01.01.2012ஐத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் - 2012 பணி, தூத்துக்குடி மாவட்டத்தில் 24.10.2011 அன்று துவங்கி 08.11.2011 வரை நடைபெறவுள்ளது.
வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் - 2012இல் 24.10.2011 முதல் 08.11.2011 வரை வாக்காளர் பட்டியலில் பெயரினை சேர்த்திட / நீக்கம் செய்திட / திருத்தம் செய்திட மனுக்கள் அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயரினை சேர்த்திட 01.01.2012 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
*** 24.10.2011 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியல், மாவட்ட தேர்தல் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், அனைத்து வரையறுக்கப்பட்ட இடங்களில் (வாக்குச் சாவடிகள்) பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
*** அந்த பகுதிக்குரிய வரையறுக்கப்பட்ட இடமான வாக்குச்சாவடி மையத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் மனுக்களை அளிக்கலாம்.
*** வாக்காளர் பட்டியலில் பெயரினை சேர்த்திட படிவம் 6இல் புகைப்படம் ஒட்டியும்,
பெயரினை நீக்கம் செய்திட படிவம் 7ஐயும்,
திருத்தம் செய்திட படிவம் 8ஐயும்,
வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8-Aவையும் அளித்திட வேண்டும்.
*** படிவம் 6 அளிக்கும்போது, மனுதாரர் தமது முந்தைய முகவரி, வாக்காளர் அடையாள அட்டை ஏற்கனவே பெற்றிருப்பின் அதன் எண், தமது குடும்ப உறுப்பினர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பின், அவர்களது பெயர் இடம்பெற்றுள்ள பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
இத்தகவலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இத்தகவலின் அடிப்படையில், காயல்பட்டினத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மேற்படி பணிகள் நடைபெறுவதாகவும், மிக முக்கியமான இந்தப் பணியை பொதுமக்கள் அலட்சியம் செய்யாமல் கடமையெனக் கருதி, உடனடியாக தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுமாறும் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா நகர பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். |