நடைபெற்று முடிந்த காயல்பட்டின நகர்மன்றதிற்கான தேர்தலின் முடிவுகளை கொண்டாடும் முகமாக நேற்றிரவு (அக்டோபர் 21)- துபாய் வாழ் காயலர்கள் - முதீனா பகுதியில் அமைந்திருக்கும் மகாராஜா உணவு விடுதியில் ஒன்று கூடினர்.
இதற்கான ஏற்பாடுகளை அமீரக காயல் நல மன்றத்தின் துணை தலைவரும், MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சாளை ஷேக் ஸலீம் செய்திருந்தார். 20க்கும் மேற்பட்ட காயலர்கள் இதில் கலந்துக்கொண்டனர்.
நகர்மன்ற தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆபிதா ஷேக் மற்றும் தேர்வு செய்யப்பட்டுள்ள 18 நகர்மன்ற உறுப்பினர்களுக்கும், கூடியோர் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆபிதா தலைமையில் இயங்க இருக்கும் நகராட்சி மன்றத்தின்
நிர்வாகத்திற்கு அனைத்து கவுன்சிலர்களும் தங்களின் மேலான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புகளையும் வழங்குவதோடு, நகராட்சியில் நல்லாட்சி
நிலைத்திட அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும என்ற ஒருமித்த கருத்து பதிவு செய்யப்பட்டது.
தற்போது காயல்பட்டினத்தில் நிலவி வரும் சூழ்நிலைகள், எதிர்காலத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட எடுக்க வேண்டிய செயல் திட்டங்கள்,
தடுக்கப்பட வேண்டிய தவறுகள் உட்பட ஊரின் ஒற்றுமைக்கு இளைய தலைமுறையினர் ஆற்ற வேண்டிய கடைமைகள் மற்றும் பெரியோர்களிடம்
இருந்திருக்க வேண்டிய பரந்த மனப்பான்மை போன்ற பல கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
MEGA போன்று ஓர் அமைப்பை மீண்டும்
துவக்கி, ஊரில் இயங்கி வரும் ஐக்கிய பேரவையை புதிய பரிணாம வளர்ச்சிபாதையில் கொண்டு செல்ல வேண்டும என்றும் விவாதிக்கப்பட்டது.
தகவல் / புகைப்படங்கள்:
ஆசாத், அமீரகம்.
|