காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் அக்டோபர் 21 அன்று வெளியாயின. அக்டோபர் 29 அன்று நடைபெற இருந்த துணைத் தலைவர் பதவிக்கான போட்டிக்கு - மூன்று உறுப்பினர்கள் களத்தில் உடனடியாக இறங்கி ஆதரவு கோர துவங்கினர். அந்த மூவர்: வார்ட் 1 உறுப்பினர் ஏ. லுக்மான், வார்ட் 11 உறுப்பினர் எஸ்.எம். முஹைதீன், வார்ட் 13 உறுப்பினர் எம்.எஸ்.எம். சம்சுதீன்.
இதில் நகர்மன்ற உறுப்பினர் ஏ. லுக்மானுக்கு ஆதரவாக 4 உறுப்பினர்கள் (அவரையும் சேர்த்து) இருந்தனர் என கூறப்பட்டது. நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். சம்சுதீனுக்கு ஆதரவாக 3 உறுப்பினர்கள் (அவரையும் சேர்த்து) இருந்தனர் எனவும் கூறப்பட்டது.
ஊழல் அதிகம் நடைபெற வாய்ப்புள்ள பணியாளர்கள் நியமன குழுவிற்கு - ஊழலைத் துணிவாக எதிர்கொள்ள உறுப்பினர் லுக்மான் பொருத்தமானவர் என்றும், வார்ட் 13 உறுப்பினர் எம்.எஸ்.எம். சம்சுதீனை அவர் விருப்பப்படி துணைத் தலைவர் பதவிக்கு முன் மொழியலாம் என்றும் அவர்கள் இருவரின் அணிகளும் முடிவு செய்ததாகத் தெரிகிறது.
வெற்றி பெற தேவையான வாக்குகள் 10. புறநகர் பகுதிகளில் உள்ள நான்கு உறுப்பினர்களில் இரு உறுப்பினர்களின் ஆதரவு இவ்வணிக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அவ்வணிகளுக்கு இருந்தது.
வார்ட் 11 உறுப்பினர் எஸ்.எம். (மும்பை) முஹைதீனை - துணைத் தலைவர் பதவிக்கு - முன்னிறுத்தி துவக்கத்திலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவருக்கு ஆதரவாக அக்டோபர் 27 அன்று நடந்த விருந்து ஒன்றில் - 13 உறுப்பினர்கள் நேரடியாகவோ, அவர்கள் சார்பில் பிரதிநிதிகள் மூலமோ கலந்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மறுநாள் (அக்டோபர் 28) எம்.எஸ்.எம். சம்சுதீனுக்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது. இதில் 10 உறுப்பினர்கள் நேரடியாகவோ, அவர்கள் சார்பில் பிரதிநிதிகள் மூலமோ கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
நகர்மன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையோ 18. ஆனால், இரு அணிகளுக்கும் ஆதரவு என கூறிய உறுப்பினர்களை எண்ணினால் 23 வருகிறது. இதிலிருந்து, ஒரே உறுப்பினர்கள் இரு அணிகளுக்கும் ஆதரவு தெரிவித்தது தெளிவாகிறது.
இறுதி நேரம் வரை பல திருப்பங்கள் நிறைந்த இப்பெரிய பட்ஜெட் படம், இரவு பகல் என திரைக்கதை, வசனம் எழுதப்பட்டு - அக்டோபர் 29 அன்று காலை - மக்கள் அரங்கில் - ரிலீஸ் செய்யப்பட்டது. புதிய கதாபாத்திரங்கள் (ஏறத்தாழ), பழைய கதை, அதே இயக்குனர்(கள்). இப்படம் தொடர்ந்து - 260 வாரங்கள் (ஐந்து ஆண்டுகள்) ஓடி - சாதனை புரியாமல் இருந்தால் சந்தோசமே!
2. பொருள் : தீமைக்கு எதிரான போர் என்றும் முடிவை எட்டுவதில்லை !! posted byArabi Haja (Hong Kong )[30 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12588
மீண்டும் அரங்கேறியிருக்கிறது அசிங்கம். நகர சபை தலைவிக்கு மீண்டும் சவால்!! கையூட்டும், ஊழலும் அவரது நிர்வாகத்துக்கு பெரிய சவாலாகவே இருக்கும். மக்களால் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கப்பட்ட ஒரு மாபெரும் சக்தி மீண்டும் விஸ்வரூபம் எடுத்து கொல்லை வழியாக அவரை விரட்ட பெரும் முயற்சி செய்யும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
'விலைமதிக்க முடியாத' 14 வாக்குகள் பெறப்பட்டு சகோ. மும்பை மைதீன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். மீண்டும் நம்மை காயலர்களாக தலைகுனிய வைத்த நிகழ்வு இது. ஊடகங்களும் மக்களும் கண்ணில் வெண்ணையை ஊற்றி விழிப்புடன் இருக்கவேண்டும். மேலும் 'இந்த சக்தி இந்த ஊரை ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம்' என அனைத்து வாசகர்களும் உறுதி பூண்டால் இதை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்க முடியும் அல்லாஹ் நாடினால். அவனிடமே உதவி கோருவோம்.
இந்த 14 உறுப்பினர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட அதிகமான பெருவாரி வாக்குகள் பெற்று சகோ. ஆபிதா அவர்கள் மக்கள் மன்றத்தால் தேர்வு செய்யபெற்றாள் என்பதை இவர்கள் உணரவேண்டும். மக்கள் தீர்ப்புக்கு எதிராக யாரும் அரசாள நினைத்தால் ?? மக்கள் மன்றம் சும்மா விடாது என்பதை நாம் இவர்களுக்கு தெளிவு படுத்தும் நேரம் இது.
இந்த ஊரில் ஆளும் அ.தி.மு. க. என்ற கட்சி எங்கே ? யாரவது தேடி பாருங்களேன்!
கவிஞர் கண்ணதாசன் ' இந்திய நாட்டின் ஜனநாயகம் என்பது மாபெரும் சக்தி. ஆனால் பரிதாபம் என்னவெனில் அதற்கும் மக்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் போனதுதான்' என்று சொன்னது தான் இங்கு நினைவுகூரத்தக்கது.
3. Drama come to end posted byFirdous (Kayalpatnam)[30 October 2011] IP: 141.*.*.* United States | Comment Reference Number: 12592
ATLAST trade came to end. During the election many candidates gave assurance they wont involve in bribery. But what really happened ...
Did they lie while swearing Allah's name?
Dear fellow Kayalites
These councilers should be shamed in public. Lesson should be taught in a way that the candidates who contest for next term shouldn't involve in such a covert act.
5. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byVilack SMA (Siacun)[30 October 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 12596
அஸ்ஸலாமு அழைக்கும்
அரபி காஜா காக்கா.
நீங்கள் சொன்ன " இந்த 14 உறுப்பினர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட அதிகமான பெருவாரி வாக்குகள் பெற்று சகோ. ஆபிதா அவர்கள் மக்கள் மன்றத்தால் தேர்வு செய்யபெற்றாள் " . உண்மைதான் . ( ? )
அடுத்து , " கவிஞர் கண்ணதாசன் ' இந்திய நாட்டின் ஜனநாயகம் என்பது மாபெரும் சக்தி. ஆனால் பரிதாபம் என்னவெனில் அதற்கும் மக்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் போனதுதான்' என்று சொன்னது தான் இங்கு நினைவுகூரத்தக்கது " . இதுவும் உண்மை .
அதனால , தயவு செய்து ஜனநாயகத்தை பற்றி பேசாதீங்க காக்கா .
தன் கட்சிக்காரர் வென்றால் அது ஜனநாயகம் , அடுத்தவர் வென்றால் அது ஜனநாயக படுகொலை . ஜனநாயம் என்ற வார்த்தை படும் அவஸ்தையை பார்த்தீங்களா .
இந்த " ஜனநாயகம் " ஐந்து வருடத்துக்கு ஒழுங்கா ஓடுதான்னு பாருங்க .
6. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byHabeeb Rahman (Dubai)[30 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12597
அப்பாடா! ஓய்ந்துகொண்டிருக்கின்றது என்று நினைத்து கொண்டு இருக்கும் போதுதான் இதோ கிளம்பி விட்டது இன்னொன்று!காயல்.காம் இப்போதெல்லாம் தினமலர் தினத்தந்தி போன்றவைகளை பின் தள்ளி விடும் போலிருக்கின்றது! புரளிகள் திடீரென்று செய்திகள் ஆகின்றது.
சொந்த கருத்துக்கள் தலையங்கம் என்ற பெயரில் புகுத்த படுகின்றது. 'கூற பட்டது' எப்போது ஆதார பூர்வமான தகவல்கள் ஆகியது?
ஊர் இரண்டு பட்டால் கூத்தடிக்கு கொண்டாட்டம்! உங்களுக்குமா? தயவு செய்து இத்துடன், இது தொடர்பான செய்திகள் வெளியிடுவதை நிறுத்தவும்! அது உண்மையோ பொய்யோ! ஓன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் போடும் செய்திகளை நூற்றுக்கு நூறு உண்மை என்று நம்பும் மக்களின் உள்ளங்களை வீணாக உசுப்பெத்தினால், அதை பின்னர் நீங்கள் நினைத்தாலும் அடக்க முடியாது!
8. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A)[30 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12600
வெற்றி பெற்றால் தலையங்கம், இல்லையேல் செய்தி விமர்சனமோ!!
அது சரி தலைவி இவ்விருவரில் யாரை ஆதரித்தார்கள்? யாருக்கு வாக்களித்தார்கள்?
எது நடந்தாலும் நாம் தேர்ந்தெடுத்த நகர் மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்க பட்டவரே தற்போதைய துணை தலைவர். அவரே வரும் ஐந்து வருடங்களுக்கு தலைவரோடு உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டியவர்.
இதை மனதில் கொண்டு வென்றவரை வாழ்த்தி நடக்கவேண்டியதை பார்ப்பதே இனி நமது கடமை.
9. தேவை ஊடக நெறி! posted bykhatheeb Muhammad Muhyiddeen (Makkah al Mukarrama)[30 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12602
அன்பின் ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் கருத்து முழுக்க முழுக்க உண்மை.
10. Re:B P எகிறுது ... posted byshahul hameed sak (malaysia)[30 October 2011] IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 12603
ரோட்ல பஸ் ஓடிச்சுது, தண்டவாளத்துல ரயில் சிக்குபுக்குன்னு போச்சுது. ஆகாயத்துல விமானம் பறந்துச்சு,
வானத்திலிருந்து மழை தண்ணீரா ஊத்திச்சி அப்படீன்னு
மட்டும் செய்தி போடுங்க.
காரம் அதிகமாகி கொழுப்பு கூடி BP எகிறி தலை வழியா
ரத்தம் கொப்பளிக்கிற மாதிரியான செய்தி போடக்கூடாது.
இது காயல் இம்சை அரசன் இடி அமீனின் கண்டிப்பான உத்தரவு.
11. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byMohamed Ali (Madinah Al Munawwara)[30 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12605
அஸ்ஸலாமு அழைக்கும் .
காயல் நகராட்சி துணை தலைவராக தேர்தெடுக்கப்பட்ட எஸ் எம் முஹிய்தீன் அவர்களுக்கு என்னுடைய நல் வாழ்த்துக்கள்.
தேர்தலுக்கு முன்தான் ஒருவருக்கு ஒருவர் விமர்சித்தோம், இப்பொழுது சிறப்பாக தேர்தல் முடிந்து எந்த பாதிப்பும் இல்லாமல் ஊர் தலைவியும்,துணை தலைவர்,மற்றும் 17 வார்டு கவுன்சிலர்களும் தேர்வாகிவிட்டது.தயவு செய்து இனிமேலாவது ஒருவருக்கு ஒருவர் விமர்சிப்பதை தவிர்த்து ஊர் நலனில் அக்கறை எடுத்து ஆக்கபூர்வமாக ஊர்தலைவிக்கும் மற்றும் இதர கவுன்சிலர்களுக்கும் உட்சாகபடுத்துற விதத்தில் கமெண்டுகள் அமைந்தால் அதுவே அவர்களை திறமையாக செயல்பட வழி வகுக்கும்.நல்லதையே பகிருங்கள் அதுவே நம் ஊருக்கு நன்மை பயக்கும்.வல்ல இறைவன் நம் அனைவருக்கும் பரந்த சிந்தனையை ஏற்படுத்துவானாக.... ஆமீன்...
சிந்திக்க மறந்து விட்டோம் நாம் ???????
பசுமை காயல்,பசுமை காயல்,பசுமை காயல் என்று ஆக விரும்பும் நம் ஊர் , 7 வது வார்ட் அந்தோணி போல் 4 அந்தோணி வந்தால் நம் ஊர் புன்னக்காயல் ஆகிவிடும் என்பதை ஏன் மறந்து விட்டீர்கள். ( எல்லாம் வல்ல அல்லாஹு நம் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக ஆமின்.)
12. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byShahul Hameed (Hong Kong)[30 October 2011] IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 12608
14 கவுன்சிலர்கள் பெற்ற மொத்த வாக்குகள் சகோதரி ஆபிதா அவர்கள் பெற்ற வாக்குகளை விட குறைவாக இருக்கலாம்.
அதற்காக சகோதரி ஆபிதா அவர்களை துணை தலைவியாக கொண்டு வர முடியுமா?
வெற்றியை ஏற்று கொண்டதை போல் தோல்வியையும் ஏற்று கொள்ளும் பக்குவமும் வர வேண்டும். நீங்கள் தலைவர் தேர்வில்
காட்டிய ஆர்வத்தை கவுன்சிலர்கள் தேர்விலும் காட்டி கணிசமான ஆதரவு உறுபினர்களை பெற்று இருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
அதை போல் இப்போது தேர்வு செய்யபட்ட உறுப்பினர்கள் நீங்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று எந்த சட்டதில் இருக்கிறது?
நீங்கள் சொல்வதை கேட்டால் மற்றும் அது ஜனநாயகம் ஆகுமோ?
13. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byOMER ANAS (DOHA QATAR.)[31 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12609
எனக்கு தெரிந்து துணைத்தலைவர் தேர்வு ஒன்றும் தப்பில்லை! காரணம் கூடுதல் உறுப்பினர்கள் D M K தான். இப்ப நமக்கு தேவை நல்ல செயல் பாடுதான்! இப்ப அடித்து கொண்டு கருத்தை இதில் பதிவு செய்யும் சீமான்கள் நேற்று ஒற்றுமைக்கு விளக்கம் சொன்னது,தோளோடு தோல் நின்றது ஆச்சரியமாக இருக்குகிறது! கட்சி என்று வந்து விட்டால் அப்புறம்தான் எல்லாம். புரிந்து கொள்ளுங்கள் அட்மின்!!! வாழ்க ஒற்றுமை! நாம் பட்ட கடனை நாம்தான் அடைக்க வேண்டும். வாழ்த்துவோம் துணைத்தலைவரை! நீங்களும் வாழ்த்துங்கள்!!! கடமை இது கடமை.....!!!??? வளர்க மீண்டும் ஐக்கியம்.
இந்த வளையதளம் எதையும் தீர விசாரிக்காமல் ,
செய்தியை வெளிய விடாது என்பது உறுதி ,
இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்ற மனவேதனை தான்,
இதில் மிகஉம கவனமாஹ இருக்க வேண்டியது ,
நகரமன்ற தலைவி ,
இதை எல்லாம் பார்க்கும் பொது தலைவி இன் பெயரை ,
தலைவி செய்ய நினைக்கும் நல்ல காரியங்களில் இடன்சல் கொடுத்து , பெயரை கேடுக்க வேண்டும் என்பது போல தெரிகின்றது ,
இதுக்கு எல்லாம் மிக வல்லமை படைத்தவன் அல்லாஹ யாவரையும் பாதுகபனாக ஆமீன் ,
தவறு செய்தவர் களுக்கு ஹிதாயத்தை கொடுத்து , அவர்கள் செய்த தவறை மன்னித்து அருள்வாயாக என்று துஆ செய்ஒமாக ,
ஊரை விழுங்குகின்ற திமிங்கலத்திற்கு தடுப்பு வலை போட்டாலே போதும். உங்க உங்க வீட்டு பட்டா உங்க பேரில் இருக்கிறதா என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டிய காலம் கணிந்தாகிவிட்டது.
16. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byசாளை பஷீர் (காயல்பட்டினம்)[31 October 2011] IP: 116.*.*.* India | Comment Reference Number: 12614
அஸ்ஸலாமு அலைக்கும்!
ஈகோவும் பணவெறியும் இந்த துணைத்தலைவர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளன. இனி நமதூர் நகர் மன்றத்தின் நடவடிக்கைகள் ஊழலுக்கும் ஆதரவாகவும் ஆக்கபூர்வ திட்டங்களுக்கும் பெரும் தடையாகவும் இருக்கப்போவதற்கான அறிகுறியாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட சில பணக்காரர்களின் சில்மிஷக்கரங்கள் ஓயும் வரை ஊர் நலனில் நாட்டமுள்ளவர்கள் கை கட்டி வேடிக்கை பார்க்க முடியாது. அது நமது இணையதளத்திற்கும் பொருந்தும்.
கடந்த காலங்களில் நகர்மன்றத்தில் நடந்த முறைகேடுகள், ஊழல்கள் போன்றவை அவ்வளவாக கவனிக்கப்படாமல் கடந்து போய் விட்டன. இனி அவ்வாறு நடக்க நாம் அனுமதிக்க முடியாது.
நகராட்சியின் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள் போன்றோரின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பொதுவாழ்வையும் கண்காணிக்ககூடிய ஒரு கண்காணிப்பு பொறிமுறை (WATCH DOG)யை உருவாக்க வேண்டும்.
MEGA அமைப்பைப்போல ஒரு தன்னார்வ அமைப்பாக இது வடிவமெடுக்க வேண்டும்.
நகராட்சியின் மீதான முறைப்பாடுகளை பொதுமக்களிடமிருந்து பெற்று நமது இணையதளம் வெளியிட வேண்டும்.
நகராட்சி அங்கத்தவர்கள், அலுவலர்களின் ஐயத்துக்கிடமான அனைத்து நடவடிக்கைகளும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.
இத்தகைய ஜனநாயக, மக்கள் பிரதிநிதித்துவ உள்ளாட்சி அமைப்புகளில் ஊழலையும், சுரண்டலையும் ஊக்குவிக்கும் பண முதலைகளின் சட்ட விரோதபோக்கும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
17. Give up or face the consequences posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[31 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 12616
இந்த செய்தி விமர்சனம் நிச்சயமாக மக்களிடத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை எற்படுத்தும். உண்மை வெளிவரக் கூடாது என்று பயப்படுகிறவர்கள்தான் இந்த மாதிரி செய்தியை எதிர்ப்பார்கள். இவர்கள் பொதுமக்களாக, நடுநிலையாளர்களாக இருக்க முடியாது.
இந்த செய்தியில் உள்ள உண்மையில் 50 % ஐ என்னால் உறுதியிட்டு கூற முடியும். அதாவது சம்சுதீன் அவர்களுக்கு ஆதரவாக நடைபெட்ட்ற கூட்டத்தில் கலந்து கொண்ட 10 நபர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும். காரணம் அந்த கூட்டம் எனக்குத் தெரிந்த நபர் வீட்டில் நடைபெற்றது. முக்கியமான வேறு ஒரு விசயமாக அந்த நபர் வீட்டிற்கு சென்றபோது அவர்களை காண நேர்ந்தது.
இந்த செய்தி விமர்சனத்திலுள்ள மற்ற 50 % ஐ என்னால் உறுதி செய்ய இப்பொழுது முடியாது. முஹியத்தீன் அவர்களுக்கு ஆதரவாக கூட்டம் ஒரு தி.மு.க. நபரால் நடைபெற்றது எனபது உண்மை. ஆனால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக சொல்லப்படும் அந்த 13 நபர்கள் யார் யாரென்று துல்லியமாக எனக்குத் தெரியாது.
சகோ. லுக்மான் அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் அனைத்தும் உண்மை. நான் அவரிடமே நீங்கள் ஏன் துணைத்தலைவர் பதவிக்கு போட்டி இடவில்லை என்று இது பற்றி வினவியபோது
அவர் சொன்னது,
"எனக்கு பழக்கமான முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் என்னிடம் சொன்னார், நீங்கள் துணைத்தலைவர் பதவிக்கு போட்டி இட இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள். உங்களுடைய எண்ணம் உழலை ஒழிக்கவேண்டும் என்பதானால் நீங்கள் உதவித் தலைவர் பதவிக்கு போட்டி இட வேண்டாம். அது ஒரு உப்பு சப்பு இல்லாத பதவி. Appointment Comittee பதவிக்கு போட்டி இடுங்கள், அங்குதான் அதிக பணப்புழக்கம் உள்ளது. அங்குதான் உழல் மலிந்து கிடக்கிறது. அதை control பண்ண வேண்டும். என்று அறிவுரை கூறினார். அதனால்தான் நான் அந்த துணைத்தலைவர் பதிவிக்கு போட்டி இடவில்லை என்று.
---------------------------------------
மேலும் தலைவர் தேர்தலில் சந்தித்த மிகப்பெரும் தோல்வியை ஊரில் உள்ள பல தலைகளால் இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்தவர்கள் இந்த துணை தலைவர் தேர்தலை (நாடகத்தை) நடத்தி வெற்றி கண்டுவிட்டார்கள். வெற்றி பெற்றவருக்கும், வெற்றிபெற வழிவகுத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஒரு அரசியல் கட்சியை சார்ந்த் சில சுயநலவாதிகள், தலைவர் தேர்தலில் பெற்ற தோல்வியை ஜீரணிக்க முடியாதவர்களுடன் ஓன்று சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார்களாம். அதாவது சகோ. ஆபிதாவை செயல் படவிடாமல் pressure கொடுத்து அவரை Resignation பண்ண வைத்து Re-election ஐ கொணடு வரவேண்டும் என்பதாக நம்பத்தகுந்த நபர்கள் மூலமாக அறிய முடிகிறது.
இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆவல். இவர்களிடத்தில் இப்படி ஒரு திட்டம் இருக்குமேயானால் அதனை அவர்கள் உடனடியாக கைவிடவேண்டும். இல்லையேல் இன்ஷா-அல்லாஹ், மக்கள் சக்தியை ஓன்று திரட்டி, சுயநலமில்லாத பொதுநல அமைப்புகளுடன் ஓன்று சேர்ந்து, நமதூர் இதுவரையில் கண்டிராத ஜனநாயக முறையில் மாபெரும் போராட்டம் நடத்தி இவர்களை வீதிக்கு கொண்டு வருவோம்.
தேர்தல்கள் முடிந்துவிட்டது, தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுவிட்டர்கள். நகர் மன்றம் நன்றாக, உழலற்று இயங்க வேண்டும் என்பதே எல்லோர்களின் ஆவல்.
18. இந்த வயிற்று பசிக்காரர்கள் நாளை முதுகு பசிக்காரர்களுக்கு எதிராக மாறும் காலம் விரைவில் வரலாம்...! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[31 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12619
சகோதரர் SHAIK MMS அவர்களின் கருத்து உண்மையான பொருத்தமான பதிவு இதில் சந்தேகமே இல்லை - முதுகு பசிக்காரர்களின் வலையில் வயிற்று பசிக்காரர்கள் விழுந்தாகிவிட்டது...! இது தான் துணை தலைவர் தேர்வில் நடந்துள்ளது.. கூடிய விரைவில் அதன் பயனை கண்டிப்பாக அனுபவிப்பார்கள்..! இவர்கள் அனைவரும் இறைவன் மீது சத்தியம் செய்தவர்கள்...! நல்ல ஒரு ஈமான் தாரி ஹராம் ஹலால் பேணி நடை முறை வாழ்க்கையில் வாழ்ந்து வருபவர் ஜனாப் ஹாஜி லுக்குமான் அவர்கள் Appointment Comittee பதவிக்கு கூட வரமுடியாமல் போய் விட்டதே..! என்று எனக்குள் ஒரு சிறிய வருத்தம். அல்லாஹ் எல்லாவற்றிலும் அவருக்கு நன்மையையே நாடி இருப்பான்...
உண்மை இது தான் - முதுகு பசிக்காரர்களின் வலையில் வயிற்று பசிக்காரர்கள் விழுந்தாகிவிட்டது...!
இந்த வயிற்று பசிக்காரர்கள் நாளை முதுகு பசிக்காரர்களுக்கு எதிராக மாறும் காலம் விரைவில் வரலாம்...!
19. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byhasbullah mackie (Dubai)[31 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12620
kayalpatnam website ஒரு கச்சடா தளமாக அமைந்து விட்டதே என்பதை நினைத்து வருத்தம்... நல்ல காரியங்கள் பல இருப்பதை விட்டு விட்டு துருவி துருவி குற்றங்கள் யார் செய்தார்கள் என்பதை வெளியிடுவதன் நோக்கம் தான் என்ன? இதனால் யாருக்கு இலாபம் என்று புரியவில்லை....
