காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில், பள்ளியின் காலாண்டுத் தேர்வு விடுமுறையைப் பயன்படுத்தி மாணவ-மாணவியர் கல்விச் சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
04.10.2011 முதல் 06.10.2011 தேதி வரை மாணவர்கள் சுற்றுலா சென்று வந்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா, எர்ணாகுளம், கொச்சி ஆகிய சுற்றுலாத் தலங்களில் இப்பள்ளியின் 53 மாணவர்களும், 7 ஆசிரியர்களும், படகுச் சவாரி செய்தும், வீகா லேண்ட் தீம் பார்க் சென்றும் இன்பமுடன் பொழுதைக் கழித்தனர்.
இப்பள்ளியின் மாணவியர் 28.10.2011 முதல் 31.10.2011 தேதி வரை சுற்றுலா சென்று வந்தனர். 20 மாணவியர் அடங்கிய இக்குழுவுடன் 6 ஆசிரியையர் உடன் சென்றிருந்தனர். பெங்களூரில் லால்பாக் பூங்கா, நேரு அறிவியல் கண்காட்சியகம், புதிதாக துவக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் உள்ளிட்டவற்றை அவர்கள் கண்டுகளித்தனர்.
பின்னர் மைசூரில் பிருந்தாவன தோட்டம், மைசூர் அரண்மனை, திப்பு சுல்தான் கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கும் அவர்கள் சென்று வந்தனர்.
மாணவ-மாணவியருக்கான சுற்றுலா ஏற்பாடுகளை பள்ளி பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் ஒருங்கிணைப்பில், பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீஃபன் மற்றும் பொறுப்பாசிரியர்கள் செய்திருந்தனர். |