அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவராக ஆபிதா தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவளித்த நகர பொதுமக்களுக்கு, காயல்பட்டினம் புதுப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை (MARO) நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்த அதன் அறிக்கை பின்வருமாறு:-
எல்லாப்புகழும் வல்ல இறைவனுக்கே! சாந்தியும், சமாதானமும் எங்கும் நிலவட்டுமாக!!
நன்றி! நன்றி!! நன்றி!!!
நானிலம் தழைக்க நல்வழி வகுத்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், மனித நேயம் வளர்த்த மஹான்கள் மீதும் இறைக் கிருபை என்றென்றும் நின்று நிலவட்டுமாக.
சமீப காலத்தில் மனித நேயத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் சகோதர நட்போடு செயல்படுவதற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும், பல வகையிலும் அரும்பாடுபட்டு, பல தியாகங்கள் புரிந்து வருபவரான மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் பொதுச் செயலாளர் கண்ணியத்திற்கும் பாசத்திற்குமுரிய ஜனாப் பாளையம் இபுறாஹீம் அவர்களின் அருமைப் புதல்வி சகோதரி பி.எம்.ஐ.ஆபிதா பி.எஸ்ஸி., பி.எட். அவர்களை, காயல்பட்டினம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு நடந்து முடிந்த நகராட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும, மேலும் அதற்கு பல வகையிலும் ஆக்கமும், ஊக்கமும் அளித்து, ஒற்றுமையாக உறுதுணையாக நின்று செயலாற்றிய அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
வல்ல இறைவன் உங்கள் அனைவருக்கும் நற்கூலிகளை வழங்கி அருள் புரிவானாக, ஆமீன்.
இவண்,
தலைவர் மற்றும் அங்கத்தினர்,
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை (MARO)
ஸ்தாபிதம்: 1895
புதுப்பள்ளி வளாகம், தைக்கா தெரு,
காயல்பட்டினம் - 628 204.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஷெய்கு அப்துல் காதிர் ஸூஃபீ,
குறுக்கத் தெரு, காயல்பட்டினம். |