நக்கீரன் பத்திரிகைக்கு ஆள் தேவையாம் .... admin அங்கு முயற்சி செய்தால் journalist போஸ்ட் கிடைக்க வாய்ப்புள்ளது....
20. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[31 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12624
நகராட்சி துணைத்தலைவர் தேர்தல் குறித்து எழுதி உள்ளீர்கள். இது ஏதோ முதன் முறையாக நடப்பதல்ல. இதற்க்கு முன்பும் (அ.தி.மு.க.) காதிரி காக்காவுக்கு நடந்ததுதான்.
தேர்வான உறுப்பினர்களில் யாராவது ஒருவர் துனைத்தளைவாராக தேர்ந்தேடுக்கப்ப்டவேண்டும்தான். அது எந்த கட்சி உறுப்பினராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் நான் கேள்விப்பட்டது ...சென்னை ஆண்டவர் சென்னையி இருந்து நம் வார்டு உறுப்பினர்களுக்கு அருள்பாலித்து உள்ளார். அவரின் அருளாசியை வேண்டி நின்ற பக்தர்களை அவர் கைவிடவில்லை.
"லட்ச தீபம்" ஏற்றி வழிபட்டதாக தகவல். காஜா காக்கா இங்கு அ. தி .மு க வினர் யார் இருக்கிறார்கள்? போட்டியிட்ட இரண்டு மூன்று பேர் தோற்றுவிட்டனர். அடிப்படையில் தி. மு. க ஆதரவு மனப்பான்மை நிரம்பிய ஊர் நமது ஊர். சொளுக்கு கூட அவரது சில தனிப்பட்ட குணாதிசியங்கலால்தான் தோற்றாரே தவிர தி.மு.க என்பதற்காக தோற்கவில்லை. அப்படி இருக்கும் போது இங்கு அ.தி.மு.க என்ன செய்துவிட முடியும்? நம்மில் பலரும் நகராட்சி தலைவர் தேர்தலில் காட்டிய ஆர்வத்தை வார்டு உறுப்பினர்களின் தேர்வில் காட்டவில்லை. அதுதான் இந்த அவலத்திற்கு காரணம். சாமி நல்ல சாமிதான் ..பூசாரி சரியில்லை என்ற கதையாகி விடக்கூடாது. பார்க்கலாம்... என்ன நடக்கிறது என்பதை.
23. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byAbdulKader (Abu Dhabi)[31 October 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12632
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்.
அப்துல்காதர் என்ற பாதுல்அஷ்ஹப்பின்.... அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு!!
யார் உண்மையை எழுதுகிறார்..... யார் குழப்பம் உண்டாக்குகிறார்..... யார் அல்லாஹ்வை பயந்துகொள்கிறார்....????
வலையதலமா???...... ஒரு சில நபர்களா??? இல்லை... ஒரு சிறிய கூட்டமா????
மொத்தத்தில் குழம்பியவர்கள் ஊர் மக்கள்!! குறிப்பாக வெளிநாட்டில் வாழும் காயல்பதியின்மேல் அக்கறை கொண்டவர்கள்!!
எடுத்தவனுக்கு ஒரே எண்ணம்!! பறி கொடுத்தவனுக்கு பல எண்ணம்!!
மக்களே பொறுமையுடன் இருங்கள்! அல்லாஹ்வின் சோதனை காலம் தொடங்கிவிட்டது!
25. வெற்றி வாய்ப்பை இழந்தவர்களின் வழக்கமான கூப்பாடுதான் இது ... posted byV D SADAK THAMBY (Guangzhou ,China)[31 October 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 12634
பொதுவாக வெற்றிவாய்ப்பை இழந்தவர்கள் வழக்கமாக கூறும் குற்றச்சாட்டுதான் இது. இவர்கள் வெற்றிபெற்றால் ஜனநாயகம் வென்றதாக பறைசாற்றுவார்கள். தோல்வியுற்றால் ஒரே கூப்பாடுதான்.
தலைவரின் வெற்றிக்கு பெரும் பணம் செலவு செய்தவர்கள் துணைத்தலைவர் தேர்தலிலும் பணம் செலவு செய்து வெற்றிபெற முடியாமல் போய் இருக்கலாம் என்பதே உண்மை.
சென்றமுறை உங்களுக்கு வெற்றி என்றால், இம்முறை அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியை கொடுத்திருக்கிறான்.
இதற்காக கூப்பாடு போட்டு பயனில்லை. கூப்பாடு போடுவதில் வலைதளங்களும் விதிவிலக்கா என்ன?
ஏன் இதற்கும் தலையங்கம் எழுதுவதுதானே? எதற்காக விமர்சனம் எழுத வேண்டும்?
வெற்றிபெற்ற துணை தலைவரை மனதார வாழ்த்துவதுதான் சரியானது.
இன்னும் ஐந்து வருடங்களுக்கு இதே நிலைதான்.
ஏன் துளிர் அரங்கில் கூட்டம் போட்டது போன்று ஒரு கூட்டம் போட்டு துணை தலைவரை ஒருமனதாக தேர்வு செய்யவேண்டியதுதானே?
ஒற்றுமையாக, ஒருமனதாக என்று சொன்னால்தான் உங்களுக்கு பிடிக்காதே!
ஒ , ஜனநாயக உரிமை என்று இதையும் விட்டுவிடீர்களா?
வினை விதித்தவன் வினை அறுப்பான். தினை விதித்தவன் தினையையே அறுப்பான்.
26. உங்கள் சேவை தொடரட்டும்... posted byMohamed Buhary (Chennai)[31 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 12635
செய்தி விமர்சனம் வாசித்தேன்.
சிலர் கூறுவது போன்று சார்பு நிலையும் இல்லை; சார்பற்ற நிலையும் இல்லை; கச்சடாவாகவும் இல்லை. நடுநிலையோடும் நியாயத்திற்கான குரலாகவும் உள்ளதை எண்ணி மகிழ்கிறேன்.
காயல்பட்டினம்.காம் பிறப்பு இறப்பு செய்திகள், திருமண நிகழ்வுகள், ஊரில் நடைபெறும் சுப காரியங்கள் போன்றவற்றை மட்டுமே பதிவு செய்யும் தளமாக இருக்க வேண்டும் என எண்ணியவர்களிடமிருந்தே இது போன்ற கருத்துகள் வந்திருக்கும் என எண்ணுகிறேன்.
நாட்டை ஆளும் நான்கு தூண்களில் ஊடகமும் பிரதான அங்கம் வகிக்கிறது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. விரும்பியோ விரும்பாமலோ நமக்கு சார்புடைய கருத்துகள் மட்மே பதிவு செய்யப்பட வேண்டும் என எந்த அறிவு படைத்தவரும் நினைக்க மாட்டார். உண்மையை ஓங்கி முழங்க வேண்டும்.
காயல்பட்டினம்.காம் இப்போது ஊடகப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவருகிறது. எனவே, போற்றுவோரும் தூற்றுவோரும் நடுநிலை கண்கொண்டு எதையும் பார்க்கத் தவறிவிடக் கூடாது. தவறு இருப்பின், அதை நாகரிகமாக விமர்சிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
அட்மின் காயல்பட்டினம்.காம் பணிகளை மட்டுமே கவனிப்பார். அவர் வேறெந்த ஊடகங்களுக்கும் செல்ல வேண்டிய தேவையில்லை.
இன்றைய நவீன உலகில் மீடியா எனும் ஊடகம் பலமான ஆயுதம் என்பதை மறந்துவிடக் கூடாது.
27. நகர துணை தலைவர் posted byP.S.ABDUL KADER (jeddah)[31 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12637
அஸ்ஸலாமு அழைக்கும்
அன்பு சகோதரர்ஹலால் பல விமர்சனம், நகர தலைவிக்கு, துணை தலைவர் எடையூர் செய்யலாம் என்பது, இது நடக்காத காரியம்.
துணை தலைவர் நகர சபைக்கு தலைவி வராத நேரம் அவர் சபையை முன் நின்று நடத்துவார், தவிர எதுஉம் தலைவின் ஒப்புதல் இல்லாமல் இவரால் ஒன்றும் செய்ய முடியாது, இவர் எந்த அரசியல் கட்சி? ஆளும் கச்சி காரர....... இல்லையே பயப்பட வேண்டாம்.
மீண்டும் துணை தலைவருக்கு எனது கட்சியான அ.இ.அ. தி.மு.க. அடிப்படை உறுப்பினரக சேர அழைகிறேன்.
28. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byZainul Abdeen (Dubai)[31 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12638
காயல்பட்டணம்.காம் எப்போ விமர்சனம் செய்யும் டாட் காமாக மாறியது.
நீங்கள் நினைத்தவர்கள் வெற்றி பெற்றால் தலையங்கம் என்று ஒரு பெரிய கட்டுரையை வழங்குவீர்கள். இப்படி நீங்கள் நினைத்ததுக்கு மாற்றமாக ஒருவர் வெற்றி பெற்றால் அவரை வாழ்த்த மனம் வராமல் துப்பறிவு என்ற பேரில் விமர்சனம் அள்ளி வீசுவீர்கள் அபப்டிதானே !!!
எது எப்படியோ துணை தலைவர் தேர்வு முடிந்து எஸ்.எம்.முகைதீன் அவர்கள் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.
நீங்களும் உங்க பானாரில் தற்போதுள்ள தலைப்பை திருத்தி கொள்ளவேண்டும் , (துணைத்தலைவர் பொறுப்புக்கு யார் வர வேண்டும் )
29. பொருள் : தீமையை பரவலாக்கும் அபாயம் !! posted byArabi Haja (Hong Kong)[31 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12639
தம்பி சாளை பஷீர் பதிவு செய்துள்ள கருத்தை நானும் ஆதரிக்கிறேன். நமதூரில் ஒரு ஊழல் கண்காணிப்பு குழு (Watch Dog அமைப்பு) உருவாக்கப்பட வேண்டும். அது நகராட்சி நிர்வாகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் அரசின் திட்டங்கள் முறையாக மக்களுக்கு சென்றடையும் வழிமுறைகளை கண்காணிக்க வேண்டும்.
சென்ற முறை 'அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில்' ஒதுக்கப்பட்ட நிதி முறையாக மக்கள் (குறிப்பாக ஏழை எளிய மக்கள்) நல திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல், மன்ற உறுப்பினர்களும், ஆண்ட (தி. மு. க ) கட்சி நகர நிர்வாகிகளும் பிரித்து பங்கு போட்டதை, ஐயா. திருத்துவ ராஜ் அவர்கள் ஐ. ஐ. எம். நடாத்திய 'நகராட்சி நிர்வாகம்- ஒரு அலசல் இல் வேதனையுடன் வெளிப்படுத்தியதை நாம் அனைவரும் கேட்டோம்.
இங்கே சில விவரம் தெரிந்தும் தெரியாதது போல் பாசாங்கு செய்யும் சில பரிதாபத்திற்குரிய சகோதரர்கள், அரைத்ததை அரைப்பதாக எழுதுவது, ஆலோசனை கூறுவதும் ஏற்புடையதல்ல.
இந்த தீமை உங்கள் வீடுகளை, மக்களை சூழும் வரை உங்களுக்கு கவலை இல்லை. ஆனால் சமூக பிரஞ்சை உள்ளோர் இதை நாளைய தலைமுறையை சீரழிக்கும் காரணியாக பார்ப்பர்.
டாக்டர் கே.வீ. எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள், தீமையை இனம் காணுவதும், அதை தீமைதான் என்று மக்களிடம் அடிக்கடி வலியுறுத்தி புரியவைப்பதும், தீமையை தடுப்பதற்கான முதல் காரணி என்பார். அதை செய்ய தவறுமேயானால் மக்கள் தீமைக்கு பழக்கப்பட்டு அதை ஏற்கும் மனோநிலைக்கு வந்து விடுவர் என்பார். இது 'நஹ்யு அணில் முன்கரி' (தீமையை தடுத்து நிறுத்துவதி) ன் முக்கிய படித்தரம் என்பார்.
இதுதான் இன்றும் இந்த ஊரில் நடக்கிறது. தம்பி குளம் ஷுஐபும் 'இதுதான் நேற்றும் (காதிரிக்கு)நடந்தது. இன்றும் நடந்துள்ளது. என்கிறார். இந்த தீமையை- நன்மை என- ஏற்போமா ? நடக்க அனுமதித்து விடுவோமா ?
இந்த வலைய தல நண்பர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். காரணம் அவர்கள் நகரில் அரங்கேறும் பல நிகழ்வுகளை மக்கள் பார்வைக்கும் அவர்களின் கருத்திற்கும் துணிந்து அனுமதிக்கின்றனர். இது தீமையை நாடுவோரை, அதை துணிந்து செய்வதை தடுக்கும் வழி முறை.
எங்களில் 'யாருக்கும் வெட்கமில்லை' என்றும் 'ராமன் ஆண்டால் என்ன ? ராவணன் ஆண்டால் என்ன ?' எனும் மனோ நிலையை உருவாக்க முற்படுவோமேயானால், நமது அடுத்த தலைமுறை நம்மை நிச்சயம் மன்னிக்காது.
எனவே தயவு செய்து இந்த வலைய தளத்தில் தீமையை அழிக்கும் ஆலோசனைகளை பதியும் சகோதர்களை உற்சாகப்படுத்தாவிட்டலும் பரவாயில்லை - உதாசீனப்படுத்தாதீர்.
இந்த ஊருக்கு அடிப்படை பள்ளி கல்வியை ஆண் பெண் பாலாறுக்கு அளிக்கவும், ஊருக்கு குடிநீர் திட்டத்தை கொண்டுவரவும், பள்ளிவாயில்கள் கட்டவும், இன்னும் ஊருக்கு நல்ல பல நன்மைகளை நிறைவேற்ற தங்கள் பொருளை அள்ளித்தந்த ஒரு கண்ணிய மிக்க வணிக குழுமம், இன்று அந்த குடும்பத்தில் தோன்றிய சில [edited] கண்ணியம் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் நிதி தீமைக்கு பகிரங்கமாக வாரி இறைக்கப்படுகிறது. இது இதை நிறுவிய அந்த பெரியவர்களுக்கு செய்யும் மாபெரும் அநீதி. இனியும் இதை விட்டு வைக்காமல், தடுத்து நிறுத்த அந்த குடும்பத்தார் முன்வரவேண்டும் என்பதை என் வேண்டு கோளாக வைக்க விரும்புகிறேன்.
எது எப்படியாயினும், காயல்.காம் உண்மையை வெளிக்கொணர்வதில் தயவு தாட்சண்யம் காட்ட வேண்டாம்.
30. மறுபடியுமா? posted byNoohu T (Maana Paana)[31 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12640
இப்போதான் சிக்கி முக்கி விக்கி தேர்தல் முடிந்து ஒரு வகையா முடிவுக்கு வந்துட்டன்கப்பா என்று பார்த்தல், இன்னும் பின்னி பெடலை எடுத்து கொண்டுதான் இருக்காங்க.......
முதல் பிரச்னையே என்னன்று தெரிவதற்குள் அடுத்த "எபிசோடா"
பால் குடிக்காத குழந்தையும், பாலூடாத அம்மாவும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லே....
31. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[31 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12641
எங்கள் ஊரில் இருந்து (அல்கோபார்), அருமை சகோதரர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள் மிக அருமையான யோசனை கூறியுள்ளார்கள். அவரின் கமெண்ட்ஸ் ...
_____________________________________________
நமது ஊரில் ஆங்காங்கே பாசதும், பித்னாவும், புதிய புதிய கொள்கைகளும் நிறைந்து வழிந்து மலிந்து கிடக்கிறது.
இவைகள் ஒழிய ஐக்கிய பேரவையை மாற்றி - சுன்னத்துவல் ஜமாஅத் ஐக்கிய பேரவையாக மாற்ற வேண்டும், இதுதான் நல் வழி.
posted by Mohamed Abdul Kader (Al Khobar)
---------------------------------------------
அனைவர்களும் ஐக்கிய பேரவையை எப்படி வலு உள்ளதாக, யாருடைய தனிப்பட்ட தலையீடும் இல்லாத, அனைத்து மக்களுடைய (மாற்று மதத்தவர்கள் கூட) நம்பிக்கைக்கு பாத்திரமான அமைப்பாக ஆக்கனும் என்ற ஆவலில் இருக்கின்றார்கள். ஆனால் இவரோ வேறு கோணத்தில் சிந்திக்கின்றார்.
அவர் கூறிய மாதிரி பேரவையை "சுன்னத்துவல் ஜமாஅத் ஐக்கிய பேரவையாக " மாற்றி விட்டு, அதில் காதிரிய்யா பிரிவு என்று ஒன்று, சாதுலியா பிரிவு ஒன்று, கொடிமர பிரிவு ஒன்று, முஹிதீன் பள்ளி பிரிவு ஒன்று, ஜலாலியா பிரிவு ஒன்று ... இப்படி பல பிரிவுகளாக பிரித்து விடலாம்.
'ஒற்றுமைக்கு' வழியை பாருங்கள் என்றால் 'ஒவ்வாமைக்கு' அதான் 'அலர்ஜிக்கு' வழி சொல்லுகிறார்.
இதன் பெயர் தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதைக்கு முன்னோற்றமோ..
32. விமர்சனம் என்ற பெயரில் விசமித்தனம்.....! posted byzubair (riyadh)[31 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12642
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு இஸ்லாமிய மக்களே.....
அண்மை காலமாக ஃபசாதுக்கு துணை போகும் நமது காயல்பட்டினம் டாட் காமின் நிலையை பார்த்து மனக்கஷ்ட்டமே......... இந்த போக்கை அவர்கள் இனியும் துடருவதாயின் அவர்கள்.... அவர்களின் நடுநிலை நாடகத்தை களைந்து இனம் காட்டும் முகமாக முகத்திரை அகற்ற வேண்டும்.
மற்ற ஊர்களை விட நம் ஊர் வித்தியாசப்பட்டவை எல்லோரும் உறவுமுறையில் (சொந்தம்கள்) பிணைந்து கிடப்பதால்.... ஒரு குடும்பம்போல்தான். குறைகள் இருந்தாலும் ஒற்றுமைக்கு வேண்டி குறைகளை மறைத்து பொய்யை ஒன்றை சொல்லியாவது ஒற்றுமையை நிலை நாட்டத்தான் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே... தவிர உண்மையைத்தான் எழுதுகிறோம் என்ற பெயரில் விசமித்தனத்துக்கு துணை போனால்.... உறவு விரிசல்கள் கூடும் ஆபத்து. கவனம் வேண்டும் அட்மின் அவர்களே..... வஸ்ஸலாம்.
34. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted bySithan Niyaz (Riyadh - KSA)[31 October 2011] IP: 155.*.*.* United States | Comment Reference Number: 12645
ஒரு வேண்டுகோள்! Click here to post your comment about this news என்பதற்கு பதிலாக POST YOUR ARTICLE ABOUT THIS நியூஸ் என்று மாற்றினால் சூப்பரா இருக்கும்! நிறைய பேருக்கு கமெண்ட்ஸ் வாசிக்க டைம் இல்லை.
35. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byAbdul cader (chennai)[31 October 2011] IP: 220.*.*.* India | Comment Reference Number: 12646
one kayalpatanam bigwig tried to bring his man as vice president by giving substantial amount to the members. the members also bought this amount through above said bigwigs Hench man as they considered that this amount would bring enrichment to their lives,but this amount would make them impoverish. such a practice of giving and getting bribe is against ISLAM. bribing practice is fore-bidden by almighty ALLAH.
WILL HE EVER STOP THIS PRACTICE OF BRIBING????????????????
WILL HE EVER BE ABLE TO REALIZE HIS MISTAKE???????????????
WILL HE EVER TRY TO CORRECT HIS FLAWS BEFORE ALLAH PUSH HIM INTO PENURY???????????????
37. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byhasbullah mackie (Dubai)[31 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12648
அன்புள்ள புஹாரி அவர்களே....
கருத்து சுதந்திரம் இருப்பது நல்லது, ஆனால் மார்க்கத்தின் அடிப்படையில் இது தேவை தானா என்று தெரிந்து கருத்துக்களை வெளியிடுங்கள் .. இதை ஒரு நக்கீரன் அல்லது ஆனந்த விகடன் பத்திரிகைகள் போல் ஆக்காதீர்கள்.
ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்... இதன் மூலமாக ஒரு பசாத் ஏற்படும் என்றல் அந்த விஷயத்தை நிறுத்தி விடுங்கள்... ஒரு முறைதான் மரணம் வரும்....
நடந்த உண்மைகள் தெளிவாக தெரியும் என்றால் தைரியமாக அவர்களின் பெயரையும் வெளியிடுங்கள். நீங்கள்தான் தெளிவு இல்லாமல் செய்திகளை வெளியிடுவதில்லையே அதை மட்டும் மறைமுகமாக வைப்பதுதான் முறை.. அல்லாஹ்விற்கு பயப்படுங்கள் ...மனிதர்களுக்கு அல்ல.....
38. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byCNash (Makkah )[31 October 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12649
இந்த செய்தியை போடுவதால் என்ன லாபம், வீண் சச்சரவுகள்தான் வரும் என்று ஒரு கூட்டம் எப்போதும் போல அவர்களுக்கு மட்டும்தான் ஒற்றுமை சொந்தம் என்பது போல கருத்து சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்!! இந்த லாபம் நஷ்டம் சச்சரவு கணக்கு பார்ப்பது என்பது ஊர் பிரச்சனைகளில் மட்டுமே, ஆனால் தாங்கள் தனிப்பட்ட முறையில் பாதிப்போ, தாங்கள் சார்திருக்கும் கொள்கைக்கும், கட்சிக்கும் எதிராக எது நடந்தாலும் முந்திக்கொண்டு மூக்கை நுழைப்பார்கள்... அதற்க்கு எந்த பாதிப்பும் வராத வரை அவர்களுக்கு மும்தாஜை காணோம், சூரியனை காணோம் என்ற செய்திகள் மட்டுமே அவர்களுக்கு சந்தோஷம் கொடுக்கும்!!
இன்னும் சிலருக்கு பெரியவர்கள் போஸ்ட் கம்பம் பக்கத்தில் இருந்து போஸ் கொடுக்கும் செய்தி தித்திக்கும்....
மழை நீர் தேங்கி நிற்பதை தலைவர் என்ற முறையில் பார்வை இட சென்றால் விளம்பரம்... மீடியாலே வருவதற்கு செல்கிறார் என்று கேலி நக்கீரன் தினதந்தி என்று கிண்டல்!!!
எவன் எக்கேடு கெட்டும் போகட்டும்.. ஊரை ஒரு விலை வைத்து வாங்கினாலும் ஒற்றுமை மட்டும் கெட கூடாது!! என்ன ஒரு அக்கறை!! பள்ளியில் செருப்பு காணோம் என்று செய்தி போட்டால் குதுகலிக்கும் அன்பர்கள் தன்மானம் சிலரால் கொள்ளை அடிக்கப்பட்டு காணமல் போய் கொண்டு இருக்கிறது என்று செய்தி வரும்போது எரிச்சல் வருகிறது.
இணையதளத்தையும் அதன் ஆசிரியரையும் சாடல், நடுநிலை தவறிய முத்திரை!!!! ...
முதலில் ஒன்றை நினைவில் பதித்து கொள்ளுங்கள்... இது பொருளாதார தேவையை நிறைவேற்ற, வியாபார நோக்கில் நடத்தப்படும் இணையதளம் இல்லை என்பதை மட்டும் உங்களுக்கு தெரியாவிட்டாலும்.. இதன் தொடர்பில் உள்ள உங்கள் தோழர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு உங்கள் கருத்துக்களை கொட்டுங்கள்!!
உங்கள் விருப்ப செய்தி மட்டும்தான் போடணும் என்றால் தேவைபடுவோர் தாங்களுக்கு தாங்களே BLOG அமைத்து பார்த்துகொள்ளலாமே!!! எதற்கு சமூக அக்கறை உள்ள செய்திகள், அதனால் தொல்லைகள்!!! ஏன்? இது போன்ற காயல் இணையதளங்கள் பலரின் கண்களை திறந்ததுதான் இன்று சிலரின் கண்களை உறுத்துகிறதா?
நண்பர் ஹபீப் ரஹ்மான் நீங்கள் கூட பல சமயம் தேர்தல் செய்தியால் வெறுப்பு அடைகிறீர்கள்... ஆனால் உங்கள் கருத்துகள் எல்லாம் தேர்தல் செய்தி வந்த பிறகுதானே காண முடிகிறது.. மற்ற செய்திகளுக்கெல்லாம் கருத்து எழுதாதவர்... தேர்தலுக்கு மட்டும் விஷேசமாக கருத்து பதிவு செய்து தேர்தலில் போட்டி இட்ட தலைவியை ஒதுங்கி கொள்ளுகள் என்று அறிவுரை சொல்லும் வரை போன உங்கள் கருத்துக்கள் எல்லாம் மதிக்கப்பட்டு பிரசுரம் செய்யபடனும் ஆனால் அதற்கு எதிரானவர்கள் சொல்லும் நியாயமான கருத்துக்களால் உங்களுக்கு கருத்து பகுதியே கசக்கிறது இப்போது!!!
அப்படி என்றால் யார்தான் இது போன்ற அநியாயங்களை தட்டி கேட்க வேண்டும்? இதுபோன்ற பணம் படைத்தவர்கள் கையில் உண்மையை அடகு வைத்து தான் நம் ஒற்றுமையை வாங்கனுமா? 5வருடம் அரசியல் சாக்கடையில் மூழ்கி பதவிகளை பகடைகளாக மாற்றி கொண்டு நம்மை கொள்ளை அடிக்கும் அவர்களுக்கு நாம் கூட 5 வருடம் சம்பாதித்தது போதாதா அடுத்தவன் சம்பாதிக்கட்டும் என்று கேட்கும் அளவிற்குதான் கொள்ளையை கூட சம்பாத்தியம் என்ற பேரில் ஒரு கொள்கையாக மாற்றி நற்சான்றிதழ் கொடுக்க பழகி இருக்கிறோம்!!
இதற்கு என்னதான் முடிவு எல்லோரும் சிந்தித்து நல்ல உறுப்பினர்களை தேர்தெடுக்க முயற்சித்து முடிவாக நம் கையில் கரும்புள்ளி வைத்து ஒட்டு போட்டு விட்டு அந்த கருப்பு புள்ளி அழியும் முன்னே நமக்கே கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அழிக்க துணிந்து விட்ட சில கருப்பாடுகளை களை எடுப்பது யார்?
...இவர்கள் அல்லாஹ்வை முன்னிறுத்தி சத்தியம் செய்ததை அவர்கள் மறக்கலாம்... நாமும் சேர்ந்து மறக்கணுமா!! மக்கள் விழிப்பதற்கு இணையதளம் ஒரு தளமாக இருப்பது கூடவா சிலருக்கு கண்ணை உறுத்துகிறது!!!
நடக்கின்ற நிகழ்வுகளை கேட்கும்போது, சில மனிதர்கள் ஏன் இப்படி தரம் தாழ்கிறார்கள்!! அல்லாஹ் அவர்களை அந்தஸ்தில் உயர்த்தி வைத்தும் தாங்கள் கைகளாலே தீங்கை பணம் செலவழித்து வாங்கும் இவர்களை பற்றி என்னதான் சொல்லுவது!!
அரசியலில் மூழ்கி போனவர்களுக்கு தேர்தல் என்பது மூலதனம்.. மற்ற ஐந்து வருடங்கள் அறுவடை நாட்கள்!! ஆனால் இதுபோன்ற அறியாமையில் மூழ்கி போன பணக்காரருக்கு.... என்ன சொல்லுவது....? சந்தனம் மிஞ்சினா.................. ஆனால் இவரோ மிஞ்சிய சந்தனத்தை சாக்கடையில் தடவுகிறார்.... சாக்கடை மணக்குமா? ....இல்லை சந்தனம் நாறுமா? பொருத்து இருந்து பார்ப்போம்.
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு செல்வத்தை கொடுக்கிறான்.. அதன் மூலம் பல செல்வந்தர்கள் அவனுடைய பாதையில் செலவு செய்து அவனுடைய பொருத்தத்தை பெற்றவர்களாக சுவர்கத்தில் நுழைவார்கள்... அதே செல்வத்தை சிலருக்கு சோதனையாக ஆக்கி இருக்கிறான்... அச்சோதனைகுள்ளானவர்களில் ஒருவராக நம் சகோதரரும் தம் செல்வத்தினால் மறுமையில் இழிவடைந்து நிற்க கூடாதே என்ற நல்லெண்ணத்தில் கூறுகிறோம்.
அத்தகையோருக்கு உடன் இருப்போர் உலக லாபத்திற்காக இவ்வுலக நன்மைகளை மட்டுமே எடுத்து சொல்லி மறுமையை மறக்கடிக்க செய்கின்றனர்... அவருடைய இரு உலக நன்மையை நாடும் ஒரு சிலர் இந்த தீமைகளை (உண்மையில் அவர் அவ்வாறு நடந்து இருந்தால் உங்களுக்கும் தெளிவாக தெரியும்பட்சத்தில்) எடுத்து சொல்லி மறுமை வெற்றியை நோக்கி அழைத்து செல்லுங்கள்!!!
அல்லாஹ் உடைய பாதையில் உங்கள் பொருட்களை செலவு செய்யுங்கள் படைத்தவனின் அருளும் பயன் அடைந்தவர்களில் துவாவும் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு துணை நிக்கும் .. இந்த பச்சோந்திகள் இன்று உங்களுடன் இருக்கும் நாளை வேறு மரம் காணும் போது நிறமும் கூடவே மாறும்..... உங்களை நீங்கள் புரிந்து கொள்ளுகள்.... பலத்தையும் பலவீனத்தையும் சேர்த்து!!!
39. தொடரட்டும் உங்கள் சேவை ... posted byM Sajith (DUBAI)[31 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12650
இத்துனை நாளும் வெறும் பிறப்பு, இறப்பு செய்திகளும், யானை நகர்வலமும், கல்யான சீசனிலில் காயல் கதைகளும் மட்டுமா எழுதி வந்தது இந்த காயல்பட்ணம்.காம் ?
இடையிடையே மிகவும் முக்கியமான தகவல்களாக, DCW தொடரான கட்டுரைகளையும், புற்று நோய் குறித்த தகவல்களையும் தந்து வந்ததே - அதுவும் கமெண்டுகளுடன் - அப்போ யாரும் கமென்டை முடக்கு, நக்கீரனில் வேலை தேடு என்று சொல்லத்தோனாதது ஏனோ..?
வரிந்துகட்டி DCW-ஐ நாளைக்கே மூடவேண்டும் என்று கமெண்டு எழுதிய கைகள் இன்று 'பசாது' என்றும் விமர்சனம் என்றும் ஏழுதுவது எதனால்..?
சகோதரர் ஹாஜா அரபி சொன்னது போல புற்று நோய் தங்களின் வீடுகளிலும் சொந்தங்களையும் பறித்து செல்வதால் ஏற்பட்ட வேகமா..? அப்படித்தான் என்றால் பொறுங்கள், கடல் கடந்து மனைவி மக்களை பிரிந்து வாயையும் வயிறையும் கட்டி சேமித்த தங்களின் சேமிப்புகள் மிக விரைவில் மோசடிகளில் மாட்டி வீட்டுக்கும் கோர்ட்டுக்கும் அலையும் போது இதே வீரியம் வரும்...
இல்லை, இந்த இனைய தளங்கள் செய்தி வெளியிட்டு உங்கள் பிழைப்பில் மன்னை போடுவதால் பொறுக்க முடியாமலா ?
அல்லது எப்படியாவது தகவல் தரும் தளங்களை முடக்க ' முழு நேர' பனியாளர்களாக இவர்களும் 'PAY ROLL'-ல் சேர்க்கப்பட்டுள்ளார்களா?
--------------------------------------------
மதிப்புக்குறிய அட்மின்;
துனிந்து எழுதுங்கள், உங்கள் செய்திகளுக்காக அக்கரையுள்ள கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
விளையாட்டாக அரம்பித்தாலும் இன்று நம் நகருக்கு இந்த செய்திச்சேவை இன்றியமையாத ஒன்று.
தொடருங்கள் உங்கள் கடமையை, இம்மை மறுமை இரண்டிலும் இறைவன் அதற்கான பலனை தருவான் என்ற நம்பிக்கையில்...
அம்புலிமாமாவும், குமுதமும் படிப்பவர்கள் அதையே படிக்கட்டும் - காயல்பட்டணம்.காம் செய்திகளும் அதில் மக்கள் எழுப்பும் குரல்களையும் படிக்க நாங்கள் இருக்கிறோம்.
40. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byahamed.s.i. (colombo)[31 October 2011] IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12653
தம்பி சுஹிப் சொல்லுவது போல் நாம் வார்டு உறுபேனர்களை தேர்ந்தெடுக்க சரியான கவனம் செலுத்தவில்லை .வெற்றி பெற்றாவர்கள் பெரும்பாலனோர்....... கேள்விக்குறியே ? குரங்கு கையெல் குடலை கழுவி கொடுத்ததுபோல் இஎருகுது.
41. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[31 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12654
சகோதரர். வி.டி. சதக்குத்தம்பி,
மிசிரியாவுக்கு எதிராக ஆபிதாவை நிறுத்தியது போல இங்கு துணைத்தலைவர் தேர்தலுக்கு எந்த அமைப்பும் யாரையும் நிறுத்தவில்லை. எனவே இங்கு வெற்றி தோல்வி என்ற பேச்சக்கே இடமில்லை.
தேர்தல் நேர்மையாகவே நடைபெற்றது. அதில் சந்தேகமில்லை. ஆனால் அதில் நடந்த உள்ளடி வேலைகள் உருட்டல் புரட்டல்கள் யாவரும் அறிந்ததே. இதையும் ஒரு வெற்றி எனக்கொன்டாடும் சதக்குத்தம்பி போன்றவர்கள் ஆபிதாவின் வெற்றியால் எவ்வளவு துவண்டு பொய் இருக்கிறார்கள் என்பதை நாம் அறியமுடிகிறது.
"பொய்யும் புரட்டும் துணையாய்கொண்டு இருந்தவர் எல்லாம் போனாங்க,,, மூலைக்கு மூலை தூக்கி எரிந்து தலை குனிவாக ஆனாங்க,,, ""சூரியன் உதிச்சுதுங்க இங்கே காரிருள் மறைந்சுதுங்க.. சரித்திரம் மாறுதுங்க இனிமே சரியாய் போகுமுங்க.. என்று பாடத்தோன்றுகிறது.
42. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byசாளை நவாஸ் (singapore)[31 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 12655
நானும் ஊர் வந்து இரண்டு நாள் ஆச்சு, இணையத்தில்தான் இவ்வளவு விவாதிக்கிறோம், ஆனால் ஊரில் அதை பற்றி யாரும் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. மழை வேறு விட்டு விட்டு அடிப்பதால் பஜாரில் அவ்வளவு கூட்டம் இல்லை.
இன்று சாயங்காலம் கடற்கரை சென்று இருந்தேன், செந்நிறமாக காட்சியளித்தது. எங்கே ஒற்றுமையை காட்டி போராட்டம் பண்ணணுமோ அதையெல்லாம் கோட்டை விட்டு விட்டு 50 க்கும் 75 க்கும் விலை போய் கொண்டிருக்கிறோம்.
43. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byHabeeb Rahman (DUBAI)[31 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12659
லஞ்சம் கொடியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! அது தண்டிக்க பட வேண்டியது என்பதில் கருத்து வேற்பாடுகள் இருக்க முடியாது.
ஆனால் அதுதான் இப்போது தலையாய பிரட்சினையா? அது நமதூரில் மட்டும்தான் இருக்கின்றதா? இந்தியா முழுவதும் அல்லவா வியாபித்திருக்கின்றது. இது இங்கு பேரவையை எதிர்த்தால் மட்டும் தீர்ந்து விடுமா? அதை விட தலையாய பிரட்சினைகள் நமக்கு இல்லவே இல்லையா?
இங்கு ஒரே கொள்கையை போதிக்கும் ஒரு இயக்கம் ஒரு சில வருடங்களிலேயே உடைந்து சிதைந்து ஒன்பதாக பிரிந்து தத்தம்மில் தர்க்கம் பேசி அடித்து கொள்வதை, நான் மட்டும் அல்ல, இங்கு நல்ல கருத்துகளை பதித்த சில் சகோதரர்கள் கூட பார்த்து வேதனை அடைந்திருப்போம். நாம் கரித்து கொட்டிக்கொண்டு இருக்கும், பேரவையில் உள்ள சில விசமிகள், அப்படி என்னதான் செய்திர்ப்பார்கள்? நம் பெண்களை மானபங்க படுத்தினார்களா? இல்லை நம் சகோதர்களை வெட்டி கொன்றார்களா? இல்லை நம் வீடுகளையும், கடைகளையும் சூறையாடினார்களா? இல்லை நம் பள்ளிகளை தீக்கிரையாக்கினர்களா?
