காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு புதிததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், உறுப்பினர்களுக்கு மலபார் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கத்தைக் கைவிடப் போவதாக அம்மன்றத்தின் இரண்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) 6ஆவது பொதுக்குழுக் கூட்டம்,30.10.2011 அன்று மாலை 05.30 மணிக்கு, சகோதரர் நெய்னா அவர்களின் வீட்டு மொட்டை மாடியில் வைத்து நடைபெற்றது..
மழை காரணமாக உறுப்பினர்கள் குறைவாகவே கூட்டத்தில் கலந்துகொண்டனர். மன்ற தலைவர் சகோதரர் மஸ்வூத் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். MKWAவின் கவுரவ ஆலோசகர்களான ஜனாப் ஷாகுல் ஹமீது (Ameen Tools) இக்கூட்டத்தில் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் சகோதர்ர் சேட் மஹ்மூத் அவர்களின் அருமை மகன் முஹம்மது இப்ராஹிம் இறைமறை வசனங்களுடன் கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
மன்ற செயலாளரின் வரவேற்புரை:
செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அழைப்பையேற்று பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் தனது வரவேற்புரையில் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மேலும் மன்றத்தின் நிகழ்வுகள் பற்றி விளக்கமாக உரையாற்றினார். அவரது உரையில் நம் மன்றம் மலபார் வாழ் காயலர்கள் அனைவர்களையும் ஒருகிணைத்து ஒற்றுமையுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு சிறப்பான அமைப்பாக இருப்பதாகவும் கூறினார். இது போன்ற ஒற்றுமை நம்மிடம் காண்பது மிகவும் அறிது! மேலும் இதுபோன்ற மன்றங்கள் மூலமாகத்தான் அது சாத்தியமாகின்றது. எனவே இதை உறுப்பினகள் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேன்டும்.
மேலும் நம் MKWAவின் அனைத்து நிகழ்சிகளிலும் கோழிக்கோட்டில் இருக்கும் நம் மன்றத்தை சார்ந்த காயளர்கள் மட்டுமல்லாமல் மலபாரில் வாழும் மன்றத்தின் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து காயலர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கூட்டத்தை கேட்டுகொண்டார்.
மேலும் ஊரில் இருந்து பல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட மனுக்கள் செயற்குழு உறுப்பினர்கள் முன் பரிசீலிக்கப்பட்டதையும், விசாரணைக்கு பின் ஏற்கப்பட்ட மனுக்களுக்கான கோரிக்கைகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டதையும் கூட்டத்திற்கு தெரிவித்தார். மேலும் மன்றத்தின் கடந்த 5வது பொதுக்குழுவுக்குப் பின்பு நடைபெற்ற செயற்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பட்டியலிட்டு விவரித்தார்.
மன்றத் தலைவர் மஸ்வூத் அவர்களின் சிறப்புரை:
பின்னர், மன்றத் தலைவர் மஸ்வூத் உரையாற்றினார்.
நடந்து முடிந்த நம் நகராட்சி தேர்தலில் அனைத்து பகுதி மக்களின் அமோக ஆதரவைப் பெற்று நகர்மன்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி ஆபிதா சேக் அவர்களுக்கும், நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் நம் மன்றம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக கூறினார்.
மேலும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அரவணைத்து, கொள்கை, சமயம், அரசியல் என்ற எல்லா விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டு பணியாற்றவும், பசுமையான, வளமான, சுகாதரமான நகரை உருவாக்கிடவும், ஊழலற்ற ஒரு உன்னதமான முன்மாதிரி நகராட்சியை அமைத்திடவும் எம் மன்றம் தாங்களை அன்போடு வேண்டுகிறது.
மேலும் தாங்கள் நமதூர் முன்னேற்றத்திற்காக எடுக்கும் எல்லா நல்ல முயற்சிக்கும் திட்டங்களுக்கும் எம் மன்றத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் என்றும் இருக்கும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டு சொன்னார்.
மேலும் நம் சகோதரர்களில் புகை மற்றும் பொடி போன்ற பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதில் இருந்து முழுமையாக அவர்களை மீட்பது போன்ற காரியங்களைக்கு MKWA செயல்திட்டம் வகுத்துள்ளதாகவும் கூறினார். எனவே நம் உறுப்பினர்கள் யாராவது இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருப்பின் தயவுசெய்து நான் அதில் இருந்து மீள்கிறேன் என இங்கு உறுதிமொழி எடுக்க முன்வருமாறு கூட்டத்திற்கு உருக்கமாகக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஜனாப் சாமு ஷிஹாபுத்தீன் அவர்கள் எழுந்து நின்று, சிறு வயதிலிருந்து துவங்கி, 50 ஆண்டு காலமாக என்னிடம் இருக்கும் புகை பழக்கத்தை முழுமையாக விட்டுவிடுவதாக இறைவன் மீது ஆணை இட்டு கூட்டத்தில் உறுதிமொழி கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்துகொண்டார்.
பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில், “யார் யார் எல்லாமோ சொல்லியும் இப்பழக்கத்தைக் கைவிடாத நான் MKWA வின் இந்த முயற்சிக்கு நாம் முதலில் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இறைவன் எனக்கு தந்து உதவி புரிந்திருக்கின்றான் அல்ஹம்துலில்லாஹ். (கூட்டத்தினரைப் பார்த்து,) உங்களில் யாராவது இது போன்ற பழக்கத்திற்கு உட்பட்டவராக இருப்பின் படிப்படியாக நிறுத்திவிடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்...” என்று தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து மன்றத்தின் மற்றொரு உர்ப்பினரான ஜனாப் UL செய்து அஹமது அவர்கள் எழுந்து நின்று, “என்னிடம் இருக்கும் தூள் போடும் பழக்கத்தை நானும் விடப்போகிறேன் என்று இறைவன் மீது ஆணை இட்டு இக்கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.
உறுப்பினர்களின் உறுதிமொழிக்கு பின் தலைவர் அவரது உரையை தொடர்ந்தார் இந்த இரு உறுப்பினர்களுக்கும் இறைவன் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கவேன்டும் என அனைவரும் துஆ செய்யும்படி கேட்டுகொண்டார்.
மேலும் இது போன்ற பழக்கத்திற்கு அடிமையான அனைத்து காயலர்களும் அந்த பழக்கத்தை நிறுத்துவதற்கும் நம் உறுப்பினர்கள் போல் அனைத்து மக்களுக்கும் நம் சகோதரர்கள் முன்மாதிரியாக இருப்பதற்கு இறைவனிடம் துஆ செய்யுமாறு கூட்டத்தை கேட்டுகொண்டு தனதுரையை நிறைவுசெய்தார்.
நிதிநிலை அறிக்கை:
மன்றத் தலைவரின் உரையைத் தொடர்ந்து, மன்றப் பொருளாளர் ஜனாப் உதுமான் அப்துர் ராஜிக் 30.10.2011 தேதி வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை அவர் அவருக்கே உண்டான நகைச்சுவை கலந்த பாணியில் சமர்ப்பித்தார்.
பொருளாளர் அறிவித்த அக்கணக்கறிக்கையை ஒருமனதாக பொதுக்குழு அப்படியே அங்கீகரித்தது.
பின்னர் மக்ரிப் ஜமாஅத்திற்காக கூட்டம் இடைநிறுத்தம் செய்யபட்டது.
தேனீர் விருந்து:
மக்ரிப் தொழுகைக்கு பின் அனைவருக்கும் தேநீருடன் ருசியான காயல் மிட்ச்சரும் தம்மடையும் விநியோகிக்கப்பட்டது. அதை கூட்டாக அமர்ந்து ஒருவருக்கொருவர் உடல் ஆரோக்கியத்தையும் வியாபார நடப்புகளையும் விசாரித்தவண்ணம் தேனீர் அருந்தினர்.
கேள்வி நேரம்:
பின்னர், இரண்டாம் அமர்வு துவங்கியது. இவ்வமர்வில், மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கென 30 நிமிடங்கள் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. அந்நேரத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மன்றத் தலைவரும், அவரைத் தொடர்ந்து செயலாளரும் நிதானமாக பதில் அளித்தனர்.
வாழ்த்துரை:
பின்னர், பொதுக்குழு உறுப்பினர் ஜனாப் சிராஜுதீன் அவர்கள் உரையாற்றினார்.
அவர் தனதுரையில் நம் அமைப்பின் செயல்பாடுகள் அனைவரையும் வியக்க வைதுள்ளதாக கூறினார். மேலும் நம் நகரை பசுமை வாய்ந்த நகராக மாற்ற நாம் அனைவரும் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிபிடித்து பாடுபட வேண்டும். அதற்கு நம் யாவருக்கும் அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன் என்று கூறி நிறைவு செய்தார். அவரைத் தொடர்ந்து ஜனாப் சேட் மஹ்மூத் அவர்கள் தனதுரையில் பொருளாதாரம் நம் அமைப்புக்கு மிக முக்கியம் என கூறினார். எனவே அதை உணர்ந்து உறுப்பினர்கள் செயல்படவேண்டும் என சொன்னார். மேலும் அவர் தனதுரையில் நம் பொருளாளர் மிக சிரமப்பட்டு நம்மிடம் வசூலிக்க வரும்போது அவருக்கு எந்த வகையிலும் சிரமம் இல்லாமல் பார்துகொல்லுமாறு கூட்டத்தை கேட்டுகொண்டார்.
பின்னர், கீழ்க்காணும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம்:
அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி ஆபிதா ஷேக் அவர்களுக்கும், 18 வார்டுகளின் நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் எம் மன்றம் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவர்களின் ஐந்தாண்டு பதவிக்காலத்தில், நம் நகர்மன்றம் ஊழலற்ற, வெளிப்படையான, நேர்மையான, அனைவருக்கும் பாரபட்சமின்றி பயன்தரத்தக்க நிர்வாகமாக அமைந்திட இக்கூட்டம் வாழ்த்துவதோடு, புதிய நகர்மன்ற அங்கத்திருக்கு இதனை ஓர் அறிவுரையாகவும் முன்வைக்கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நன்றியுரை:
நிறைவாக, மன்றத்தின் துணைச் தலைவர் முஹம்மத் ரஃபீக் KRS நன்றி கூற, அனைவரின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. மழை நேரமாக இருந்தபோதிலும், இக்கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு மலபார் காயல் நல மன்றத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.E.செய்யித் ஐதுரூஸ் (SEENA),
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம் (MKWA),
கோழிக்கோடு, கேரள மாநிலம். |