அண்மையில் காலமான காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் தலைவர் மர்ஹூம் ஹாஜி சி.லெ.ஷாஹுல் ஹமீத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்ற செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அமீரக காயல் நல மன்றத்தின் அக்டோபர் மாத மாதந்திர செயற்குழுf; கூட்டம் 14/10/2011 வெள்ளிக்கிழமை மாலையில், மன்றத் தலைவர் ஜனாப் JSA புஹாரி அவர்கள் இல்லத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு அல்ஹாஜ் விளக்கு ஷேக் தாவூத் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்தார்கள். ஜனாப் ஈசா ஹுசைன் அவர்கள் கிராஅத்துடன் கூட்டம் ஆராம்பமாகியது.
இந்த கூட்டம் குறிப்பாக எதிர்வரும் மன்றத்தின் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் பற்றி விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் ஊர் நலன்கள் பற்றிய நல்ல பல கருத்துக்கள் பரிமாறப்பட்டு, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - இரங்கல் தீர்மானம்:
காயல்பட்டிணம் கொடை வள்ளல்கள் லெப்பப்பா சகோதர்களின் பேரரும், நமது மன்றத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் காயல் ஷேக் காக்கா அவர்களது அன்புத் தந்தையும், நமது மன்ற உறுப்பினர் ஹமீது அவர்களின் பாட்டனாரும் சமூக ஊழியருமான சி.லெ.ஷாஹுல் ஹமீது ஹாஜியார் மற்றும்
மர்ஹூம் இப்ராஹிம் சார் அவர்களின் மகன் வழி பேரனும், நமது மன்ற உறுப்பினர் ஜனாப் குளம் முஹம்மத் தம்பி அவர்களின் இளைய புதல்வர் ஹாமித் ஆகியோரின் வபாஃத் செய்தி அறிந்து இம்மன்றம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னவர்களின் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் 'சபூர்' எனும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.
தீர்மானம் 2 - நவ.25இல் பொதுக்குழு:
மன்றத்தின் பொதுக்குழு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று துபை அல் சத்வா வின் அமைந்துள்ள அல் சஃபா பார்க்கில் வைத்து நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - பொதுக்குழுக் கூட்ட ஏற்பாட்டுக் குழு:
இந்த மாபெரும் கூட்டத்திற்கு சுமார் 350 பேர்கள் (ஆண்கள் / பெண்கள்) வரலாம் என்று எதிர்பார்க்க படுவதாகவும், இதற்க்கான எல்லாவித ஏற்பாடுகளை கையாள்வதற்கு ஜனாப் துணி உமர் ஹாஜியார் தலைமையில் பல குழுக்கள் அமைக்கபெற்று செயல்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்
துணைத்தலைவர்,
காயல் நல மன்றம்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |