Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:36:01 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7461
#KOTW7461
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 30, 2011
மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5308 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த சில நாட்களாக காயல்பட்டினம் நகரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

காயல்பட்டினம் தைக்கா தெருவில் அமைந்துள்ளது மஸ்ஜித் அல்ஜதீத் என்ற புதுப்பள்ளி. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இப்பள்ளிக்கு முன்புறமுள்ள சாலையில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கும்.

தற்போது நகரில் பெய்து வரும் மழை காரணமாக மீண்டும் அவ்விடத்தில் தண்ணீர் தேங்கி, பள்ளிவாசலுக்கு உட்புறத்திலும் பாயத் துவங்கியுள்ளது. தொலைவிலிருந்து பார்ப்பதற்கு, ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ் மஹால் போல காட்சியளிக்கிறது.











நேற்று (29.10.2011) பகல் பொழுதில் மழை பெய்யவில்லை. இரவு 09.00 மணிக்குப் பிறகு சிறு தூறலுடன் துவங்கி, 10.00 மணிவாக்கில் கனமழையாக உருவெடுத்து, நள்ளிரவு முழுக்க விட்டு விட்டு பெய்தது.

இன்று காலையிலும் மாறி மாறி மழை பெய்துகொண்டிருந்தது. மதியம் 01.00 மணியிலிருந்து மழை இல்லை. எனினும் வானம் இருண்ட நிலையிலேயே உள்ளது.

படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?...
posted by Vilack SMA (Siacun) [30 October 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 12559

என்ன salih காக்கா , ஒரே missing செய்தியா போடுறியோ . அன்னைக்கு சூரியனை கானலேன்னு சொன்னியோ. இன்னைக்கு மும்தாஜை கானலேன்னு சொல்றியோ. பேசாம போலீசுல கம்ப்ளைன்ட் குடுத்துடுங்கோ. ( காக்கா , நீங்க காணாம போயிடாதீங்கோ . எங்களுக்கு நீங்கதான் வேணும் . )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?...
posted by Shahjahan (Colomo) [30 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12560

அப்படியானால் எப்படி என்னை மறக்கலாம்?

Shah Jahan
Colombo


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. குசும்பு ரொம்ப ஓவராத்தான் இருக்கு உங்களுக்கு!!!
posted by Mukthar (Hong Kong) [30 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 12561

அஸ்ஸலாமு அலைக்கும்.,

சகோதரர் ஸாலிஹ் அவர்களுக்கு டைட்டில் போட்ற குசும்பு ரொம்ப ஓவராத்தான் இருக்கு...

சரி புதுப்பள்ளி புனர்நிர்மாணம் பற்றி ஏற்கெனவே கூட்டம் போட்ட செய்தி நாம் அறிந்ததே... இதுவே சரியான தருணம் வசூல் வேட்டையை ஆரம்பியுங்கள், வல்ல இறைவன் பள்ளிவாசல் சிறப்புடன் கம்பீரமாக தோற்றமளிக்க அருள் புரிவானாக. ஆமீன்...

சரி தலைவர் சொந்த ஏரியாவுல விசிட் அடிக்கலையா... போட்டோவ காணோம்...

ஸாலிஹ் காக்கா முடிஞ்சா முடுக்குல விட்ற பேப்பர் கப்பல் காட்சியையும் தாருங்களேன்.. பிள்ளைகளுக்கு தெரியாட்ட நீங்க கப்பல் செய்து குடுங்க...( சின்ன அவா) வேணும்டா அதற்க்கு டைட்டில

"கப்பல் கரை ஒதுங்கியது!!!" ன்னு குடுங்க... ( யாரு வீட்டு சுவர்லயாவது முட்டி நிக்கும்ல)

பெய்கின்ற மழை நம் பூமிக்கு நன்மைபயக்க கூடிய மழையாக அல்லாஹ் கிருபை புரிவானாக... ஆமீன்..,

வஸ்ஸலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?...
posted by shahul hameed (kayalpatnam) [30 October 2011]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 12565

தாஜ்மஹால் உலக அதிசயமாக இருக்கலாம். ஆனால் ஒரு அல்லாஹ்வின் இல்லத்திற்க்கு ஈடு வருமா எனவே தாங்கள் எந்த செய்தியாக இருந்தாலும் அதன் உள்கருத்துக்களை உன்னிப்பாக கவணித்து வெளியிட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [30 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12579

மற்ற ஏரியாவில் மழையால் பாதிக்கப்பட்டதை நேரில் சென்று பார்த்த நம் தலைவியை அவரது ஏரியாவில் காணோமே!

அந்த வார்டு உறுப்பினர் மட்டும் தானே உள்ளார், ஒரு வேலை புதுப்பள்ளி ஏரியா என்பதாலா?

இல்லை பார்த்த போட்டோ போடவில்லையா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?...
posted by syedahmed (Kayalpatnam) [30 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12580

புதுபள்ளியின் தோற்றம் அழகு தாஜ்மஹால் வடிவமைப்பில் உள்ளது என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இன்னும் கட்டிடதிருத்தம் மேற்கொண்டு செப்பனிட்டு புதிய எழில் தோற்றமாக மிளிந்திட எல்லாம் வல்ல இறைவன் உதவி செய்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?...
posted by ALS maama (Kayalpatnam) [30 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 12581

அஸ்ஸலாமு அலைக்கும்,

புதுப்பள்ளியை சுற்றி தேங்கி நிற்கும் வெள்ள நீர் போட்டோ ஐந்து காண்பித்துள்ளீர்கள். புதிய நகராட்சித் தலைவர் சகோதரி அப்பகுதியை பார்வையிட ஏன் போகவில்லை? நகரில் மரைக்காயர்பள்ளி அருகில் உள்ள சுலைமான் நகர்(மாட்டுக் குளம்), ஜெயலாணி காலனி, கோமான் தெருவில் சில பகுதிகளில் தேங்கி நிற்கும் மலை நீரையும் அவசியம் படம்பிடிக்க வேண்டும். ஓடக்கரை தைக்கா புரம், மங்களவாடி, அருணாச்சலபுரம் பகுதிகளில் ஓலை குடிசைக்குள் நீர் புகுந்திருந்தால் படம் பிடித்து நமது நகராட்சி தலைவர் சகோதரி அவர்களுக்கு முன்னதாக காண்பித்து விடுங்கள்.

எழுத்தாளர், பொதுசேவை,
ALS மாமா,
K.T.M தெரு,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?...
posted by Riyaz Mohamed S H (Taikka Street) [31 October 2011]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 12613

தலைவராவது பெண் ஒரே நேரத்தில் எல்லா இடத்திற்கும் போக முடியாது, ஒருவேளை தன் சொந்த ஜமாத்திற்கு ஆரம்பமே ரொம்ப அக்கறை எடுத்து கொள்கிறார் என்று புறம் பேசுபவர்களும் இருக்கலாமே!

ஆனா தைக்கா தெரு மொஹுதூம் தெரு புதுக்கடை தெரு இளைஞர்கள் யாருமே இல்லியோ ? வார்டு கவுன்சிலர் மற்றும் பொது சேவை செய்யும் லரீப் அவர்கள் மட்டுமே இந்த மழை (சகதி, சேறு, குப்பை) நீர் மேல் நிற்கிறார்கள். இப்போ இளைஞர்கள் எல்லோரும் எங்கே போனார்கள் ? சுத்தமில்லா நீர் என்றா ? அருமை தம்பி SKS நீங்களாவது போய் இன்னொரு முறை போட்டோ எடுத்து போடுங்கள். இல்லையேல் இதுவும் வீனஸ் ஸ்டுடியோ மூலமாக தன்னிச்சையாக லரீப் அண்ட் வார்டு கவுன்சிலர் போட்டு இருக்கிறாகள் என்று அறிக்கை விடப்போகிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?...
posted by K.D.N.MOHAMED LEBBAI (Jeddah) [31 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12665

அஸ்ஸலாமு அலைக்கும்

இது நம் ஊரு தானா ????? இல்லை வெளி மாநிலமா ????? சந்தேகமாக உள்ளது .

ஏன் CHAIRMAN ஆபிதா ஷேக் அவர்கள் கண்டு கொள்ளவில்லை ?????

பாவம் கவுன்சிலர் அவர்கள். நிலைதான் பரிதாபம் ??????

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. செய்தியை மட்டும் விமர்சனம் செய்யுங்களேன்...?
posted by SKS (Daruttibyan Network) (Kayalpatnam) [31 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12666

அன்பிற்குரியோரே... ஒரு செய்தியாளராக, முடிந்தளவுக்கு எங்கெங்கு சென்று செய்திகளை சேகரிக்க இயலுகிறதோ, அங்கெல்லாம் சென்று செய்திகளை சேகரித்து, இயன்றளவுக்கு விரைவாக வெளியிடுவதை நாம் வழமையாகக் கொண்டுள்ளோம்.

அதே நேரத்தில், நமக்கு சில நேரங்களில் தகவல்கள் கிடைக்காமல் போனதால், நடந்த நிகழ்வுகள் நடக்காதவையாகிவிடப் போவதில்லை.

புதுப்பள்ளியருகிலுள்ள குளத்தை நாம் செய்தியாக வெளியிட்டுள்ளோம். அதை நகர்மன்றத் தலைவர் அவர்கள் பார்த்ததாகவோ, பார்க்கவில்லையென்றோ நமக்கு தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் நாம் அதை வெளியிடவில்லை. இப்படியிருக்க, “நகர்மன்றத் தலைவர் அங்கு சென்றாரா?” என்று ஒரு சிலர் கேட்டிருப்பது பொருத்தமற்றதாக உள்ளது. “சொந்த ஜமாஅத்தையே அவர் பார்க்கவில்லை...” என்றும், இதுபோல இன்னும் பல தேவையற்ற வாசகங்களையும் ஏன் நம்மில் பலர் அவசரப்பட்டு கரு்த்துக்களாகப் பதிவு செய்ய வேண்டும்?

உண்மையில் நடந்ததென்ன தெரியுமா? அவர்கள் துவக்கமாக சென்று பார்த்த இடமே புதுப்பள்ளியருகில்தான். ஆனால் அத்தகவல் நமக்குக் கிடைக்கவில்லை. (சகோதரர்கள் சிலர் இப்பகுதியில் அவசரப்பட்டு வெளியிட்டுள்ள கருத்துக்களைப் பார்த்த பின்னர் தலைவர் நமக்கு இந்த விளக்கத்தைத் தந்துள்ளார்.)

மழை நீர்த்தேக்கப் பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர், ஒவ்வொரு பகுதியிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவை அடுத்தடுத்து செய்திகளாக வெளிவரலாம்.

அதற்குள், இதுபோன்று அவசரப்பட்டு, எமது பணிகளையும் குறைத்து மதிப்பிட்டு, நடந்தவற்றையும் நடக்காதவையாக சந்தேகித்து....... இதெல்லாம் தேவைதானா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க விட்டுவிடுகிறேன்.

மொத்தத்தில், அவசரப்பட்டு யாரையும் யாரும் பகைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதே எனது பணிவான கருத்து!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?...
posted by Nilofar (kayal) [01 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12680

salih காக்கா நீங்க உங்கள் பணியை சிறப்பாக செய்து கொண்டிருங்கள் .யார் என்ன சொன்னாலும் அது உங்களுக்கு வெற்றிதான்.உண்மை எப்பொழுதும் கசக்கத்தான் செய்யும். பாராட்டு மட்டும் கிடைத்தால் அது ரசிக்காது. காரம் ,புளிப்பு ,etc......, எல்லாம் வரணும் அப்போதான் அது உண்மையான ரசிப்பு.

தலைவருக்கு தன் ஏரியா , அடுத்த ஏரியான்னு கிடையாது. ஊர் மொத்தமும்தான் அவங்க ஏரியான்னு குறை கூறிக் கொண்டிருப்பவருக்கு தெரியல போல.

அதனால் யார் என்ன சொன்னாலும் உங்களுக்கு (ஆதாரபூர்வமான) கிடைக்கும் செய்திகளை போட்டுக்கொண்டே இருங்கள்.

உண்மைய சொல்லபோனால் காயல் மக்களுக்கு விழிப்புணர்வு வர காரணமே இந்த காயல்.காம்தான்.

தொடரட்டும் உங்கள்பணி. வாழ்த்துக்கள் காயல்.காம் !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. நம்பகமான தகவல் அறிந்து இனி கருத்து பதிவு செய்யவும்.. அதுவே ஒற்றுமைக்கு வழி வகுக்கும்...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [01 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12686

சகோதரர் ரியாஸ் முகம்மது சரியான தகவல் அறிந்து கருத்து பதிவு செய்வது ஒற்றுமைக்கு உகந்தது...

தான் செய்யும் சேவையை சிலர் போட்டோ எடுத்து கொள்கிறார்கள்..! சிலர் போட்டோ எடுக்காமலேயே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து தேங்கி நிற்கும் மழை நீரை பாத்தி வெட்டி நீர் வெளியாக என்ன வழி இருக்கிறது என்று யோசித்து வேலை ஆட்களுடன் யோசனை சொல்லி தேங்கிய நீர் வெளியே செல்ல வழி செய்தார்கள்...! புகைப்பட விளம்பரம் விரும்பாத இந்த ஆபிதா தலைவியும் மற்றும் தெருவழி வாலிபர்களும்தான்..

சகோதரர் ரியாஸ் முகம்மது அவர்களே.. நம்பகமான தகவல் அறிந்து இனி கருத்து பதிவு செய்யவும்.. அதுவே ஒற்றுமைக்கு வழி வகுக்கும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?...
posted by Nilofar (kayal) [01 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12702

சகோதரர் முஹம்மத் லெப்பை அவர்களே !!

