ஹாங்காங்கில் நேற்று (06.11.2011) ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் கவ்லூன் பள்ளியில் பெருநாட்களின்போது வெவ்வேறு நேரங்களில் 3 ஜமாஅத்துகளாக பெருநாள் தொழுகை நடத்தப்படும்.
நேற்று காலையில் கவ்லூன் பள்ளயில் கடைசியாக நடைபெற்ற பெருநாள் கூட்டுத் தொழுகையை, ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் வழிநடத்தினார். இத்தொழுகையில் திரளான காயலர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பெருநாள் தொழுகை நிறைவுற்றதும், காயலர்கள் ஒன்றுகூடி, கட்டித்தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
தகவல் மற்றும் படங்கள்:
ஹாஃபிழ் முக்தார் இப்றாஹீம் & காதர் சாமுனா,
கவ்லூன், ஹாங்காங்.
கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (08.11.2011 - 12:55hrs) |