காயல்பட்டின நகர்மன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இது குறித்து தாய்லாந்து காயல்பட்டணம் நகர்நலமன்ற சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நகர்மன்ற தலைவியாக வெற்றி பெற்ற சகோதரி ஐ.ஆபிதாவுக்கும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கும், வெற்றிக்கு முனைந்த அனைவருக்கும் தாய்லாந்து காயல்பட்டணம் நகர்நலமன்ற அனைத்து உறுப்பினர்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை உணர்ந்து நகர்மன்றத்தின் மூலம் நிறைவேற்றிடவும், ஊர் பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு வெற்றிகரமான ஒரு முன்மாதிரியான நகராட்சியாக நடத்திட வேண்டுமெனவும் கேட்டுகொள்கிறது.
வானின்றிழியும் மழை எவ்விதப் பேதமும் இன்றி எல்லோருக்கும் பொதுவானதோ அதுபோல கொள்கை, பகுதி என்ற பேதமின்றி ஒன்றுபட்ட ஒரு உயர்வான காயலை உண்டாக்குவோமாக, ஆமீன். இன்ஷா அல்லாஹ்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |