தமிழக அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் இன்று மதியம் 02.00 மணியளவில் திடீரென காயல்பட்டினம் வருகை தந்தார்.
காயல்பட்டினம் புதுப்பள்ளி அருகில் நகர்மன்றத் தலைவர் ஆபிதாவை சிறிது நேரம் சந்தித்துப் பேசினார்.
நகர அதிமுகவினர் அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர், கடையக்குடி, அருணாச்சலபுரம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டு, அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அவருடன், அதிமுக நகரச் செயலாளர் காஸிம் மற்றும் அதிமுகவின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.
நகரில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் அமைச்சர் பார்வையிட்டுச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேரமின்மை காரணமாக குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் அவர் பார்வையிட்டுச் செல்வதாக தெரிவிக்கப்பட்டது. |