கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிதா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு திருவனந்தபுரம் காயல் நல மன்றம் சார்பில் நடத்தப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்தறிக்கை பின்வருமாறு:-
அன்பான காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எமது திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் 27.10.2011 அன்று இரவு 07.00 மணியளவில், திருவனந்தபுரம் தாஹா ஆப்தீன் காம்ப்ளக்ஸில் உள்ள ஃபாத்திமா இல்லத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், நமதூர் நகர்மன்றத்தின் புதிய அங்கத்தினருக்கு பின்வருமாறு வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது:-
நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில், நமதூர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி ஆபிதா ஷேக் அவர்களுக்கும், நமதூரின் 18 வார்டுகள் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர்களுக்கும் எமது திருவனந்தபுரம் காயல் நல மன்றம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
நகர்நலனை மட்டும் கருத்தில் கொண்டு நல்ல நகர்மன்ற நிர்வாகத்தை மக்களுக்கு இவர்கள் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, அது நிறைவேற வல்லோன் அல்லாஹ்வையும் இறைஞ்சுகிறோம்.
இவ்வாறு வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை 06.11.2011 அன்று காயல்பட்டினத்தில் நடத்துவதென்றும், அக்கூட்டத்தில் மன்றத்திற்கு புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்படும் என்றும், கூட்ட நிகழ்விடம் விரைவில் அறியத்தரப்படும் என்றும் செயற்குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அபூபக்கர் (ஸ்கட்),
செயலர்,
காயல் நல மன்றம்,
திருவனந்தபுரம், கேரள மாநிலம். |