கடந்த சில நாட்களாக காயல்பட்டினம் நகரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மழை நீர் தேங்கிய பகுதிகளை, அந்தந்த பகுதி வார்டு உறுப்பினர்களின் துணையுடன் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா 27.10.2011 அன்று காலை முதல் மாலை வரை பார்வையிட்டார். காட்சிகள் பின்வருமாறு:-
கொச்சியார் தெருவில்...
தேங்காய் பண்டகசாலை தெருவில்...
சுலைமான் நகர் (மாட்டுக்குளம்) பகுதியில்...
ஸீ-கஸ்டம்ஸ் சாலை எல்.கே.துவக்கப்பள்ளி வளாகம் அருகில்...
அப்பாபள்ளித் தெருவில்...
பரிமார் தெரு மீன் சந்தையில்...
பரிமார் தெருவில்...
அலியார் தெருவில்...
ரெட் ஸ்டார் சங்க பின்புறத்தில்...
கீழநெய்னார் தெருவில்...
சென்ற இடங்களில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த நகர்மன்றத் தலைவர், அவற்றை எழுதியெடுத்துக்கொண்டார். மழை நீர் வடிகால் திட்டத்தை இரண்டு வகைகளாகப் பிரித்து, உடனடியாக செய்யப்பட வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க ஆவன செய்வதாகவும், நகர கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு, துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்து, நீண்ட கால செயல்திட்டம் ஒன்றை வகுத்து, அதனடிப்படையில் நகரில் மழை நீர் வடிகாலுக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
நகர்மன்றத் தலைவருடன், நகர்மன்ற உறுப்பினர்களான கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜஹாங்கீர், அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஹைரிய்யா, பத்ருல் ஹக், அபூபக்கர் அஜ்வாத் ஆகியோர் சென்றிருந்தனர்.
நகர்மன்ற சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜன், குடிநீர் குழாய் பொருத்துனர் (ஃபிட்டர்) நிஜார் ஆகியோர் உடனிருந்தனர். |