நாட்டுநலப்பணித் திட்ட துவக்க விழா
காயல்பட்டணம் சமுதாயக் கல்லூரியில் (KAYALPATNAM COMMUNITY COLLEGE) நாட்டு நலப்பணித் திட்டம் மூன்றாமாண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. மாணவி பாத்திமா ஜெமிலா கிராஅத் ஓதி விழாவை துவக்கினார். ஆசிரியை கோகிலா அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் எம்.ஏ. புகாரி முன்னிலை வகித்து அறிமுக உரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் தமிழ் பேராசிரியையும், நாட்டு நலப்பணித் திட்ட முன்னாள் அலுவருமான திருமதி. அருணா ஜோதி கலந்து சிறப்புரையாற்றினார். இறுதியில் கல்லூரி முதல்வர் நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது.
நாட்டுநலப்பணித் திட்ட முகாம்
காயல்பட்டணம் சமுதாயக் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மணப்பாட்டில் நடைபெற்றது. அங்குள்ள புதுக்குடியேற்று பகுதியில் இல்லங்கள் தோறும், புள்ளி விபரங்களை சேகரித்தல், அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லுதல், சிறுசேமிப்பு, மரக்கன்றுகள் நட்டுதலின் பயன், முதியோர், விதவை மறுவாழ்வு போன்ற பணிகள் குறித்து விளக்கமளித்தனர். கல்லூரி முதல்வர் எம்.ஏ. புகாரி முகாமைத் தொடங்கி வைத்தார். NSS மாணவிகளுடன் திட்ட அலுவலரான ஆசிரியைகள் கார்த்திகா மற்றும் முத்துலெட்சுமி, கோகிலா ஆகியோர் உடன் சென்றிருந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற முதுகலை தமிழாசிரியர் S. இருதயராஜ் சிறப்பாக செய்திருந்தார். இறையருளால் முகாம் சிறப்பாக நடைபெற்றது.
தகவல் : M.A. புகாரி M.Com.,
முதல்வர், காயல்பட்டணம் சமுதாயக் கல்லூரி
|