காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளி சார்பாக, இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐஐஎம்) ஏற்பாட்டில் நகரில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
பெருநாளை முன்னிட்டு, இன்று காலை 07.30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் தொழுகையை வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து அப்பள்ளியின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.
இந்நிகழ்வுகளில் நகரின் பல பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
பெருநாள் தொழுகை நிகழ்வின்போது ஐ.ஐ.எம். பைத்துல்மால் - ஏழை நிதியத்திற்காக நன்கொடை வசூலிக்கப்படுவது வழமை. நடப்பு பெருநாள் தொழுகையின்போது இவ்வகைக்காக ரூ.79,015 தொகை நன்கொடையாக சேகரிக்கப்பட்டது. இதில் ஆண்கள் பகுதியிலிருந்து 37,080 ரூபாயும், பெண்கள் பகுதியிலிருந்து 41,935 ரூபாயும் சேகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை, ஐ.ஐ.எம். செயலாளர் எஸ்.எச்.ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.எஸ்.) அறிவிப்புச் செய்தார்.
தொழுகை நிறைவுற்றதும், பொதுமக்கள் கட்டித்தழுவி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
தகவல் மற்றும் படங்கள்:
B.A.புகாரீ,
அலியார் தெரு, காயல்பட்டினம்.
மற்றும்
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம்.
கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. (06.11.2011 - 13:02hrs) |