ஹஜ் பெருநாளை முன்னிட்டு, உள்ஹிய்யா எனும் கிரியை மூலம் ஆடு, மாடு, ஒட்டகங்கள் கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சிகள் ஏழைகள் உட்பட அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவது வழமை.
காயல்பட்டினம் ஜாவியாவில் ஆண்டுதோறும் இக்கிரியை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் இந்த ஏற்பாடுகளுக்கான அறிவிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்பாட்டுப் பணிகளில் ஏற்படும் கடைசி நேர சிரமங்களைத் தவிர்த்திடும்பொருட்டு, ஜாவியா கூட்டு குர்பானீ திட்டத்தின் கீழ் உள்ஹிய்யா பங்கு சேர விரும்புவோர், துல்ஹஜ் 08ஆம் நாளன்று மாலை 05.00 மணிக்கு முன்பாக, பங்குத்தொகை ரூ.1,700ஐ அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு அந்நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு வரும் பங்குப்பதிவுகள் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஜாவியா நிர்வாகம் சார்பாக,
மவ்லவீ ஹாஃபிழ் அபுல்ஹஸன் ஷாதுலீ (பாங்காக்),
காயல்பட்டினம். |