காயல்பட்டின நகர்மன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இது குறித்து காவா லங்கா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
புதிய நகர சபை தலைவி அவர்களுக்கும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும். இலங்கை - காயல் நலன்புரி சங்கத்தின் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களுடைய பணி நேர்மையாகவும், அப்பழுக்கற்றதாகவும் ஊரின் நலனை முன்னிறுத்தி செய்யப்படுவதாகவும் இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் உங்களுடைய நல்லதிட்டங்களை கணணி மயமாக்கி காலத்தோடு இணைந்து – விரைந்து செயல்படுவதும் மிகவும் சிறப்பாக இருக்குமென தெரிவித்துக் கொள்கிறோம்.
1. ஊர் மக்களின் அதிர்ப்தி எண்ணிக்கையை பாருங்கள்...! ரெம்பவும் கவலை அளிக்கிறது...! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[22 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 11805
காவா லங்கா அமைபிற்கு மிகவும் ஒரு பணிவான வேண்டுகோள்...
பெறுனர்..
சமூக ஆர்வலர் ஜனாப். எம்.எஸ்.ஷாஜஹான், தலைவர் காவா லங்கா. அஸ்ஸலாமு அழைக்கும்..
ஊர் ஒற்றுமையை கருத்தில் கொண்டு ஊரில் இயங்கி வரும் ஐக்கிய பேரவையை சீர்திருத்தி ஊர் மக்களின் நல் ஆதரவை பெரும் ஐக்கிய பேரவையாக விளங்க வழி செய்ய உங்கள் கோரிக்கையை ஐக்கிய பேரவைக்கு ஸ்ரீ லங்காவிலே சீரிய முறையில் விளங்கும் காவா லங்கா சார்பாக ஐக்கிய பேரவைக்கு கருத்து பதிவு செய்யுங்கள்...
காரணம் இதோ:- 12,500 க்கும் மேல் நகரமன்ற தேர்தலில் ஐக்கிய பேரவையை எதிர்த்து வாக்கு அளித்து இருக்கிறார்கள்...! பேரவைக்கு உள்ள ஆதரவு வெறும் 5,500 மட்டுமே....! !
ஊர் மக்களின் அதிர்ப்தி எண்ணிக்கையை பாருங்கள்...! ரெம்பவும் கவலை அளிக்கிறது... இப்படி மோசமான சூழ்நிலையில் ஐக்கிய பேரவை போய் கொண்டு இருக்கிறது..! நடுநிலைவாதிகளை முகம் சுளிக்க வைக்கிறது.. இதை சரி செய்வது காவா லங்கா உங்களை போல் உள்ள எல்லா அமைப்புக்கும் ஊர் அமைதி மீது கடமை உண்டு என்பதனை தயவு செய்து மறந்து விட வேண்டாம்....!
ஊர் அமைதியே முக்கியம்..! பேரவைக்குள் இருக்கும் தனி நபர்கள் அல்ல...!
2. சும்மா இருக்கிற ஆட்களை சுரைந்து விடாதீர்.... posted byzubair (riyadh)[22 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11827
அஸ்ஸலாமு அலைக்கும். நண்பர் முத்து இஸ்மாயில் அவர்களே.......... சும்மா இருக்கிற ஆட்களை சுரைந்து விடாதீர்கள். ஒற்றுமைக்கு வேண்டி மாற்றுகருத்து நண்பர்கள் (எழுத கருத்துக்கள் பல இருந்தும்) அனைவரும் மௌனம் காக்கும் இந்த நேரத்தில் தேவை இல்லாததை பதிவு செய்து வீண் தர்க்கம்களை உண்டு பண்ணாதீர்கள்.
தாங்கள் விரும்புவது தேவைப்பட்டால் நம் பெரியவர்கள், முக்கியஸ்தர்கள், ஒட்டு மொத்த முஹல்லாக்கள் செய்துக்கொள்வார்கள். வஸ்ஸலாம்.
4. Re:நகர்மன்ற தலைவர் மற்றும் உ... posted byAbdulKader (Abu Dhabi)[23 October 2011] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11891
அஸ்ஸலாமு அழைக்கும்....
ஜுபைர் காக்கா.... இதுபோன்ற கருத்துக்களெல்லாம் அட்மின் அவர்களுக்கு ஒரு "விவாதத்தை" உண்டாக்கும் கருத்தாக புரியாது! அதை தள்ளுபடி செய்யமாட்டார். (என்னுடைய்ய இந்த கருத்தை வேண்டுமானால் தள்ளுபடி செய்யலாம் / குறைக்கலாம்) காரணம்.... உங்களை போன்றவர்களுக்கு ஊரின் ஒற்றுமை முக்கியம். இந்த வலையதலத்தவருக்கு.... செய்தி (உண்மை என்ற பெயரில் "பித்னா") முக்கியம்.
5. காகாமார்களே இனிவேனமே கருத்து மோதல் .......... கருத்து posted byNilofar (kayal)[23 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 11925
கருத்துக்களால் மோதி மோதி என்ன பயன்கண்டது நம்காயல் சொல்லுகளேன் .ஊரே பிளவுபட்டு கிடக்கிறதுன்னு நம் ஊரள்ளதவர்கள் தப்பா நினைக்க மாட்டார்களா.தயவு செய்து நம் ஊரின் நன்மைக்காக என்னபண்ணல்லாம் ,எது பண்ணலாம்னு ஆரோகியமான கருத்துகளை பரிமாரி கொள்ளலாமே .இது அனைவர்க்கும் நன்மையை தருமே.
..
6. Re:நகர்மன்ற தலைவர் மற்றும் உ... posted byM.Fauz (AlAin UAE)[23 October 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11963
அஸ்ஸலாமு அலைக்கும்.
குளிர் பிரதேசத்தில் வாழும் பறவைகள் சூடான பிரதேசத்துக்கு வருவதில்லையா? அதுபோல் தூரத்து பறவைகளாகிய நாங்களும் ஊருக்கு வருவோம். அதனால் பிரச்சனைகளை துறப்போம்., ச(க) திகளை துறந்து, ஊர் நன்மைக்காக பாடு படுவோம்.
கவா லங்கா, பக்வா, மற்றும் உலகத்திலுள்ள அனைத்து காயலர்களுக்கும் என் சலாம். வாழ்க, வளர்க நம் சகோதர பாசம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross