காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா நிறுவனத்தில், ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் 146ஆவது நினைவு தின நிகழ்ச்சிகள் 13.10.2011 அன்று துவங்கி, 19.10.2011 வரை நடைபெறுகிறது.
இந்நாட்களில் தினமும் இரவு 08.15 மணி முதல் 09.15 மணி வரை, மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
13.10.2011 அன்று, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ, ஷாதுலிய்யா தரீக்காவின் மகிமை என்ற தலைப்பிலும்,
ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மளாஹிரீ ஃபாழில் தேவ்பந்தீ, ‘அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திப்பதும் வணக்கமே!‘ என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
14.10.2011 அன்று, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ‘இறைவழி நடந்த ஷெய்குமார்கள்‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
15.10.2011 அன்று, ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, ‘தஃப்ஸீர் செய்வதற்குத் தகுதிகள்‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
16.10.2011 அன்று, ஜாவியா அரபிக்கல்லூரியின் அல்மக்தபத்துர் ராஸிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.எஸ்.மாமுனா லெப்பை காஷிஃபீ, ‘திருக்குர்ஆனை மனனம் செய்வதின் மகிமை‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
17.10.2011 அன்று, ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ ஃபாழில் தேவ்பந்தீ, ‘ஷரீஅத்தும், தரீக்கத்தும்‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
18.10.2011 அன்று, கலீஃபத்துஷ் ஷாதுலீ மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எச்.முஹம்மத் கல்ஜீ ஃபாஸீ, ‘ஷாதுலிய்யா தரீக்காவும், ஸலவாத்தும்‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இறுதி நாள் நிகழ்ச்சிகள் நேற்று (19.10.2011) காலை 09.00 மணிக்குத் துவங்கியது. தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான கலீஃபத்துஷ் ஷாதுலீ மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். பின்னர், கல்லூரி மாணவர்களின் உரைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து, கலீஃபத்துல் குலஃபாயிஷ் ஷாதுலீ மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ, ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் அப்துல் காதிர் ஃபாஸீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நேற்று கந்தூரி தினத்தை முன்னிட்டு, காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் வழீஃபா திக்ர் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்குர்ஆன் ஓதப்பட்டு, காலை 07.00 மணிக்கு தமாம் செய்யப்பட்டது. அன்று மாலை 04.15 மணிக்கு மனாக்கிப் ஷரீஃப் (மவ்லித்) ஓதப்பட்டது.
மஃரிப் தொழுகைக்குப் பின் வழீஃபா யாக்கூத்திய்யா எனும் ஸலவாத் ஓதப்பட்டது. இஷா தொழுகைக்குப் பின், திக்ர் ஹல்கா நடைபெற்றது.
பின்னர், “ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் சரித்திரம்” என்ற தலைப்பில் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ உரையாற்றினார். இரவு 09.15 மணிக்கு நேர்ச்சை வினியோகிக்கப்பட்டு, துஆ ஜலாலாவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
தினமும் இரவில் நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் அனைத்தும் ஜாவியா வலைதளத்தின் நேரலை பக்கத்தில் கேட்க அந்நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. |