காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளிவாசலையொட்டி கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள உள் மையவாடியில், அப்பள்ளியை நிறுவிய மஹான் செய்யித் அஹ்மத் வலிய்யுல்லாஹ் உள்ளிட்ட மஹான்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அம்மஹான்களின் நினைவு தின நிகழ்ச்சி 05.11.2011 அன்று இரவு 07.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. துவக்கமாக மஹான்களின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
இஷா தொழுகைக்குப் பின் அவர்கள் மீது மர்ழிய்யா - புகழ்மாலை ஓதப்பட்டது. பின்னர், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் கைரீ, மஹான்களின் வாழ்க்கைச் சரிதங்களை விளக்கி உரையாற்றினார்.
இரவு 09.30 மணிக்கு நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. பின்னர் மஹான்களின் மண்ணறைகளை ஜியாரத் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை புகாரிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ முஹ்யித்தீன் லெப்பை துஆ பிரார்த்தனை செய்தார்.
இந்நிகழ்ச்சிகளில், குருவித்துறைப்பள்ளி ஜமாஅத்தைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் மற்றும் படங்கள்:
‘மெகா‘ ரிஃபாய்,
நெய்னார் தெரு, காயல்பட்டினம். |