சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 61ஆவது செயற்குழு அமர்வு,
14.10.2011 வௌ;ளிக்கிழமை மாலையில், மன்றத்தின் தலைவர் சகோ. குளம் அஹமது மெய்தீன் அவர்கள் இல்லத்தில் நடந்தேறியது. கூட்டத்திற்கு சகோ.எஸ்.எச். ஹீமாயுன் கபீர் அவர்கள் தலைமை தாங்க, சகோ.ஹாபிழ் சேக் ஆலம் இறைமறை ஓத, கூட்டம் ஆரம்பமானது. கூட்டத்தின் தலைவர் நல்லபல கருத்துகளை உறுப்பினர்களுக்கு அறிவுரையாக தர, தொடர்ந்து வரவேற்புறையை சகோ. குளம் அஹமது மெய்தீன அவர்கள் நிகழ்த்தி நிறைவு செய்ய, நிதி நிலை அறிக்கையை சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம் தற்போதைய இருப்பு, வரவேண்டிய சந்தா, பற்றி துல்லியமாக பட்டியலிட்டார்.
மன்றசெயல்பாடுகள்:
மன்ற செயல்பாடுகளையும், ஊர் சென்றிருந்த போது மன்றம் சார்பாக ஊரில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விபரத்தையும், புற்றுநோய் மருத்துவ நிபுணர் சாந்தா அவர்கள் நம் காயல்மா நகருக்கு வந்து சிறப்பித்த நிகழ்வுகளையும் அழகுர எடுத்துரைத்தார் ஊர் சென்று திரும்பிய மன்ற செயலர் சகோ. எம்.ஏ.செய்யத் இப்றாஹிம் அவர்கள்.
மருத்துவ உதவிகள்:
இம்மன்றத்திற்கு மருத்துவ உதவிகேட்டு வந்திருந்த விண்ணப்பங்களை மன்ற உறுப்பினர்கள் வாசித்தனர் அந்த விண்ணப்பங்களை மருத்துவர். ஜியாத் அவர்களின் பரிந்துரையின்படி அதிமுக்கியமானவைகள் மட்டும் ஏற்கப்பட்டு புற்று நோயால் அவதியுரும் ஒருவருக்கும், ஹிமோபீலியா(இரத்த உறையாமை) பிரச்சனையால் பாதிக்கப்பட்டவருக்கும், கிட்னியில் கல் இருக்கும் ஒருவருக்கும், கணையத்தில் கல் ஏற்பட்டு அவதியுருவருக்கும். பித்தப்பையில் கல் நோயால் அவதியுறும் ஒருவர் மற்றும் பிட்ஸ்(வலிப்பு) நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் என ஆக மொத்தம் ஆறுபேருக்கு மருத்துவ உதவி வழங்க இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்படடு அறிவிக்கப்பட்டது.
தீர்மானங்கள்:
கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக தீட்டப்பட்டது.
1. ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 26வது பொதுக்குழு கூட்டம் 2011, இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 9ஆம் தேதி வெள்ளி மாலை 05:00 மணியளவில் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது, அதன் விபரங்களை விரைவில் உறுப்பினர்களுக்கு தரப்படும். கூட்ட ஏற்பாடுகளை செய்வதற்காக சகோ.ஹூமாயுன் கபீர் அவர்களும், சகோ.எஸ்.எஸ்.ஜெஃபர் சாதிக் அவர்களும்; பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
2. அண்மையில் நடைபெற்ற புற்று நோய் சம்பந்தமான பெரும் நிகழ்வில் தமிழகத்தின் புற்று நோய் துறையில் அரசாங்கத்தின் பல விருதுகளையும் பெற்ற, பிரபல புற்று நோய் நிபுணரும் சென்னை அடையார் புற்றுநோய் மையத்தின் தலைவருமான மருத்துவர் வி.சாந்தா அவர்கள்;, அவர்களின் மிகுந்த பணிக்கு இடையில் நேரம் ஒதுக்கி நமதூருக்கு வந்து மேலான ஆலோசனைகளை தந்தமைக்காக அவர்களுக்கு இம்மன்றம் மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கின்றது. அந்த கூட்டம் சிறப்பாக நடத்தேற மிகுந்த ஆர்வம் காட்டி ஆலோசனை வழங்கிய சென்னை சகோ.எல்.கே.எஸ். செய்யத் அஹ்மத் அவர்களுக்கும், கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகிகளுக்கும் மேலும் அந்த அமர்வுக்கான ஏற்பாட்டை சிறப்புற செய்த அத்துனை நலமன்றங்களுக்கும், அதற்காக ஒத்துழைத்த அத்தனை சகோதர அன்பர்களுக்கும் மேலான நன்றியினையும், துஆவையும் மன்றம் பதிவுசெய்கின்றது.
இறுதியாக சகோ.சொளுக்கு செய்யத் முஹம்மத் சாஹிப் நன்றியுரையை நவில, பின் சகோ.பிரபு. நூர்தீன் நெய்னா ‘துஆ’ பிராத்தனையுடன் அன்றைய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தது, அல்ஹம்து லில்லாஹ்.
தகவல்:
எஸ்.ஹெச். அப்துல் காதர்,
துணை செயலாளர்,
காயல் நல மன்றம், ஜித்தா.
|