ஹாங்காங்கில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. ஹாங்காங்கிலுள்ள மலைப்பகுதியான துங்சுங் நகரில் துங்சுங் மத்ரஸா மற்றும் மஸ்ஜித் அருகிலுள்ள பூங்காவில், அந்நாட்டு நேரப்படி இன்று காலை 09.00 மணிக்கு ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
இத்தொழுகையில், காயல்பட்டினம் மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளைச் சார்ந்த தமிழ் முஸ்லிம்கள் உட்பட சுமார் 300 பேர் கலந்துகொண்டனர். தொழுகை நிறைவுற்றதும். அவர்கள் ஒருவருக்கொருவர் கைலாகு (முஸாஃபஹா) செய்தும், கட்டித்தழுவியும் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
இத்தொழுகைக்கான ஏற்பாடுகளை துங்சுங் மத்ரஸா மற்றும் மஸ்ஜித் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு, துங்சுங் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் சார்பில், துங்சுங் மத்ரஸா வளாகத்தில் நேற்றிரவு சிறப்பு திக்ர் மஜ்லிஸ் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் முஸ்லிம்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் மற்றும் படங்கள்:
S.A.R.காதிர் ஸாஹிப்,
துங்சுங், ஹாங்காங். |