திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 06ஆம் தேதி, காயல்பட்டினம் அல்அமீன் துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து அம்மன்றத்தின் செயலாளர் ஸ்கட் அபூபக்கர் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-
அன்பார்ந்த திருவனந்தபுரம் காயல் நல மன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 06.11.2011 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 04.00 மணி முதல் 07.00 மணி வரை, காயல்பட்டினம் அல்அமீன் துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், நமது மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் முக்கிய நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ள்து.
நமதூரில் அரிதாகவே நமக்குக் கிடைக்கும் இந்த அழகிய சந்திப்பு நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, நல்ல பல ஆலோசனைகளைத் தர வருமாறு மன்ற நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் அழைக்கிறேன்.
இவ்வாறு திருவனந்தபுரம் காயல் நல மன்ற செயலாளர் ஸ்கட் அபூபக்கர் தனதறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். |