Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:49:52 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7471
#KOTW7471
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 1, 2011
நகர்மன்ற துணைத்தலைவர் வெற்றி குறித்து நகர தி.மு.க. அறிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 9520 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (52) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 10)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவராக, 11ஆம் வார்ட் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, நகர தி.மு.க. சார்பில் பின்வருமாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது:-

காயல்பட்டினம் என்றும் கலைஞர் பட்டினமே!

நகராட்சித் துணைத்தலைவர் தேர்தலில்
நகர திமுக துணைச் செயலாளர் வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

காயல்பட்டினத்தில் 29.10.2011 அன்று நடைபெற்ற நகராட்சித் துணைத்தலைவர் தேர்தலில் நகர திமுக துணைச் செயலாளரும், 11ஆவது வார்டு கவுன்சிலருமான ஜனாப் மும்பை எஸ்.எம்.முகைதீன் அவர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லாப்புகழும் இறைவனுக்கே.

நகராட்சித் தலைவர் தேர்தலில் ஊர் பெரியவர்கள் கேட்டுக்கொண்டதால், வெற்றி வாய்ப்பு இருந்தும், தேர்தலில் போட்டியிடாமல் ஊர் ஒற்றுமையை மனதில் கொண்டு திமுக ஒதுங்கிக்கொண்டது. ஆனால் வார்டுகளில் பெரும்பான்மை இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். இதைத் தொடர்ந்து துணைத்தலைவர் தேர்தலில் கழகம் களம் இறங்கியது.

இவ்வூர் எப்போதும் பிளவுபட்டே இருக்க வேண்டும் என்று கருதுகின்ற சதிகாரர்களின் வஞ்சக வலையை அறுத்து வீசி, துணைத்தலைவர் தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது. குழப்பவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நகராட்சியில் நிலைநாட்ட துணைத்தலைவர் தேர்தலிலும் மூக்கை நுழைத்தனர். இம்முயற்சி முற்றிலுமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

நகர திமுக துணைச் செயலாளரை வெற்றி பெறச் செய்த நகராட்சி திமுக கவுன்சிலர்கள் மற்றும் ஆதரவுக் கரம் நீட்டிய ஏனைய கவுன்சிலர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வெற்றிக்காக அரும்பணியாற்றிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

காயல்பட்டினம் என்றும் கலைஞர் பட்டினமே என்பதை இப்போதும் நிரூபித்துள்ளோம். இனி எப்போதும் நிரூபிப்போம். இந்த ஊர் உயரத் தொடர்ந்து உழைப்போம். நன்றி.

இவண்,
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்,
நகர திமுக - காயல்பட்டினம்

அல்ஹாஜ் எஸ்.ஐ.அப்துல் காதர்
(தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர்)

அல்ஹாஜ் மு.த.ஜெய்னுதீன்
(செயலாளர், நகர தி.மு.க.)


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளும், வினியோகிக்கப்பட்டுள்ள பிரசுரமும் பின்வருமாறு:-







படம்:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by PIRABU MUJEEB (RIYADH-KSA) [01 November 2011]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12734

இந்த வெற்றி கடைசி வரைக்கும் தொடர என்னுடைய நல் வாழ்த்துக்கள். சூரியன் என்டுறுமே வீழ்தரு கிடையது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஓசை படாமல் வந்தது கழகம்!.
posted by OMER ANAS (DODA QATAR.) [01 November 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12736

திமுக வின் கழக உறுப்பினர்களின்,ஆதரவும் நடுநிலையான உறுப்பினர்களின் ஆதரவோடுதான் மும்பை முஹியத்தீன் வந்துள்ளார்! இதுதான் உண்மை!

ஆனாலும் ஒருசில கருத்து வசை பாடிகள் ஈ அடிச்சான் காப்பி போல லஞ்சம் லஞ்சம் அங்க கேட்டேன் இங்க பார்த்தேன் என்பதால், என்னை பொருத்தவரை திமுக வெற்றியை அறிவித்தது போல் விமர்சனத்துக்கு(லஞ்சம் என்ற நஞ்சான விசம கருத்துக்கு,)ஆளாகாமல் ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியாகவோ கூட்டாகவோ, சத்தியமாக நாங்கள் தவறிழைக்க வில்லை லஞ்சம் வேண்டி யாரும் எங்களை அணுகவும் இல்லை நாங்கள் மட்டுமே கூடி எது நன்று யார் வர வேண்டும் என்று விவாதித்து ஒரு முடிவிற்கு வந்தோம் என்று அறிக்கை விட வேண்டும். இது சுயநலம் கொண்டோருக்கு விடும் பதிலாக இல்லாமல், நடுநிலையோர் உங்கள் மேல் வைக்கும் நம்பிக்கையாக கருதி வெளி இடுங்கள்!

சத்தியம் ஒரு சில டெப்பாசீட் கட்சி காரனுக்கு கசக்கும். போகட்டும்! விடுங்க! ஒன்றை மட்டும் சொல்கிறேன் நான் D M K அனுதாபியல்ல! லஞ்சம் என்று நம் சமுதாயத்தை நாமே சுய நலத்துக்காக காட்டி கொடுக்க நினைப்போருக்கு சொன்னது! உங்களுக்கு சொல்வது மறந்தும் தப்பு செய்யாதீர்கள்.

ஆபிதா இப்ப மக்கள் தலைவி. நம் உடன் பிறவா சகோதரி. ஒற்றுமையோடு செயல் படுங்கள். இல்லையேல் முதல் எதிர்ப்பாளன் நானாகவே இருப்பேன்! நல்லதை செய்யாதோனுக்கு!!!

இப்னு அனஸ்
அபு அனஸ்
ஒமர் அனஸ்.

இந்த உலகில் நிச்சயம் மண்ணுக்கு இரையாகும் மைந்தன்.
V M A உமர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by Umer TAM (Hong Kong) [02 November 2011]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 12742

அஸ்ஸலாமுஅழைக்கும்

நடைபெற்ற நகராட்சித் துணைத்தலைவர் தேர்தலில் ஜனாப் மும்பை எஸ்.எம்.முகைதீன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார் வாழ்த்துக்கள்....

அன்பர்களே அரசியல் என்பதே சாக்கடை என்று சொல்வதை நமதூர் திமுக அரசியல் வாதிகள் நாத்தம் என்பதை தெளிவாக தெரிவிதுள்ளர்கள். நம் ஊரில் ஏன் இந்த நாதத்தில் குளிகின்றாகளோ.. ஏன்னிந்த அரசியல் வெறி.. நினைவிறுக்கட்டும் ADMK ஆட்சி என்று... பெருமையடிக்கதீர்... ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள் நம்ம ஊர்க்கு அடிப்படை தேவையை கவனியுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:welcome DMK
posted by V D SADAK THAMBY (Guangzhou ,China) [02 November 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 12746

Well done . Well said DMK .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by Noohu T (Maana Paana) [02 November 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12748

அப்படியே அம்மாவுக்கும் தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் வழியாக தெரியபடுத்தவும், கிடைக்கவேண்டியது ஊருக்கு சீக்கிரமாக கிடைக்கும்

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கவனத்துக்கு இன்னும் போகவில்லையோ... என்னமோ....!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [02 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12749

தேர்தல் சமயம் கட்சியை சொல்லி ஒட்டு கேட்காத மும்பை முஹீதீன் துணை தலைவர் பதவியில் வெற்றி கிடைத்ததும் தி மு க வெற்றியா ? இவரை துணை தலைவராக தேர்ந்து எடுக்க அணைத்து கட்சியை சார்ந்தோரின் உதவி தேவைப்பட்டது என்பதனை மறந்து விடவேண்டாம்...!

நினைவில் கொள்ளவும் தி.மு.க - அ.தி.மு.க மற்றும் இதர கட்சிகளுக்குள் போட்டி நடைபெற இல்லையே பின்பு ஊர் முழுவதும் தி.மு.க வெற்றி... தி.மு.க வெற்றி... தி.மு.க வெற்றி னு போஸ்டர் அடித்து ஓட்டுவது எனக்கு சிரிப்பு வருகிறது என்னை போல் பலபேருக்கும் சிரிப்பு தான் வருகிறது...!

ஊர் முழுவதும் தி.மு.க வெற்றி... தி.மு.க வெற்றி... தி.மு.க வெற்றி னு போஸ்டர் அடித்து ஒட்டிய செய்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கவனத்துக்கு இன்னும் போகவில்லையோ... என்னமோ....!

சுயேச்சை துணை தலைவருக்கு வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by MOHD.IKRAM (saudi arabia) [02 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12751

நடந்து முடிந்த உள்ளாச்சி தேர்தலில் ஒரு மாநகராசியை கூட பிடிக்க வக்கில்லாத தி மு க. விற்கு, காயல்பட்டினம் நகரமன்ற துணை தலைவர் பதவியை இழுத்து பிடித்து வெற்றி பெற்றது , அடிபட்ட பெரிய புண்ணுக்கு ஒரு சிறிய மருந்தை தடவியது போல் உள்ளது. அடுத்த தேர்தலிலாவது உருப்படியான வெற்றியை பெற பாருங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. நம்பிக்கை மோசடி!
posted by Seyed Ibrahim (Kayalpatnam) [02 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12752

அன்பிற்குரிய சகோதரர்களே!

இந்த போஸ்டர் மற்றும் நோட்டீஸ் நமக்கு தெரிவிப்பது என்ன என்பதை ஊர் நன்மையைக் கருத்தில் கொண்டு மட்டும் கருத்துப்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் உங்கள் வீடுகளில் ஒரு பிரச்சினை என்றால் எப்படி அக்கறையுடன் அதிலுள்ள குறைகளை மட்டும் கவனித்து உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வீர்களோ அப்படியே இதையும் பார்க்க வேண்டும்.

நமதூர் நகர்மன்றத் தேர்தலில் அரசியல் தலையீடு வேண்டாம் என ஐக்கியப் பேரவை கருதியது உண்மை என்றால் அது தலைவருக்கு மட்டும் அல்ல! மாறாக துணைத்தலைவருக்கும் பொருந்தும்தானே?

ஒருவேளை அரசியல் தலையீடு தேவை என்று வைத்துக்கொணடாலும், இப்போது இருக்கும் சூழ்நிலையில் அதிமுக சார்பாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் பரவாயில்லை என்றுதானே சொல்ல வேண்டும்?

அது போகட்டும்! சரி, இந்த பதினெட்டு வார்டுகளிலும் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் யார் அரசியல் கட்சி சின்னத்தில் நின்றவர்கள் என்பதை நகர திமுகவினரோ அல்லது அதன் மாநில பொதுக்குழு உறுப்பினரோ தெரிவிப்பார்களா? உண்மையில் நீங்கள் கட்சி ரீதியாக களத்தில் இறங்க வேண்டுமென்றால் வேட்பு மனு தாக்கல் செய்யும்போதே மும்பை மெய்தீன் அவர்களை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் அல்லவா நிறுத்தியிருக்க வேண்டும்?

சுயேட்சையாக நின்றுவிட்டு, வெற்றி பெற்றவுடன் “திமுக ஜெயிச்சிடுச்சி! காயல்பட்டணம் மீண்டும் கலைஞர் பட்டணம் ஆயிடுச்சி” என்று மார்தட்டும் திமுக நிர்வாகிகளுக்கு எனது பணிவான கேள்வி: திமுகவினர் பலர் தோற்றுள்ளார்களே, அப்படியானால், அந்தந்த வார்டுகளில் எல்லாம் கலைஞர் பட்டணம் தொலைந்துபோயுள்ளதே? இதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்???

சரி, அவர்களை விடுங்கள்! இது கலைஞர் பட்டணம் என்று அவர்கள் போஸ்டர் வெளியிட்டதும் மகிழச்சியில் திளைத்து கருத்து வெளியிட்டுள்ள - வெளியிடவுள்ள அன்புச் சகோதரர்களைக் கேட்கிறேன்... இது நம்பிக்கைத் துரோகமில்லையா? இவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களத்தில் நின்றிருந்தால் அதிமுகவினர் எதிர்த்து பணியாற்றி இருக்க மாட்டார்களா? உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்குத் தோல்வி என்பது அவர்களது மானப்பிரச்சினை என்ற உண்மை அதிமுகவிற்குத் தெரியாதா? தெரிந்தும் அவர்கள் சும்மா இருந்திருப்பார்களா?

உண்மையில் நமதூரை கலைஞர் பட்டணம்தான் என்று நிரூபிக்க, முதலில் அவர்களது உதயசூரியன் சின்னத்தில் களத்தில் இறங்கட்டும்! பின்னர் தெரியும் இறைவனின் முடிவு என்ன என்று!

நான் திமுக எதிரியுமல்ல! அதிமுக ஆதரவாளனுமல்ல. அந்தந்த நேரத்தில் உள்ள சூழ்நிலைகளை மட்டும் மனதிற்கொண்டு எனது நடவடிக்கைகளை அமைததுக்கொள்பவன்.

நமதூருக்கு நன்மை விளைய வேண்டுமானால் நமது அறிவையும் அதற்கு பயன்படுத்த வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு கலைஞர் பட்டணம் என்று கருதுவது, நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதற்கு சமம்.

இதுவே கலைஞர் ஆட்சி நடக்கும்போது, வாயார வயிறார சொல்லுங்கள் “கலைஞர் பட்டணம்” என்று. ஊர் வாழும். இப்போது சொன்னால் ஊர் வாழுமா, நாறுமா?????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. சிரிப்பு வருது! சிரிப்பு வருது!!
posted by முஹம்மது அப்துல் காதர் (சென்னை) [02 November 2011]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 12756

சிரிப்பு வருது சிரிப்பு வருது , என்னடா இது வடிவேலு காமெடியை விடலாம் இது மிகப்பெரிய காமெடியா இருக்கு. தலைவர் தேர்தலில் தி.மு.க, ஆ.தி.மு.க இன்னும் பல கட்சிகள், அமைப்புகள் எல்லாம் ஆதரவு கொடுத்தும் கூட அந்த பொது வேட்பாளர் வெற்றிபெறவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தேர்தலில் காயல்பட்டணம் - கலைஞர் பட்டணம் எல்லாம் எங்கே போனது?

அப்போது கலைஞர் பட்டணத்தின் மக்கள் ஏன் தி.மு.க ஆதரவு வேட்பாளருக்கு ஓட்டு போடவில்லை?

11 வது வார்டுக்கு மும்பை முஹியத்தீன் சுயேட்சையாகத்தானே நின்றார், துணைத்தலைவர் தேர்வுக்கும் அவர் சுயேச்சையாகத்தானே நின்றார் அப்போ எப்படி தி.மு.க வெற்றி பெற்று இருக்க முடியும். கேட்பவர் கேனையன் என்றால் கலைஞர்தான் இப்போதய முதல்வர் என்று கூட சொல்லுவீர்கள் போல தெரிகிறதே.

தேர்தலில் நீங்கள் ஏன் தி.மு.க வின் பெயரை பயன்படுத்தவில்லை, இப்போ வெற்றி பெற்றவுடன் தி.மு.க வின் பெயரை பயன்படுத்தினால் அது எப்படி.

உங்கள் வேட்பாளர் தி.மு.க என்ற போர்வையில் நின்று இருந்தால் நிச்சயம் அவர் தோற்று இருப்பார். தலையே சரிந்து விட்ட பிறகு வால் மட்டும் எப்படி அய்யா ஆடும்.

அதெல்லாம் இருக்கட்டும் துனைத்தலைவர் தேர்தலில் நீங்கள் மக்கள் ஓட்டு போட்டால் வெற்றி பெற்றீர்கள் இல்லையே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தானே ஓட்டு போட்டார்கள். இந்த கவுன்சிலர்கள் இப்படி ஓட்டு போடுவார்கள் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் மக்கள் தங்கள் வாக்கினை வேறு யாருக்காவது செலுத்து அவர்களை வெற்றி பெறச்செய்து இருப்பார்கள்.

நீங்கள் துணைத்தலைவர் தேர்தலில் எப்படி வெற்றி பெற்றீர்கள் என்று உலகத்திற்கே தெரியும். ஏன் உங்கள் தலைவர் கலைஞர்க்கு கூட தெரியும் இந்த சாதாரன அரசியல் கூட கலைஞர் தெரியாமலா இருப்பார். இன்னும் எத்தனை காலம்தான் இதையே சொல்லிக்கொண்டு வெட்டி பந்தா பண்ணுவீர்களோ தெரியவில்லை.

இதையெல்லாம் விட்டுவிட்டு நகராட்சி தலைவருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நம் ஊருக்கு நல்லது செய்ய பாருங்கள். தனி ராஜியம் நடத்தாதீர்கள். இப்படியே கலைஞர் பட்டணம் கருப்பட்டி பட்டணம் என்று வெட்டி பந்தா காட்டியே ஆ.தி.மு.க அரசின் எந்த நலத்திட்டமும் நமதூருக்கு என்றுமே வரமுடியாத அளவிற்கு செய்து விட்டீர்கள்.

இப்போ வேற துனைத்தலைவர் தேர்தலிலும் தி.மு.க வெற்றி என்று கூறுவதால் தமிழக அரசின் சிறிய உதவி கூட கிடைக்கச்செய்யாமல் ஆக்கி விடுவதில் உங்களுக்கு அப்படி என்ன ஆனந்தமோ தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by Mohideen (Jeddah) [02 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12759

இது தான் double கேம் ஆ. தோல்வி அடைந்தாள் நான் கட்சி சார்பில் போட்டி இடவில்லை வெற்றி பெற்றால் dmk வெற்றி. ha ha ha முடியலப்பா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by mammaash (qatar) [02 November 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 12760

மைதீன் பாய் எங்க வார்டுதான் துணை தலைவர் ஆனதுல சந்தோசம்தான் எங்களுக்கு...

ஆனா அவங்க அரசியல் கட்சி சார்பா எலக்சன்ல நின்னிருந்த வார்டு ல கூட வர்றது கஷ்டம்தான் ....

இப்போ இந்த போஸ்டர் பார்த்தா கோமாளிதனமா தான் இருக்கு... AND ரொம்ப பாவமாவும் இருக்கு நம்ம DMK நிலைமை ஆய்டிச்னு ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. கேவலம் சிரிப்புதான் வருது போங்கோ
posted by Kader Sulaiman (Kayalpatnam) [02 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12761

ஒரு முழு புசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார்கள். பதினெட்டு வார்டுகளில் ஒரு வார்டில் கூட உதயசூரியன் முத்திரையில் போட்டி போடவில்லை. அ.தி.மு.க.வினராவது இரண்டு வார்டுகளில் போட்டி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க.வினர்க்கு தைரியம் இருந்தால் உதயசூரியன் சின்னத்தில் போட்டி போட்டுவிட்டு வெற்றி பெற்று இவ்வாறு நன்றி தெரிவிக்கலாம்.

இன்று நடப்பது யாருடைய ஆட்சி தி.மு.கவின் ஆட்சியா. தி.மு.க.ஆட்சியில் இவ்வாறு பெரிய ஏமாற்று வேலையை செய்திருந்தால் நன்கு பாராட்டலாம். ஊருக்கு நல்லது நடக்கனும் என்றால் ஆளும்கட்சிக்கு ஜால்ரா அடித்தால் தான் நமக்கு நல்லது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. இந்த வேலையை செய்திருந்தால் பாராட்டலாம்.

என்ன செய்வது காயல்பட்டணத்தில் நடப்பது எல்லாம் ரிமோட் கண்ட்ரோல் வேலைகள். திமுகவின் கோட்டை கலைஞர் பட்டணம் என்று வாய்கிழிய பேசும் இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் எந்த திட்டத்தை நமதூருக்கு தந்தார்கள்.

துணைத்தலைவரில் வெற்றி பெற்றவுடன் மாவட்ட செயலாளர் பெரியசாமிக்கு பொன்னாடை போத்தியது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாக அமைந்துள்ளது. என்னசெய்வது எல்லாம் சென்னையில் இருந்து காயல்பட்டணத்திற்கு ஏற்பட்ட புயலே காரணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by ABU AYESHA (abu dhabi) [02 November 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12763

அட போங்கப்பா எதாவது வேற வேலை இருந்தால் பாருங்க ...சும்மா கலைஞ்சர் பட்டினம் என்று உளறாமல் ஆக வேண்டிய காரியங்களை பாருங்கள் வடிவேலு பாணியில் சொல்லப்போனால் "நல்லதானே போய்கிட்டு இருந்தது "போஸ்டர் அடிச்சா பணத்தில் எதாவது நாலு ஏழைகளுக்கு உதவி செய்து புண்ணியம் தேடிகொள்ளுங்கள்

Moderator: சகோ. அபூஆயிஷா அவர்கள் தனது முழு இயற்பெயரைத் தந்து, வருங்காலங்களில் அவரது கருத்து நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by S.I.தமீமுல் அன்சாரி ரியாஸ் (Al Ain, UAE) [02 November 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12764

அஸ்ஸலாமு அழைக்கும்,

இதை பார்க்கும் போது எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நம் மக்களுக்கு நன்மை சென்று அடைந்தால் நல்லது. இந்த செய்தியை ADMK க்கு fax மூலமாக அனுபுனால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன் மிக விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்!!!!.

நாம் கட்சி சின்னம் வேண்டாம் என்று சொன்னது நம் மக்களுக்கு புரியும் என்று நினைக்கிறன். விருப்பு வெறுப்பு இல்லாமல் நாம் சுயமாக சிந்திக்க வசதியாக இருக்கும் என்று சொல்லித்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இப்படி செய்ததினால் கிடைக்கக்கூடிய விளைவு என்னவென்றால் எல்லா நகராட்சிக்கும் கிடைக்ககூடிய சலுகை நமக்கும் கிடைக்கும் என்பது உண்மை என்றாலும் பிற சலுகைகள் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by NAHVI IBNU NAHVI (abudhabi) [02 November 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12765

காயல் பட்டணம் கண்ணியவான்களின் பட்டணம் கண்டவனின்பட்டணம் அல்ல திருத்தி கொள்ளவோம் நமது ஊரின் கண்ணியம் பேணுவோம்

நஹ்வி இப்னு நஹ்வி

Moderator: சகோ. நஹ்வி இப்னு நஹ்வி அவர்கள் தனது முழு இயற்பெயரைத் தந்து வருங்காலங்களில் அவரது கருத்து நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by Shaik MMS (Hong Kong) [02 November 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12769

2011 கடைசியின் மிகப்பெரிய நகைச்சுவை. சாதாரண பாமரனனுக்கு கூட சிரிப்புதான் வரும். இப்பதான் புரியுது. துனைதலைவரின் வார்டை சார்ந்த சகோதரர்கள் கூட பெரிய அளவில் வாழ்த்துக்களை ஏன் அளிக்கவில்லை என்பது. எது எப்படியோ..... நாளை திகார் காலி ஆகிறது. நாம் அதை நிரப்பாமல் இருந்தால் போதுங்க.............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. நன்றி நன்றி நன்றி
posted by Farook (Jeddah) [02 November 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12772

ஐக்கிய பேரவை பெரியவர்கள் சொல் கேட்டு விலகி நின்ற அனைத்து கட்சிகளுக்கும் நன்றி நன்றி நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [02 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12775

இவர்கள் ஏதோ உதய சூரியன் சின்னத்தில் நின்று, தி.மு.க விற்கு ஒட்டு போடச்சொல்லி, நகரமன்ற உறுப்பினர்கள் தி. மு. க. துணைத் தலைவரை தேர்ந்தெடுத்த மாதிரி ஒரு பிரம்மையை ஏற்படுத்தும் முயற்சி.

Too Little Too late. துணைத் தலைவர் தேர்தலுக்கு முன் அல்லவா இவர்கள் தங்கள் வேட்பாளரை தி.மு.க. சார்பில் வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும்.

யாரை ஏமாற்ற, யாரை திருப்பதி படுத்த,இந்த நாடகம்?. ஊர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த நாடகத்தின் Producer யார்? Director யார்? Hero யார்? என்று. முன்கதவு வழியாக் வரமுடியாமல் போய்விட்டதனால், பின் கதவு வழியாக வருகிறார்கள் எனபது ஊர் அறிந்த இரகசியம்.

தி.மு.க. வின் தலைமையை திருப்பதி படுத்தும் செயல்களில் இறங்குவதை காட்டிலும், அல்லாஹ்வை திருப்பதி படுத்தும் செயலில் இறங்குங்கள், உங்கள் பொருளாதாரத்தை செலவிடுங்கள். மக்களுடைய "து-ஆ" வும், அல்லாஹிவின் திருப் பொருத்தமும் கிடைக்கும்.

சுயநல மில்லாத உண்மையான் தி.மு.க. தொண்டர்களுக்கு இது ஒரு தலை குனிவு. கடந்த இடைதேர்தலில் அ.தி.மு.க வுக்குக் கிடைத்த ஓட்டை விட கடந்த சட்ட மன்ற தேர்தலில் அதற்க்கு 3500 ஒட்டு கூடுதலாகவே கிடைத்திருக்கிறது. இதே பாதையில் நகர தி.மு.க வின் செயல்பாடுகள் இருக்குமேயானால், தி. மு.க. அதன் அபிமானிகளின் ஓட்டை கூடிய விரைவில் அது இழக்க நேரிடும்.

----------------- END -----------------


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. வௌவ்வாளுக்கு வாழ்க்கைப்பட்டால் தொங்கித்தான் ஆகணும் ...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [02 November 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12776

ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே... என்ற பழமொழி கேள்வி பட்டிருப்பீங்கன்னு நினைக்குறேன் . வேறென்னத்த நான் சொல்ல ...

வௌவ்வாளுக்கு வாழ்க்கைப்பட்டால் தொங்கித்தான் ஆகணும் ... என்ன பண்ண இதை எல்லாம் கேட்டு தான் ஆகணும் .

அமெரிக்கால ஒபாமா வெற்றி பெற்றது கூட இவங்க ஆதரவுன்னு சொன்னாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by CNash (Makkah) [02 November 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12779

அப்படி ஊரு மேல என்ன தான் கோபம் !!! இப்படி போஸ்டர் அடிச்சி ஊருக்கு கிடைக்க வேண்டிய அரசு நல திட்டங்களை ஒன்னு வராமே பாழாக்கனுமாக்கும்!! உருப்படும்!!! இதுக்கு தான் மதுரைலே தோத்துட்டு மானாமதுரைலே மீசையே முறுக்குவாங்க என்று சொல்லுவங்களோ!!!

கலைஞரே பட்ட ரணம் இன்னும் ஆறாமல் இருக்கிறார் ..இங்கே கலைஞர் பட்டணமாம்!!! ..சட்டசபை தோல்வி, கோர்ட், கேஸ், ஜெயில் திகார் என்று தலைவர் அலைஞ்சி எப்போ தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனா நேரத்துலே ....10 மாநகராட்சியும் சேர்த்து அடி கொடுத்து மக்கள் உட்கார வச்சி இருக்காங்க இங்கே போஸ்டர் வேண்டி கிடக்கக்கும்!!!

ஒற்றுமைகாக நிற்க வில்லை என்று சொல்றீங்களே... போன (2006 ) நகராட்சி தேர்தல் நின்ற இடத்தில பட்ட அடியை கொஞ்சம் பார்கிறீங்களா!!!

11 ம் வர்டுலே துணைதலைவர் இரண்டு முறையும் சுயேட்சையா நின்று அவருடைய சேவையின் மூலம், தனிப்பட்ட செல்வாக்கில் வெற்றி பெற்றார்.. 2006 ஆண்டு தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற உங்கள் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் 3ம் இடத்திற்கு போயிட்டார்!!!

10 வார்டில் பதுருல் ஹக் (சுயேட்சை) 2 வது இடம் ....உங்க உதயசூரியனுக்கு 3 வது இடம் .....

6 ம் வார்டில் இங்கே போஸ்டர்லே இருக்கிற அன்பர்தான் உதயசூரியனில் போட்டியிட்டு சுயேச்சை வேட்பாளர் இடம் தோத்துபோனார் !!!!!

. 13 வார்டில்- இரட்டை இலை சின்னத்தில் நின்ற வேட்பாளர் - சொளுக்கு வெற்றிபெற்றார். உங்க திமுக விற்கு அங்கே 5 வது இடம் !!!

இது எல்லாம் ஊருக்குள்ளே பட்ட அடி ...புற நகர் இல்லை . 7 இடத்தில நின்று 4 இடத்தில மரண அடி பட்டது தான் உங்கள் சாதனை .. இதற்க்கு பயந்து தான் இப்போ ஒதுங்கி இருந்தீங்க என்று எல்லோருக்கும் தெரியும் ....போஸ்டர் ஓட்டுனாப்பலே பழைய காயம் மறஞ்சிடுமா!!!

கலைஞர் பட்டணமாம்!!! அதுலாம் ஜாஹிலியா காலத்தோட முடிஞ்சி போச்சி!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. ALIVE
posted by Noohu T (Maana Paana) [02 November 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12781

சற்று முன்பு கிடைத்த தகவல்படி , தீ. மூ க , என்ற கட்சி இன்னும் உயிர் வாழ்கிறது என்பதை அறிவிக்க அவர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடி இருக்கிறார்கள் , அதனால் எதை இப்படியே விட்டு விடலாம்.

