ஹஜ் பெருநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் - திருவனந்தபுரம் காயல் நல மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மன்றத்தின் தலைவர் எம்.முஹம்மத் அப்துல் காதிர், செயலாளர் ‘ஸ்கட்‘ அபூபக்கர் சித்தீக், பொருளாளர் ஹாஜி எம்.ஐ.சதக்கு தம்பி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தியாகத்தின் வெளிப்பாடாம் இந்த ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாளில், உள்ளூரிலும், வெளியூர்களிலும் வசிக்கும் நமதூர் காயல்பட்டினத்தைச் சார்ந்த பொதுமக்கள் அனைவருக்கும், உலக முஸ்லிம்களுக்கும் எங்கள் இதயங்கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறோம்.
இனி வருங்காலங்களில் எல்லா நாட்களும் நமதூருக்கு நன்மை சேர்க்கும் நல்ல நாட்களாக அமைந்திட கருணையுள்ள அல்லாஹ் துணை புரிவானாக என்று இந்நாளில் நாங்கள் துஆ செய்கிறோம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் சார்பில் நேற்று காயல்பட்டினம் அல்அமீன் துவக்கப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். (விரிவான செய்தி விரைவில...) |