சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக.....
பாரம்பரியமிக்க கலாச்சாரம், பலதரப்பட்ட கல்வியாளர்கள் மற்றும் பக்குவப்பட்ட ஆன்மீகம் போன்ற பல்வேறு சிறப்புக்களை உள்ளடக்கியது நமதூர் காயல்பட்டினம். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல்வேறு சாதனைகள் புரிந்து வரும் நமதூர் மாணவ, மாணவிகளின் கல்வியறிவு பள்ளிக்கூட அறைகளையும் தாண்டி மேலும் சிறந்து விளங்குவதற்கு உலகின் பல்வேறு நிகழ்வுகளையும், விஷயங்களையும் சப்தமில்லாமல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் நமதூர் பள்ளிகள், கல்லூரிகளின் பணி மகத்தானது. அதற்கு உறுதுணையாக இருந்து வரும் நமதூர் அரசு பொது நூலகத்தின் பணிகள் சிறப்பானது.
பல்வேறு ஊடகங்கள் பெருகி விட்ட இக்காலங்களில் மாணவ, மாணவிகளின் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்யவும், நூலகங்களின் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கடந்த ஆண்டுகளைப் போலவே எதிர்வரும் நவம்பர் இரண்டாவது வாரம் காயல்பட்டணம் அரசு பொது நூலக வாசகர் வட்டம், காயல்பட்டணம் காக்கும் கரங்கள் அமைப்பு, காயல்பட்டணம் அரிமா சங்கம் மற்றும் K.V.A.T.அறக்கட்டளை இணைந்து நடத்தும் 44வது தேசிய நூலக வார விழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகள் மற்றும் நூலக விழிப்புணர்வு வாசகப் போட்டிகள் கீழக்கண்ட விதிமுறைகளின் படி நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகளை அதிகளவு பங்கு பெறச் செய்து ஊக்கமளிக்குமாறு வேண்டுகிறோம்.
'வாசிக்கும் பழக்கத்தை நேசிப்போம்!
சுவாசிப்பை போலவே வாசிப்போம்!
வாசிப்பும், சுவாசிப்பும் தொடரட்டும்!
வாழ்வினில் இன்பம் படரட்டும்'
I கட்டுரைப் போட்டிகள்
வகுப்பு |
தலைப்பு |
6,7,8 |
மாணவனின் மாண்பும், நூலகத்தின் பங்கும் |
9,10 |
சமுதாய வளர்ச்சியில் பொது நூலகங்களின் பங்கு |
11,12 |
வாசிக்க வாசிக்க வானமும் வசப்படும் |
இளநிலை |
புத்தகம் பேசுது...
'மானிட வாழ்க்கையில் புத்தகம் பேசுது' |
முதுநிலை |
கற்றனைத்தூறும் அறிவு |
விதிமுறைகள்
1) கட்டுரைகள் A4 அளவு தாளில் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2) கட்டுரைகள் தங்களது சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும்.
3) பரிசு பெறும் சிறந்த கட்டுரை விழா மேடையில் வாசிக்க அனுமதிக்கப்படும்.
4) கட்டுரைகள் பள்ளி தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வர் கையொப்பம் மற்றும் முத்திரையிடப்பட்டிருக்க வேண்டும்.
5) கட்டுரைகள் அனைத்தும் நவம்பர் 14,2011 மாலை 6 மணிக்குள் காயல்பட்டணம் அரசு பொது நூலகத்தில் நூலகர் வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது அனுப்பப்பட வேண்டும்.
6) நடுவர் குழு முடிவே இறுதியானது.
II 6ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான நூலக விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டி விதிமுறைகள் :
1) நூலகங்கள் பற்றியும், நூல் படித்தம் பற்றியும் இருக்க வேண்டும்.
2) A4 அளவு தாளில் ஐந்து வாசகங்கள் எழுத வேண்டும்
3) ஒவ்வொரு வாசகமும் இரண்டு வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
4) வாசகங்கள் தமது சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும்.
5) வாசகங்கள் நவம்பர் 14,2011 மாலை 6 மணிக்குள் காயல்பட்டணம் அரசு பொது நூலகத்தில் நூலகர் வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது அனுப்பப்பட வேண்டும்.
6) நடுவர் குழு முடிவே இறுதியானது.
கட்டுரைகள் மற்றும் விழப்புணர்வு வாசகங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
நூலகர்
அரசு பொது நூலகம்
புதிய பேருந்து நிலையம்
காயல்பட்டணம் - 628204.
தகவல் : ஆசிரியர் மு. அப்துல் ரசாக்
துணைத்தலைவர், வாசகர் வட்டம்
அரசு பொது நூலகம்
காயல்பட்டணம்.
|