ஒரு வேலை எதிர்காலத்தில் தீ. மூ க ஆட்சி வந்தால் என்ன பதில் சொல்வது? கிளம்பிட மாட்டாங்க?

What goes around, comes around

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. நிரந்தர பதவிக்கான பரீட்சை
posted by musthak ahamed (mumbai) [02 November 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 12782

எனது அருமை நண்பர் மொய்தீன்.................துணை தலைவர் ..........வாழ்த்துக்கள்.

உங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வியூகம் உங்களுக்கு புரிகின்றதா என்று தெரியவில்லை.

ஓன்று மட்டும் உங்கள் இதயத்தில் பதிவு செய்ய ஆசைபடுகிறேன்.

நீங்கள் இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது கண்டிப்பாய் நீங்கள் ஒரு கட்சியை சேர்ந்தவர் என்பதால் இல்லை என்பதை உங்கள் மனம் அறியும் என்று நம்புகிறேன். சேவை செய்தவர் இனியும் செய்வார் என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஜமாத்தில் உள்ள பெரியவர்கள், பெண்கள் நண்பர்கள் உங்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

மும்பை மொய்தீன் என்பது மிக பெரிய அடையாளமாக உங்களுக்கு இறைவன் வழங்கி உள்ளான். இனியும் மிகபெரிய கவுரவம், உண்மையான சிறப்புக்கள் வந்து சேர உங்கள் உண்மையான சேவை மட்டுமே காரணமாக இருக்கும். தயவு செய்து எந்த கட்சி சால்வையிலும் உங்கள் சொந்த முகத்தை தொலைத்து விடாதீர்கள்.

உண்மையை நேர்மையாய் சொல்லவேண்டும் என்றால் இந்த உங்களின் வெற்றிப்பின்னணியில் நடந்த அனைத்தையும் அல்லாஹ்வும், நீங்களும் மேலும் இதில் தொடர்பு கொண்டவர்களும் நன்கு அறீவீர்கள். இது தான் உங்களின் வெற்றி என்ற மாய வலை உங்களை சுற்றி பின்னப்பட்டுள்ளது. ஆனால் கொண்டாட்டங்கள் மூலம் நீங்கள் உங்கள் சுய அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் உங்கள் எண்ணம் மக்கள் சேவை தான் என்றால். இந்த பயணம் உங்களை நீங்கள் நிர்ணயித்துள்ள இலக்கை அடைய விடாது.

எனது அருமை நண்பரே , நீங்கள் உங்களை உணருங்கள்....... எதற்காக வேண்டி நீங்கள் நகர் மன்ற உறுப்பினராக தேர்ந்துடுக்கப்படீர்கள் என்பதை நீங்களும் மக்களும் அறீவீர்கள். ஆனால் நீங்கள் தற்போது எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்கள் மனசாட்சி அறியும். இருப்பினும்,

நீங்கள் அல்லாஹ்விற்கு பயந்து செயல் படுங்கள். நகர் மன்ற தலைவருடன் ஒன்றாக இணைந்து செயல்படுங்கள். நல்ல திட்டங்களை எப்போதும் ஆதரியுங்கள். யார் தடுத்தாலும் செவிசாய்க்காதீர்கள். உங்கள் முடிவுகளை நீங்களே தீர்மானியுங்கள்.

உங்களுக்கு இன்னும் வயதும் திறமையும் இருக்கிறது. உங்கள் செயல்களே உங்களுக்கு பெருமை சேர்க்கும்.

உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பதவி அமானிதம் என்பதை உணருங்கள்.

உங்களுக்கான கேள்விகள் நாளை மறுமையில் தயாராக இருக்கிறது. அதற்கான பதில்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். யாரும் தலையிடமுடியாத, நிரந்தர பதவி தயாராய் இருக்கிறது. ஆனால் இந்த ஊர் மக்கள் சாட்சிகள் மட்டுமே அன்று அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படும்.

எங்களை உங்களின் நிரந்தர பதவிக்கான சாட்சிகளாய் மாற்ற வேண்டியது உங்கள் கைகளிலே உள்ளது...................

முஸ்தாக் அஹ்மத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by Refai (Dar Es Salaam) [02 November 2011]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 12783

எதற்கு இந்த வெட்டி பந்தா ?

வடிவேலே அட்ரெஸ் இல்லாம போய்ட்டான் அவனுடைய டயலாக் எதற்கு ? வெற்றி வெற்றி வெற்றி என்று கூவுரிங்க...

நகராட்சி தலைவி கூட சேர்ந்து ஊரு நலனுக்காக பாடுபடுங்கள். நீங்க துணை தலைவர் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள் .. தலைவி வெற்றிகே போஸ்டர் அடிகல உங்களுக்கு எதற்கு பந்தா ?

அடுத்த தேர்தல்ல dmk என்று ஒரு கட்சி இருக்கா என்று பார்க்கலாம்.



Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. போலியான சுவரொட்டி தி.மு.க
posted by P.S.ABDUL KADER (jeddah) [02 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12786

அஸ்ஸலாமு அழைக்கும்

நான் முன்னமே சகோதரர் மும்பை முஹைதீன்க்கு அ.தி.மு.கவில் சேர அழைப்பு கொடுதேன்., காரணம் 11 வது வார்டுக்கு சுயட்சையா போட்டி இட போய் வெற்றியை தக்கவைத்தீர். உண்மைய தி.மு.க சின்னத்தில் போட்டி போட்டு இருந்தால் காயல்பட்டணம் பஞ்சயட் பக்கம் வந்து இருக்கமட்டார். துனைத்தலைவர் தேர்தலில் மக்கள ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தார், இல்லையே!

துணைத்தலைவர் தேர்தலில் எப்படி வெற்றி பெற்றீர் என்று உங்கள் தலைவர் கலைஞர் தெரியாமலா இருப்பார். நமதூர் நகர்மன்றத் தேர்தலில் அரசியல் தலையீடு வேண்டாம் என ஐக்கியப் பேரவை கருதியது உண்மை என்றால் அது தலைவருக்கு மட்டும் அல்ல! மாறாக துணைத்தலைவருக்கும் பொருந்தும்தானே?

இதையெல்லாம் விட்டுவிட்டு நகராட்சி தலைவருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நம் ஊருக்கு நல்லது செய்ய முன்வரவும்.

போஸ்டர் விளம்பரம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கவனத்துக்கு இன்னும் போகவில்லையோ,

அப்படியே மின்னஞ்சல் வழியாக தெரியபடுத்தவும், கிடைக்கவேண்டியது ஊருக்கு சீக்கிரமாக கிடைக்கும்

வஸ்ஸலாம்

MGR ரசிகன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா???
posted by Seyed Ibrahim (Kayalpatnam) [02 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12788

அன்பு சகோதரர்களே!!! காயல்பட்டினம் கலைஞர் பட்டினம் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எஸ்.ஐ.காதர் அவர்களும். நகர செயலாளர் அல்ஹாஜ் மு.த.ஜெய்னுதீன் அவர்களும் மார்தட்டி போஸ்டர் வெளியிட்டுள்ளார்கள்.

அவர்களுடைய சிந்தனைக்காக, கடந்த 2006இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நகர திமுக சார்பில் போட்டியிட்டவர்கள் மண்ணைக் கவ்விய பட்டியலை சகோதரர் Cnash தந்துள்ளார். (அது வேற வாய்! இது நாற வாய்!! என்று) எதுவும் சொல்லி சமாளித்து விடக்கூடாதே என்ற கவலையில், நடப்பு உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் நின்று சாதனை படைத்த (???) கழக உடன்பிறப்புக்களின் தேர்தல் முடிவுகளை இதோ தருகிறேன் பாருங்கள்...

5 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் தீவிர அனுதாபி (MLA அவர்களின் வலது கரம் என்று அழைக்கபடுகின்ற) சகோதரர் முத்து அவர்கள் தோல்வி - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

7 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் வட்ட செயலாளர் சகோதரர் MK மொஹ்தூம் அவர்கள் தோல்வி (டெபாசிட் இழப்பு) - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

12 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் மாணவர் அணி முன்னோடி திரு சபாபதி அவர்கள் தோல்வி (டெபாசிட் இழப்பு) - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

13 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் இளைஞ்சர் அணி அமைப்பாளர் திரு கோபால் (டெபாசிட் இழப்பு) - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

13 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் முன்னாள் நகர செயலாளர் சொலுக்கு மாமா அவர்கள் தோல்வி (டெபாசிட் இழப்பு) - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

14 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் கூடுதல் செயலாளர் மற்றும் மகளிர் அணி திருமதி பூங்கொடி அவர்கள் தோல்வி (டெபாசிட் இழப்பு) - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

15 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் வட்ட செயலாளர் (டீ கடை) சாமு அவர்கள் தோல்வி - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

16 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் முன்னால் வார்டு செயலாளர் கழகத்தின் மூத்த உறுபினர் சகோதரர் கோபி சையது அவர்கள் தோல்வி - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

மேலும் சகோதர்ர் Cnash குறிப்பிட்டுள்ளபடி, திமுக மா........நில பொதுக்குழு உறுப்பினராக உள்ள அல்ஹாஜ் எஸ்.ஐ.காதர் அவர்கள் கடந்த தேர்தலில் பெயர் தெரியாத ஒரு சுயேட்சையிடம் தோற்றுள்ளார்...

நான் மேற்சொன்ன பட்டியலில் டெபாசிட் பாதுகாக்கப்பட்டவர்களை விட இழந்தவர்களே அதிகம்! இருந்தாலும் இது கலைஞர் பட்டணம்தானுங்கோ! வாழ்க கலைஞர்! வளர்க அவரது உடன்பிறப்புக்கள்!!

மக்களே சிந்திப்பீர் !!!

ஊர் நலனில் அக்கறை கொண்டவர்கள்
யார் என உணர்ந்து கொள்வீர் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by mammaash (qatar) [02 November 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 12790

இந்த போஸ்டர்ஸ் பாக்க பாக்க சிரிப்ப அடக்க முடியல !!!

அங்கயே மங்காத்தா ஓடிட்டு இருக்கு நா உள்ள நீ வெளியேன்னு இதுல நமக்கு இதுலாம் தேவையா...

எப்பதான் திருந்துவாங்களோ தெரியலை !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. என்னக்கொடுமை சார் இது.
posted by KMT Shaikna Lebbai (Singapore) [02 November 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 12791

இன்னுமா காயல்பட்டணம் கலைஞர் பட்டினம் என்று சொல்லுகிறீர்கள்.

என்னக்கொடுமை சார் இது.

திமுக கட்சி காரங்க மக்களுக்கு இவ்வளுவு துரோகம் செய்ஞ்சி கூட இன்னும் அந்த கட்சிக்காக படுபடுகிரவர்களை நெனச்சா ஒரு பக்கம் சிரிப்பும் ஒரு பக்கம் கோபமும் தான் வருது.

காயல்பட்டணம் கலைஞர் பட்டினம் என்று சொல்லுகிறவர்களை பார்த்து ஒரு கேள்வி கேக்குறேன். தயவு செய்து பதில் கூறவும்.

அழகான பெயர் கொண்ட நமது ஊர் காயல்பட்டினத்தை கலைஞர் பட்டினம் என்று கூற சரியான ஒரே ஒரு காரணத்தை உங்களால் கூற முடியுமா?

தயவு செய்து நமது ஊரில் அரசியல் (எந்த கட்சியும்) வேண்டாம்.

எந்த கட்சி காரங்க வந்தாலும் நம்மளுக்கு அவங்க ஒன்னும் செய்ய மாட்டாங்க.

தயவு செய்து அரசியல் காரங்க பின்னாடி சுத்துரத விட்டுட்டு அவங்க அவங்க வேலைய பாருங்கப்பா.

முக்கியம்,இனிமே காயல்பட்டணம் கலைஞர் பட்டினம் என்று சொல்லாதீர்கள்.please.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by MOHD IKRAM (SAUDI ARBIA) [02 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12792

நானும் ஒரு தி.மு.க. அனுதாபி தான். இப்படி போஸ்டர் அடித்து பெருமை கொள்ள வேண்டிய அவசியம் இல்லைதான்.

ஒரு மாநகராசியில் கூட வெற்றி பெற முடியாத பரிதாப நிலையில் உள்ளவர்கள், இனி அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெரும் வழிகலை பாருங்கள். இப்படி வீண் குழப்பம் செய்தால் இனி வரும் காலங்களில் என்னை போன்ற தி.மு. க. அனுதாபிகள் கூட உங்களுக்கு வோட்டு போடா யோசனை செய்ய வேண்டியது வரலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by seyed mohamed (KSA) [02 November 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12793

இப்ராகிம் போட்டு ஒடிச்சு போட்டாரு.

அது சரி எங்க வாட்டில் அதான் 16 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் முன்னால் வார்டு செயலாளர் கழகத்தின் மூத்த உறுபினர் சகோதரர் கோபி சையது அவர்கள் தோல்வி - - -ஜெயித்தும் ஒரு திமுக ஆள்தான். ஒவோவ்று வாட்டில் தோத்தாலும், ஜெயித்ததும் அதிக திமுக தான். என்ன செய்ய நமக்கு கட்சி வெறி போகுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [02 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12795

"பழைய நெனப்புதான் பேராண்டி பழைய நெனப்புதான்.."என்கிறமாதிரியாக இருக்கிறது தி.மு.க வினரின் அறிக்கை.

நான் அதிகம் எழுத தேவையில்லை. எழுதிய வாசகர்களே பின்னி பெடலெடுத்து விட்டார்கள். இதற்குப்பிறகும் தி.மு.க என்ற கட்சிக்கு சிறிதளவாவது சுயமரியாதை இருக்குமானால் இதற்காக அவர்கள் வெட்கப்படவேண்டும்.

அண்ணாச்சி அனிதாவே கூடத்தில் பேச பயப்பட்டு பேசாமல் இருக்கும் பொது இந்த குட்டிகளுக்கு என்ன வேலை? பேசாமல் இருக்கிற இடத்தில் இருந்தால் இவர்களுக்கு நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by Zainul Abdeen (DUBAI) [02 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12796

"பச்ச தண்ணீர குடிச்சிபுட்டு பிரியாணி சாப்பிட்ட மாதிரி பல் குத்தக்கூடாது". இந்த அற்ப உலகத்திலே ஏன் இந்த வெட்டி பந்தா ???

துணை தலைவர் தேர்தலில் திமுக அமோக வெற்றி வெற்றி வெற்றி. வெற்றி என்று சொல்லுவதற்கு முதலில் தேர்தலில் போட்டி இட்டு இருக்கவேண்டும். பிற்பால் ஜெயித்தால் வெற்றி வெற்றி என்று கூப்பாடு போட்டு இருந்தால் தப்பும் இல்லை நாங்களும் சேர்ந்து போஸ்டர் அடித்து கொண்டடிருப்போம். அப்படி DMK கட்சி சார்பில் நிக்காமல் வெற்றி எங்கிருந்து வந்தது. வேண்டும் என்றல் DMK "வெட்டி வெட்டி வெட்டி" என்று சொல்லலாம்.

இது அவர்கள் கட்சி மேல் வைத்திருக்கும் அன்பையும், ஒரு அளவில்லாத பிரியத்தையும் , விசுவாசத்தையும் காட்டுகிறதே தவிர உண்மை இல்லை என்று அவங்க கட்சி மேல் இடத்துக்கே தெரியும்.

உண்மை என்னவென்று எல்லோருக்கும் தெரியும், அனால் ஒன்று உங்கள் போஸ்டரில் உள்ள "இவ்வூர் எப்போதும் பிளவுபட்டே இருக்க வேண்டும் என்று கருதுகின்ற சதிகாரர்களின் வஞ்சக வலையை அறுத்து வீசி, துணைத்தலைவர் தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது. குழப்பவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நகராட்சியில் நிலைநாட்ட துணைத்தலைவர் தேர்தலிலும் மூக்கை நுழைத்தனர். இம்முயற்சி முற்றிலுமாக முறியடிக்கப்பட்டுள்ளது." மிகவும் கவர்சிக்கரமாகவும், ஈர்க்ககூடியதுமாக உள்ளது.

இந்த உங்களுடைய முழு முயற்சியையும், உங்கள் கழகத்தின் உழைப்பையும் நகராட்சி தலைவர் போட்டியில் , ஐக்கிய பேரவையின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெறும்வண்ணம் இருந்திருந்தால் நீங்கள் பாரடுகுள்ளகிரிபீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. கட்சி சாயம் பூசி நமது ஊரை உயர விடாமல் தடுக்க உங்களின் நோக்கத்தையும், சுய நலத்தையும் உங்களின் போஸ்டர் மூலம் நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [02 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12799

நமது ஊர் நலனில் அக்கறை உள்ள பல பேர் இதில் தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்களே.. அதில் யாராவது உள்ளூர் தி.மு.க வினர்களுக்கு நீங்கள் செய்தது சரி (நியாயம்) தான் என்று சொல்கிறார்களா..? சிந்தியுங்கள்

இவர்களின் வாசகத்தை கவனியுங்கள்..

1) இவ்வூர் எப்போதும் பிளவுபட்டே இருக்க வேண்டும் என்று கருதுகின்ற சதிகாரர்களின் வஞ்சக வலையை அறுத்து வீசி, துணைத்தலைவர் தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது. குழப்பவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நகராட்சியில் நிலைநாட்ட துணைத்தலைவர் தேர்தலிலும் மூக்கை நுழைத்தனர். இம்முயற்சி முற்றிலுமாக முறியடிக்கப்பட்டுள்ளது...

பதில் 1:- இவ்வூர் எப்போதும் பிளவுபட்டே இருக்க வேண்டும் என்று கருதுகின்ற சதிகாரர்கள் வேறு யாரும் அல்ல.. நீங்களே தான் என்பதனை உங்களின் போஸ்டர் மூலம் நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்..

2) காயல்பட்டினம் என்றும் கலைஞர் பட்டினமே என்பதை இப்போதும் நிரூபித்துள்ளோம். இனி எப்போதும் நிரூபிப்போம். இந்த ஊர் உயரத் தொடர்ந்து உழைப்போம்...

பதில் 2:- இந்த ஊர் உயரத் நீங்கள் பாடுபடவில்லை என்பதனை துணை தலைவர் தேர்வு முடிந்து கட்சி சாயம் பூசி நமது ஊரை உயர விடாமல் தடுக்க உங்களின் நோக்கத்தையும், சுய நலத்தையும் உங்களின் போஸ்டர் மூலம் நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்..

இந்த போஸ்டர் மூலம் அனைவர்களையும் நமது ஊர் மக்கள் அடையாளம் கண்டு விட்டார்கள்... ! அதன் பலனை வரும் காலத்தில் உள்ளூர் தி மு க வினர்களுக்கு புரிய வைப்பார்கள்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by kavimagan (kayalpatnam) [02 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12800

சகோதரர் செய்யத் முஹம்மத் அவர்களே!

நமது வார்டில் வெற்றி பெற்ற கரடி சாமு காக்கா அவர்கள் தி.மு.க.காரர் என்று யார் சொன்னது? அவர் அ.தி.மு.க.விற்கு தாவி அல்லது மாறி பல மாதங்கள் ஆகிவிட்டதே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by kajanawas (Bangkok) [02 November 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 12801

இந்த மெசேஜ்ல என்ன கூத்து என்றால் அவங்களே அவர்களை சொல்லி கொல்லுகிறார்கள் குழப்பவாதி, விசமிகள் என்று, எப்படி என்றால் இவனுவோதன் ஊரை 8 ... ஆக்குரானுவோ (DMK,ADMK,CONG.,....) சாக்கடை என்ற போர்வையை போத்தி.

மக்கள் எல்லாரும் சேர்ந்து நகர் மன்றத்தில் இருந்து சாக்கடை தூர் வாரியாச்சி இப்பமாவது சுத்தமான தண்ணீர் ஊட விடுங்கள் தள்ளி நின்று குடித்துகொல்லுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by Moosa Naina (Madina (K.S.A)) [02 November 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12802

நமதூர் நகராட்சியின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மும்பை மெய்தீன் அவர்களுக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

கலைஞர் பட்டணம் கலைஞர் பட்டணம் என்று கொக்கரிக்கிறீர்களே, அந்த கலைஞர் நமதூர்க்கு செய்த நன்மைகள் என்ன? பட்டியலிட முடியுமா!கழக நிர்வாகிகளும் , பொதுக்குழு உறுப்பினரும். உங்கள் கலைஞர் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் செய்த துரோகங்களை என்னால் பட்டியலிட முடியும்.

முதலில், ஊழலில் புரண்டு திண்று கொழுத்த கழக உடன்பிறப்புகளை (கணிமொழி உட்பட) ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.அதன் பின் புகழ் பாடலாம் திமுக வைப்பற்றி.

ஊரில் உள்ள உண்மையான ஊர் பற்றுள்ள விசுவாசிகளே! இப்படி பட்டோரை அடையாளம் கண்டு நமதூர்க்கு வரக்கூடிய நல்ல பல திட்டங்களை தடுப்பதற்க்கு தயவுசெய்து துணைப்போகாதீர்கள். இப்பொழுது நடந்தது ஒன்றும் MLA, MP Election அல்ல,தமது கட்சியின் புகழ் பாட.

எனக்கு முன்பு பல உண்மயான ஊர் நல விரும்பிகள் எழுதி உள்ள கருத்துக்களை திமுக நிர்வாகிகள் நன்கு படித்து ஊருக்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய பாருங்கள். வஸ்ஸலாம்.

அட்மின். அவர்களே!. எனது கருத்தை எடிட் எதுவும் செய்யாமல் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by Meera sahib (kayalpatnam) [02 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12803

எலக்சன் முடிந்தாச்சு!

எல்லா வேட்பாளர்களும் நாங்கள் சுயேட்சைகள் என்று போட்டியிட்டார்கள் ! அதன்பிறகும் நம் ஊருக்கு கட்சி சாயம் பூச வேண்டுமா ? உங்களை போன்றவர்களை அழைத்து வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேச வைத்ததற்கு ஐய்க்கிய பேரவை அடைந்த தோல்வி ............???

தயவு செய்து நம் ஊரை ஒரு கட்சி ஊராக இனி முன்னிலை படுத்தாதீர்கள். நமது ஊரை கலைஞ்சருக்கோ அல்லது ஜெயலலிதாவுக்கோ பட்டா எழுதி கொடுக்கவில்லை.

கொள்கையின் அடிப்படையிலும் செய்த செயல்களின் அடிப்படையிலும் வாக்களித்து தேர்ந்தெடுப்பதே ஜனநாயகம் ! தனி நபர் வழிபாட்டில் அல்ல!

இது அவர்களுடைய ஆட்சியின் செயல்பாட்டை பொறுத்து தேர்தலுக்கு தேர்தல் மாறுபடும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by M Sajith (DUBAI) [02 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12804

மம்மாசன் காக்கா சொன்ன மாதிரி, மேல நடக்குற உள்ளே வெளியே விளையாட்டுள தாத்தா தடுமாறிகிட்டு இருக்கார்..

இன்னைக்குதான் தளபதி கூட்டிகிட்டு வரப்போயிருக்கார் டில்லிக்கு அதுவும் பெயில் வரும்.. ஆனா வராதுன்னு சந்தேகத்துல..

நம்ம எம்.எல்.ஏ வும், இப்போதான் வந்தார்.. எவ்வளவு நாளுன்னு தெரியல.. அம்மா மறந்தாப்புல இருந்தாலும், இவங்களா ஞாபகப்படுத்திருவாங்க போல...

கலைஞர் பட்டணம் கத்திரிக்கா பட்டணம் என்று பெருமைக்கு மாவிடிச்சி புள்ள வாயில மண் அள்ளி போடாம இருந்தா சரிதான்.

அங்க ராவுத்தரே கொக்கா பறக்குறாரு, இதுல குதிரைக்கு கோதுமை அல்வா தின்னிறுச்சின்னு போஸ்டர் வேற....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. சாமு அவர்கள் அ இ.அ.தி.மு.க கட்சிக்கு மாறி பல மாதங்கள் ஆகிறது...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [02 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12806

posted by seyed mohamed (KSA) [Wednesday, November 02, 2011] IP: 88.*.*.* SAUDI ARABIA | Comment Reference Number: 12793

கழகத்தின் மூத்த உறுபினர் சகோதரர் கோபி சையது அவர்கள் தோல்வி - - -ஜெயித்தும் ஒரு திமுக ஆள்தான் என்று சகோதரர் செய்து முகம்மது தவறாக சொல்கிறார்.. தி மு கழகத்தின் மூத்த உறுபினர் சகோதரர் கோபி சையது அவர்களை எதிர்த்து வெற்றி பெற்ற சாமு அவர்கள் அ இ.அ.தி.மு.க கட்சிக்கு மாறி பல மாதங்கள் ஆகிறது...

சகோதரர் செய்து முகம்மது அவர்களுக்கு 16வது உறுப்பினர் ஜனாப் சாமு அவர்கள் அ இ அ தி மு க கட்சிக்கு இணைந்த தகவல் அறியவில்லை போலும்...!

சகோதரர் செய்து முகம்மது அவர்கள் ஊரில் இருக்கும் தனது நண்பர்கள் மூலம் தகவல் பெற்று கொள்ளவும்..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (வி.சி.கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. நெத்தியடி.....
posted by zubair (riyadh) [02 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12807

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹாஜ் எஸ்.ஐ.அப்துல் காதர், அல்ஹாஜ் மு.த.ஜெய்னுதீன் காக்கா.... அனைத்து கட்சிகள் ஊர் ஒற்றுமைக்கு வேண்டி வழிவிட்டதை சில புத்தி ஜீவிகள் நம் ஐக்கிய பேரவையை கங்கணம் கட்டி ஒழிக்க பயன் படுத்திக்கொன்றனர். என்றாலும் துணை தலைவர் விசயத்தில் நெத்தியடி கொடுத்துள்ளீர்கள்.

வார்டு மக்கள்... வார்டு மெம்பரை தேர்ந்தெடுத்தார்கள். வார்டு மெம்பர் துணை தலைவரை தேர்ந்தெடுத்தார்கள் இதில் என்ன தவறு.... பணம் பாதாளம் வரை பாய்ந்தது..... (மது)பானம் அடிவயிறுவரை சென்றது என்பதெல்லாம்... சந்தேக புத்தி கொண்டவர்களுக்கு உள்ள இயற்க்கை குணம்.

சில புத்தி ஜீவிகள் துனைதலைவரையும் மக்களிடம் கேட்டுதான் செய்யணுமாம்.... என்று மறைமுகமாக கேட்டுள்ளனர். கொஞ்சம் விட்டால் மன்மோகன்சிங் என்கிட்ட கேட்டுதான் எதவேன்டாலும் செய்யணும் என்பார்கள் போலும்.

போஸ்ட்டரில் வாசகம்கள் ஓவர் என்றாலும்..... கொடுக்க வேண்டிய டானிக்கை கொடுத்து இருக்கிறீர்கள். உங்களின் எய்ம் நிறைவேறி இருப்பது கமாண்ட்ஸ்கள் மூலம் தெரிய வருகிறது.

நகராட்சி விசயத்தில் விட்டு விடுங்கள் கட்சி சாயம் பூசாமல் துணை தலைவரை அவரின் மனசாட்ஷிபடி நடக்கவிட்டு தலைவர்க்கு ஒத்துழைக்கட்டும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [02 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12808

நானும் என் பங்குக்கு ஊரில் பல தி.மு.க. அனுதாபிகளுடன் தொலைபேசி வழியாக இந்த போஸ்டர் விஷயம் பற்றி விசாரித்தேன், ஒருத்தரை தவிர மற்ற அனைவர்களும் இதை வெறுக்கத்தான் செய்தார்கள். அந்த ஒருவர் கூட 'விசயத்தை விடுப்பா' என்று தான் கூறினாரே தவிர, இதை ஆதரிக்க வில்லை. எல்லாம் ஆர்வக் கோளாறு.

உன்டான தி.மு.க. ஓட்டு கூட, இதனால் பாதிப்படைந்துள்ளது என்பது தான் உண்மை.

இதன் பெயர் தான் "சொந்தக் காசில் சூனியம் வைப்பது என்பது" என்று கிராமங்களில் சொல்லுவார்கள்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. ஊரான் வீட்டு நெய்யே...........
posted by சதக் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia) [02 November 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12809

இதை ஏனுங்க பெரிசு படுத்துறீங்க?!

திமுக மட்டும்தான் தம்பட்டம் அடிக்கிறதா? நம்மூர் 4ஆம் வார்டு உறுப்பினர் முஸ்லிம் லீக் வேட்பாளராமே? முஸ்லிம் லீக் கட்சியில் நின்று வெற்றி பெற்றோர் பட்டியலில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஊரான் வீட்டு நெய்யே. என் .....டி கையே! என்பது அரசியலில் சகஜம்தானோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. தொலை பேசி எண்களை பொது மக்களுக்கு அறியத் தந்தால் ...........
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [02 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12810

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நமது நகர்மன்றத்திற்கு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க - அதற்கு - உரிமையுடைய உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் - பொது மக்களல்ல துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தது.

இந்த தேர்ந்தெடுப்புக்கு யாரும் உரிமைக் கொண்டாடவும் வேண்டாம் எதையும் திசைத் திருப்பவும் வேண்டாம்.

நம்ம ஊரைப் பொறுத்தவரை தேர்தல் காலங்களில் நிலவுகிற அத்தனை வீண் விளையாட்டுகளும் - பெருமைக்கும் , பந்தாவுக்குமேத் தவிர சில சகோதரர்கள் நினைப்பது போல் சம்பாதிப்பதற்கோ / பதவிக்கோ அல்ல.

அதே நேரத்தில் பெருமைக்காகவும், பந்தாவுக்காகவும் ஊரையும் , ஊர் மக்களையும் நாசப்படுத்துவது அழகல்ல.

நமது நகராட்சித் தேர்தலும் மற்றும் துணைத் தலைவர் தேர்தலும் அரசியல் கட்சிகள் சார்பில்லாத சுயேச்சையான தேர்வுகளாக நடைபெற்றதால் தயவு செய்து யாரும் இதில் விவாதங்கள் செய்ய வேண்டாம்.

------------------------------------------------------

கட்சிக்காரர்களின் கண் கட்டு வித்தை :

இதில் யார் விவாதம் செய்தாலும் அவைகள் எல்லாம் நம்மிடையே மனக்கசப்பைத்தான் உண்டுபண்ணுமேத் தவிர - எந்த நண்மையையும் தரப்போவதில்லை.

மேலும் எந்த அரசியல் கட்சியானாலும் நமதூருக்கு எந்த ஒரு பிரத்தியேகமான திட்டங்களையும் கொண்டு வரப்போகிறதில்லை - கடந்த ஆட்சியிலும் சரி, அதற்கு முந்திய ஆட்சிகளிலும் சரி.

உண்மையிலேயே ஆளும் கட்சியில் இருந்தால் நமதூருக்கு நன்மை கிடைக்கும் என்பதெல்லாம் அரசியல் கட்சிக்காரர்களின் கண் கட்டு வித்தை - ஆனால் ஓன்று மட்டும் உண்மை - ஆளும் கட்சி அரசியல் வாதிகளுக்கு வேண்டுமானால் வருவாயைப் பெருக்க இது பாலமாக அமையும் என்பது.

ஆகையால் அரசியல் வாதிகளின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் நேர்மையாக நகர்மன்றம் நடைபெற்றால் வெற்றிபெறலாம்.

---------------------------------------------------

100 % ஊழல் அற்றதாக ஆகிவிடும் : தலைவர், துணைத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல் ஒற்றுமையாக செயல்பட்டு - எல்லாவிதத்திலும் ஒருவருக்கொருவர் கலந்து கருத்து பரிமாற்றங்களை பகிர்ந்து செயல்பட்டால் - நகர்மன்ற பணிகள் தங்கு தடையின்றி நடைபெறும் - நல்ல முன்னேற்றம் காணலாம்.

நகர்மன்ற அங்கத்தினர்களே!

நமக்கு தற்போதைக்கு வேண்டியதெல்லாம் " ஊழல் இல்லாத நகராட்சி நிர்வாகம் மட்டுமே " இதை மட்டும் குறிக்கோளாக வைத்து நீங்கள் , நிர்வாகம் செய்தால் இன்ஷா அல்லாஹ்! இரண்டு வருடத்திற்குள்ளாக நகராட்சி நிர்வாகம் 100 % ஊழல் அற்றதாக ஆகிவிடும்.

அதன் பின் நீங்கள் நகருக்கு தேவையான திட்டங்களை படிப்படியாக கொண்டு வரலாம் - எப்போது , ஊழல் அற்ற நிர்வாகம் நடக்கிறதோ அப்போது நமக்கு தேவையான திட்டங்களும் இறைவனருளால் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.

----------------------------------------------------

பொது மக்கள் :

மக்கள் அனைவரும் தேர்தல் காலங்களில் ஏற்பட்ட விருப்பு , வெறுப்புக்களை மறந்து ஊரின் நலனை கருத்தில் கொண்டு - நகர்மன்ற அங்கத்தினர்கள் அனைவரும் மக்களின் பிரதிநிதியே என்பதை மனதில் நிறுத்தி - அவர்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதுடன் - அனுபவமுள்ள மக்கள் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் கொடுக்க வேண்டியது.

----------------------------------------------------

நகர்மன்ற அங்கத்தினர்கள் :

தலைவர் மற்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் நகர்மன்றத்திற்கு புதியவர்களாக இருப்பதால் தங்களுக்கு தேவையான நல்ல ஆலோசனைகளை 10 - 15 வருடங்களுக்கு முன்னால் நகர்மன்ற உறுப்பினர்களாக இருந்த " நேர்மையானவர்களிடம் " அவர்கள் வீடு தேடி சென்று கேட்டுப் பெறுங்கள் .

இப்படி செய்வதானது உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் கொடுக்கும் - நல்ல பல திட்டங்களை தீட்டி ஒற்றுமையாக செயல்படுத்தவும் உதவும் - இதன் மூலம் ஊருக்கும் , உங்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.

---------------------------------------------------- வேண்டுகோள் :

வார்டு உறுப்பினர்கள் அனைவருடைய முழு விலாசம் மற்றும் கை பேசி / தொலை பேசி எண்களை பொது மக்களுக்கு அறியத் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

பொது இடங்களில் தொங்க விடுவது மூலமும் , வலைத் தளங்களில் அறிவிப்பதின் மூலமும் மக்களுக்கு உதவிட முடியும்.

மேலும் எண் போன்றோர் தங்களை நேரிடையாக தொடர்பு கொண்டு குற்றம் , குறைகளை கூறவும் அது பெரிது படுத்தப்படாமல் இருக்கவும் உதவும்.

உறுப்பினர்களே! செய்திடுவீர்களா ?

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by Habeeb Rahman (DUBAI) [02 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12811

(தமிழ்) நாடே ஓன்று திரண்டு அம்மாவை நோக்கி ஓடியபோது, நாம் எதிர் திசையில், அனிதாவை நோக்கி ஓடினோம். அப்போவே நமக்கு முடிவாகிவிட்டது! இவர் வேறே, உள்ளே, வெளியே என்று அல்லோகலபட்டு கொண்டிருக்கின்றார். இதை எப்படி அம்மாவின் பார்வையிலிருந்து மறைக்கலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலா இவர்கள் போஸ்டர் அடித்து கடுப்பேத்தனும்?

பல வருஷம் பழம் தின்று கொட்டை போட்டவர்களை, பத்தே நாள் உழைப்பினால், வெளியேத்த நினைத்தது யார் தவறு? பஸ்ஸை விட்டால் என்ன, கார் இருக்கின்றது. ஏறி வந்து வழிமறிக்க!

நமக்கு இது ஒரு ஓய்வு நேர சேவைதான். ஆனால் அவர்களுக்கோ, முழு நேர தொழில். இதை பொறுமையாகவும், புத்திபூர்வமாகதான் டீல் செய்திருக்க வேண்டும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல்!

சகோதரர் முஹைதீனுக்கு, முஸ்தாக் கொடுத்த அட்வைசையே நானும் கொடுக்க ஆசை படுகின்றேன். உங்களை தேர்ந்தெடுத்தது கட்சி அல்ல, உங்களின் நல்ல சேவையை பார்த்த மக்கள்தான்! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடங்கள்! மக்களுக்கு நன்றி காட்டுங்கள்! நல்ல விசயத்தில் இணைந்து செயல் பட்டால் நீங்கள் எந்த கட்சியில் இருந்தாலும், ஆதரவு தருவோம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by Seyed Mohamed Seyna (Bangkok ) [02 November 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 12812

அஸ்ஸலாமு அழைக்கும்,

காக்க செய்தி சூப்பரா இருக்கு , ஆனால் பர்துகிருங்க பாவம் முஹைதீன் காக்க , இந்த செய்தியை யாரும் அம்மா உகுக்கு சொல்லிட போறாங்க , அப்புறம் விளைக்கி வாங்கினது , பணம் எப்படி ஊருக்கு வந்தது , எப்படி பரிமாற பட்டது , எல்லத்தையும் அலசி அப்புறம் கம்பி தான் என்ன வேண்டும் ,

பவம்க தயவு செய்து இந்த செய்தியை யாரும் அம்மாக்கு copy paste or inform பண்ணிடா தீங்க , பாவம் சும்மாவே அம்மா உக்கு அந்த கட்சி கரங்கட கோபமா இருப்பாங்க,

நெஞ்சில மர்தட்டுரத விட்டு விட்டு தப்பு செய்தத எப்படி மறைக்கிறதுடூ யோசிங்க ,

மாசலம்
இப்படிக்கு
Seyed Mohamed (Seyna)
Kayal Ikiya Mandram (KIM) Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by சாளை நவாஸ் (Kayalpattinam) [02 November 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 12814

உங்கள் பேரை வேண்டும் என்றால் கருணாநிதி அல்லது ஸ்டாலின் அல்லது அழகிரி என்று மாற்றி கொள்ளுங்கள், கவலையில்லை, பாராம்பரிய மிக்க காயல்பட்டினத்தை கண்டவர்களுக்கும் தாரைவார்த்து கொடுக்காதீர்கள். காயல்பட்டினம் என்றுமே காயல்பட்டினம் தான்.

வெற்றி விழா கொண்டாடுவதில் தப்பில்லை, ஆனால் தாய் மண்ணை எவருக்கும் விட்டு கொடுக்காதீர்கள்.அப்படி செய்தால் உங்கள் பூதஉடலை கூட என் தாய்மண் ஏற்றுகொள்ளாது.

- மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by mohmedyounus (Trivandram.) [02 November 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 12815

கலைஞ்சர் பட்டினம் என்பதை கலைஞ்சர் பெட்டி இனாம் என்று திருத்தி வாசிக்கவும்.

வேறு என்று சொல்ல தேவை இல்லை.வருது எடுத்து விட்டீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by ALS maama (Kayalpatnam) [02 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 12816

சென்ற முறை நடந்த நகாரட்ச்சி தேர்தலில் தி.மு.க சார்பில் நிற்க கேட்ட மும்பை S.M முஹைதீன் க்கு இடம் தரவில்லை தி.மு.க. சுயேட்ச்சையாக நின்றார் வெற்றிபெற்றார்.

இந்த முறையும் தி.மு.க கட்சி சார்பில் நிற்கவில்லை மும்பை முஹைதீன் அவரின் சேவையின் முத்திரையால் வெற்றிபெற்றதே உண்மை. காயல் நகரின் தி.மு.க வின் துணை தலைவர் என்ற முத்திரையை பதிக்கவில்லை அப்படி இருக்கும் போது மக்களை குழப்பும் புதிய முக மூடி ஏன் அணிவிக்கிறார்கள்?.

நான் தி.மு.க அனுதாபிதான் அதற்காக என் பேனா பொய் சொல்லி எழுதாது. நகராட்ச்சி துணை தலைவர் பதவி ஏற்கும் போது மும்பை முஹிதீன் தி.மு.க வின் வண்ணக்கலவையான கருப்பு,சிகப்பு பார்டர் போட்ட வேஷ்டி கட்டி இருந்தார் அவ்வளவுதான்.

காயல்பட்டணம் கலைஞர் பட்டணமா?, கல்வி பட்டணமா? என்ற விவாதத்துக்கு நான் வரவில்லை. நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் ஆயிரம் இருக்கும் போது இந்த வீண் விவாதங்களை வளரவிடாமல் இத்துடன் முடித்துகொள்ளலாம்.அதுதான் நமக்கு நல்லது.

A.L.S மாமா( எழுத்தாளர், பொது சேவை)
A.L.S SCHOOL OF ARTS,
K.T.M தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by muhsin thamby (singapore) [02 November 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 12818

காத்து இருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டு போன கதையில் இருக்கிறது DMK அறிக்கை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by ahamed.s.i. (colombo) [02 November 2011]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12819

வரும் பாராளுமன்டற தேர்தலில் தி .மு .க .வோட்டு நிச்சயம் குறையபோகுது .சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானே ஆண்டி .அம்மா ஜெயிக இவன் ஒருதன்னே போதும் .ஊர் வோட்டு அம்மாக்கு விழ இது ஒன்னே போதும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. இது நிஜமல்ல ஒரு கதை???????
posted by Salai. Mohamed Mohideen (USA) [02 November 2011]
IP: 98.*.*.* United States | Comment Reference Number: 12820

இந்த செய்தியை படிச்சதில் சிரிப்பை தவிர வேறு எதுவும் வரலே. கடைசியிலே நம்ம திமுக இப்படி ஒரு காமடி கட்சியா போவுன்னு எதிர்பார்க்கவே இல்லை. திமுக வை நினைச்சி சிரிக்கிறதா அல்லது "அய்யோ பாவம்" என்று கவலை படுரதான்னு தெரியலே.

----"நகராட்சித் தலைவர் தேர்தலில் ஊர் பெரியவர்கள் கேட்டுக்கொண்டதால், வெற்றி வாய்ப்பு இருந்தும்(???), தேர்தலில் போட்டியிடாமல் ஊர் ஒற்றுமையை...." ----

நல்ல வேளை "மக்கள் வேட்பாளாரை" எதிர்த்து திமுக சார்பில் ஒரு வேட்பாளாரை நிறுத்தலே. நிறுத்தி இருந்தா மண்ணை கவ்வி..கதை நாரி போயிருக்கும். நகரமன்ற தேர்தலில் நீங்கள் ஆதரித்த வேட்பாளாருக்கு மக்கள் வச்ச ஆப்பை அதுக்குள்ளே மறந்துடீங்களே.

---- "ஆனால் வார்டுகளில் பெரும்பான்மை இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். இதைத் தொடர்ந்து துணைத்தலைவர் தேர்தலில் கழகம் களம் இறங்கியது." ----

இது என்னங்க ஒரு புது கதை. யார் காதுலே இந்த பூ சுத்துறீங்க. யாருக்கு தெரியும் நம்ம பெரியவர்கள் பேரவைக்கிட்ட உள்ளுக்குள்ளே 'டீல்' எதுவும் நடந்துதோ என்னவோ. அது இருக்கட்டும்...நம்ம துணைத்தலைவர் எப்படி வெற்றி பெற்றார்னு (சல்லியை அள்ளி வீசிய "டைம் பாசிங்" சண்டியரை பற்றியும், "ஊர் முழுங்கி" என்று அழைக்கப்படும் மற்றும் கழுதை பேரத்தில் "சோரம் போன" உறுப்பினர்களை பற்றியும் செய்திகள் வாயிலாக) எல்லாருக்குமே மிக நன்றாக தெரியும். எப்படித்தான் வெட்கமில்லாமல் இப்படி ஒரு ஸ்டேட்மன்ட் விட முடியுதோன்னு தெரியலே.

"ஆனால் வார்டுகளில் பெரும்பான்மை இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். இதைத் தொடர்ந்து துணைத்தலைவர் தேர்தலில் கழகம் களம் இறங்கியது. " யாரும் உதயசூரியன் சின்னத்தில் நின்ற மாதிரி எங்க யாருக்கும் தெரியலே. ஒரு வேளை சட்டமன்ற தேர்தலில் பயங்கர தோல்வி அடைந்ததினால் உதயசூரியன் சின்னத்தை புடிங்கிட்டான்களா என்ன???

ஒரு சிலர் தன் பெயருக்கு முன்னால் 'காயல்' என்று போட்டு இருப்பது போல், நீங்களும் 'கலைஞர்/ஸ்டாலின்/அழகிரி' என்ற பெயரை சேர்த்து கொள்ளுங்களேன். அதை விட்டுட்டு ஏன் தேவை இல்லமால் 'காயல்பட்டினம் என்றும் கலைஞர் பட்டினமே!' என்று காலகாலமாக அரைத்த போரடித்து/புளித்துப்போன அதே மாவு.

சரித்திர புகழ் பெற்ற நம்ம ஊர்... ஒருகாலமும் கலைஞர் பட்டினமாக ஆகாது...ஆகவும் முடியாது. அதை உங்கள் சுயலாபத்துக்காக கலைஞர் பட்டினம் என்று காலகாலமாக கதையளந்து வருவதை முதலில் நிறுத்துங்கள். அதை உங்கள் அரசியல் சாக்கடையில் நனைத்துவிடாதீர்கள்.

அட போங்கங்க...வேற எதாவது உருப்படியான த்ரில்லிங்கான கதை சொல்லுங்க. முடிஞ்சா எதாவது "நம்புறமாதிரி" உங்க அன்பர்களை கதை எழுத சொல்லுங்க. விரையில் உங்களுடைய அடுத்த கதைக்காக நாங்க ஆவலுடன் காத்துக்கிட்டு இருக்கிறோம்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. இரத்தத்தில் கலக்க வைக்கப்பட்ட ஒன்று
posted by Mauroof (Dubai) [02 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12821

சொட்டையர்களுக்கும், மொட்டையர்களுக்கும், அம்மாக்களுக்கும், அப்பாக்களுக்கும், அய்யாக்களுக்கும், நடிகர்/ நடிகைகளுக்கும் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ ஜால்ரா அடிப்பதென்பதும்/அடிக்கவைப்பதும் ஏன் தீக்குளிப்பதும், நாக்கு மற்றும் பல உடல் பாகங்களை வெட்டிக்கொள்வதும் இவ்வாறெல்லாம் செய்ய வைப்பதும் நம் நாட்டில் உள்ள பல (கோடி) "அறிவு ஜீவிகளுக்கு"??? பொழுதுபோக்கு/போதை என்பதை தவிர வேற என்ன சொல்ல முடியும்?

மேலும் இந்த செய்திக்கு இவ்வளவு விமர்சனங்கள் தேவையே இல்லையே? நகர்மன்றத்தேர்தலில் ஐக்கியப்பேரவையின் சார்பில் அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி மேலும் சமூக/சமுதாய பிளவுகள் ஏற்பட வாய்ப்புகள் தராமல் இருந்ததை யாராவது பாராட்டியதுண்டா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. துணைத்தலைவர்
posted by Noohu T (Maana Paana) [03 November 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12843

தடுக்கி விழுந்தலே நம்ம ஆளுங்க கம்மெண்டு அடிச்சி ஆபரேஷன் பண்ணிடுவோம், இங்கே தடுமாறி விழுந்தா? போஸ்ட்-மார்ட்டம் தான்...

முக்கியமா இந்த நியூஸ்-இல் ஒன்னு கவனிக்க வேன்றியது இதுவரை யாரும் குரான் , ஹதீஸ் சொல்லாமல் இருந்தது. சந்தோசம்

அரசியல் என்பது தனி மார்க்கம்(according to Indian politics), அரசியல் வாதிகளிடம் போய் மார்க்கம் பேசுவது _________ வாலை நிமிர்த்துவது போலே.

இரு முஸ்லிம் லீக் (Mr.சமது/Mr.லத்திப்) இரு துருவங்களாக இருந்து, மீண்டும் இணையும் பொழுது வழக்கமான " கயிறை பிடிதுகொல்லுகொல்லுங்கள்" என்ற வசனத்தை இரு அப்பாக்களும் மேடையில் ஓதி ஊதினார்கள், அப்புறம் என்னாச்சி....?

உலகத்திலேயே சும்மா கிடைப்பது அறிவுரை , ரொம்ப கஷ்டமானது அதை கேட்பது.

அதனால், தலைவர்களே, மற்றும் கவுன்சிலர்களே தயவு செய்து ஊருக்கு , தொகுதிக்க்கும் ஒதுக்கும் பணமூட்டையை ஊருக்காகவும் செலவு செய்து விட்டு மிச்சம் மீதியை .........

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மீண்டும் ‘செங்கடல்‘ !  (1/11/2011) [Views - 5134; Comments - 14]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved