எதிர்வரும் 06.11.2011 அன்று அரஃபா தினம் என்றும், 07.11.2011 அன்று ஹஜ் பெருநாள் என்றும், அன்று காலை 07.30 மணிக்கு காயல்பட்டினம் கடற்கரையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெறுமெனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தமிழகத்தில் திருவள்ளூர், தஞ்சை, நீலகிரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 29.10.2011 அன்று துல்ஹஜ் தலைப்பிறை பார்க்கப்பட்டதை உறுதி செய்து, அதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் 06.11.2011 அன்று துல்ஹஜ் பிறை 09 - அரஃபா நாள் என்றும், 07.11.2011 அன்று துல்ஹஜ் பிறை 10 - ஹஜ் பெருநாள் என்றும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 07.11.2011 திங்கட்கிழமையன்று காலை 07.30 மணிக்கு காயல்பட்டினம் கடற்கரையில் ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேருரை நடைபெறும். இத்தொழுகையில் பங்கேற்க பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்படவுள்ளது.
பொதுமக்கள் குறித்த நேரத்தில் கடற்கரைக்கு வந்து நிகழ்வுகளில் கலந்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |