காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர் ஆபிதா, துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோருக்கு, நகர தேமுதிக கட்சி சார்பில் வாழ்த்து தெரிவித்து, கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து அக்கட்சியின் நகர கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் மக்களால் தேர்ந்த்டுக்கப்பட்ட தலைவி, துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நகர தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
04.11.2011 அன்று காலை நகர் மன்றத்தில் வைத்து தே.மு.தி.க.நகர செயலாளர் MHM.சதக்கத்துல்லாஹ் தலைமையில் நகர துணை செயலாளர் MAK.ஜெயினுல் ஆப்தீன் அவர்கள் நகர் மன்ற தலைவி ஜனாபா ஆபிதா அவர்களுக்கு சால்வை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நகர செயலாளர் MHM.சதக்கத்துல்லாஹ் அவர்கள் நகருக்கு அத்தியாவசியத் தேவையான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
இதன் நகல் நகர் மன்ற துணை தலைவர், அனைத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்கும் வழங்கப்பட்டது.நகர் மன்ற துணை தலைவர் அவர்களுக்கு தே.மு.தி.க.மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் ஆர்டிஸ்ட் முருகன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நகர பொருளாளர் காயல் துரை, துணை செயலாளர்கள் சித்தீக் ஹசன், முத்துக்குமார், ஆறாம் வார்டு செயலாளர் அய்யூப், கேப்டன் மன்றம் சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்,
துணைச் செயலாளர்,
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்,
காயல்பட்டினம் கிளை. |