இதை ஒவ்வொன்றையும் ஒவ்வரு நாளும் சந்தித்து கொண்டு இருக்கின்றார்கள் நம் வட நாட்டு சகோதர்கள் குறிப்பாக குஜராத்தில்! அங்கு போய் பாருங்கள்! முஸ்லிம்கள் பெயரை சொல்லக்கூட பயப்படுவார்கள்! இதற்கு காரணம் கயவர்களின் சதி மட்டும் அல்ல! நம்மிடையே ஓற்றுமை இல்லாதததும் என்பதை மறுக்க முடியாது. தமிழ் நாட்டைவிட முஸ்லிம்கள் குறைவாக இருக்கும் நம் அண்டை மாநிலம் கேரளாவை பாருங்கள். அவர்கிளிடையே ஓற்றுமை இருப்பதால்தான் நம்மை விட கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்து நிற்கின்றார்கள்!
நம்மை போன்று அவர்களிடையேயும் பல கொள்கைகள் இருந்தாலும், சேர வேண்டிய இடத்தில, நேரத்தில் சேர்ந்துகொன்று குரல் கொடுப்பார்கள்! நாம் இதே நிலையில் போய்கொண்டு இருந்தால் மேலே சொன்ன குஜராத் நிலை நமக்கும் ஏற்பட அதிக நாள் தேவை இல்லை! அல்லாஹ் காப்பாற்றட்டும்! நான் சொல்ல நினைப்பது லஞ்சத்தை விட்டுவிட்வோம் என்றல்ல! மாறாக ஒரே அணியில் ஒற்றுமையாக இருந்து ஒழிப்போம் என்று!. கடினமானதுதான்! ஆனால் முடியாதது அல்ல! ஓற்றுமை பழைய பல்லவிதான்.ஆனாலும் அது மீண்டும் மீண்டும் பாட வேண்டிய பல்லவி! "ஐயா ஒற்றுமை திலகமே" என்ற நக்கலை கேற்க நேர்ந்தாலும் பரவா இல்லை! ஒற்றுமையை மீண்டும் மீண்டும் சொல்வேன்!
"மு'மீன்களே அல்லாஹ்வின் ஓற்றுமை என்ற கையிற்றை பற்றிபிடித்து கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்!" - திருக்குர்ஆன். ( எனக்கு குர்'ஆனைதான் ஆதாரமாக காட்ட தெரியும். நான் வேஜிடேரியங்களை நரகத்திற்கு அனுப்பும் குறளை அல்ல!)
44. இம்மை வாழ்விலே அல்லாஹ்! அவர்களுக்கு சோதனைகளை......... posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[31 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12660
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த செய்திகளை வலைத்தளத்திலே படிக்கும்போதும் , பிறர் சொல்ல காதால் கேட்கும்போதும் மனம் வேதனை அடைகிறது.
இவை எல்லாம் நடப்பதற்கு காரணம் மக்களிடம் வெட்கம் (ஹயா) என்பது இல்லை - வெட்கம் ஈமானில் ஒரு பகுதி என்பதை மறந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
மக்களில் பெரும்பாலோர் மார்க்கத்திற்கு கட்டுப்படுவதில்லை, மார்க்க அறிவை முறையாக கற்பது இல்லை ஆனால் மார்க்கம் பற்றி மிக அழகாக பேசுவார்கள்.
சம்பாத்தியம் ஹலாலா? அல்லது ஹராமா? என்பதைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை - வருவாய் வந்தால் சரிதான் என்றிருக்கிறார்கள் - இந்த நிலை நீடித்தால் அவர்களின் இம்மை - மறுமை வாழ்வு என்னவாகும் ? மக்களே! சிந்தியுங்கள்!!!.
-------------------------------------------------
காயல்பட்டணம்.காம் :
காயல்பட்டணம்.காம் என்ற இந்த வலைத்தளம் எல்லா தரப்பு செய்திகளையும் தருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை - ஆனால் சில செய்திகள் / கருத்துக்கள் - சட்ட சிக்கலை தரக்கூடியவைகளை கடந்த தேர்தல் காலத்தில் தவிர்த்திருக்கலாம் / தவிர்க்கப்பட வேண்டியவையே.
சில சகோதரர்கள் வலைத்தளங்களிலே எழுதுகிறார்கள் / வேண்டுகிறார்கள் தேர்தல்தான் முடிந்து விட்டதே! இனிமேல் எதற்காக இந்த செய்திகளைப் பற்றி எழுதி மக்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்று?.
சகோதரர்களே! அப்படி நீங்கள் நினைப்பது தவறு - தேர்தலுக்கு முன்பு எழுதியது - ஒருவேளை! போட்டியிடுபவர்களுக்கு விளம்பரமாக கூட அமைந்துவிட வாய்ப்பு உண்டு - ஆனால் இன்று தேர்தல் முடிந்த பின் வரக்கூடிய செய்திகள்தான் மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது / அமையவும் வேண்டும்.
அதனால் இப்பொழுது நகர்மன்றத்தை / அதன் அங்கத்தினர்களை பற்றிய செய்திகள் நிறைய வரவும் பயனுள்ளதாக அமையவும் நாம் எதிர்பார்க்க வேண்டும் - வலைத் தளங்களும் தவறாது, குறைவின்றி தந்து அவைகளில் உள்ள நல்லவை , கெட்டவைகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.
இருந்த போதிலும் அவசியமற்ற - அல்லது சட்ட சிக்கலை உண்டுபண்ணுகிற செய்திகளை கவனமாக பார்த்து அவைகளை வெளியிடாது தவிர்ப்பது மிகவும் சிறந்தது.
-----------------------------------------------
14 உறுப்பினர்களும் அல்ல :
14 உறுப்பினர்களும் விலை போய்விட்டதாக சொல்கிறார்கள் அந்த செய்தி தவறாகவே தெரிகிறது.
ஓரிரு உறுப்பினர் விலை போகவில்லை என்பதாகவும் ஓட்டுப்போட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது - ஓட்டுப்போட்டதில் தவறு இல்லை ஆனால் விலை போனால்தான் தப்பு.
அதனால் தயவு செய்து எல்லோரும் 14 உறுப்பினர்கள் என்று அனைவரையும் குற்றம் சொல்லி பாவத்தை சுமக்க வேண்டாம்.
--------------------------------------------------
அல்லாஹ்வின் தண்டனை :
இலஞ்சம் வாங்க மாட்டேன் / கொடுக்க விடமாட்டேன் என்று இறைவன் மேல் ஆணையிட்டு மக்களிடம் ஓட்டு பெற்று - வெற்றிபெற்ற பின்பும் அதே சத்தியத்தை மக்கள் முன்னிலையிலே உறுதிபடுத்திவிட்டு - சத்தியத்திற்கு மாறு செய்தால் அவர்களுக்கு இறைவனால் தண்டனை இந்த உலகிலேயே அதுவும் அவர்களுடைய இந்த ஐந்துவருட பதவி காலத்திலேயே கிடைக்கும் / கிடைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.
இந்த துணைத் தலைவர் தேர்தல் மட்டுமல்ல - நகராட்சித் தேர்தலிலும் யார், யார் எல்லாம் ஓட்டுக்காக பணம் கொடுத்தார்களோ அவர்களுக்கும் - தான் செய்த தவறு மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக / மறைப்பதற்காக அடுத்தவன்தான் இந்த தவறுகளை செய்தான் / செய்கிறான் என்று நாடகமாடி மக்களை திசை திருப்ப செய்தவர்களுக்கும் அல்லாஹ்வின் தண்டனை கிடைக்கும் / கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
--------------------------------------------------
சாபமிடுவதேன் :
ஊரும் , ஊர் மக்களும் அனுபவித்து வருகின்ற துன்பத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் - வருங்காலத்தில் நமது சந்ததியினர் இந்த துன்பங்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று எண்ணிய மக்களுக்கு - தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களின் உறுதிமொழி மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது.
ஆனால் இப்பொழுது நடந்ததோ? நேர்மாற்றமான செயல் மட்டுமில்லாமல் - வருங்காலமும் நம்பிக்கையின்மையை அளிக்கும்போது அப்படி துரோகம் செய்தவர்கள் மீது சாபமிடாமல் என்ன செய்ய முடியும்.
அவர்களுடைய மறுமை வாழ்வு சிறக்கட்டும் - ஆனால் அவர்களின் இம்மை வாழ்விலே அல்லாஹ்! அவர்களுக்கு கடுமையான சோதனைகளை கொடுத்து அதன்மூலம் மற்றவர்களும் படிப்பினை பெறுவார்களாக.
46. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byS.A.Muhammad Ali (Dubai)[31 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12670
அஞ்சு வருசத்திற்கு ஒரு முறை கோபம் வந்தால் ஆட்சி மாறும்.
அப்போ அப்போ கோபம் வந்தால்தான் அசிங்கங்கள் அழியும்.
லஞ்சம் வாங்காத உறுப்பினர்கள் ஒதுங்கி இருப்பதை விட அவர்களிடம் யாராவது லஞ்சம் கொடுக்க முன் வந்து இருந்தால் அவர்களை பற்றி பகிரங்கமாக புகார் கொடுக்க வேண்டும்.
அவர்களின் உறுதி மொழி - லஞ்சம் வாங்கவும் மாட்டோம் கொடுக்கவும் விட மாட்டோம் என்பது தானே?
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே.
லஞ்சம் வாங்கும் நெத்திலிக்களை மட்டும் அல்லாது கொடுக்கும் சுறாக்களையும் தண்டிக்க வேண்டும்.
தன்மானத்தை இழந்து இது போன்ற சில்லறை நபர்களிடம் அன்பளிப்பு என்ற பெயரில் எந்த இயக்கமும் நன்கொடை வாங்குவதும் ஹராம் என்று அறிவிக்க வேண்டும்.
தேர்தல் அல்லாத நேரத்தில் மார்க்கத்தை பேசும் சிலரும் இது போன்ற ஹராமான செயல்களை நம் சமூகத்தவர்கள் செய்கிறார்கள் என்று அறிந்தும் அதை தடுக்க மறுக்கிறார்கள், என்ற செய்திகளை கேள்விபடும்போது போது மிக வேதனையாக உள்ளது.
.................................
மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)
நீங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள்... (IFT தமிழாக்கம்)
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்....(ஜான் டிரஸ்ட்)
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்
இறைவனின் கயிற்றில் லஞ்சமும் இல்லை, துரோகமும் இல்லை.. குறள் பிடிக்கவில்லை என்பது உங்களின் தனி விருப்பம் அதற்காக இறைவசனத்தை தங்களுக்கு சாதமாக பொருள் செய்வது நியாயமில்லை..
ஒற்றுமைக்காக புதிய கயிறை இறைவனின் பெயரால் உருவாக்கும் முயற்சி வேண்டாம்.
---------------------------------------
குஜ்ராத் நிலை ஒற்றுமை குறைவால் ஏற்படவில்லை மாறாக சமுதாயத்தை சொந்த ஆதயத்துக்காக அடகுவைத்து, இன்றளவும் மோடியின் காலில் விழும் அடிவருடிகளால் நடந்து என்பது பலருக்கும் தெரியும்.. நீங்களும் தேடிப்பாருங்கள் புரியும்.
தொகுதி, வார்டு அமைப்புக்களில் அவர்கள் வெற்றி பெற தோதுவாக மற்றங்கள் நடந்தபோதும் மக்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டவர்களும் இந்த எட்டப்பர்கள்தான் என்பதும் விளங்கும்.
இவ்வளவு நாள் ருத்ரம்மாள் பீதி காட்டியாகிவிட்டது.. இப்போ குஜராத் பீதியா..?
48. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byOMER ANAS (DOHA QATAR.)[31 October 2011] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 12674
அஸ்ஸலாமு அழைக்கும்!!!
N S E மஹ்மூது காகா உங்களின் 14 வார்டு உறுப்பினர்கள் என்ற கருத்தும், அல்லாஹ்வின் தண்டனை என்ற கருத்தும் ஆணித்தரமானவை! ஆனாலும் நீங்கள் பெரியவர்கள். சாபம் விடாதீர்கள். பலிச்சிற போகுது!
