அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆபிதா நகர பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்:-
எல்லாப்புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!!
இறையருளால் நடைபெற்ற நகராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் சக்தியின் மூலமாக மகத்தான தீர்ப்பினை வழங்கிய மாபெரும் சக்தியாளனாகிய இறைவனுக்கே அனைத்துப் புகழும்!
வெற்றிக்கு ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்!
நம் ஊரின் நலனில், முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களின் முழுமையான ஒத்துழைப்பையும், நன்மையான ஆலோசனைகளையும் வேண்டியவர்களாக மக்கள் பணியாற்ற நகராட்சிக்குள் வந்தள்ள நாங்களனைவரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஒன்றுபட்டு செயலாற்றிட, ஊழலற்ற நிர்வாகத்தினை தந்திட, இறைவனின் பொருத்தத்தை பெற்றிட பிரார்த்திக்க வேண்டுகிறேன்.
இவண்,
உங்கள் சகோதரி
ஐ.ஆபிதா ஷேக் பி.எஸ்ஸி., பி.எட்.,
28/35, மகுதூம் தெரு, காயல்பட்டினம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |