தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட அளவில், தூத்துக்குடி நகரில் 11.10.2011 அன்று நடைபெற்ற தடகளப் போட்டிகளில், பி.எஸ்.மஹ்மூத் அப்துல் காதிர் என்பவரின் மகளும், எமது எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 08ஆம் வகுப்பு மாணவியுமான பி.எம்.ஏ.ஸாரா, உயரம் தாண்டும் போட்டியில் முதலிடத்தையும், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் மூன்றாமிடமும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
சாதனை மாணவியை பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். |