உங்களுக்கு நம்மூரை பார்த்ததும் என்னசந்தேகம், இது வெளிமாநிலம்லாம் இல்லை நம்ஊர்தான் .

CHAIRMAN ஒன்னும்'' ஜீபூம்பா '' மந்திரசக்தி உள்ளவங்க இல்லை பார்த்ததும் நடக்க .அல்லாஹ் உதவியால் அதிகமான மழை.

ஊரில்உள்ள குளம் ,குட்டை,காடெல்லாம் வீடாகவும், ,தோப்பாகவும் மாறிவிட்டது .அப்போ தண்ணீர்க்கு வடிக்கால் எங்கே .

வருஷாவருஷம் இப்டிதானே இருக்கு .ஆபிதா தலைவர்ஆனதும்தான் தண்ணீர் தேங்குனதுமாதிரிலோ இருக்கு உங்ககருத்து .

அதனால் அதற்க்கான ஆக்கபூர்வமான ஐடியாவை கொடுத்து ஊராட்சியுடன் ஒன்றி இருங்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?...
posted by Riyaz Mohamed SH (Thaikka Street) [01 November 2011]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 12705

சகோதரர் இஸ்மாயில் அவர்களே, தலைவியை விடுங்க அவருடைய போட்டோ வந்து கொண்டு தான் இருக்கிறது இருக்கும். அவர் இன்னும் பிஸியா தான் இருப்பார். அவருக்கு பொறுப்புகள் கூடிக்கொண்டேதான் போகும்.

நீங்களெல்லாம் இவ்வளவு கமெண்ட்ஸ் கொடுக்கும் போது, நீங்களும் புதுப்பள்ளி ஜமாத்தில் பிறந்து வளர்ந்தவர் தான். ஏன் நீங்களும் அல்லாஹ் உடைய பள்ளிக்கு போய் உதவி செய்ய கூடாது. இதெல்லாம் பெரியவர்களா போய் பார்ப்பார்கள். சும்மா கமெண்ட்ஸ் மட்டும் கொடுத்தா போதாது . போய் இறங்கி வேலை செய்யுங்க இல்ல எதாவது பொறுப்பில் இருந்து பாருங்க தெரியும்..

எத்தனை கமெண்ட்ஸ் நீங்கள் புதுப்பள்ளி, இன்னும் பல கருத்து கொடுத்து இருப்பீர்கள் அவையெல்லாம் நீங்கள் நன்கு ஆராய்ந்து கொடுத்ததா ஊரில் இருக்கும் நீங்கள் பெரியவர்களுக்கும் அனுபவசாளிகளுக்கும் முதலில் முடிந்தால் மரியாதை செலுத்துங்கள். அவர்களை அனுசரித்து ஒத்துமையாக முன்னின்று செயல்பட பாருங்கள். முன்னோர்கள் காட்டிய (காட்டும்) வழி நமக்கு ஒன்றும் தப்பாக இருக்காது.

பதில் கமெண்ட்ஸ் எதிர்பார்க்கவில்லை, அப்படியே உங்களுக்கு தோன்றினால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுவோம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?...
posted by mammaash (qatar) [01 November 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 12720

என்ன இது சின்னபுள்ளைதனமா இருக்கு...

மழை பெஞ்சி ஓயாகூட இல்லை அதுக்குள்ள இதனை கமெண்ட்ஸ் தலைவி அங்க பார்க்க போகலயா இங்க பார்க்க போகலைனு..எப்படா எதாவது குறைவராது பார்க்காமல் எதாவது உருப்படியா வேலைய பொய் பாருங்க.ஒற்றுமை விரும்பிகளே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?...
posted by Musthafa.MIN (chennai) [06 November 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 12985

அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர்களே !!!!

செய்தி என்னமோ மக்கள் பார்வைக்குதான்.... இதில் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

மக்களை ஈர்க்கும் விதமாக மும்தாஜ் மிஸ்ஸிங், வேற எதாவது பேர் வைத்து அவங்க மிஸ்ஸிங் என்று போடாதீர்கள். நம்மளுடைய பிரச்சனை யை அழகான வார்த்தைகளில் சொல்லுங்கள்.... மக்கள் பார்கத்தான் செய்வார்கள் இன்ஷா அல்லாஹ்...

இந்த செய்தினை எடுத்து கொண்டு ஜமதர்களோ அல்லது இயக்கம்களோ விரைவாக நடவடிக்கை எடுத்து அல்லாஹ்வின் பள்ளியில் அசுத்தமான தண்ணீர் கலப்பதை விட்டு பாதுகாப்போம்.....இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மீண்டும் ‘செங்கடல்‘ !  (1/11/2011) [Views - 5224; Comments - 14]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved