குவைத்தில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
குவைத் நகரில் வசிக்கும் காயலர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் முஸ்லிம்கள், குவைத் - ஷாரிக்கில் உள்ள தமிழ் மஸ்ஜிதில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து உணர்வூட்டும் குத்பா பேருரை நிகழ்த்தப்பட்டது.
தொழுகை, குத்பா பேருரை நிறைவுற்றதும் காயலர்கள் பள்ளி வளாகத்திற்குள் ஒன்றுகூடி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
பின்னர் அவர்கள் குவைத் நகரின் சில முக்கிய பகுதிகளுக்கு சிற்றுலா சென்றனர்.
பின்னர், கோழிக்கறி, இடியாப்பம், புரோட்டா, மாசி, ஜவ்வரிசி, காயல்பட்டினம் ஸ்பெஷல் வட்டிலியாப்பம் ஆகியன பெருநாள் உணவுப் பதார்த்தங்களாக பரிமாறப்பட்டது.
தகவல்:
குடாக் மொகுதூம் முஹம்மத்,
படங்கள்:
ஏரல் அமீர் ஹுஸைன்,
குவைத். |