நாம்தான், ஒற்றுமைக்கு இவர்களிடம் ஏமாந்து விட்டோம்! இதற்குத்தான் உங்களை போன்றோரை போட்டி இட சொன்னது! நல்லோர்கள் 10 பேராவது போட்டி போட்டு இருந்தால், ஊர் விமர்சனம் நடந்து இருக்காது!
அப்படி இருந்தாலும், அது உங்களை பாதித்து இருக்காது! தவறவிட்டது நாமும்தான்.!!!
இப்ப ஈமானை மறந்து கட்சிக்காகவும்,கட்சியை மறந்து ஈமானுக்காகவும் சண்டை நடைபெற நாமும் ஒரு காரணமே! இங்கு பணம் விளையாடவில்லை! கட்சி விளையாடி இருக்குகிறது! அப்படி சொல்லுங்கள்!
இதில் நம் தலையீடு வேண்டாம் காக்கா! நமக்கு தேவை உண்மையான ஆட்சி! நடைபெறவில்லை என்றால் தடுப்போம்! நடை பெற்றால் வாழ்த்துவோம்! பட்டால்தான் சிலருக்கு புத்தி வரும்!!! அது டாட் காமுக்கும் சேர்த்தே!
49. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byVilack SMA (Siacun)[01 November 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 12675
[ காயல்பட்டணம்.காம் செய்திகளும் அதில் மக்கள் எழுப்பும் குரல்களையும் படிக்க நாங்கள் இருக்கிறோம் ] comment 12650 , தம்பி sajith சொன்னது ....
முற்றிலும் உண்மை . தலையங்கத்தை " கதையங்கம் " போல அழகாகவும் , செய்தியை " விமர்சனமாகவும் " எழுதும் இணையதளங்கள் இருக்கும்வரை , இவரை போன்றவர்கள் படித்துக்கொண்டேதான் இருப்பார்கள் .
[ இணையதளத்தையும் அதன் ஆசிரியரையும் சாடல், நடுநிலை தவறிய முத்திரை!!!! ... ] comment 12649 இது நம்ம CNash காக்கா சொன்னது .
" நடுநிலை " ????????????????? என்ன காக்கா , பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம் சொல்றீங்க . மரியாதைக்குரிய இந்த சொல் , மறைந்து போய் விட்டது என்பது உங்களுக்கு தெரியாதா ? உங்களைப்போலத்தான் , அன்று " மகா " பெரிய மனிதர் ஒருவர் , " நாங்கள் வென்றால் அது ஜனநாயகம் , நீங்கள் வென்றால் அது ஜனநாயக படுகொலை " என்று ஜனநாயகத்தை பற்றி ஜனங்களுக்கு " விழிப்புணர்வு " ஏற்படுத்தினார் . கேலிக்கூத்தாக இல்லையா ?
ஆக , மக்கள் எழுப்பும் குரல்களை படிப்பவர்களும் , நடுநிலை பற்றி பேசுபவர்களும் , ஜனநாயக விளிப்புனர்வாளர்களும் , " நடுநிலை என்றால் எப்படி இருக்க வேண்டும் , ஜனநாயகம் எந்த முறையில் வர வேண்டும் " என்பதை புரிந்து கொண்டு பேசினால் நல்லது .
51. KOTW - சொல்ல வந்ததை தையிரியத்துடன் சொல்லுங்களேன்!! posted bySalai.Mohamed Mohideen (USA)[01 November 2011] IP: 98.*.*.* United States | Comment Reference Number: 12677
எனக்கு ஒரு ஆச்சர்யம்... துணை தலைவர் தேர்தலில் ஒரு பெரிய பாலிட்டிக்ஸ் நடந்து இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அதை பற்றிய செய்தி/விமர்சனம் தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மீடியா பப்ளிஷ் பண்ணாமல் இருக்க முடியுமா. அதில் உண்மை இருக்கின்றது என்று நன்றாக அறிந்தும், வேண்டும் என்றே அதை எதிர்கிறார்கள் அல்லது உடனே KOTW க்கு அறிவுரை கூறுகிறார்கள். வாஹித் காக்கா சொன்னது போல்... உண்மை வெளிவரக் கூடாது என்று பயப்படுகிறவர்கள்தான் இந்த மாதிரி செய்தியை எப்பொழுதும் எதிர்ப்பார்கள்... எதிர்த்து கொண்டும் இருக்கிறார்கள் போல் தெரிகிறது. அல்லது அதற்க்கு எதாவது ஒரு சாயம் பூசி விடுகிறார்கள்.
குறைந்த பட்சம், KOTWவின் சமுதாய அக்கறையை பாராட்டாவிட்டாலும் கூட பரவாயில்லை இது போன்ற வதந்தி செய்திகளை பரப்ப வேண்டாம் (நக்கீரனில் சேர்ந்து விடுங்கள் என்ற நய்யாண்டி வேறு) என்று கூறி அவர்களுடைய 'freedom of speech ' யில் தலையிடுவது முறையில்லை என்று நினைக்கிறேன்.
இதே செய்தியை (சல்லியை அள்ளி வீசிய சண்டியரை/சென்னை ஆண்டவர் பற்றியும், கழுதை பேரத்தில் சோரம் போன நகர்மன்ற உறுப்பினர்களை பற்றியும்) பட்டவர்த்தமாக ஏற்கனவே மன தைரியத்துடன் நமதூரின் மற்றொரு இணையத்தளமும் டீடைலாக அலசி ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.
என்னுடைய ஒரே வருத்தம் பல வருடங்களாக இயங்கி வரும் நமது இந்த KOTW இணையதளம், தான் சொல்ல வந்த விசயத்தை (யாருக்கோ அல்லது எதுக்கோ பயந்து) உண்மையை உரைக்க சொல்லாமல் சூசகமாக சொல்லுவது ஏன் என்று தெரியவில்லை.
ஒரு வேளை நியூஸ் ரிபோர்ட்டர்க்கு நடந்த விசயங்களை ஊர்ஜிதபடுத்துவட்கு நேரம் இல்லாமல் கூட இருந்து இருக்கலாம். அல்லது சண்டியாரால்/ஊர் முழுங்கி போன்றவர்களால் மிரட்ட படலாம் என்ற அச்சம் கூட இருந்து இருக்கலாம்.
எது எப்படியோ, நீங்கள் அறிந்த உண்மையை தையிரியத்துடன் வெளியிடுங்கள். இறைவன் எப்பொழுதும் உங்கள் பக்கம் இருக்கிறான். சத்தியத்தை மற்றும் உண்மையை வெளிக்கொணர்வது மீடியாவாகிய உங்களுடைய தலையாய கடமை என்பதனை என்றும் மறந்து விடாதீர்கள். "நியாயத்தை" விரும்பும் எல்லோரும் எப்பொழுதும் உங்கள் பக்கம் இருப்பார்கள்.
"இவைகள் ஒழிய ஐக்கிய பேரவையை மாற்றி - சுன்னத்துவல் ஜமாஅத் ஐக்கிய பேரவையாக மாற்ற வேண்டும், இதுதான் நல் வழி" என்று ஒரு அன்பர் சொல்லி இருக்கிறார். முதலில் அது ஒரு ஊர் நலம் நாடும், நியாயவான்கள் (அது சுன்னத்துவல் ஜமாஅத் ஆட்களாக இருந்தால் கூட பரவா இல்லை) நல்லவர்கள் நிறைந்த சத்தியத்துக்கு மட்டும் தலைசாய்க்கின்ற மாமன்றாமாக மாத்துங்களேன்.
After reading this news, its very obvious that there is a big man's or groups hand behind this vice president election who pumped hell lot of money in bribing the fellow cousellors. So they will be remote controlling this vice president (puppet of that rich man or political party???) of our municipality & guess they will be giving pressure to our municipality president.
I hope the general public, unbiased orgs/association & media will not be deaf & dumb on this bribing counsellors, sandiyars puppets...who gonna bottlneck on kayal's welfare measures from our municipality president. Let us wait & see!!
52. அல்லாஹ்வின் சாபம் posted byMahmoodh Hasan SMS (Guangzhou)[01 November 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 12678
அல்லாஹ் மீது சத்தியம் செய்தோர்களே, நீங்கள் கீழ் கண்ட இறை வசனங்களை நினைவு கொள்ளுங்கள்.
================================================
யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்;. இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான். அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்;. மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு.
53. Re:விளைபோனவர்கள் யார்? posted byV D SADAK THAMBY (Guangzhou (China))[01 November 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 12679
Ref :Comment Reference Number: 12660
மீண்டும் மீண்டும் 14 பேர் பற்றியே நாம் குறிப்பிட்டு இருக்கிறோம்.
ஏன் எதிர்த்து வாக்களித்த 5 பேரை பற்றி இங்கு குறிப்பிடவில்லை? 5 பேரில் , போட்டியிட்ட ஒருவரை தவிர மீதி 4 பேரும், விலை போகாமல் வாக்களித்தார்கள் என்று நம்மால் உறுதியாக சொல்லமுடியுமா? இந்த 4 பேரில், நகர முக்கியமானவரும் இருப்பதாக நம்பபடுகிறது.
சகோதரர் ஒருவர் குறிப்பிட்டதுபோல, எதிர்வேட்பாளர் ஏன் 10 உறுப்பினர்களுடன் மட்டும் தனியாக கூட்டம் போடவேண்டும்?
அல்லது இவருக்கு 10 உறப்பினர்களை மட்டும்தான் வாங்கும் சக்தியுள்ளதா? எதற்காக இவர் 18 உறுப்பினர்களுடன் கூட்டம் போட்டு கருத்தொற்றுமை ஏற்பட முயற்ச்சித்து இருக்கக்கூடாது? ஏன் நகர்மன்ற தலைவர்/அவரை முன்மொழிந்தவர்கள் இதற்கான முயற்ச்சியில் ஈடுபடவில்லை? இதற்குத்தான் ஒரு அமைப்பு வேண்டும் என்பது!
இப்போது புரிகிறதா நகர்மன்றம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதென்று? ஏன் ? யார் காரணம்? இனிவரும் 5 வருடமும் இதே நிலைமைதான்.
முன்பிறந்த பெண் தலைவர்களின் ஆட்சிகாலம் வேறு விதமானது. ஐக்கியபேரவை, அவர்களுக்கு பக்கபலமாக இருந்தது.
இப்போதுள்ள தலைவியின் நிலைமை வேறுபட்டது. இவருக்கு ஐக்கியபேரவை போன்று எந்த ஒரு பிரதான அமைப்பின் ஆதரவும் கிடையாது. நகர் மன்றத்திலும் பெரும்பான்மை கிடையாது. இவருக்கு வானளாவிய அதிகாரமும் கிடையாது. ஒவ்வொரு செயலுக்கும் துனைதளைவரின் ஒப்போதுலோடுதான் இவர் செயல்பட வேண்டியதிருக்கும். துணை தலைவரின் அதிகார மையம் வேறு இடம்.
மொத்தத்தில் நகரமன்றத்தின் மொத்த அதிகார மையம் எது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
இவை அனைத்தும் ஒற்றுமையை தொலைத்ததற்கும் நாம் கொடுக்கும் /கொடுக்கப்போகும் விலைதான் .
54. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byK.D.N.MOHAMED LEBBAI (Jeddah)[01 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12681
அஸ்ஸலாமு அலைக்கும்
ஹாய் SALAI BASHEER அவர்களே. அழகான நல்ல கருத்துகளை படம் பிடித்து காட்டுவது போல் தெளிவாக எடுத்துக்கூறும் நீங்கள் இத்தனை நாள் எங்கு சென்றீர்கள் ?????//////
தம்பி முஹம்மது அலி அவர்களும். நல்ல கருத்தை சொன்னார்கள் .அவருக்கும் எங்கள் >>>>>>> நல் வாழ்த்துகள் <<<<<<<<
56. தொடரட்டும் உங்கள் பணி... posted byMohamed Buhary (Chennai)[01 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 12685
சகோதரர் Cnash சரியான கருத்துகளைத் தெளிவாக முன்வைத்துள்ளார். ஆரோக்கியமான கலந்துரையாடல்களைப் பதிவு செய்வதைவிடுத்து, சும்மா அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கின்றனர் சில நண்பர்கள். சில விஷயங்களைச் சொன்னால் சிலருக்குப் புரியும். சிலருக்குப் புரிந்தாலும் புரியாததுபோல் இருந்தால் அதனால் யாருக்கு இலாபம்...?
உண்மைக்குப் புறம்பான எந்தச் செய்தியை இவ்விணையதளம் வெளியிட்டாலும் அதற்கெதிராக குரலெழுப்பக்கூடியவர்களில் நானும் இருப்பேன் என்பதை இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.
பொதுவாக, ABCD எழுத்துகளில் மூன்றெழுத்து, நான்கெழுத்துகளில் நம் நாட்டில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் பிரபலம். ஆனால், அதைப்போன்றே சில நிறுவனங்கள் இது போன்ற அரசியல் சித்து விளையாட்டில் சிக்குவதேனோ....? என்றுதான் புரியவில்லை. புரிந்தவர்கள் முடிந்தால் விளக்குங்கள்.
சில நண்பர்களுக்கு நாகரிகமாக விமர்சனம் செய்வது புரியவில்லையா...? அல்லது பிடிக்கவில்லையா எனத் தெரியவில்லை. எல்லாவற்றையும் அநாகரிகமாகவும் அடுத்தவர் மனம் புண்படும்படியும் விமர்சிக்க வேண்டும் எனக் கருதுகிறார்களா....? என்றும் புரியவில்லை.
ஆனந்த விகடன், நக்கீரன் பாணியில் விமர்சிக்க வேண்டும் எனக் கூறவருகிறார்களா என்றும் தெரியவில்லை. எனவே, சொல்வதைத் தெளிவாகச் சொன்னால், அல்லது எவ்வாறு விமர்சிக்க வேண்டும் என்று வகுப்பெடுத்தால் அதை பரிசீலிக்கலாம்.
காயல்பட்டினம்.காம் இப்போதுதான் தன் பணியில் 100 சதத்தை அடைந்துள்ளது என்றால் அது மிகையன்று.
தொடருங்கள் உங்கள் பணியை... தொடர்கிறோம் உங்களை நாங்கள்.
57. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byT.M.Rahmathullah(72) kaayal (Kayalpatnam 04639280852)[01 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12687
அவர்களுடைய மறுமை வாழ்வு சிறக்கட்டும் - ஆனால் அவர்களின் இம்மை வாழ்விலே அல்லாஹ்! அவர்களுக்கு கடுமையான சோதனைகளை கொடுத்து அதன்மூலம் மற்றவர்களும் படிப்பினை பெறுவார்களாக.
வஸ்ஸலாம்.
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [Monday, October 31, 2011]
IP: 117.*.*.* INDIA | Comment Reference Number: 12660
நன்றி =================================================
தம்பி நாம் பதுவா செய்ய வேண்டாம் .குர் ஆனே பத்குவா செய்து கூறுவதை பாருங்கள்.
யா அல்லாஹ் எங்களுக்கு சன்மார்க்கத்துக்கு உதவும் எண்ணத்தை தா
9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. அல்-குற் ஆன்
சன்மார்க்கமான இஸ்லாத்தையும், இஸ்லாத்தை பரப்பும் முறைகளையும் வெறுத்த எந்த சமூ கமும் இப்படித்தான் சீரழிந்து வாழும் என்று குருஆன் கூறுகிறது
யா அல்லாஹ் எங்களுக்கு சன்மார்க்கத்துக்கு உதவும் எண்ணத்தை தா
. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. அல்-குற் ஆன் 9-24
20:124. “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
20:125 قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَىٰ وَقَدْ كُنتُ بَصِيرًا
20:125. (அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.
20:126 قَالَ كَذَٰلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا ۖ وَكَذَٰلِكَ الْيَوْمَ تُنسَىٰ
20:126. (அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான்.இன்னும்
20:127 وَكَذَٰلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِن بِآيَاتِ رَبِّهِ ۚ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَىٰ:127. ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.
எனினும் இவ்வுலக த்திலும் நாம் கானத்தான் செய்கிரோம்.அல்லவா
58. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byMohamed Abdul Kader (Al Khobar)[01 November 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12690
அன்புடையோர்,
Election நடகுக்ம்பொழுது பணம் கட்டு கட்டாக கொடுத்தது, புறநகர் பகுதியில் சாராயம் கொடுத்தது, கள்ள வோட்டு போட்டது -இவற்றை எல்லாம் கண்னால் பார்த்தது, ஐக்கிய பேரவையின் மீது பழியை சுமத்தியது என்கிற வான வேடிக்கை ஆபிதா அவர்கள் ஜெய்ததினால் வெடியின் வீரியம் குறைந்து சீத்தையாகி விட்டது என்று நினைகிறேன்.
தான் செய்த பாவத்தை மற்றவர்களின் மீது பலி போடும் நபர்கள் மீது NSE மஹ்மூத் மாமாவின் சாபம் இதோ ஆரம்பமாகிவிட்டது.
60. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted bymackie noohuthambi (kayalpatnam)[01 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12718
தலைவர் தேர்தல் பரபரப்பான வெற்றி தோல்விகளை ஏமாற்றங்களை இரு தரப்பாலும் எப்படி அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டதோ, அதேபோல் துணைத்தலைவர் தேர்தலையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம் எல்லோருக்கும் இருந்தால் நடந்தவைகளைப்பற்றி அரசியல்வாதிகளைப்போல் விமர்சித்துக்கொண்டு வீண் பழிகள் சுமத்திக்கொண்டிருக்க மாட்டோம்.
நாம் விரும்பியவர் வெற்றி பெற்றால் அது ஜனநாயகத்தின் வெற்றி என்றும் நாம் விரும்பாத நபர் வெற்றி பெற்றால் அது பணநாயகத்தின் வெற்றி என்றும் சொல்வது அடிக்கடி அணி மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாக இருக்கலாம், அனால் காயல்வாசிகளுக்கு அது அழகல்ல. அல்லாஹ்வை நம்புங்கள். நகராட்சி நல்லபடி இயங்கட்டும், கருத்து வேற்றுமைகளை மறந்து, ஆக்கப்பணிகளுக்கு ஊக்கம் கொடுப்போம்.
ஆணவத்தால் ஆட்சியை அலங்கோலப்படுதினால் மீண்டும் அல்லாஹ்வின் தலையீடு அங்கு வந்து மீண்டும் தன் வல்லமையை அவன் வெளிப்படுத்தவே செய்வான்.இதை ஆட்சிபொறுப்பில் அமர்ந்துள்ளவர்களும் நன்கு உணர்ந்து செயல்படுங்கள். நலப்பணிகள் தொடரட்டும் வெற்றி பெற்றவர்கள் வெற்றிக்களிப்பிளிருந்து விடுபட்டு செயலாற்ற புறப்படுங்கள்.
61. Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byHabeb Rahman (Dubai)[01 November 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12726
குர்'ஆன் - தமிழாக்கத்தில் நான் செய்த பிழையை சுட்டிகாட்டிய நண்பர் சாஜித் அவர்களுக்கு நன்றி. எனினும் "ஓன்று பட்ட" என்ற அவரது வார்த்தைக்கும் ஒற்றுமை என்ற எனது வார்த்தைக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்கு இன்னும் புரியவில்லை.
அவர் தவறை சுட்டிகாட்டியதுடன் நிறுத்தியிருந்தால், நானும் நன்றியுடன் நிறுத்தி இருப்பேன். கூடவே தனது பாணியில் கற்பனைகளையும் கதைகளையும் அவிழ்த்து விட்டுருகின்றார்.
இறைவனின் கயிற்றில் லஞ்சமும் இல்லை, துரோகமும் இல்லை.. - உண்டு என்று நான் சொன்னேனா? லஞ்சத்திற்கு முன்பு வேறு நிறைய விசயங்களும் இல்லை என்பதைத்தான் நானும் சொல்கின்றேன். தயவு செய்து எனது முழு கருத்தையும் படிக்கவும் - இனி டைப் அடிப்பதற்குக்கு முன்பு!
குறள் ஏன் பிடிக்கவில்லை என்று காரணத்தையும் சொல்லியுருந்தேன். அதன் பின்னரும் அதனை அவர் தூக்கி கொண்டு நடந்தால், அது அவர் விருப்பம்! ருத்தம்மால் நமக்கு பீதியைத்தான் உண்டாக்கியிருப்பார், நம்மை சுட்டியிருப்பவர்களிடம் மட்டும் ஜாதி வேற்றுமை இல்லையெனில். அதுதான் அவர்களின் வோட்டில் கணிசம் நம் சகோதரிக்கு கிடைத்தது!
அடுத்து குஜராத் விசயத்தில், எங்கிருந்து இந்த புது காரணத்தை கொண்டு வந்தார் என்று தெரியவில்லை. காயல்.காமை மட்டும் பார்த்தால் போதாது. நடு நிலை பத்திரிகைகள் பலதையும் படிக்க வேண்டும் - குஜராத்தில் நடந்த சம்பவங்களின் - உண்மை பின்னணியை அறிய.! ஒற்றுமையை சொல்ல வந்த எனக்கு இந்த "காட்டா"? நண்பரின் வீரமும் வீராப்பும் இனியும் நிறைய தேவை - பேரவை ஒழித்து கட்டுவதற்கு! ஏன் என்னிடம் அதை வீணாக பயன் படுத்துகின்றார் என்று புரியவில்லை.
நான் மீண்டும் சொல்கின்றேன் இங்கு யாரையும் எதிர்க்க வில்லை. ஒன்றாக செயல் படுவோம் என்றுதான் சொல்கின்றேன்! ஸ்பெயினை கிறிஸ்துவர்கள் தாக்கியபோது, முஸ்லிம்கள் இப்படிதான் வீணான தர்க்கங்கள் செய்து கொண்டு இருந்தார்கள் என்று கேள்வி பட்டு இருக்கின்றேன். பலன், 800 ஆண்டு காலம் நம் கையில் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் பொய் விட்டது.! வீண் விவாதங்களை இனியாவது தவிர்ப்போம்.
62. Re விமர்சனமான குடம்!!!.... posted byOMER ANAS (DOHA QATAR.)[01 November 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12737
துணை தலைவர் வெற்றிக்கு வாழ்த்துக்கள்! மாஷா அல்லாஹ்!!! மக்கியாரும், ஹபீபாரும், பிச்சுட்டீங்க போங்க! லஞ்சம் லஞ்சம் அதை நான் வாங்கினால், குற்றம்! அதையே ஒரு சிலர் வாங்கிட சொன்னார் வாங்கினேன் என்றால், சால்வையோடு உத்தமர் பட்டம்! மாமி உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால்???அட விடுங்க சார்!!!
63. துதி பாடாதீர். posted byAnsari YentY (K S A)[03 November 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12827
தலையங்கம் என்ற பெயரில் எந்த அளவுக்கு ஒரு மீடியா அதன் காழ்புணர்ச்சியை காட்ட முடியுமோ அதை விட அதிகமாகவே காட்டி ஐக்கிய சபையுடன் இருந்த கருத்து வேறுபாடுக்கு பழிதீர்த்து நகர் மன்ற தலைவருக்கு துதி பாடினீர்கள்.
உங்களுக்கு துதி பாட பல வள்ளுவர்களும்..கம்பர்களும் இருப்பதால் இப்போது செய்தி விமர்சனம் என்ற பெயரில் (முடிவுசெய்ததாகத் தெரிகிறது....கலந்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது))ஏதேதோ எழுதி இருக்கிறீர்கள்..
ஊர்ஜிதமான தகவல் மட்டுமே தருவோம் என்று பெருமை அடித்துக்கொள்ளும் நீங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் காற்றில் வரும் செய்திகளுக்கு எல்லாம் விமர்சனம் எழுதி ஒத்து ஊத ஆரம்பித்து விட்டீர்கள்..இனி வரும் காலங்களில்....கிசு கிசு...ஒற்றுக்கேட்டது....உற்றுப்பார்த்தது.. எட்டிப்பார்த்தது.....இது போன்ற தலைப்புகளில் செய்தி வராமல் இருந்தால் சரி..
ரிமோட் சிந்தனையாளர்களே.... எல்லைப்புறமாகவும்...கொல்லைப்புறமாகவும் நகர்மன்ற தலைவர் வெற்றி பெறுவதற்கு இதே ரிமோட் தான் 20 லட்சம் பணத்தோடு வேலை செய்தது என்ற செய்தி வந்ததே...அப்போது மட்டும் அடக்கி வாசித்தது ஏன்?உங்களுக்கு சாதகம் என்றால் ஏற்றுக்கொள்வீர்கள்....பாதகம் என்றால் வாய் கிழிய கத்துவீர்களோ?? குர்ஆன்.. ஹதீது எல்லாம் ஒரு சாராருக்கு மட்டும் இல்லை...எல்லோருக்கும் பொதுவானதுதான்..அதை உங்கள் இஷ்டத்துக்கு வளைக்காதீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross