கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிதாவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நேரில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இன்று மதியம் 03.00 மணியளவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதாவை மகுதூம் தெருவிலுள்ள அவரது இல்லத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை தலைவர் ஷம்சுத்தீன், துணைத்தலைவர் சாளை முஹம்மத் அப்துல் காதிர் என்ற சாளப்பா மற்றும் கிளை நிர்வாகிகள் நேரில் சந்தித்து, திருக்குர்ஆன் தமிழாக்கத்தை அன்பளிப்பாக அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர், நகரின் அனைத்து ஜமாஅத்துகளையும் மதித்து, அவர்களின் நல்லாலோசனைகளைக் கேட்டு, அதனடிப்படையில் நகர்நலப் பணிகளாற்ற வேண்டுமென்றும். எந்தவொரு தனி நபரையோ, தனியொரு அமைப்பையொ கண்ணை மூடிக்கொண்டு சார்ந்திராமல், வெளிப்படையாக நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும், அப்படி செயல்படும் வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை அதற்குத் துணை நிற்கும் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
படம்:
Y.M.முஹம்மத் தம்பி,
ஏ.கே.எம்.ஜுவல்லர்ஸ்,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை,
காயல்பட்டினம். |