உள்ளபடி தருவதால் மட்டுமே இந்த வலைதளம் இத்துனை வாசர்களை காணுகிறது - ஒருவேலை மிரட்டல்களுக்கும் உருட்டல்களுக்கும் அடிபனிந்து இவர்களும் மழுப்பத் துவங்கினால், உண்மையை சொல்லும் புதிய தளங்கள் அந்த இடத்தை நிரப்புவதை தவிர்க்க இயலாது.
அதில் அட்மினும் இருக்காது கத்திரியும் இருக்காது.
---------------------------------------------
யப்பா அட்மின்; விமர்சனம், விவாதம் என்று காரணம் சொல்லி கத்திரி போட்டுறாதீங்க.. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக முயற்சி செய்றாங்க ஒரு டீமா - அங்க போட்டிருக்கணும் உங்க கத்திரிய..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross