மக்கா, சவுதி அரேபியா - சவூதி அரேபிய அரசின் சார்பில் அந்நாட்டு மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் ஆல்-சவூத் இந்தியாவிலிருந்து ஹஜ் நல்லெண்ண குழுவாக சவூதி வர அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி அந்நாட்டின் விருந்தினர்களாக இந்தியாவின் சார்பில் 20பேர் கொண்ட புனித ஹஜ் நல்லெண்ண குழு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் மக்கா வந்தடைந்தது.
இக்குழுவில் நம் காயல் மாநகரைச் சார்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் இடம்பெற்றுள்ளார்.
அவரை ஜித்தா காயல் நலமன்ற செயலாளர் எம்.ஏ. முஹம்மது இப்றாஹீம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மொகுதூம் முஹம்மது (சீனா), முஹம்மது ஸாலிஹ் மேலும் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற வந்துள்ள முஜம்மில் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற நம் காயலர்கள் பல பகுதிகளில் இருந்து மக்கா வந்தடைந்துள்ளனர்.
1. Re:ஹஜ் 1432: சவுதி அரசின் சி... posted byThaika Ubaidullah (Macau)[03 November 2011] IP: 180.*.*.* Macau | Comment Reference Number: 12828
அஸ்ஸலாமு அலைக்கும். இறை அருளால் உங்கள் அனைவர்களது ஹஜ்ஜும் துஆக்களும் கபூல் ஆவதற்கு நாங்கள் துஆ செய்கிறோம். என் ஹக்கிலும் மற்றும் நம் அனைவர்களது ஹக்கிலும் துஆ செய்யும் படி வேண்டி கொள்கிறேன். அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் அருள் புரிவானாக ஆமீன்!
2. Re:ஹஜ் 1432: சவுதி அரசின் சி... posted byS.T. Labeeb (Kuthukkal st., Kayalpatnam)[03 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12835
My son Mr. L. Sadak Thamby with his wife from Shanghai and my brother's son Mr. Sadiq from Jhangmen(China) went to Holy Makkah through Hongkong Hajj Visa. May Allah(Sub)bless and grant their journey the status of Hajjul Mabrrur. I request all viewers pray for them and all other Hajjees.
3. Re:ஹஜ் 1432: சவுதி அரசின் சி... posted byVSM THAMBY (Hongkong)[03 November 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 12842
நம்ம ஊர் ஹாஜிமார்களின் புகைப்படங்களை பார்த்து சந்தோசம் .குறிப்பாக HK - இல் இருந்து சென்ற Munison 's Shaik அவர்களின் புகைப்படத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சி . அல்லாஹ் உதவியால் அவர்களின் , மேலும் அவர்களுடன் சென்ற நம்ம ஊர் ஹாஜிமார்களின் ஹஜ்ஜு கடமைகளை இனிதே நிறைவேற்றி , அல்லாஹ் அவர்கள் அனைவரது ஹஜ்ஜையும் கபூல் செய்து , நலமாய் தாயகம் திரும்ப நாங்கள் துஆ செய்கிறோம் .
Hajee ML Moosa Naina ,
Hajee VSM Thamby என்ற ஹாங்காங் அப்பா ,
MN Mohideen Ibrahim Sahib ,
VD Sadak Thamby ,
Vilack SMA
4. வாழ்த்துக்கள் posted byசாளை ஷேக் சலீம் (Dubai)[03 November 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12847
காயலர் ஒருவர் சவூதி அரேபியா நாட்டின் அரசு விருந்தினராக வருகை தந்திருப்பது நமக்கெல்லோருக்கும் பெரு மகிழ்ச்சியை தருகிறது. தம்பி அபூபக்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
போட்டோவில் எனது பால்ய நண்பன் சகோதரன் மக்கி அவர்களை பிள்ளைகளுடன் பார்த்ததில் ரொம்போ சந்தோசம். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களின் மேலான ஹஜ் ஒப்புக்கொள்ளப்பட்டு நீங்கள் செய்யும் அமல்கள் மற்றும் ஹஜ் கிரிகைகளில் கேட்கப்படும் துஆக்கள் எல்லாம் கபூல் ஆகி நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் செல்லப்பிள்ளைகளாய் சிறப்பாக ஊர்திரும்ப அருள் பாலிப்பானாகவும் ஆமீன்.
எல்லா இடத்திலும் நீங்கள் துஆ செய்யும் போது எங்களை பெயருடன் ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். ஆமீன்
5. Re:ஹஜ் 1432: சவுதி அரசின் சி... posted byAbu Murfidh 48 (Chennai)[03 November 2011] IP: 121.*.*.* India | Comment Reference Number: 12854
அஸ்ஸலாமு அலைக்கும்.. காயல் பிரமுகர் ஒருவர் நல்லெண்ண குழுவில் இடம் பெற்று இருப்பது சந்தோஷம். சலீம் காக்கா, அது மக்கி அவர்களின் பேரப்பிள்ளைகள் (Y.M.Saleh வின் பிள்ளைகள்) :-)
Moderator: கருத்தாளர் இனி வருங்காலங்களில் தனது கருத்துக்கள் வெளியிடப்படும் பொருட்டு முழு இயற்பெயரையும் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
6. Re:ஹஜ் 1432: சவுதி அரசின் சி... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[03 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 12864
அடே மக்கி நீ என்னிடம் சொல்லாமல் ஹஜ்ஜுக்கு போய்விட்டாயே ..சரி பரவாயில்லை .என்னக்கும் சேர்த்து துஆ கேள். அப்படியென்றால் 11 11 11 அன்று நீ ஊரில் இருக்கமாட்டாய்.. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை நீ மிஸ் பண்ணிவிட்டாயே. அதே தினத்தில் நமதூரில் ஒரு புதிய ஜவுளிக்கடையும் திறக்கப்படுகிறது.
10. Re:ஹஜ் 1432: சவுதி அரசின் சி... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[04 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12898
ஹைதர் அலி என்ற "ஹைலி"அவர்களே... என்ன இரண்டு வரிகளுக்கு மேல் எழுத மாட்டீராக்கும்.. நீர் என்ன "நவீன திருவள்ளுவரா...? ஹைலி என்ற பெயரை பார்த்து நான் ஏதோ பெண் பிள்ளையாக்கும்... என்றல்லவா இதுநாள்வரை நினைத்து கொண்டிருந்தேன். நேற்றல்லவா எனக்கு விஷயம் தெரியும். என்றாலும் பெயருக்கு பொருத்தமான சுருக்கமான ஒரு அழகான பெயரை சூப்பராக வைத்துவிட்டீர்... i like hiylee to much..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross