செய்தி எண் (ID #) 7392 | | |
செவ்வாய், அக்டோபர் 18, 2011 |
YUF செயலாளர் அறிக்கைக்கு காக்கும் கரங்கள் விரிவான விளக்கம்! |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 6473 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (52) <> கருத்து பதிவு செய்ய |
|
அக்டோபர் 14 - வெள்ளியன்று - காக்கும் கரங்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்து பொதுக்கூட்டத்தில் அழைப்பின் பேரில் பேச வந்த தான் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.
அதற்கு பதில் ஒன்று காக்கும் கரங்கள் அமைப்பு சார்பாக வெளியிடபப்ட்டுள்ளது:
அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த 14\10\2011 அன்று வள்ளல் சீதக்காதி திடலில் நடைப்பெற்ற காக்கும் கரங்களின் நகராட்சி தேர்தல் விழிப்புணர்வு பொதுக் கூட்டத்தில் YUF செயலர் கவிஞ்ர் அல்ஹாஜ் SAK.முஹியத்தீன் அப்துல் காதர் காக்கா அவர்கள் அவமதிக்கப்பட்டதாக வந்த செய்தியை பார்த்து மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
அங்கே நடந்தது என்னவென்றால், கூட்ட நோட்டிஸ் அச்சடிக்கப்பட்ட பிறகு YUF செயலர் கவிஞ்ர் அல்ஹாஜ் SAK.முஹியத்தீன் அப்துல் காதர்
காக்கா அவர்களை சந்தித்த நான் கூட்டம் நடக்கும் செய்தியை தெரிவித்தேன்.அதில் நீங்கள் மூன்று நிமிடம் பேசுங்கள்.என்றும் ஆறரை மணிக்கு கூட்டம் ஆரம்பிக்கும், கிராஅத், வரவேற்புரைக்கு அடுத்து நீங்கள் பேசவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் கூட்டம்
ஆரம்பிப்பதற்கு ஏழு மணியாகிவிட்டது.
இதற்கிடையில் மரணமடைந்த ஜலாலியா நிக்காஹ் மஜ்லிசின் தலைவர் அவர்களின் நல்லடக்கம் இரவு 9.30 மணிக்கு நடைபெற இருந்தது.கூட்டம் துவங்குவதற்கு முன்பும் நான் YUF இல் இருந்த மைதீன் காக்காவிற்கு போன் செய்து கூட்டம் ஆரம்பிக்கப்போகுது, சீக்கிரம் வாருங்கள் என்ற தகவலும் சொல்லி இருக்கிறேன்.
ஏழு மணிக்கு துவங்கிய கூட்டம் கிராஅத், வரவேற்புரைக்கு அடுத்தும் மைதீன் காக்கா அவர்கள் வரவில்லை. அதனால் தலைவருக்கான வேட்பாளர் தேர்தலில் அனைத்து ஜமாஅத்தையும், பொதுநல அமைப்புகளையும் ஒருங்கிணைத்த காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இருவரில் ஒருவரான மரியாதைக்குரிய காயல் அமானுல்லாஹ் காக்கா அவர்களைப் பேச சொன்னேன். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதும் மைதீன் காக்கா அவர்கள் வரவில்லை.
அடுத்ததாக முஸ்லிம் லீக் மாநில பொது செயலாளர் KAM அபுபக்கர் அவர்கள் பேசிகொண்டிருக்கும் போது தேர்தல் பொறுப்பாளர்களான மரியாதைக்குரிய காயல் அமானுல்லாஹ் காக்கா, அப்துர்ரஷீத்(அவ்லியா) ஆகியோரிடம் மைதீன் காக்கவிடம் பேச வர சொல்லி இருந்தேன், இதுவரை வரக் காணோம். நமக்கு நேரம் வேற இல்லை. அதனால் மைதீன் காக்காவை எப்படியாவது சமாளிக்கவும். நீங்கள் சொன்னால் கண்டிப்பாக கேட்பார்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவர்கள் வந்தும் விட்டார்கள்.
வந்ததும் அவர்கள் நிலைமையை சொல்லி இருக்கிறார்கள். அதற்கு மைதீன் காக்கா அவர்கள் கோபப்பட்டு சென்றுவிட்டார்கள். அதற்கு பிறகு அவர்களை உவைஸ் ஹாஜியார் அவர்கள் கூப்பிடுவதாக சொன்னவுடன் வந்தார்கள். அவர்களிடம் நிலைமையை சொல்லி தயவு செய்து மூன்று நிமிடம் மட்டும் பேசவும் என்று சொல்லி அனுப்பினோம்.
மேடைக்கு சென்ற அவர்கள் ஐந்து நிமிடங்கள் தாண்டியும் பேச்சை முடிவுக்கு கொண்டு வரவில்லை. அப்போது நான் அவர்களின் காலை சுரண்டினேன். இருந்தும் நிப்பாட்டாமல் "அந்த மேடைக்கு" சம்பந்தம் இல்லாத்த விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அமானுல்லாஹ் காக்கா அவர்கள் மேடைக்கு அருகே கீழே இருந்து (அவர்களுக்கு மட்டும் தான் விளங்கி இருக்கும்) மைதீன் அப்துல் காதர் நேரம் இல்லை, சீக்கிரம் முடி என்று தான் சொன்னார்கள்.
சுமார் பத்து நிமிடங்கள் பேசிய பிறகு, என்னை பேச அழைத்தால் பேசவிடுங்கள், இல்லைஎன்றால் கூப்பிடாதீர்கள் என்று சொல்லி கோபமாக மேடையை விட்டும் இறங்கி சென்று விட்டார்கள், அறிக்கையும் கொடுத்துவிட்டார்கள். இதில் காக்கும் கரங்கள் என்ன தவறு செய்தது?
அந்த அறிக்கையை படித்த அடுத்த நாள் நான் YUF சென்று மைதீன் காக்காவை சந்தித்து நாங்கள் என்ன தவறு செய்தோம்? என்று கேட்டேன். காக்கும் கரங்களோடு எனக்கு எந்த விதமான கோபமும் இல்லை. நான் விரும்பும் அமைப்புகளில் காக்கும் கரங்கள் சேவை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னால் உங்களுடைய பேருக்கு களங்கம் வந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமோ சொல், நான் செய்கிறேன் என்று வருத்தத்துடன் சொன்னார்கள். அதற்கு நான் சொன்னேன், நான் எத்தனை அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்தாலும் என்னுடைய முதல் அமைப்பு, தாய் அமைப்பு YUF தான், காக்கும் கரங்களின் தீவிர ஆதரவாளராகவும், ஆலோசகராகவும் நீங்கள் இருக்கிறீர்கள். நம்முடைய ஜமாஅத்தை சார்ந்தவர்கள் மட்டும் அல்லாது மற்றவர்களும் தவறாக நினைக்கிறார்கள். ஆதலால் நீங்கள் அதற்கு விளக்க அறிக்கை மட்டும் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு, நடந்த சம்பவம் எங்களால் உங்களை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
காக்கும் கரங்கள் என்றைக்கும் யாரையும் மனது நோகும் படி செய்யாது. தவறு என்பது எல்லா மனிதருக்கும் ஏற்படுகிற ஒன்று. காக்கும் கரங்கள் ஊருக்கும்,நாட்டுக்கும் நன்மை செய்யக்கூடிய நபர்கள், பொதுநல அமைப்புகள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஆதரிப்போம். ஊருக்கும், நாட்டுக்கும் தீமையான காரியங்களில் யார் ஈடுபட்டாலும் மிகக் கடுமையாக எதிர்ப்போம்.
அல்லாஹ் மிகப் பெரியவன். அவனே எல்லாம் அறியக் கூடியவனாக இருக்கிறான். நன்றி. அஸ்ஸலாமு அலைக்கும்.
இவண்,
MAK ஜெயினுல் ஆப்தீன்,
தலைவர், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்,
காயல்பட்டணம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|