சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், ஹஜ் பெருநாளை முன்னிட்டு 45 குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்களுதவி 04.11.2011 அன்று வழங்கப்பட்டது.
ரூ.1350 மதிப்புள்ள ஒவ்வொரு பொதியிலும், அரிசி, பருப்பு, எண்ணெய், முட்டை, மாவு வகைகள், மசாலா சாமான்கள் உள்ளிட்ட சமையல் பொருட்களும், இறைச்சிக்குரிய தொகையும் அடக்கம்.
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ் முன்னிலையில், அதன் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் பொருட்களை வினியோகம் செய்தார்.
தகவல்:
K.M.T.சுலைமான்,
உள்ளூர் பிரதிநிதி,
சிங்கப்பூர் காயல் நல மன்றம். |