தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அவ்வமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் கடற்கரையில் இன்று காலை 07.30 மணிக்கு பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. ஹாஃபிழ் ஏ.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் தொழுகையை வழிநடத்தினார்.
மவ்லவீ இஸ்மாஈல் உமரீ குத்பா பேருரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வுகளில் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வுகளின் நிறைவில், ஏழைகளுக்கான நிதியாக சுமார் 37,000 ரூபாய் தொகை பொதுமக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டது.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |