காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் முவ்வொலி நாதாக்களின் 399ஆவது கந்தூரி வைபவம் 28.10.2011 வெள்ளிக்கிழமை முதல் 05.11.2011 சனிக்கிழமை வரை நடைபெற்றது.
28.10.2011 அன்று மாலையில் கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்வைபவத்தில், தினமும் அதிகாலை சுப்ஹு தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது. தினமும் இரவு 08.30 மணிக்கு மார்க்க அறிஞர்களால் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது.
28.10.2011 அன்று, மவ்லவீ ஊண்டி செய்யித் முஹம்மத் பாக்கவீ – முவ்வொலி நாதாக்களின் சரித்திரமும், ஹஜ்ஜின் சிறப்புகளும் என்ற தலைப்பிலும்,
29.10.2011 அன்று, மவ்லவீ ஏ.எச்.எம்.ஏ.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ – உம்மத்தே முஹம்மதிய்யா என்ற தலைப்பிலும்,
30.10.2011 அன்று, மவ்லவீ எஸ்.எம்.எச்.முஹம்மதலி ஸைஃபுத்தீன் ரஹ்மானீ - ஷரீஅத்தும், தரீக்கத்தும் என்ற தலைப்பிலும்,
31.10.2011 அன்று, மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ - நபித்தோழியர் என்ற தலைப்பிலும்,
01.11.2011 அன்று, மவ்லவீ கே.என்.நூஹ் முஹ்யித்தீன் மஹ்ழரீ – அவ்லியாக்களின் சிறப்புகள் என்ற தலைப்பிலும்,
02.11.2011 அன்று, சென்னை மடிப்பாக்கம் பள்ளி தலைமை இமாம் மவ்லவீ அப்துல்லாஹ் கான் கவ்ஸீ காதிரீ – ஹுப்புர்ரஸூல் என்ற தலைப்பிலும்,
03.11.2011 அன்று, மவ்லவீ எம்.டி.முஹம்மத் அபுல்காஸிம் மஹ்ழரீ – திக்ரின் சிறப்புகளும், கண்மணி நாயகத்தின் மீது கண்ணியமிகு ஸலவாத்துகளும் என்ற தலைப்பிலும்,
04.11.2011 அன்று, திருவிதாங்கோடு அல்ஜாமிஉல் அன்வர் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.நிஜாமுத்தீன் அஹ்ஸனீ - இன்றைய கால சூழ்நிலையில் இளைஞர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
04.11.2011 அன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. பின்னர், தஃப்ஸ் முழங்க போர்வைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, முவ்வொலிகள் மண்ணறைகளில் போர்த்தப்பட்டது.
மஃரிப் தொழுகைக்குப் பின் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸும் நடைபெற்றது.
05.11.2011 அன்று காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் முவ்வொலி நாதாக்கள் கந்தூரி கமிட்டியினர் செய்திருந்தனர்.
படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய்,
நெய்னார் தெரு, காயல்பட்டினம். |