அக்டோபர் 17 மற்றும் அக்டோபர் 19 அன்று தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்றன. காயல்பட்டின நகர்மன்றதிற்கான தேர்தல்கள்
அக்டோபர் 17 அன்று நடைபெற்றன. அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (அக்டோபர் 21) நடைபெறவுள்ளது. நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
காயல்பட்டினம் நகராட்சி, திருச்செந்தூர் பேரூராட்சி, ஆத்தூர் பேரூராட்சி, கானம் பேரூராட்சி பகுதிகளில் பதிவான வாக்குகள் -
வீரப்பாண்டியப்பட்டினத்தில் உள்ள புனித தோமையார் மேல்நிலைபள்ளியில் - எண்ணப்படுகின்றன. உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை வெளியிட
காயல்பட்டணம்.காம் ஏற்பாடுகள் செய்துள்ளது.
2. Re:நகர்மன்ற தேர்தல்! நாளை (அ... posted byAbdulKader (Abu Dhabi)[21 October 2011] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11436
அஸ்ஸலாமு அழைக்கும்...
அல்லாஹ்வின் நாட்டப்படி யார் வெற்றி பெற்றாலும், "ஊரின் ஒற்றுமையை" இனி வரும் காலங்களின் நன்மையை கருத்தில் கொண்டு, நாம் எல்லோரும் ஒரே அணியில் நின்று அவர்களின் வெற்றியினை வரவேற்போமாக.
வீணான சர்ச்சையில் நம்மை நாம் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டாம் என்று நம் ஊரின் அனைத்து மக்களையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
3. ஒற்றுமைதான் முக்கியம் posted byN.S.E. மஹ்மூது (KAYALPATNAM)[21 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 11439
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அன்பான சகோதரர்களே!
நாம் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கக் கூடிய தேர்தல் முடிவு இன்ஷா அல்லாஹ்! இன்று வெளிவரும்.
இன்று வெற்றிப் பெறப்போகிறது ஊர் ஒற்றுமைதான் முக்கியம் என்று எண்ணி ஓட்டளித்த அனைத்து ஜமாஆத்'களின் பொது வேட்பாளராக அறிமுகமாகிய சகோதரி மைமூனத்துல் மிஸ்ரியா அவர்களா ?
அல்லது நகர்மன்றத்திலே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி காட்ட வேண்டும் என்று எண்ணி ஓட்டளித்த மக்கள் வேட்பாளர் என்று அறிமுகமாகிய சகோதரி ஆபிதா அவர்களா ? யார் வெற்றிப் பெறப்போகிறார் என்பதை நம் மக்கள் அனைவரும் எதிர் நோக்கி இருக்கிறார்கள்.
யார் வெற்றிப்பெற்றாலும் இன்ஷா அல்லாஹ்! இன்னும் ஐந்து ஆண்டுகள் அவர்கள்தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் - அது நாம் ஓட்டளித்து வெற்றிப் பெற்றவரா ? அல்லது மற்றவரா ? என்பது அல்ல முக்கியம்.
யார் ஜனநாயகப்படி வெற்றிப் பெற்று பொறுப்புக்கு வந்து விட்டாரோ அவருக்கு மதிப்புக் கொடுத்து , அவருடைய நேர்மையான சேவைக்கு இசைந்து நடந்து , ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவர் மீதும் தார்மீக கடமையாகும்.
மார்க்கத்தை மதிக்கவில்லை - ஊரின் பண்பை பார்க்கவில்லை - இறைவனின் அச்சமே அவர்களிடம் காணப்படவில்லை என்றே தோண்டிற்று.
இதிலே சகோதரி மிஸ்ரியாவோ அல்லது சகோதரி ஆபிதாவோ ஈடுபட்டிருப்பார்களா ? என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம்.
மேலும் இந்த செயல்களுக்கு நம்முடைய பெரியவர்களின் ஈடுபாடுகள் உண்டா என்றால் நிச்சயமாக இருபக்கமும் இருக்காது.
அரசியலே இந்த உள்ளாட்சித் தேர்தலில் இருக்கக்கூடாது என்று நம்மவர்கள் விரும்பி அதன்படி அரசியல் கட்சிகள் இல்லாத வேட்பாளர்களை போட்டியிட வைத்திருந்தும் - சில மூன்றாம் தர அரசியல் வாதிகள் இருபுறமும் புகுந்து - நம்மவர்களில் உள்ள கள்ளம் கபடமற்ற வெகுளியானவர்களையும் , ஆர்வக்கோளார் உள்ளவர்களையும் பல வகையிலும் ஈடுபட வைத்து இந்த தரம் கெட்ட செயல்களை செய்ய தூண்டினார்கள் என்பதே உண்மை.
ஆகவே நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும் - இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும் என்ற எண்ணத்தோடு இன்று தேர்ந்தெடுக்கப்படுகிற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நம் ஊரின் மக்கள் அனைவரும் கசப்புகள், வேறுபாடுகள் , பாகுபாடுகள் அனைத்தையும் மறந்து நேர்மையான செயல்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து நமது நகர்மன்றத்தை சிறப்புடன் இயங்க செய்து ஒரு முன் மாதிரி நகர்மன்றமாக அமைத்துக் காட்டுவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நேர்மையான தலைவரையும் , உறுப்பினர்களையும் தேர்வு பெறச்செய்து நம் மக்கள் என்றும் சுபிட்சமாக வாழ கிருபை செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross