கர்நாடக மாநிலம் பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 20ஆம் தேதியன்று பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து அம்மன்றத்தின் தலைவர் அப்துர்ரஹீம் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-
எமது காயல் நல மன்றம் - பெங்களூஊ சார்பாக அனைத்துலக காயலர்களுக்கும் ஈதுல் அள்ஹா என்னும் ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்துக்களை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லாம் வல்ல இறைவனிடம் நம் ஊர் மக்களின் ஒற்றுமைக்காகவும், நாம் செய்யும் தொழில், வேலை நல்லபடியாக நீடிக்க மற்றும் அனைத்து இஸ்லாமிய மக்களின் ஒற்றுமைக்காக பிரார்த்தனை செய்கிறோம். நம் துஆக்களை அவன் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்!
எமது மன்றத்தின் ஐந்தாவது பொதுக்குழு மற்றும் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் வரும் 20.11.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 04:00 மணிக்கு பெங்களூரு லால்பாக் பூங்காவில் (சென்ற கூட்டம் நடைபெற்ற இடம்) நடைபெறும். அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வஸ்ஸலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்,
பெங்களூரு, கர்நாடக மாநிலம். |