ஐக்கிய அரபு அமீரகத்தில் 06.11.2011 அன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அன்று காலை 07.15 மணிக்கு துபை தேராவிலுள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற தொழுகையில் காயலர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்றதும், காயலர்கள் ஒன்று கூடி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
காயல்பட்டினம் தீவுத்தெரு, சொளுக்கார் தெரு, கொச்சியார் தெருக்களைச் சார்ந்த காயலர்கள் தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட காட்சிகள் பின்வருமாறு:-
பின்னர் அவர்கள் ஒரே இடத்தில் ஒன்றாக அமர்ந்து, பெருநாள் உணவுப் பதார்த்தங்களை இணைந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
தகவல் மற்றும் படங்கள்:
ஹாஃபிழ் கே.எம்.இஃப்திகாருத்தீன் ஷேக் அப்துல்லாஹ்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |